கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு

by கிரி on June 15, 2008

நேற்று வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் இடம் எனக்கு தெரியாததால் ஜெகதீசன் அவர்களுடன் செல்லலாம் என்று முடிவு செய்தேன், அவர் என்னை 4.30 மணிக்கு பெடோக் பேருந்து நிலையம் வந்து விடுங்கள் அங்கே இருந்து சென்று விடலாம் என்று கூறினார், நம்ம எப்போதும் சரியான நேரம் கடைபிடிப்பதால் சரியான நேரத்துக்கு வந்து விட்டேன், ஜெகதீசனை தொடர்பு கொண்டால் இப்ப தாங்க வந்துட்டு இருக்கேன் ஒரு 15 க்கு மேல் ஆகும் என்றார்.

சரி அதுவரை என்னடா பண்ணுறதுன்னு சரி சங்கி மங்கி (உபயம் வடிவேல்) பிகர்களை யாவது பார்ப்போம் என்று நல்ல !!! இடமாக பார்த்து உட்கார்ந்தேன், எப்போதும் போல நம்ம நேரம் ஒரு பக்கம் ஒரு தாத்தாவும் இந்த பக்கம் ஒரு சுமாரான அத்தையும் உட்கார்ந்தார்கள்..என்னடா இது நாம கிளம்புன நேரம் சரியில்லையோன்னு நொந்துட்டு ..வாஸ்து சரி இல்லைன்னு வேற இடம் மாறி உட்கார்ந்தேன் ..இங்க பரவாயில்ல கண்ணுக்கு குளிர்ச்சியா எல்லோரும் குறுக்கும் நெடுக்கும் போய்ட்டு நம்மை குளிர்ச்சி படுத்திட்டு இருந்தாங்க. சிறிது நேரத்தில் நயன்தாரா மாதிரி ஒரு சூப்பர் பிகர் வெறும் டிராயர் மற்றும் (கை வைக்காத) பனியன் மட்டுமே போட்டு என் முன் நின்று அதன் நண்பியுடன் பேசிக்கொண்டு நின்றது..எனக்கு இதய துடிப்பு தாறுமாறாக அதிகமாகி அபாய கட்டத்தை நெருங்கும் போது, நம்ம ஜெகதீசன் கூப்பிட்டு விட்டார். வாங்க வந்துட்டேன்னு கூறினார். சரி வந்த வேலையை பார்ப்போம் னு கிளம்பி போனேன் பதிவில் ஏற்கனவே அவர் புகைப்படத்தை பார்த்து இருந்ததால் அவரை கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவருடன் பேருந்தில் ஏறி சந்திப்பு இடம் சென்றோம், அதற்குள்ளே செந்தில் வந்து விட்டதாக கூறினார். நாங்கள் இருவரும் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பதிவர் சந்திப்பில் என்ன பேசினோம் என்று கோவி கண்ணன் விவரமாக கூறி விட்டதால், குறைவான செய்திகளையே கூறுகிறேன்.

பதிவர் சந்திப்பில் பாரி அரசு, பதிவில் மட்டும் இல்லைன்னு சாதாரணமாக பேசும் போதும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழில் பேசி என்னை அதிர வைத்தார். அடடா! நாம் இது போல இன்னும் பெரிதாக இன்னும் முயற்சி செய்யவில்லையே என்று நினைத்து வெட்கப்பட்டேன்.

முகைவை மைந்தன் அவர்களும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழை பேச முயற்சித்து வருவதாக கூறினார், அவர் பேச்சிலும் அது தெரிந்தது. இவரிடம் நான் ஏங்க! நீங்க வேலை செய்யுறீங்க என்றவுடன்.. அவர் நான் Credit Suisse என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்றார்..அப்படியா!!! நானும் அங்கே தான் வேலை செய்யுறேன்…நீங்க எந்த கட்டிடம் CBP யா ORL யா ? இவர் நான் CBP ..அட! என்னங்க ..நானும் அங்கே தன் வேலை செய்யுறேன் ..சரி நீங்க எந்த தளம் ..நான் தளம் 7 ..நல்லவேளை நான் தளம் 3 என்று கூறி கலகலப்பாக இருந்தது. எனக்கு இவரை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போல இருந்தாலும் நான் கூறவில்லை, ஏனென்றால் இந்த மாதிரி எங்கேயோ உங்களை பார்த்து இருக்கிறேன் என்று கூறி பலர் மொக்கை போடுவார்கள்..சரி அதை போல நம்மை நினைத்து விட்டால் என்றே கூறவில்லை.

பாரி அரசு தமிழ் 99 பயன்படுத்துவது பற்றி அழகாக விளக்கினார், நிறைய விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறார். செந்திலும் முகவை மைந்தன் கோவி கண்ணன் அவர்களும் இது பற்றி தங்கள் சந்தேகங்களை கேட்டார்கள். லினக்ஸ் பற்றி தானே வடுவூர் குமார் அவர்கள் கற்று கொண்டதாக கோவி கண்ணன் கூறினார். பாரி அரசு எல்லோரையும் தமிழ் தட்டச்சு பயன்படுத்த கூறி அதன் அதன் அதன்… ஹி ஹி ஹி அதன் பேரு தெரியலையே …விசை பலகையின் மீது ஒட்டி கொள்ள அந்த அந்த …ஒன்றை கொடுத்தார். எனக்கு அவரின் ஆர்வத்தை நினைத்து உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. என் பின் தங்கிய நிலையை நினைத்து வெறுப்பாகவும் இருந்தது.

பிறகு அனைவரும் எது சுதந்திரம் என்ற தலைப்பில் முகுந்தன் ஆரம்பித்து வைத்த விவாதத்தில் பேசினார்கள். ஆரோக்யமான விவாதமாகவே இருந்தது.

சிவராம் முருகன் தனக்கு நேரம் இல்லை என்பதாலும், பதிவு எழுதி எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்பதாலும் பல பதிவுகளை எழுதி வைத்து பிறகு அழித்து விட்டதாகவும் கூறினார். மேலும் ஒரு சில பதிவுகளை படித்தால் “வெறி” வருவதாக கூறினார்..தற்சமயம் ஒரு சில பதிவுகளின் தலைப்பு வேறு ஏடாகூடமாக இருப்பதால் நான் உடனே பயந்து போய் என்னங்க! இப்படி சொல்றீங்க னு கேட்டேன்..அவர் உடனே.. அட ஏங்க நீங்க நினைக்கிற “வெறி” இல்லைங்க இது கோபம் னு சொல்லி என்னை அமைதி படுத்தினார் ஹா ஹா ஹா

செந்தில் தான் எழுதும் பதிவின் பெயரை கூறாமல் மர்மயோகி மாதிரி மர்ம புன்னகை பூத்தார். கோவி கண்ணன் மற்றும் பலர் பல பிட்டுகளை போட்டு பார்த்தும் அவர் கூறவில்லை. முடிந்தால் கண்டு பிடியுங்கள் என்று சவால் வேறு விட்டார். சரி இதெல்லாம் நடக்கிற காரியமா என்று விட்டுவிட்டேன்.
நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார், கோவி கண்ணன் அடிக்கடி அவரை பேச இழுத்தும் புன்னகை மன்னனாக இருந்து விட்டார்.

செந்தில் அவர் வீட்டில் இருந்து ஹல்வா மற்றும் பல சாப்பாட்டு ஐட்டங்களை எடுத்து வந்து இருந்தார், பலரும் கொண்டு வந்து இருந்தனர்.

வடுவூர் குமார் அவர்கள் துள்ளும் இளமையோடு இருந்தார், அவருக்கு என் உயரத்தில் ஒரு பய்யன் வேறு இருப்பதாக கூறி அதிர வைத்தார். எனக்கு சிங்கப்பூர் பற்றிய பல விவரங்களை அவர் முறையில் கூறி விளக்கினார். அவை அனைத்தும் புதியது மற்றும் உபயோகமாக இருந்தது. இவரிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எந்த பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் பழகினார். போண்டா கொடுப்பதாக கூறி, வடுவூர் குமார் அவர்கள் அனைவருக்கும் இரவு உணவையே தன் செலவில் வாங்கி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

பதிவர்கள் குறைவாக இருந்ததாலோ அல்லது உணமையிலேயாவா என்று தெரியவில்லை, யாரும் பந்தா செய்யாமல் பேசினார்கள், அரசியல் எதுவும் நுழைக்கவில்லை. தான் தான் பெரியவன் என்ற முறையில் யாரும் பேசவில்லை, அதனாலோ என்னவோ யாருக்குமே கிளம்பும் எண்ணம் வரவில்லை. இரவு 10 மணிக்கு மேல் தான் அனைவரும் கிளம்பினோம். இதை போலவே பதிவுலகில் அனைவரும் போட்டி பொறாமை சாடல் தனிமனித தாக்குதல் என்று இல்லாமல் ஆரோகியமான விவாதமாக எடுத்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது.

இந்த அருமையான பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் சந்திப்பை கலகலப்பாக வைத்து கொண்டு இருந்த கோவி கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.

No related posts.

{ 44 comments… read them below or add one }

ஜெகதீசன் June 15, 2008 at 3:39 PM

//
இந்த அருமையான பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் சந்திப்பை கலகலப்பாக வைத்து கொண்டு இருந்த கோவி கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
:)

Reply

மங்களூர் சிவா June 15, 2008 at 4:31 PM

/
பதிவர்கள் குறைவாக இருந்ததாலோ அல்லது உணமையிலேயாவா என்று தெரியவில்லை, யாரும் பந்தா செய்யாமல் பேசினார்கள், அரசியல் எதுவும் நுழைக்கவில்லை. தான் தான் பெரியவன் என்ற முறையில் யாரும் பேசவில்லை, அதனாலோ என்னவோ யாருக்குமே கிளம்பும் எண்ணம் வரவில்லை
/

நல்லது.

பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும் நேரில் பழக மிக இனிமையானவர்களே. இது என் அனுபவமும் கூட.

Reply

ஜெகதீசன் June 15, 2008 at 5:03 PM

//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//

சிவா… நீங்க என்னை சொல்லலியே… :P

Reply

நிஜமா நல்லவன் June 15, 2008 at 5:23 PM

///ஜெகதீசன் said…
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//

சிவா… நீங்க என்னை சொல்லலியே… :P ///

நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)

Reply

மங்களூர் சிவா June 15, 2008 at 5:27 PM

/
ஜெகதீசன் said…

//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//

சிவா… நீங்க என்னை சொல்லலியே… :P
/

நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம்

:) )))

Reply

வடுவூர் குமார் June 15, 2008 at 5:30 PM

அட! எழுத்து நடை நல்லா இருக்கே…
வலை உலகத்தில் உங்கள் எழுத்து பிரபலமடைய வாழ்த்துக்கள்.
உங்களை பார்த்தால் “கிருபா சங்கர்” மாதிரி இருக்கு என்பதை இதுவரை யாரும் எழுதாததால் இங்கு குறிப்பிட்டுவிடுகிறேன். ;-) )

Reply

கிரி June 15, 2008 at 5:39 PM

வாங்க ஜெகதீசன். இப்படி சொல்லி மாட்டிகிட்டீங்களா :-) )))

இத தன் மான பிரச்சனையா கருதி..போட்டு தாக்குறீங்க பதிவா..

நாலு பேருக்கு நல்லது!!! செய்யறதுன்னா தப்பு இல்ல ..எதுவுமே தப்பு இல்ல..ஆஆஆ

போடுறோம் நாலு பதிவு போடுறோம்…தினமும் நாலு பதிவு போடுறோம்..

Reply

கிரி June 15, 2008 at 5:41 PM

வாங்க மங்களூர் சிவா மற்றும் நிஜமா நல்லவன் (முதல் முரியாய வந்து இருக்கீங்க)

அதெப்படி இரண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லுறீங்க :-) )

ஜகதீசனை ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தெரிந்து வைத்து இருக்கீங்க போல :-) )))

Reply

கிரி June 15, 2008 at 5:49 PM

வாங்க வடுவூர் குமார்.

//அட! எழுத்து நடை நல்லா இருக்கே//

அட நம்ம எழுத்த வேற நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே…ம்ம்ம் சரி பாப்போம் :-)

//வலை உலகத்தில் உங்கள் எழுத்து பிரபலமடைய வாழ்த்துக்கள்.//

மூத்த வலைப்பதிவர் உங்களின் ஆசிகள்

//உங்களை பார்த்தால் “கிருபா சங்கர்” மாதிரி இருக்கு என்பதை இதுவரை யாரும் எழுதாததால் இங்கு குறிப்பிட்டுவிடுகிறேன். ;-) )//

கிருபா சங்கர் நல்லவரா! கெட்டவரா ? :-) ))) எனக்கு தெரியலையேப்பான்னு சொல்லிடாதீங்க :-) ))

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் June 15, 2008 at 6:00 PM

//பதிவர்கள் குறைவாக இருந்ததாலோ அல்லது உணமையிலேயாவா என்று தெரியவில்லை, யாரும் பந்தா செய்யாமல் பேசினார்கள், அரசியல் எதுவும் நுழைக்கவில்லை. தான் தான் பெரியவன் என்ற முறையில் யாரும் பேசவில்லை//அப்படித்தான் இருக்க வேண்டும் !
எழுத்து நடை நன்று
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Reply

ஜெகதீசன் June 15, 2008 at 6:46 PM

/////
நிஜமா நல்லவன் said…
///ஜெகதீசன் said…
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//

சிவா… நீங்க என்னை சொல்லலியே… :P ///

நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)

மங்களூர் சிவா said…
நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம்

:) )))
//////////
சிவா, பாரதி… இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு… நான் போன வாரமே 3 இடுகை இட்டுருக்கேனாக்கம்…. :P
அதோட…
நான் ஒரு இடுகை எழுதுனா…. 100 இடுகை எழுதுன மாதிரி!!! :P

Reply

’டொன்’ லீ June 15, 2008 at 7:02 PM

நல்லது.. நேற்று வரமுடியவில்லை.. பார்ப்போம்.. அடுத்த முறை..!

Reply

υnĸnown вlogger™ June 15, 2008 at 7:19 PM

நீங்கதான அந்த இன்னோரு சிங்கம் :D

Reply

υnĸnown вlogger™ June 15, 2008 at 7:21 PM

//நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார்,//

என்னது புறாவா?அவரு பாவம்.ஒருத்தர் சிங்கம்ன்னு சொல்லுறார்.இன்னொருத்தர் பூச்சின்னு சொல்லுறார்.நீங்க புறான்னு சொல்லுறீங்க.மொத்ததுல அவரு மனுசரே இல்லைன்னு முடிவு பண்ணியாச்சா?பாவம் எங்க அண்ணாச்சி :(

Reply

கிரி June 15, 2008 at 7:27 PM

வாங்க அறுவை பாஸ்கர்

//அப்படித்தான் இருக்க வேண்டும் !//

நானும் அப்படி தான் இருக்க வேண்டும் நினைக்கிறேன்..நல்லதே நினைப்போம்.

//எழுத்து நடை நன்று //

ஏங்க..உண்மையா சொல்லுறீங்களா ..இல்ல என்னை எல்லோரும் ஒட்டுறீங்களா? உண்மையா இருந்தா ..ரொம்ப நன்றி

————————————

ஜெகதீசன் said…
/////
நிஜமா நல்லவன் said…
///ஜெகதீசன் said…
சிவா, பாரதி… இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு… நான் போன வாரமே 3 இடுகை இட்டுருக்கேனாக்கம்…. :P
அதோட…
நான் ஒரு இடுகை எழுதுனா…. 100 இடுகை எழுதுன மாதிரி!!! :P //

அது சரி :-) )

Reply

கிரி June 15, 2008 at 7:30 PM

// டொன் லீ said…
நல்லது.. நேற்று வரமுடியவில்லை.. பார்ப்போம்.. அடுத்த முறை..!//

என்னங்க டொன் லீ இப்படி வராம விட்டுட்டீங்க…ப்ருஸ் லீ மாதிரி வந்து கலக்குவீங்கன்னு எல்லோரும் எதிர்பார்த்தோம். வராமையே எல்லோருக்கும் “ஹல்வா” கொடுத்துட்டீங்க :-) )))

Reply

கிரி June 15, 2008 at 7:35 PM

// துர்கா said…
நீங்கதான அந்த இன்னோரு சிங்கம் :D //

வாங்க துர்க்கா முதல் முறையா என் வலைப்பதிவுக்கு வந்து இருக்கீங்க நம்ம டொன் லீ மாதிரி. சிங்கம் எல்லாம் கிடையாதுங்க நான் சிறு சுண்டெலி.

உங்களோட வீணை மழையில் நனைய இருந்த எங்களை ஏமாத்திட்டீங்க. எல்லோரும் வந்து இருந்தீங்கன்னா ரொம்ப சந்தோஷ பட்டு இருப்போம். அடுத்த முறை சென்டோசா போகலாம்னு கூறினாங்க..அடுத்த முறையாவது வர முயற்சி பண்ணுங்க.

Reply

ஜெகதீசன் June 15, 2008 at 7:37 PM

//
பின்னூட்டம் இட்டவர்கள் (முதல் 10 இடம்)
Top Commentators from a Blogger Blog
துளசி கோபால் (21)
ஜெகதீசன் (14)
//

எவ்வளவு முயற்சி செய்தாலும் துளசி அம்மா பக்கத்துல வரமுடியாது போல இருக்கே, பின்னூட்டம் போடுறதுல…
:P

Reply

υnĸnown вlogger™ June 15, 2008 at 7:49 PM

//சிங்கம் எல்லாம் கிடையாதுங்க நான் சிறு சுண்டெலி. //

அப்போ சிங்கை சுண்டெலின்னு கோவி அண்ணா ஏன் பதிவு போடல்லை :D

//உங்களோட வீணை மழையில் நனைய இருந்த எங்களை ஏமாத்திட்டீங்க. //

இப்படி புரளி கிளப்பி விட்டு ஏமாத்தியது கோவி அண்ணாதான் :)
நானில்லை..

//அடுத்த முறை சென்டோசா போகலாம்னு கூறினாங்க..அடுத்த முறையாவது வர முயற்சி பண்ணுங்க..//

போறதுக்கு 6 மாசம் முன்னாடியே appointment வாங்குங்க :)
அப்போ கண்டிப்பா வரேன்.நான் ரொம்ப பிசியாக்கும் ;)

Reply

கிரி June 15, 2008 at 7:54 PM

// துர்கா said…
//நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார்,//
என்னது புறாவா?அவரு பாவம்.ஒருத்தர் சிங்கம்ன்னு சொல்லுறார்.இன்னொருத்தர் பூச்சின்னு சொல்லுறார்.நீங்க புறான்னு சொல்லுறீங்க.மொத்ததுல அவரு மனுசரே இல்லைன்னு முடிவு பண்ணியாச்சா?பாவம் எங்க அண்ணாச்சி :( //

ஹா ஹா ஹா அது தான் எல்லோரையும் முதலே கோவி கண்ணன் சிங்கம் னு சொல்லி மனுசங்க இல்லைன்னு சொல்லிட்டாரு.. இதுல இவரை என்ன சொன்னா என்ன? :-) ))

Reply

சினிமா நிருபர் June 15, 2008 at 7:59 PM

நண்பர் கிரி… உங்க போட்டோவை கோவி கண்ணன் வலைப்பூவில் பார்த்தேன். கொஞ்சம் உடலை தேத்துங்க சார்…!

சிங்கையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு குறித்து தங்களது கட்டுரை நன்றாக இருக்கிறது.

Reply

கிரி June 15, 2008 at 8:08 PM

// துர்கா said…
//சிங்கம் எல்லாம் கிடையாதுங்க நான் சிறு சுண்டெலி. //

அப்போ சிங்கை சுண்டெலின்னு கோவி அண்ணா ஏன் பதிவு போடல்லை :D //

முதல்ல அப்படி தான் நினைத்தாராம்!! ஆனா ஒரு சுண்டெலி கூட மீட்டிங் போட்டாங்கன்னு சொன்னா அவருக்கு தன்மான இழுக்குன்னு என்னையும் சிங்கம் ஆக்கிட்டாறு .. உஸ்ஸ்ஸ் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு :-)

//இப்படி புரளி கிளப்பி விட்டு ஏமாத்தியது கோவி அண்ணாதான் :)
நானில்லை//

ம்ம்ஹீம் அதெல்லாம் முடியாது ..நீங்க வீணை வாசித்து தான் ஆக வேண்டும் ..இல்லைனா அடுத்த முறை வரும் போது கத்துட்டாவது வாங்க..:-))))))

//போறதுக்கு 6 மாசம் முன்னாடியே appointment வாங்குங்க :)
அப்போ கண்டிப்பா வரேன்.நான் ரொம்ப பிசியாக்கும் ;) //

அது சரி….. ஜெகதீசன் கொந்தளிச்சுடுவாறு இதை கேட்டாருன்னா.. பயங்கரமான பிசி ல வந்து இருந்தாரு :-) )

Reply

கிரி June 15, 2008 at 8:16 PM

// சினிமா நிருபர் said…
நண்பர் கிரி… உங்க போட்டோவை கோவி கண்ணன் வலைப்பூவில் பார்த்தேன். கொஞ்சம் உடலை தேத்துங்க சார்…!//

இப்படி இருந்தா ஒரு வசதிங்க.. வயசு தெரியறது இல்லை ..நானும் முயற்சி செய்து பார்த்து கடைசியில முயற்சியை கை விட்டு விட்டேன். ஹி ஹி என்னோட அம்மா தான் இன்னும் நம்பிக்கை வைத்து இருக்காங்க பாவம்.

//சிங்கையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு குறித்து தங்களது கட்டுரை நன்றாக இருக்கிறது.//

நன்றிங்க. உங்களை விடவா நான் எழுதி விட போகிறேன் :-)

Reply

கோவி.கண்ணன் June 15, 2008 at 8:29 PM

//சிவராம் முருகன் தனக்கு நேரம் இல்லை என்பதாலும், பதிவு எழுதி எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்பதாலும் பல பதிவுகளை எழுதி வைத்து பிறகு அழித்து விட்டதாகவும் கூறினார்.//

நேரம் இல்லை என்பது காரணமில்லை, நேரம் சரியில்லாமல் போய்விடும் என்று பயந்தே எழுதாமல் இருந்தாராம். :)

//நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார்,//

இதெல்லாம் ஓவரு…பதிவுல என்ன எழுதி இருக்காரு பார்த்திங்களா ? நான் குறிப்பிட்ட குசும்புத்தனம் இப்ப வெளிப்பட்டு இருக்கு பாருங்க.
:)

Reply

ஜெகதீசன் June 15, 2008 at 8:49 PM

//
//நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார்,//

இதெல்லாம் ஓவரு…பதிவுல என்ன எழுதி இருக்காரு பார்த்திங்களா ? நான் குறிப்பிட்ட குசும்புத்தனம் இப்ப வெளிப்பட்டு இருக்கு பாருங்க.
:)
//

இன்னைக்கு எல்லாருக்கும் என் மேல என்ன அப்படி காண்டு?? மொத்தமா டேமேஜ் பண்ணுறீங்களே???
:P

Reply

கிரி June 15, 2008 at 9:36 PM

// ஜெகதீசன் said…
எவ்வளவு முயற்சி செய்தாலும் துளசி அம்மா பக்கத்துல வரமுடியாது போல இருக்கே, பின்னூட்டம் போடுறதுல…
:P //

பின்னூட்ட புயல்ங்க அவங்க :-) ..புயல் கூட போட்டி போட முடியுமா? ;-)

Reply

rapp June 16, 2008 at 2:37 AM

//பதிவர்கள் குறைவாக இருந்ததாலோ அல்லது உணமையிலேயாவா என்று தெரியவில்லை, யாரும் பந்தா செய்யாமல் பேசினார்கள், அரசியல் எதுவும் நுழைக்கவில்லை. தான் தான் பெரியவன் என்ற முறையில் யாரும் பேசவில்லை, அதனாலோ என்னவோ யாருக்குமே கிளம்பும் எண்ணம் வரவில்லை//
மனசை தொட்டுட்டீங்க

Reply

துளசி கோபால் June 16, 2008 at 2:37 AM

கிருபாசங்கர் நல்லவர்தாங்க.

அவருடையை கல்யாண நிச்சயதார்த்தத்தில் உலகப்பதிவர்கள் சார்பில் கலந்துக்கிட்ட ஒரே வெளிநாட்டுப்பதிவர் நாந்தாங்க:-))))

அடுத்தமுறை சிங்கை வரும்போது சந்திப்பு வச்சுக்கலாம்.

எட்டுப்பேர் என்றால் மாபெரும் கூட்டம்தான். நான் ரெண்டேபேரை வச்சு மாநாடே நடத்தி இருக்கேன் இங்கே:-)

Reply

rapp June 16, 2008 at 2:40 AM

நல்ல வாரையிறுதி நாட்கள் உங்கள் எல்லாருக்கும் அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்

Reply

SanjaiGandhi™ June 16, 2008 at 8:14 AM

//போண்டா கொடுப்பதாக கூறி, வடுவூர் குமார் அவர்கள் அனைவருக்கும் இரவு உணவையே தன் செலவில் வாங்கி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.//

குமார் சார் எப்போ கோவை வரார்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க கிரி :)

Reply

கிரி June 16, 2008 at 8:36 AM

கோவி.கண்ணன் said…
//நேரம் இல்லை என்பது காரணமில்லை, நேரம் சரியில்லாமல் போய்விடும் என்று பயந்தே எழுதாமல் இருந்தாராம். :) //

ஹி ஹி ஹி ..ஆனா இப்ப பொங்கி எழுந்துட்டாரு..நானும் எழுதறண்டா! பதிவுன்னு !!

//இதெல்லாம் ஓவரு…பதிவுல என்ன எழுதி இருக்காரு பார்த்திங்களா ? நான் குறிப்பிட்ட குசும்புத்தனம் இப்ப வெளிப்பட்டு இருக்கு பாருங்க.
:) //

அப்ப வீட்டுல வீட்டுல புலி வெளியில எலியா? :-) )))

Reply

கிரி June 16, 2008 at 8:39 AM

// rapp said…
மனசை தொட்டுட்டீங்க//

ஆகா குசும்பா தான் இருக்கீங்க..;-)

//நல்ல வாரையிறுதி நாட்கள் உங்கள் எல்லாருக்கும் அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்//

அதற்கு கோவி கண்ணன் அவர்களுக்கு தான் நன்றி கூறனும்.

Reply

கிரி June 16, 2008 at 8:45 AM

// SanJai said…
குமார் சார் எப்போ கோவை வரார்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க கிரி :) //

ஹி ஹி ஹி எங்களுக்கு வாங்கி கொடுத்துட்டாருல்ல..மறுபடியும் ரிஸ்க் எடுக்க துணிவாரான்னு தெரியல :-) ))

உங்க வருகைக்கு நன்றி சஞ்சய்.

Reply

திகழ் June 16, 2008 at 9:48 AM

என்னால் கலந்து முடியவில்லை
என்றாலும்

தங்களின் பதிவு
கலந்துக்கொண்ட மகிழ்ச்சியை தந்தது.

நன்றிங்க

Reply

வெங்க்கி June 16, 2008 at 10:01 AM

படிப்பதற்கே இவ்வளவு ஆர்வமாக உள்ளது.. நேரில் சென்றிருந்தால்..சூப்பர்..என்ன பண்ணுறது.. சிங்கப்பூர் விட்டு போயி 1 வருஷம், ஆச்சே !! இங்கே பெர்த் ‘ல அந்த மாதிரி ஏதும் கிடையாதே… தமிழ் ஆளுன்னு பாத்தா மூஞ்சிய திருபிட்டு போகுதுங்க உள்ளூர் தமிழ் ஆளுங்க.. பேச கூட காசு கொடுக்கணும் போல இங்கே.. !!

Reply

கிரி June 16, 2008 at 10:12 AM

// திகழ்மிளிர் said…
என்னால் கலந்து முடியவில்லை
என்றாலும்//

திகழ்மிளிர் நீங்க சிங்கை தானா !!! என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.. செந்தில் வந்து ஹல்வா கொடுத்தாரு,நீங்க வராமையே ஹல்வா கொடுத்துட்டீங்க :( (

Reply

கிரி June 16, 2008 at 10:18 AM

// கீ – வென் said…
இங்கே பெர்த் ‘ல அந்த மாதிரி ஏதும் கிடையாதே… தமிழ் ஆளுன்னு பாத்தா மூஞ்சிய திருபிட்டு போகுதுங்க உள்ளூர் தமிழ் ஆளுங்க.. பேச கூட காசு கொடுக்கணும் போல இங்கே.. !!//

இதெல்லாம் வேற நடக்குதா.. சிங்கப்பூர் அந்த விசயத்துல பரவாயில்ல ..ஒரு வேளை இங்க மூஞ்சிய திருப்பினாலும் திருப்பின பக்கமும் ஒரு தமிழ் மூஞ்சி தான் இருக்கும்னு அதை பார்க்கிறதுக்கு இதையே பார்க்கலாம்னு இருக்குமோ !! :-) )))

Reply

ஜீவன் June 16, 2008 at 10:19 AM

கிரி,
சீரியஸாக பேசுகிறீர்கள்..
ஆனா காமெடியாக எழுதுகிறேர்கள்.

ஆமா, உங்க ப்ரொபைலில் உள்ள போட்டோவில் உள்ள அம்மணி யாருங்க ?

Reply

υnĸnown вlogger™ June 16, 2008 at 10:27 AM

//ம்ம்ஹீம் அதெல்லாம் முடியாது ..நீங்க வீணை வாசித்து தான் ஆக வேண்டும் ..இல்லைனா அடுத்த முறை வரும் போது கத்துட்டாவது வாங்க..:-))))))//

யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிடீங்க.என் வீணை இசையில் நனைந்து போய்(நொந்து போய்) ஆனந்த கண்ணீர் விட்ட வடுவூர் குமார் அண்ணா கிட்ட கேட்டு பாருங்க என் வீணை புலமையைப் பத்தி ;)

//அது சரி….. ஜெகதீசன் கொந்தளிச்சுடுவாறு இதை கேட்டாருன்னா.. பயங்கரமான பிசி ல வந்து இருந்தாரு :-) )//

ஆமா பதிவு எழுதுறது,கும்மி அடிக்கிறது,ஜி டாக்கில் மொக்கை போடுறதுன்னு ரொம்ப பிசியா இருந்தவரை இப்படி 4 மணி நேரம் அமைதியா முறுக்கு சாப்பிட்ட வைச்சுடீங்களே ;)
அவரு ரொம்ப்ப்ப்பா பிசிதானுங்க.ஒத்துக்குறேன்

Reply

கிரி June 16, 2008 at 10:29 AM

// ஜீவன் said…
கிரி,
சீரியஸாக பேசுகிறீர்கள்..
ஆனா காமெடியாக எழுதுகிறேர்கள்//

ஜீவன் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே :-) ))

ஜீவன் நானே கலகலப்பான ஆள் தாங்க.. நம்ம கொள்கையே (இதெல்லாம் வேற இருக்கான்னு எல்லாம் கேட்கப்படாது) நாமளும் சந்தோசமா இருக்கணும் அடுத்தவங்களையும் சந்தோசமா வைத்துக்கானும், அடுத்தவங்க மனதை புண் படுத்தாத வகையில்.

//ஆமா, உங்க ப்ரொபைலில் உள்ள போட்டோவில் உள்ள அம்மணி யாருங்க ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படி ஒரு கேள்வி கேட்டு என்னை கொந்தளிக்க வைத்துட்டீங்க. இவங்க தாங்க திருமணம் ஆகியும் தமிழ் திரை உலகை தனது கவர்ச்சியால் கலக்கி கொண்டு இருக்கும் வாளை மீனு “மாளவிகா”. நான் அறிவிக்கப்படாத ரசிகர் மன்ற தலைவன் :-) ))))

Reply

கிரி June 16, 2008 at 10:37 AM

//துர்கா said…
யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிடீங்க.என் வீணை இசையில் நனைந்து போய்(நொந்து போய்) ஆனந்த கண்ணீர் விட்ட வடுவூர் குமார் அண்ணா கிட்ட கேட்டு பாருங்க என் வீணை புலமையைப் பத்தி ;) //

துர்கா எத்தனையோ பார்த்துட்டோம் ..இதை பார்க்க மாட்டோமா :-) ))

//ஆமா பதிவு எழுதுறது,கும்மி அடிக்கிறது,ஜி டாக்கில் மொக்கை போடுறதுன்னு ரொம்ப பிசியா இருந்தவரை இப்படி 4 மணி நேரம் அமைதியா முறுக்கு சாப்பிட்ட வைச்சுடீங்களே ;)
அவரு ரொம்ப்ப்ப்பா பிசிதானுங்க.ஒத்துக்குறேன்//

ஆஹா! இப்படி நாலு பிட்டை போட்டா ..நம்ம ஜகதீசனை பற்றிய பல உண்மை வெளியே வரும் போல இருக்கே :-) ))))

Reply

கிரி June 16, 2008 at 11:03 AM

//துளசி கோபால் said…
அடுத்தமுறை சிங்கை வரும்போது சந்திப்பு வச்சுக்கலாம்.//

திரும்பவும் ஒரு மாபெரும்!!! மாநாடா..கலக்கிடுவோம் வாங்க :-) ))

துளசி மேடம், கோபால் அய்யா வருவாருன்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன்..சரி உங்களை தான் பார்க்க முடியலை..உங்க அவரை யாவது பார்க்கலாம்னு இருந்தேன். சீக்கிரம் சிங்கை வாங்க கிளம்பி

Reply

மருதநாயகம் June 30, 2008 at 3:18 PM

உங்க பதிவு சூப்பர் லா. தொடர்ந்து எழுதுங்க லா

Reply

கிரி June 30, 2008 at 5:23 PM

//மருதநாயகம் said…
உங்க பதிவு சூப்பர் லா. தொடர்ந்து எழுதுங்க லா//

நன்றி மருதநாயகம்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed