Jun 24, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 3


நான் என் அக்காவிடம் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்த போது, அவர்கள் வீடு மாறுவதை பற்றி குறிப்பிட்டார்கள், தற்போது பெசன்ட் நகர் பகுதியில் இருக்கிறார்கள், என் மாறுகிறீர்கள் என்று கேட்ட போது. வீட்டிற்கு போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும், தற்போது 6500 Rs கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் ஒப்பந்தம் புதுப்பித்தால் 15000Rs கேட்கிறார்கள் அதனால் அவ்வளவு கொடுக்க முடியாததால் வேறு வீடு பார்க்க போவதாகவும் கூறி என்னை அதிர்ச்சி அடைய வைத்தார்.


6500 Rs எங்கே இருக்கிறது 15000 Rs எங்கே இருக்கிறது, இவர்கள் சொல்லும் உயர்வு 100% க்கும் அதிகமாக இருக்கிறது. இதற்க்கு என் அக்கா இருக்கும் வீடு அப்படி ஒன்றும் சூப்பர் வீடெல்லாம் கிடையாது, மிக பழைய வீடு, பராமரிப்பு பணிகள் கூட ஒழுங்காக செய்து தருவது கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவர்கள் குடி இருக்கும் காலனிக்கு கொஞ்சம் பெய்ன்ட்டை கண்ணில் காட்டி இருகிறார்கள். அவ்வளவு பழைய வீடு. இதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம், இவர்கள் வீடு இருக்கும் கீழ் தளத்தில் உள்ள வீட்டு முதலாளி அந்த வீட்டை 18000 Rs விட்டு இருக்கிறாராம் அதற்க்கு எங்க வீட்டு முதலாளி கொஞ்சம் பரவாயில்லை என்று கூற எனக்கு தலை சுற்றியது.


என் அக்காவின் குழந்தைகள் அடையாரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள், இதனால் வேறு பகுதிக்கும் மாற முடியவில்லை. இதுவும் பெரிய தடையாக உள்ளது. இதை விட கொடுமை என் அக்கா வீடு தேடிய போது கிடைத்த தகவலாக கூறிய செய்தி. ஒரு வீடு 25000 Rs க்கும், முழு வசதி (fully furnished) செய்யப்பட்ட வீடு 30000 Rs ம் ஒரு சில வீடுகள் அதற்கு மேலும் கூறிய போது எனக்கு மயக்கம் வராத குறை தான். இங்கு சிங்கையிலேயே அதை விட கொஞ்சம் தான் அதிகம். தற்போது அடையாறு பகுதியில் 10000 Rs குறைந்து வீடே கிடையாது என்று கூறிய போது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.


வாடகை பிரச்சனை குறித்து ஏற்கனவே நான் ஒரு பதிவு எழுதி இருந்தாலும், ஒரு சில கருத்துகளை திரும்ப கூறுகிறேன்.


தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது, அதை போல வீட்டின் வாடகையும் உயருகிறது. ஆனால் உயரும் அளவின் அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக உயர்கிறது, இதுவே அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.


நடுத்தர மக்களின் சம்பளமும் உயர்ந்தால் பரவாயில்லை, அவர்களுடைய சம்பளம் அதே நிலையில் இருக்கிறது ஆனால் மற்ற அத்யாவசிய தேவைகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே தங்களின் சம்பளத்தில் மற்றதை குறைத்து கொண்டு மிகவும் தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள்.


எவ்வளவு தான் இழுத்து பிடித்து வாழ்க்கையை ஓட்டினாலும், இப்படி கண்டபடி உயர்ந்து வரும் வாடகை பூதத்தை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறி கொண்டு இருக்கிறார்கள்.


வீடு என்பது அனைவரின் அடிப்படை பிரச்சனை, இதில் தற்போது மக்கள் எவ்வளவு விட்டு தரமுடியுமோ அவ்வளவு விட்டு தந்து தங்கள் எதிர்பார்ப்புகளை ஆசைகளை குறைத்துக்கொண்டார்கள். இன்னும் எவ்வளவு தான் அனுசரித்து போக முடியும்! (வேறு வழியில்லை அது வேறு விஷயம்)


இத்தனை வாடகை வாங்குகிறார்களே அதற்குண்டான வசதிகள் செய்து தரப்படுகின்றனவா! என்றால் கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்று கூறலாம். ஒன்றுமே இல்லாத வீட்டிற்கு 6000 ..8000 கொடுத்தாக வேண்டும் என்றால் எப்படி நியாயம் ஆகும்.


வீட்டுக்கு டிமாண்ட் இருப்பதால் இப்படி ஒரு வரைமுறையே இல்லாமல் ஏற்றி கொண்டு இருப்பது எங்கே சென்று முடியும்.


முன்பு வாடகை அதிகமாக இருக்கிறது என்று அனைவரும் கிண்டியில் வீடு பார்த்தார்கள், இப்போது அங்கேயும் அதிகம் ஆனதால், தாம்பரத்தில் பார்த்தார்கள் இப்போது அங்கேயும் அதிகம் ஆகி விட்டது..இப்படியே இரும்புலியூர் னு தாண்டிட்டு போய் செங்கல்பட்டுல தான் இனி நடுத்தர மக்கள் வசிக்க முடியும் போல இருக்கு.


அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.

42 COMMENTS:

வடுவூர் குமார் on 6:49 PM, June 24, 2008 said...

சிங்கப்பூர் வாடகை எவ்வளவோ பரவாயில்லை.
என் அறைக்கு 12000 வாடகை (இணைய இணைப்போடு)

ஜெகதீசன் on 7:01 PM, June 24, 2008 said...

//
வடுவூர் குமார் said...
சிங்கப்பூர் வாடகை எவ்வளவோ பரவாயில்லை.
என் அறைக்கு 12000 வாடகை (இணைய இணைப்போடு)
//
பரவாயில்லை...
எங்கள் வீடு வாடகை 40000 வருது... :(

கிரி on 7:29 PM, June 24, 2008 said...

// வடுவூர் குமார் said...
சிங்கப்பூர் வாடகை எவ்வளவோ பரவாயில்லை.
என் அறைக்கு 12000 வாடகை (இணைய இணைப்போடு)//

இங்கே வசதி செய்து கொடுத்து வாடகை அதிகம் வாங்குகிறார்கள் மற்றும் இங்கேயும் தற்போது வீட்டு வாடகை அதிகம் ஆகி விட்டாலும், இங்கே உள்ள சம்பளத்துக்கு பரவாயில்லை, சென்னையை ஒப்பிடும் பொது.

உங்கள் வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.

கிரி on 7:31 PM, June 24, 2008 said...

//ஜெகதீசன் said...
பரவாயில்லை...
எங்கள் வீடு வாடகை 40000 வருது... :(//

பரவாயில்லை சென்னையை விட 10000 தான் அதிகம் :-))) எனக்கும் அதே தான்.

எம்.ரிஷான் ஷெரீப் on 7:52 PM, June 24, 2008 said...

//அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. //

இதே கருத்துத்தான் என்னுடையதும்.
அரசு இதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
ஏன் எவருமே இன்னும் இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்துப் பேசாமல் இருக்கிறீர்கள்?

ராமலக்ஷ்மி on 8:04 PM, June 24, 2008 said...

எல்லா பெரு நகரங்களிலும் இது பெரிய வாழ்க்கைப் பிரச்சனையாக உருவெடுத்துதான் வருகிறது கிரி. ஏழு வருடங்களுக்கு முன்னமே ஃப்ளாட் வாங்கி செட்டிலானது நிம்மதியா இருக்கு, சுற்றிலும் எகிறி வரும் வாடகைகளைப் பார்த்து. லீஸ், அக்ரிமெண்ட் என இடம் மாறி இடம் மாறி அவஸ்தை படுவோர், இந்தப் பிரச்சனையே வேண்டாம்னு வீடு வாங்கப் பார்த்தால் அதுவோ எட்டாக் கனி கிட்டாக் கனீயாக அல்லவா இருக்கிறது?

ச்சின்னப் பையன் on 8:33 PM, June 24, 2008 said...

முன்னாடில்லாம் சென்னையில் 'லீஸ்' இதெல்லாம் இருந்ததில்லை.. இப்போ வந்திருச்சுன்னு நினைக்கிறேன்... ஆனா 100% உயர்வு எல்லாம் டூ மச்...

கிரி on 9:04 PM, June 24, 2008 said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இதே கருத்துத்தான் என்னுடையதும்.
அரசு இதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
ஏன் எவருமே இன்னும் இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்துப் பேசாமல் இருக்கிறீர்கள்?//

ரிஷான் (சரியா சொல்லிட்டேன் :D) தனி ஆளாக எல்லாம் இதை கூற முடியாது. அப்படி கூறினால் நம்மை செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல பார்ப்பார்கள்.

இதை ஏதாவது ஒரு அமைப்பு அல்லது இயக்கம் கொண்டு சென்றால் மட்டுமே இது அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். அதற்கு பிறகு அதை அரசு கவனித்து, பரிசீலனை செய்து, திட்டம் வகுத்து ம்ம்ஹீம் என்னமோ போங்க நல்லது நடந்தா சரி

கிரி on 9:17 PM, June 24, 2008 said...

ராமலக்ஷ்மி said...
//ஏழு வருடங்களுக்கு முன்னமே ஃப்ளாட் வாங்கி செட்டிலானது நிம்மதியா இருக்கு//

நீங்க வாழ்க்கையிலே செய்த மிக சிறந்த காரியம் கண்டிப்பாக இதுவாக தான் இருக்க முடியும். இதை நினைத்து நீங்கள் அடிக்கடி பெருமை பட்டுக்கொள்ளலாம்.

தற்போது வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களால், ஏன் நன்கு சம்பாதிக்கும் நபர்களால் கூட இயலாத காரியம். வரிக்காக வீடு வாங்கி மாத தவணை கட்ட முடியாமல் திணறுபவர்கள் ஏராளம். தாம்பரத்திலே வீடு 25 லட்சத்திற்கு குறைவாக இல்லை. எனவே நீங்கள் தற்செயலாக வாங்கினீர்களா அல்லது திட்டமிட்டு வாங்கினீர்களா என்று தெரியவில்லை, ஆனால் பெரிய மனக்கஷ்டத்தில் இருந்து தப்பி விட்டீர்கள்.

//லீஸ், அக்ரிமெண்ட் என இடம் மாறி இடம் மாறி அவஸ்தை படுவோர்,//

இவங்க நிலைமை எல்லாம் கொடுமையிலும் கொடுமைங்க.. வாடகை வீட்டுல கஷ்டப்படுறவங்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.

//இந்தப் பிரச்சனையே வேண்டாம்னு வீடு வாங்கப் பார்த்தால் அதுவோ எட்டாக் கனி கிட்டாக் கனீயாக அல்லவா இருக்கிறது?//

எட்டாக்கனி இல்லைங்க..சொல்ல போனால் கனியே கண்ணுக்கு தெரியலை என்று தான் நினைக்கிறேன் :-))))

உங்க வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

கிரி on 9:23 PM, June 24, 2008 said...

// ச்சின்னப் பையன் said...
முன்னாடில்லாம் சென்னையில் 'லீஸ்' இதெல்லாம் இருந்ததில்லை.. //

உண்மை தான் ஒப்பந்தம் எல்லாம் முன்பு சென்னையில் கிடையாது, ஆனால் தற்போது பிரச்னையை தவிர்க்க இதை போல போட்டு விடுகிறார்கள்.

//ஆனா 100% உயர்வு எல்லாம் டூ மச்...//

எனக்கு 5 மச் ஆகா தெரியுதுங்க..அடுத்த முறை சென்றால் 10 மச் ஆகாமல் இருந்தால் சரி ..என்ன சொல்றீங்க :-))))

VIKNESHWARAN on 9:32 PM, June 24, 2008 said...

ம்ம்ம்ம்... இன்னும் கொஞ்சம் நாள் போனால் எல்லோரும் 'கொண்டேய்னரில்' தான் வசிக்க வேண்டும் போல... குருவிக் கூண்டில் இருப்பது போல...

நானும் இந்த வருட இறுதிக்குள் ஒரு வீட்டை வாங்கிப் போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கிறேன்... இப்பொழுது இல்லாவிட்டலும் பிற்காலத்தில் உதவுமே...

சினிமா நிருபர் on 10:24 PM, June 24, 2008 said...

//அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.//


இதே கோரிக்கையை வலியுறுத்தி நானும் பத்திரிகையில் செய்தி எழுதியிருக்கிறேன். ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து எந்தவித பதிலோ, நடவடிக்கையோ இல்லை என்பதுதான் வருத்தம் தரத்தக்க செய்தி.

கிரி on 7:46 AM, June 25, 2008 said...

// VIKNESHWARAN said...
ம்ம்ம்ம்... இன்னும் கொஞ்சம் நாள் போனால் எல்லோரும் 'கொண்டேய்னரில்' தான் வசிக்க வேண்டும் போல... குருவிக் கூண்டில் இருப்பது போல...//

:-)))))

//நானும் இந்த வருட இறுதிக்குள் ஒரு வீட்டை வாங்கிப் போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கிறேன்... //

நல்ல முடிவு தான்..முடிவை தாமத படுத்தாமல் விரைவிலேயே நிறைவேற்றி விடுங்கள், இல்லை என்றால் இன்னும் விலை கூடி விடலாம் :-)

கிரி on 7:52 AM, June 25, 2008 said...

//சினிமா நிருபர் said...
இதே கோரிக்கையை வலியுறுத்தி நானும் பத்திரிகையில் செய்தி எழுதியிருக்கிறேன்//

அப்படியா! சந்தோசம் நிருபரே. நான் கூட நீங்கள் திரை செய்திகள் மட்டுமே தரும் நிருபர் என்று இருந்தேன். அப்படி என்றால் நீங்கள் ஏன் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக ஒரு வலைப்பதிவு தொடங்க கூடாது..அவ்வாறு நீங்கள் தொடங்கினால் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல ஆதரவு இருக்கும் என்பது என எண்ணம்.

எனென்றால் நீங்கள் தற்போதைய திரை வலைப்பதிவில் தொடர்ந்து செய்திகளை போட்டு வருகிறீர்கள், இதனால் உங்களுக்கு தொடர் வாசகர்கள் அதிகம் ஆகி இருப்பார்கள், இதே போல நீங்கள் அரசியல் செய்திகளில் வலை பதிவு தொடங்கினால் பெரும் வரவேற்ப்பு கிடைக்கும் என்பது என் கருத்து.

நீங்கள் நாகரீகமாகவும் எழுதுவதும் உங்களின் ஒரு தனி சிறப்பு.

//ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து எந்தவித பதிலோ, நடவடிக்கையோ இல்லை என்பதுதான் வருத்தம் தரத்தக்க செய்தி//

உங்கள் கடமையை செய்து விட்டீகள், பலன் தாமதமாக வரும் என்று நம்புவோம்.

Dhans on 9:44 AM, June 25, 2008 said...

பேச்சுலர் எங்களாலேயே வடகைகுடுக்க முடியாத நிலைமை வந்துள்ளது, ஐந்து பேர் சேர்ந்து தங்கி உள்ளோம், எங்கள் வீட்டு வாடகை இரண்டு வருடத்தில் 4000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எங்களது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டில் இரண்டு மதத்தில் 6000 ரூபாயாக இருந்த வாடகையை 14000 ரூபாயாக உயர்த்தி முடிந்தால் குடு இல்லாட்டி காலி பண்ணு என்று சொல்லி உள்ளனர்.

அடுத்த வருடம் திருமணம் பண்ணலாம் என்று இருந்த நண்பர்கள் இப்போது இரண்டு வருடம் கழித்து திருமணம் பண்ணலாம் அதற்குள் வாடகை வீட்டுக்கு முன்பணம் குடுக்க சேமித்து வைக்க வேண்டும் என்று இருக்கின்றனர். (நான் கூட அதற்க்காக சேமிக்க ஆரம்பித்து விட்டேன்)

கயல்விழி முத்துலெட்சுமி on 9:53 AM, June 25, 2008 said...

உங்க பதிவுக்கு வருவதில் சிரமம் இருந்தது சரி எண்ணுவான் பிரச்சனைனு அதை எடுத்தீங்க.. இப்ப பதிவுக்கு வர முடியுது..ஆனா பதிவ படிக்க முடியறது இல்ல.. கண்ணு வலி .. கொஞ்சம் பேக்ரவுண்ட் கலரை கண்ணுக்கு இதமானதா மாற்றும் படி கேட்டுக்கறேன்..

கிரி on 11:00 AM, June 25, 2008 said...

// Dhans said...
பேச்சுலர் எங்களாலேயே வடகைகுடுக்க முடியாத நிலைமை வந்துள்ளது, ஐந்து பேர் சேர்ந்து தங்கி உள்ளோம், எங்கள் வீட்டு வாடகை இரண்டு வருடத்தில் 4000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது//

100% உயர்வு

//முடிந்தால் குடு இல்லாட்டி காலி பண்ணு என்று சொல்லி உள்ளனர்//

இப்ப எல்லோரும் இதை தான் கூறுகிறார்கள், டிமாண்ட் இருப்பதால்.

//(நான் கூட அதற்க்காக சேமிக்க ஆரம்பித்து விட்டேன்)//

அப்ப நீங்க நினைத்தை விட அதிகமாக சேமித்து வைங்க, அப்போது தான் சரியாக இருக்கும். முன்பணமே அந்த சமயத்தில் 200000 வந்து விடும். மிகை படுத்தி கூறவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி தன்ஸ்

சினிமா நிருபர் on 12:11 PM, June 25, 2008 said...

//சந்தோசம் நிருபரே. நான் கூட நீங்கள் திரை செய்திகள் மட்டுமே தரும் நிருபர் என்று இருந்தேன். அப்படி என்றால் நீங்கள் ஏன் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக ஒரு வலைப்பதிவு தொடங்க கூடாது..அவ்வாறு நீங்கள் தொடங்கினால் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல ஆதரவு இருக்கும் என்பது என எண்ணம்//

நான் எழுதும் எழுத்துக்கள் உங்களைப் போன்றவர்களால் ரசித்து படிக்கப்படுகிறது என்பதே வலைப்பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் வெற்றி. தங்களது கருத்துக்கு நன்றி. இப்போது சினிமா வலைப்பூவிற்கு செய்தி கொடுப்பதற்கே நேரம் கிடைக்கவில்லை. அடுத்த மாதத்தில் சினிமாநிருபர் டாட் காம் வேறு உருவாக விருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல்-சமூகம் குறித்த பதிவை தொடங்கினால், அதில் எழுத முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் முயற்சி செய்கிறேன்.

//நீங்கள் நாகரீகமாகவும் எழுதுவதும் உங்களின் ஒரு தனி சிறப்பு.//


ரொம்ப நன்றி கிரி. உங்களைப் போன்ற நாகரீகமான விமர்சகர்கள், எனது வலைப்பூவுக்கு வாசகர்களாக வந்து செல்கிறீர்கள். நான் எழுதும் நாகரீக வார்த்தைகளையே நான் உங்களுக்கு கொடுக்கும் மரியாதையாக கருதுகிறேன்.

மங்களூர் சிவா on 3:03 PM, June 25, 2008 said...

/
அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
/

அந்நியன் படத்துல ஒரு கோர்ட் சீன் வருமே அதுதான் ஞாபகத்துக்கு வருது.

கவலைக்குறிய விஷயம்தான்.

கிரி on 3:51 PM, June 25, 2008 said...

கயல்விழி முத்துலெட்சுமி said...
//பதிவ படிக்க முடியறது இல்ல.. கண்ணு வலி//

ஏற்கனவே கண் வலியா இல்ல ..என் பதிவ படித்ததால் கண் வலியா ;-)

//கொஞ்சம் பேக்ரவுண்ட் கலரை கண்ணுக்கு இதமானதா மாற்றும் படி கேட்டுக்கறேன்//

மாற்றி விட்டேன்..நான் அடிக்கடி இப்படி தான் மாற்றி கொண்டே இருப்பேன்..ஒரே மாதிரி இருந்தா சலிப்பா இருக்குங்க..இருக்குற வண்ணங்களில் கலந்து கட்டி அடிக்கிறேன் :-)) வருகிறவங்களுக்கும் ஒரே மாதிரி இருந்தா கடுப்பா இருக்கும்

கிரி on 6:54 PM, June 25, 2008 said...

//மங்களூர் சிவா said...
/
அந்நியன் படத்துல ஒரு கோர்ட் சீன் வருமே அதுதான் ஞாபகத்துக்கு வருது.
கவலைக்குறிய விஷயம்தான்.//

ஆமாங்க சிவா..நடுத்தர மக்கள் ரத்த கண்ணீர் வடிக்காத குறை தான் :-(

Thirunavukkarasu on 10:11 AM, June 26, 2008 said...

இதற்கெல்லாம் முதல் காரணம் வீடு மற்றும் வீடு மனையின் விலை ஏறிக்கொண்டே போவதுதான் ..அரசு முதலில் அதனை கட்டுபடுத்த வேண்டும். ..௩30,௪40 லட்சங்களுக்கு வீடு வாங்கியவர்களிடம் நாம் ௩3000,4௪000 வாடகை கொடுக்க நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்..???

கிரி on 10:39 AM, June 26, 2008 said...

// Thirunavukkarasu said...
இதற்கெல்லாம் முதல் காரணம் வீடு மற்றும் வீடு மனையின் விலை ஏறிக்கொண்டே போவதுதான் அரசு முதலில் அதனை கட்டுபடுத்த வேண்டும்//

அப்பாடா! இன்னைக்கு திரு மொக்கை பின்னூட்டம் போடாம, ஒழுங்க போட்டுட்டாருயா :-)))

//..௩30,௪40 லட்சங்களுக்கு வீடு வாங்கியவர்களிடம் நாம் ௩3000,4௪000 வாடகை கொடுக்க நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்..???//

சரிங்க இந்த மாதிரி வீடு வாங்கியவர்கள் எல்லாம் யார்..இந்த இரண்டு வருடத்தில் வாங்கியவர்களே அல்லது ஒரு வருடம் முன்னே பின்னே வாங்கி இருக்கலாம். ஆதி காலத்துல கட்டுன வீட்டிற்க்கெல்லாம் இந்த மாதிரி வாங்குறது தப்பு தானே.

நான் கூட பதிவில் என்ன கூறி இருக்கிறேன்..பணம் வாங்குறது கூட ஒரு கணக்குல வருதுன்னு வைத்துக்கலாம்,ஆனால் எந்த வசதியும் செய்து தராம வாடகையை மட்டும் உயர்த்துவது நியாயமா? இது எப்படி இருக்குனா சரவணபவன் ல பொங்கல் அளவை குறைத்துக்கொண்டு விலையை மட்டும் கூட்டி கொண்டே செல்வதை போல இருக்கு ..

அதே போல நீங்கள் கூறும் கூற்றை ஒத்துக்கொள்கிறேன், வீட்டு மனையின் விலையையும் குறைக்க வேண்டும், அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை.

Thala on 8:35 PM, June 26, 2008 said...

வீடு,வீட்டு மனை விலை உயர்விற்கு காரணம் கணிபொறி துறையில் இருக்கும் வல்லுனர்கள் தான் அதிகம் காரணம் என்பது என் கருத்து.

Vidhya on 9:09 PM, June 26, 2008 said...

போற போக்கை பார்த்தால் சென்னைக்கே திரும்பலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்துவிடும் போல் இருக்கே... வீட்டு வாடகைக்கே சம்பாதிக்க வேண்டும் போல் இருக்கிறதே... ஆனால் இந்த கூடி வரும் வாடகை கூடிய சீக்கிரத்தில் ஒரு நிலையை அடையும் பின்பு அதற்கு மேல் செல்லாது ... என்று நம்புவோமாக ... நம்பிக்கை தான் வாழ்கையின் உறுதுணை ... :-) ரொம்ப பேசிட்டேனோ...

இவன் on 12:35 AM, June 27, 2008 said...

ஏன் கிரி அங்கே வீட்டு வாடகைச்சட்டம் ஒன்றும் இல்லையா?? நான் இலங்கையைச்சேர்ந்தவன்..... இப்பொழுது இருப்பது இருப்பது ஆஸ்திரேலியாவில்.... இங்கே இருக்கிறது... இலங்கையில் இதுவரை இருந்ததாக கேள்விப்பட்டதில்லை அதுதான் கேட்கிறேன்

கிரி on 8:06 AM, June 27, 2008 said...

//Thala said...
வீடு,வீட்டு மனை விலை உயர்விற்கு காரணம் கணிபொறி துறையில் இருக்கும் வல்லுனர்கள் தான் அதிகம் காரணம் என்பது என் கருத்து//

அதுவும் ஒரு கருத்தாக இருக்கலாம், அதுவே காரணம் என்று கூற முடியாது. எனென்றால் தற்போது அனைத்து துறைகளும் மேம்பட்டு வருகிறது, பண புழக்காட்டம் அதிகரித்து வருகிறது. பல துறைகளிலும் அனைவரும் பெரிய அளவில் சம்பாதித்து வருகிறார்கள், இவர்கள் பெரும்பான்மை இடத்தை வேண்டும் என்றால் பிடிக்கலாம்..

சரி எங்க உங்கள ரொம்ப நாளா ஆள காணோம், திரு வேற வந்து பொறுப்பா ஒரு கருத்து கூறி கருத்து கருத்து கந்த சாமி ஆகிட்டாரு :-))

கிரி on 8:08 AM, June 27, 2008 said...

// Vidhya said...
போற போக்கை பார்த்தால் சென்னைக்கே திரும்பலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்துவிடும் போல் இருக்கே//

:-)))

//ஆனால் இந்த கூடி வரும் வாடகை கூடிய சீக்கிரத்தில் ஒரு நிலையை அடையும் பின்பு அதற்கு மேல் செல்லாது ... என்று நம்புவோமாக ... நம்பிக்கை தான் வாழ்கையின் உறுதுணை ... :-) ரொம்ப பேசிட்டேனோ...//

:-)))

அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தால் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது.

கிரி on 8:14 AM, June 27, 2008 said...

// இவன் said...
ஏன் கிரி அங்கே வீட்டு வாடகைச்சட்டம் ஒன்றும் இல்லையா//

இல்லையே இவன். அது தானே எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கிறது...அப்படியே இருந்தாலும் நிலைமை எப்படி இருக்கு பாருங்க

//இலங்கையைச்சேர்ந்தவன்..... இப்பொழுது இருப்பது இருப்பது ஆஸ்திரேலியாவில்.... இங்கே இருக்கிறது//

அப்படியா! நல்ல விஷயம் தான். இங்கு சிங்கப்பூர் ல் கூட வாடகை உயர்ந்து கொண்டே போகிறது..தற்போது ஓரளவுக்கு பராவயில்லை..

//இலங்கையில் இதுவரை இருந்ததாக கேள்விப்பட்டதில்லை அதுதான் கேட்கிறேன்//

இங்கே ஒரு வெங்காயமும் கிடையாதுங்க.. அப்படியே இருந்தாலும் அதை எல்லாம் யாரு ஒழுங்கா கவனிக்கறாங்க..அப்படி பார்க்குற ஆளே நாலு வீட்டை வாடகைக்கு விட்டு இருப்பாரு இந்த மாதிரி..அப்புறம் எங்க ...

இந்தியாவில் அனைத்திற்கும் சட்டங்கள் உண்டு, ஆனால் அது கடை பிடிக்கப்படுவது தான் இல்லை அல்லது மீறப்படுகிறது.

உங்கள் வருகைக்கு நன்றி இவன்.

J J Reegan on 1:39 PM, June 28, 2008 said...

//அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. //

நீங்க வேற இவனுங்க அதில ஏதாவது சொரண்டலாம்னு பாப்பானுங்க....

கிரி on 3:00 PM, June 28, 2008 said...

//நீங்க வேற இவனுங்க அதில ஏதாவது சொரண்டலாம்னு பாப்பானுங்க....//

உண்மை தான் ரீகன் :-))

இவன் on 7:56 PM, June 29, 2008 said...

//// இவன் said...
ஏன் கிரி அங்கே வீட்டு வாடகைச்சட்டம் ஒன்றும் இல்லையா//

இல்லையே இவன். அது தானே எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கிறது...அப்படியே இருந்தாலும் நிலைமை எப்படி இருக்கு பாருங்க//


கிரி இந்தியாவில் rent control act என்று ஒன்று இருக்கிறது... இது விஜய் tvயில் வரும் நீயா நானா பார்த்தபோது நான் தெரிந்து கொண்டது.... மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை....

கோவி.கண்ணன் on 9:06 AM, June 30, 2008 said...

கிரி,

சென்னையைப் பற்றி சொல்லி இருப்பது உண்மைதான்

நடுத்தர மக்கள் கூவம் ஓரத்தில் குடிசைகளுக்கு இடம்பெயர்ந்தாலும் பெயர்வார்கள்.

ஆண்கள் தங்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தனியாளாக மேன்சனில் தங்கி இருந்து வேலை பார்க்கும் நிலை வரலாம்

கிரி on 9:41 AM, June 30, 2008 said...

//இவன் said...
கிரி இந்தியாவில் rent control act என்று ஒன்று இருக்கிறது... இது விஜய் tvயில் வரும் நீயா நானா பார்த்தபோது நான் தெரிந்து கொண்டது.... மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை....//

பாருங்க இந்த அளவுல தான் நானும் இருக்கேன், அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அரசாங்கமும் இருக்கு. அப்படியே இருந்தாலும் அதிலும் பல தில்லுமுல்லுகள் தான் அனைவரையும் வெறுப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.


-----------------------------------


//கோவி.கண்ணன் said...
கிரி,
சென்னையைப் பற்றி சொல்லி இருப்பது உண்மைதான்
நடுத்தர மக்கள் கூவம் ஓரத்தில் குடிசைகளுக்கு இடம்பெயர்ந்தாலும் பெயர்வார்கள்//

கோவி கண்ணன் இது நடக்குமா என்று தெரியவில்லை, நீங்கள் மும்பை தாராவி போன்று சொல்கிறீர்களா? என்னால் இதை உறுதியாக சொல்ல முடியலை..

//ஆண்கள் தங்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தனியாளாக மேன்சனில் தங்கி இருந்து வேலை பார்க்கும் நிலை வரலாம்//

இதை கூறினீர்களே! 100% உண்மை, நடக்க தான் போகிறது. ஏற்கனவே பல பேர் இப்படி இருக்கிறார்கள். பெண்களுக்கு மிக சிரமமாக இருக்கும். ஒரு சிலர் தொலைவில் இருந்து ரயில் மூலம் வந்து செல்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் பாதி ரயில் பயணத்திலேயே முடிந்து விடுகிறது.

jackiesekar on 10:03 AM, June 30, 2008 said...

எல்லா நகராட்சிகளிலும் 160 ஏக்கர் நிலம் ஒதுக்கி தகவல் தொழில் நுட்ப பூங்கா வரப்போவதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. சென்னையில் வந்த பூங்காவுக்கே டபுள் பெட் ரும் 3500ல இருந்தது 8000ம் ஆயிடுச்சி இங்க இருக்கிற நடுத்தர வர்கம் பேய் புடிச்சாப்பல குடும்பம் நடத்துறாங்க’ ,கோவை , மதுரை, சேலம் இங்கல்லாம் வாடகைக்கு குடி இருக்கறவங்க ஒன்னு புற நகர்ல வீடு பாருங்க அல்லது அட்வான்ஸ் அதிகமா சேர்த்து வைங்க.அம்புடுதான் சொல்லிபுட்டேன் . முதல்வர் திடிர் வாடகை உயர்வுக்கு எதாவது செய்யலாம் அல்லது சட்டம் போடலாம் ? அவுரு திருவாருர்காரர்தான் அவுரு கோபலபுரத்துல சொந்தமா வீடு வாங்கிட்டாரு , அவுருக்கு வாடகைக்கு குடியிரு்ககி்றவன் கஷ்ட்டங்கள் தெரியப்போவுதா என்ன? அன்புடன் / கருத்து புகைபடம் / ஜாக்கி சேகர் alredy i wrote this matter see the last line. but your post is very nice

இவன் on 11:04 AM, June 30, 2008 said...

//பாருங்க இந்த அளவுல தான் நானும் இருக்கேன், அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அரசாங்கமும் இருக்கு. அப்படியே இருந்தாலும் அதிலும் பல தில்லுமுல்லுகள் தான் அனைவரையும் வெறுப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.//
இப்படியே பேசிக்கொண்டு அரசை மட்டுமே குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதால் எந்தவித பலனும் இல்லை கிரி... இதற்கு மக்களாகவே ஏதாவது நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.... அதற்குத்தான் ஏதாவது செய்ய வேண்டும்

கிரி on 11:28 AM, June 30, 2008 said...

//jackiesekar said...

//அவுரு திருவாருர்காரர்தான் அவுரு கோபலபுரத்துல சொந்தமா வீடு வாங்கிட்டாரு , அவுருக்கு வாடகைக்கு குடியிரு்ககி்றவன் கஷ்ட்டங்கள் தெரியப்போவுதா //

சரியா சொன்னீங்க.

//alredy i wrote this matter see the last line. but your post is very nice. //

நன்றி ஜாக்கீ சேகர்

-----------------------------------

//இவன் said...
இப்படியே பேசிக்கொண்டு அரசை மட்டுமே குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதால் எந்தவித பலனும் இல்லை கிரி...//

நியாயமான கேள்வி.

இதற்க்கு மட்டுமல்ல எதற்குமே அரசை மட்டுமே குற்றம் சொல்வது எந்த பலனையும் தரப்போவதில்லை.

//இதற்கு மக்களாகவே ஏதாவது நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.... அதற்குத்தான் ஏதாவது செய்ய வேண்டும்//

பூனைக்கு யார் மணிகட்டுவது அது தானே பிரச்சனை. இதை எதாவது அமைப்பு முன்னிறுத்தி போராட்டம் செய்தால் மட்டுமே அரசின் கவனத்தை ஈர்க்கும். எதெதுக்கோ போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இதை கவனத்தில் எடுத்தால் என்ன?

ஒன்றும் இல்லை இந்த தசாவதாரம் க்கு எத்தனை பிரச்சனை, எதிர்ப்புகள் இது ரொம்ப முக்கியமா? இதுக்கு காட்டுற ஆர்வத்தை இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு காட்டினால் கஷ்டப்படும் மக்களாவது இவர்களை மனதார வாழ்த்துவார்கள்.

என்னை போல இருப்பவர்கள் குறைந்த பட்சம் இதை போல பதிவு எழுதி, இதை பற்றி விவாதிக்க வைக்கலாம், பதிவுலகில் நெறைய பெரிய தலைகளும் படிப்பதாக கேள்வி பட்டேன். என்னை போல இந்த பிரச்னையை பதிவாக எழுதுவர்களின் பதிவை படித்தாவது அவர்கள் பிரச்சனையை கொண்டு செல்ல மாட்டார்களா என்பது என் அல்ப ஆசை.

சாதாரணமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்துடன் போட்டி போட முடியாது. திரை படங்களில் மட்டுமே அது சாத்தியம்.

இவன் on 11:37 AM, June 30, 2008 said...

//சாதாரணமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்துடன் போட்டி போட முடியாது. திரை படங்களில் மட்டுமே அது சாத்தியம்.//

உண்மை கிரி

SINGAM on 9:03 PM, August 13, 2008 said...

துணை நகரங்கள் உருவானால் தான் இதெற்கெல்லாம் தீர்வு .... IT பார்க் நிறைய தென் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும்

கிரி on 9:47 PM, August 13, 2008 said...

//SINGAM said...
துணை நகரங்கள் உருவானால் தான் இதெற்கெல்லாம் தீர்வு .... IT பார்க் நிறைய தென் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும்//

உண்மைதான். ஆனால் இதை தவிர்ப்பது சிரமம் என்றே கருதுகிறேன். அதன் பிறகு சென்னை மக்கள் மட்டுமல்லாது அவர்களும் இதை புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் :-)

உங்கள் வருகைக்கு நன்றி சிங்கம்.

ராஜ நடராஜன் on 10:39 PM, August 13, 2008 said...

பதிவிலும் பின்னூட்டத்திலும் இப்படியெல்லாம் பயப்படுத்தினா எப்படி?நான் செவ்வாய்க்கு இப்பவே இடம் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்.தண்ணீரெல்லாம் கட்டி கட்டியா இருக்குதாம்.அதெல்லாம் திரவ நிலைக்கு வந்தபின் தான் இடம் கிடைக்குமென்கிறார்கள்.இருந்தாலும் பொறுத்திருந்து பார்க்கிறேன்.

கிரி on 10:48 PM, August 13, 2008 said...

//ராஜ நடராஜன் said...
தண்ணீரெல்லாம் கட்டி கட்டியா இருக்குதாம்.அதெல்லாம் திரவ நிலைக்கு வந்தபின் தான் இடம் கிடைக்குமென்கிறார்கள்.இருந்தாலும் பொறுத்திருந்து பார்க்கிறேன்.//

பார்த்துங்க நாங்க பார்க்காத தண்ணீர் பிரச்சனையான்னு அங்கே ஏற்கனவே சைட் போட்டு விற்பனை செய்து இருக்க போறானுக..:-)