Jun 11, 2008

20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)



எனக்கு என்னவோ இந்த 20-20 கிரிக்கெட் அவ்வளவா விரும்பி பார்க்க தோணல (IPL போட்டிகள்) ஊருக்கு சென்று இருந்த போது எல்லோரும் உலக கோப்பை ரேஞ்சுக்கு விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் கடைசி போட்டி மட்டுமே பார்த்தேன் அதுவும் ஒரு பகுதி தான். அது நம்மவர்கள் நம்மவர்களேயே எதிர்த்து ஆடியது தான். ஆனால் எனக்கு 20-20 போட்டிகள் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது விரும்பி பார்ப்பேன்.



ஊர்ல இந்த போட்டிகள்னால திரை அரங்குகளில் கூட கூட்டம் இல்லைனா பார்த்துக்குங்க. அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி இந்த IPL போட்டிகள்.



சரி விசயத்துக்கு வரேன். முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் பங்களாதேஷ் ல நடந்து கொண்டு இருக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் நம்மவர்கள் அடித்த அடியை பார்த்து (எப்பவாது இப்படி அடிக்கறாங்களா அதுனால ரொம்ப சந்தோசம் ஆகி விடுகிறது) இவர்கள் இன்னும் 20-20 மன நிலையில் இருந்து மீள வில்லையோ என்று நினைக்க தோன்றியது. 20 ஓவர் ல 150 ஓட்டங்கள் வந்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாக் பந்து வீச்சாளர்களை அடித்து நொங்கு எடுத்து விட்டார்கள் காம்பிர் சேவாக் யுவராஜ் மூவரும்.. இதுல சேவாக் 14 பவுண்டரி. இதில் நான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 20-20 யில் கலக்கிய யுஸுப் பதான் சரியாக விளையாடவில்லை அதே போல ஷர்மாவும். மற்றவர்கள் எடுத்த ஓட்டங்கள் இவர்கள் சரியாக விளையாடாமல் போனதை அமுக்கி விட்டது. கடைசியில் இந்தியா 330 ஓட்டங்கள் குவித்தது. கடைசி இரண்டு ஓவர்கள் சரியாக நம்மவர்கள் விளையாடவில்லை அல்லது உமர் குல் மற்றும் யூனிஸ் கான் சிறப்பாக பந்து வீசினார்கள். இல்லையென்றால் 350 ஓட்டங்கள் கிட்டே வந்து இருக்கும்.



அடுத்து விளையாடிய பாக், இந்திய அணியை பெரிதாக எதுவும் பயமுறுத்தாமல் சரணடைந்து விட்டது. முற்பகுதியில் பிரவீன் அட்டகாசமாக பந்து வீசி 4 பேரை பெவிலியனுக்கு அனுப்பினார். பிற்பகுதியில் பியுஷ்சாவ்லா கலக்கினார்.



மொத்தத்தில் நேற்று இந்தியா முன்னணி வீர்கள்!!! சச்சின், திராவிட் மற்றும் கங்குலி இல்லாமல் கலக்கி விட்டது.



போட்டி துளிகள்



இந்தியா பாக்கை முதல் முறையாக 140 ஓட்டங்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.



தன்வீர் பந்தில் தோனி சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார்.



தொடர்ந்து 12 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றி நடை போட்டு கொண்டு இருந்த பாக்கை இந்தியா தன் இந்த வெற்றியின் மூலம் நிறுத்தி விட்டது. (பெரும்பாலானவர்கள் வெற்றி நடையை நாம தான் தடுக்கிறோம் போல :-D)



பாக் பந்து வீச்சாளர் வகாப், "பீமர்" முறையில் தொடர்ந்து இரு முறை பந்து வீசியதால் அவருக்கு பந்து வீச்சு நடுவரால் மறுக்கப்பட்டது, மீதியை தன்வீர் வீசினார்.



வகாப் அதிக ஓட்டங்கள் இந்தியாவுக்கு எதிராக விட்டு கொடுத்த வீரர் என்ற அவபெயரையும் பெற்றார். இவர் 9.2 ஓவரில் 89 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



நேற்று பாக்கின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது, நிறைய கேட்சுகளை தவறவிட்டனர்.



கம்பீர் இரண்டு முறை தப்பினார் பாக் வீரர்கள் புண்ணியத்தால்.



நம்மவர்களில் பந்து வீச்சாளர்கள் பிரவீன் குமார் பியுஷ்சாவ்லா சிறப்பாக விளையாடினார்கள்.



முன்பெல்லாம் இந்தியா பாக்குடன் விளையாடுகிறது என்றால் பயங்கரமான வெறியுடன் பார்ப்பேன், இப்போது அவ்வாறு தோன்றுவதில்லை அவர்கள் மீது அவ்வளவாக வெறுப்பும் வருவதில்லை, ஏன் இந்த மாற்றம் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது இப்போது ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போது அவ்வாறு நினைக்க தோன்றுகிறது. அவங்களை தர்ம அடி அடிக்க வேண்டும், பேசினவன் வாயை எல்லாம் மூட வைக்க வேண்டும் என்று வருகிறது. பாக் ஆஸ்திரேலியா வுடன் விளையாடினாலும் எனக்கு பாக்கிற்க்கே ஆதரவு தர தோன்றுகிறது.



பின் குறிப்பு



இப்படி அருமையாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று உடனே சந்தோஷ பட வேண்டாம், அடுத்த போட்டியிலேயே கேவலமாக தோற்றாலும் தோற்பார்கள். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன? எத்தனை பார்த்து இருக்கோம் இதை பார்க்க மாட்டோமா :-))))))))

14 COMMENTS:

சினிமா நிருபர் on 2:38 PM, June 11, 2008 said...

//அருமையாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று உடனே சந்தோஷ பட வேண்டாம், அடுத்த போட்டியிலேயே கேவலமாக தோற்றாலும் தோற்பார்கள். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன? எத்தனை பார்த்து இருக்கோம் இதை பார்க்க மாட்டோமா :-))))))))//

நான் கிரிக்கெட் பார்ப்பவர்களையெல்லாம் வேலைவெட்டி இல்லையா என்று திட்டுபவன். முழு நாள் வேலையை கெடுக்கும் கிரிக்கெட்டை பார்த்து டென்ஷன் ஆவதை விட, நல்ல சினிமாவை தேர்ந்தெடுத்து பார்த்து இரண்டரை மணி நேரம் சந்தோஷப்படவதே மேல் என்று கருதுகிறேன். (பி.கு: நல்ல படத்துக்கு எங்கே போவது என்று யாராவது ‌கேட்டால் நான் பொறுப்பல்ல...!)

velusara on 2:54 PM, June 11, 2008 said...

அருமை நண்பர் கிரி அவர்களே
உங்களுடைய கருத்தை நான் ஏற்கிறேன்
அடுத்த போட்டி கண்டிப்பாக ஒழுங்க விளயடுவங்கனு யாருக்கு தெரியும்

சரவணன்

கிரி on 4:01 PM, June 11, 2008 said...

//சினிமா நிருபர் said...
நான் கிரிக்கெட் பார்ப்பவர்களையெல்லாம் வேலைவெட்டி இல்லையா என்று திட்டுபவன். முழு நாள் வேலையை கெடுக்கும் கிரிக்கெட்டை பார்த்து டென்ஷன் ஆவதை விட, நல்ல சினிமாவை தேர்ந்தெடுத்து பார்த்து இரண்டரை மணி நேரம் சந்தோஷப்படவதே மேல் என்று கருதுகிறேன். (பி.கு: நல்ல படத்துக்கு எங்கே போவது என்று யாராவது ‌கேட்டால் நான் பொறுப்பல்ல...!)//

நல்லா தான் கூறி இருக்கீங்க..ஆனா ஒரு சில படத்த பார்த்த பிறகு இரண்டரை நாள் டென்ஷன் ஆக இருக்கே :-))))

ஆனா ஒரு நல்லா படத்துக்கு, ப்ரியா மணிக்கு தேசிய விருது கிடைத்ததற்கு என் வாழ்த்துக்கள்.

கிரி on 4:03 PM, June 11, 2008 said...

உங்களின் வருகைக்கு நன்றி நண்பர் சரவணன்

பரிசல்காரன் on 12:56 AM, June 12, 2008 said...

நல்லதொரு விளக்கமான பதிவு! அதிலும் இந்த மேட்சிற்கு முன் பாக் கோச் நூத்தி அம்பது ரன் வித்தியாசத்துல இந்தியாவை ஜெயிப்போம்ன்னு பேட்டி குடுத்திருந்தாரு! மேட்ச் முடிஞ்சப்பறம் பாக் கேப்டன் அவரை ஓட ஓட அடிச்சதா கேள்வி! (மூடிட்டு இருந்திருந்தா கொஞ்சம் கவுரவமா தோத்திருக்கலாமே-ன்னு!)

goma on 4:46 AM, June 12, 2008 said...

பார்த்துக் கொண்டே இருங்கள் .கிரிக்கெட்டில் அடுத்த ஸ்டைல்,டாஸ் போட்டதோடு வெற்றி தோல்வி முடிவானாலும் ஆகலாம் .விளையாட்டிலே இதெல்லாம் சகஜமப்பா.

கிரி on 8:41 AM, June 12, 2008 said...

// பரிசல்காரன் said... இந்த மேட்சிற்கு முன் பாக் கோச் நூத்தி அம்பது ரன் வித்தியாசத்துல இந்தியாவை ஜெயிப்போம்ன்னு பேட்டி குடுத்திருந்தாரு! மேட்ச் முடிஞ்சப்பறம் பாக் கேப்டன் அவரை ஓட ஓட அடிச்சதா கேள்வி! (மூடிட்டு இருந்திருந்தா கொஞ்சம் கவுரவமா தோத்திருக்கலாமே-ன்னு!) //

அப்படியா சொல்லி இருந்தாங்க !!!! இந்த விஷயம் கேள்வி படவேயில்லை நான். இதுக்கு பேரு தான் வாய கொடுத்து புண்ணாக்கிறதா :-))))

கிரி on 8:43 AM, June 12, 2008 said...

// goma said...
பார்த்துக் கொண்டே இருங்கள் .கிரிக்கெட்டில் அடுத்த ஸ்டைல்,டாஸ் போட்டதோடு வெற்றி தோல்வி முடிவானாலும் ஆகலாம் //

ரொம்ப யோசித்து விட்டீர்கள் போல இருக்கு ஹா ஹா ஹ

rapp on 6:41 PM, June 12, 2008 said...

என்னமோ கிரி, எனக்கு சுத்தமா கிரிக்கட்டே பார்க்க பிடிக்காமப் போய்டுச்சு. அதனால இந்த மாதிரி விமர்சனங்களை பார்த்துதான் இப்போல்லாம் match எப்டி நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிறது, எங்கம்மா கூட டிஸ்கஸ் பண்ணத்தான் அதுவும். நெம்ப நன்றி.

கிரி on 8:58 PM, June 12, 2008 said...

//என்னமோ கிரி, எனக்கு சுத்தமா கிரிக்கட்டே பார்க்க பிடிக்காமப் போய்டுச்சு//

எனக்கு கூட இப்ப விருப்பமா பார்க்க தோன்றுவதில்லை

//எங்கம்மா கூட டிஸ்கஸ் பண்ணத்தான் அதுவும்.//

மனதை தொட்டுட்டீங்க :-) வாழ்த்துக்கள் உங்களின் அருமை அம்மாவுக்கு

அதிஷா on 10:10 PM, June 12, 2008 said...

இப்பல்லாம் இந்தியா பாக் மேட்சுல முன்னால இருந்த வேகம் விறுவிறுப்பு இல்ல , ரொம்ப சப்பையா இருக்கு,

செம கவரேஜ் கலக்குங்க

கிரி on 9:00 AM, June 13, 2008 said...

ஆமாங்க அதிஷா எனக்கு கூட இப்ப அவ்வளவா பார்க்க விருப்பம் இல்லை. நேத்து கூட இந்தியா பங்களாதேஷ் போட்டியை மறந்தே போயிட்டேன்..இன்னைக்கு தான் ஸ்கோர் பார்த்தேன் பரவாயில்ல நல்லா விளையாடி இருக்காங்க ..நம்ம ஆளுங்க எதிர் அணியினர் 100 ஓட்டங்கள் எடுத்தாலும் 50 ஓவர் வரை மொக்கை போட்டுட்டு இருப்பாங்க ..நேத்து 35 வது ஓவர்லையே முடித்துட்டாங்க :-)

//செம கவரேஜ் கலக்குங்க//

ஆகா! நம்ம கவரேஜ் வேற நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே ...ம்ம்ம் ச்சரி பாப்போம் (வடிவேல் பாணியில் படிக்கவும் :-))) )

சினிமா நிருபர் on 9:20 PM, June 13, 2008 said...

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!

rapp on 12:11 AM, June 14, 2008 said...

ஹி ஹி ஹி . நெம்ப நன்றிங்க.