Jun 19, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 2




என் நண்பன் தன்னுடைய திருமணத்திற்காக கொடுத்த (கொடுக்க வைக்கப்பட்ட) பார்ட்டிக்காக எக்மோர் ல் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு உற்சாக பானம் சாப்பிட போனோம். நான் சூடான சமாச்சாரங்கள் குடிக்க மாட்டேன் என்பதால் ட்ராட் பீர் இங்கே கிடைக்கும் என்று அவன் கூறியதால் அங்கே சென்றோம்.



அன்று தான் IPL 20-20 இறுதி போட்டி அதனால் அங்கே இருந்த தொலைக்காட்சிகளில் ஓடி கொண்டு இருந்தது. நாங்கள் மூவர் அமர்ந்து பேசிக்கொண்டு குடித்துக்கொண்டு இருந்த போது ஒரு 5 இளைஞர்கள் உற்சாகமாக வந்தார்கள், வந்தவுடன் ஆங்கிலத்திலேயே பேசி பீட்டர் விட்டு கொண்டு இருந்தார்கள் அவர்களை பார்த்தால் தமிழுக்கும் அவர்களுக்கும் வெகு தூரம் என்று தெரிந்தது, அதில் இருந்த பலரும் நான் சென்னையில் இது வரை பார்க்காத முறையில் தங்கள் சிகை அலங்காரம் செய்து இருந்தார்கள், அதில் ஒருவர் DLJ பேன்ட் அணிந்து இருந்தார் DLJ என்றால் Dangerously Low Jeans என்று அர்த்தம், அது இப்போது கழண்டு விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தி கொண்டு இருந்தது.



நான் எப்போதும் கிண்டலுடனே பேசுவேன் என்பதால் எப்போதும் போல் என் நண்பனை கிண்டலடித்துக்கொண்டு பேசி கொண்டு இருந்தேன், அவ்வாறு நான் கிண்டல் அடிப்பது மனதை வருத்தும் படி இருக்காது என்பதால் அவனும் தான் கிண்டல் செய்யப்படுவதையே விரும்புவான். என் இன்னொரு நண்பன் டேய்! நீ ஊர்ல இல்லாததால இவனை ஓட்டுறதுக்கு ஆள் இல்லை என்று கூற கலகலப்பாக பேசி கொண்டு இருந்தோம் திடீரென்று என் நண்பன் முகத்தில் மாற்றம், என்னடா! இது நல்லா இருந்தவன் இப்படி கலவரம் ஆகிறான் என்று பார்த்தால் இரண்டு பெண்கள் அந்த முன்பே வந்து இருந்த வித்யாச பார்ட்டிகளுடன் (ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைல் ல் இருக்கிறானுக) சேர்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண் 18 வயது தான் இருக்கும் மிகவும் குட்டியாக இருந்தார் மிகவும் அழகாக குடும்ப கலையுடன் இருந்தார், இன்னொரு பெண் 20 வயதுக்கு மேல் இருக்கும் மாடர்னாக உடை அணிந்து இருந்தார்.



ஏற்கனவே இதை போல் பார்த்து இருக்கிறேன் என்பதாலும் பெண்கள் இப்போது பார்களில் அடிக்கடி தென்படுவது சகஜம் என்பதால் சிறிய ஆச்சர்யத்துடன் நாங்கள் பேச்சை தொடர்ந்தோம். சிங்கப்பூர் வந்த பிறகு இவர்களிடம் எல்லாம் இப்படி கலகலப்பாக பேசுவதை இழந்து மிக வருத்தமாக இருப்பதை கூறி கொண்டு இருந்தேன். சிங்கப்பூர் ல் நண்பர்கள் இருந்தாலும் சென்னை நண்பர்களுடன் இல்லாதது மன வருத்தத்தையே அளித்தது. நாங்கள் பேசி கொண்டு இருந்தாலும் எங்கள் அருகிலேயே அவர்களும் அமர்ந்து இருந்ததால் இயற்கையாகவே இருக்கும் உந்துதலில் அல்லது ஆர்வத்தில் அவர்கள் என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கவனித்து கொண்டு இருந்தோம். அவர்கள் ஆளாளுக்கு சரக்கை உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள், உடன் இருந்த அந்த பெண்களும். எனக்கு இந்த குட்டி பெண் குடித்ததை ஏனோ என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த பொறம்போக்குகளோடு சேர்ந்து இப்படி கெட்டு விட்டதே என்று இவ்வளோ சிறு வயதில் என்று ஆதங்கமாக இருந்தது. இதில் மாடர்னாக இருந்த பெண் ஒரு படி மேலே போய் புகைபிடிக்க ஆரம்பித்தது. அது விட்ட புகையில் அருகில் இருந்த எனக்கே மூச்சு திணறல் ஆகி விட்டது, நான் பீர் சாப்பிடுவேனே தவிர புகை பிடிக்க மாட்டேன், என் உடன் இருந்த நண்பர்களும் கூட.



நேரம் ஆக ஆக IPL போட்டி மிக விறுவிறுப்பாகி விட்டது, அந்த பசங்களும் Great, fantastic, No Chance னு பயங்கரமா கை தட்டி கத்த ஆரம்பித்து விட்டானுக, என்னடா இது இவனுக இம்சை தாங்க முடியலைனு என் நண்பனை முறைத்தேன், அவன் தான் இங்கே சத்தம் எதுவும் இருக்காது பாட்டெல்லாம் போட மாட்டாங்க நிம்மதியா பேசலாம் என்று கூறி இருந்தான். இவனுக போட்ட சத்தத்துல எங்களால் சுத்தமாக பேச முடியல. அந்த குட்டி பொண்ணும் வெட்கப்பட்டு முதலில் குடித்து கொண்டு இருந்தது போல இருந்து இப்ப எங்களை விட அதிகமாக குடித்துக்கொண்டு இருந்தது, என்னடா! இது யாரையும் நம்ப முடியாது போல இருக்கேன்னு நினைத்து கொண்டு டேய்! என்னடா இது ஆள பார்த்தா குட்டியாக குடும்ப குத்து விளக்கா இருக்கு அதகளம் பண்ணிட்டு இருக்கேன்னு என் நண்பனிடம் கூறி விட்டு, சரி புகை பிடிக்காமலாவது இருக்கேன்னு நினைத்துக்கொண்டு எங்கள் பேச்சை அந்த இரைச்சலில் தொடர்ந்து கொண்டு இருந்தோம்.



கொஞ்ச நேரத்தில் என் நண்பனின் முகம் பீதி ஆனது, என்னடா! இப்படி பேய் அறைந்த மாதிரி பார்க்கிறான் என்று பார்த்தால் அந்த குட்டி பெண், உற்சாகத்தில் அங்கே ஸ்பைக் சிகை அலங்காரம் செய்து இருந்த ஒருவனின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருந்தது, இதை பார்த்ததும் எனக்கு தலை சுத்தியது(பீர் குடித்ததால் அல்ல) பீர் அடிக்கும் பெண்களை தான் பார்த்து இருக்கிறேன், இல்லை என்றால் உடன் அமர்ந்து கோக், பெப்சி, 7 அப் குடிக்கும் பெண்களை தான் பார்த்து இருக்கிறேன், இது எனக்கும் மிக புதிது சென்னையில். இன்னொரு பெண்ணை அங்கே இருந்த இன்னொருவன் அதன் இருக்கையின் பக்க்கவாட்டில் அமர்ந்து தோள் மீது கை போட்டுக்கொண்டு மிக நெருக்கமாக இருந்தான்.



ஏன்டா! நீங்க தண்ணி அடிக்க தானே வந்தீங்க, அதை விட்டுட்டு இங்கே ஏன் பார்த்துட்டு இருக்கீங்கன்னு நீங்க கேட்பது தெரிகிறது, பக்கத்துலையே இந்த மாதிரி நடக்கும் போது, ஒரு ஆர்வத்தில் பார்ப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் பார்ப்பது இயல்பு தானே. நாங்க அதை தவிர்க்க முயன்றாலும் இவர்கள் ஏதாவது செய்து ஈர்த்துக்கொண்டு இருந்தார்கள்.



அந்த சின்ன பெண் மற்றும் அந்த பய்யன் தாங்கள் குடித்துக்கொண்டு இருந்த க்ளாஸ் களை மாற்றி கொண்டு குடித்தார்கள், என்ன கொடுமைடா! இது னு பார்த்துட்டு இருக்கும் போதே கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான், எனக்கு இதய துடிப்பு அதிகமாகி விட்டது. அந்த பொண்ணும் அவனை you naughty னு செல்லமாக சிணுங்கி விட்டு தொடர அனுமதித்தது. அனேகமாக நாங்க விட்ட பெருமூச்சில் அந்த பார் சூடாகி இருக்க வேண்டும். இதை அங்கே இருந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், இருந்தாலும் அவர்கள் அதை பற்றி கவலை பட்டதாகவே தெரியவில்லை. எனக்கு குடித்ததில் அவசரமாக வந்து விட்டதால் கழிவறை சென்றால் அங்கே ஏற்கனவே அவங்க குரூப் ல இருந்த இரு பசங்கள் அந்த பெண்களை என்ன செய்யலாம் என்று மிக அசிங்கமாக பேசி கொண்டு இருந்தார்கள், நான் இருப்பதை கூட கண்டுக்காமல். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது, இது அவனவன் தனிப்பட்ட விஷயம் என்றாலும், இவங்க என்ன மேலை நாட்டிலையா இருக்காங்க, இப்படி பொது இடத்தில் இதை போல் பேசி கொண்டு இருக்க. எனக்கு அங்கே இருக்கவே மிக தர்ம சங்கடமாகி விட்டது, அவசரமாக என் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி என் இடத்துக்கு வந்தேன்.



பிறகு அந்த குரூப் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட்டது, அந்த இரு பெண்களும் செம மப்பில் இருந்தார்கள், நடக்கவே முடியவில்லை. அந்த பசங்கள் எதோ அவர்களுக்குள் (பசங்களுக்குள்) பேசி சிரித்துக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்கள்.



அவர்கள் போன பிறகு மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. என் நண்பனிடம் இது பற்றி கேட்ட போது ஆமாண்டா! இப்பெல்லாம் இது மாதிரி சகஜம் ஆகி விட்டது, இதை விட மோசமாக பொது இடத்தில் நடந்து கொள்கிறார்கள். இங்கு வேலை செய்யும் சர்வர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள் என்றான். நாங்கள் எப்போதும் சவேரா ஹோட்டலில் உள்ள பாருக்கே செல்வோம், எனென்றால் அங்கே தான் மிக அமைதியாக இருக்கும் பேசுவதற்கும் நல்ல இடம், ஆனால் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் அங்கே பிரச்சனை ஆகி விட்டதால் அதை மூடி விட்டார்கள். எங்களுக்கு பேரிழப்பு :-(((



அதன் பிறகு ஒரு 1 மணி நேரம் பழைய கதைகளை பேசிக்கொண்டு கிண்டல் அடித்துக்கொண்டு இருந்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினோம்.



நான் வீட்டிற்கு வரும் வழியில் இது பற்றிய எனக்கு தோன்றிய கேள்விகள் மற்றும் எண்ணங்கள்



இப்படி வரும் பெண்கள், குடித்து விட்டு செல்வதை வீட்டில் எப்படி பெற்றோர் அனுமதிக்கிறார்கள்? அல்லது இவர்கள் ஹாஸ்டலில் இருக்கிறார்களா?



இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? இவர்கள் செய்வது தவறா? அல்லது கால மாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று கண்டுக்க கூடாதா?



ஆண்களுக்கு இணையாக பெண்களும் இப்போது நம் ஊரில் குடிக்க, புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே, இது தான் சம உரிமையா?



ஒரு முறை நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண், தான் மேக்கப் சமாச்சாரங்களுக்காக மட்டும் மாதம் 5000 செலவு செய்வதாக கூறினார், இவ்வாறு இருப்பது சகஜமா?



அவர்கள் சம்பாதிக்கிறார்கள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் கொடுக்கிறார்கள், இதற்க்கு மற்றவர்கள் ஏன் கோபப்பட வேண்டும்? என்று நினைப்பதா.



இப்படி குடித்து விட்டு அவர்களுடன் சென்ற அந்த பெண்களை அவர்கள் "சும்மாவா" விட்டு இருப்பார்கள், இது தான் இனி வரும் கலாச்சாரமா?



இப்படி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்களே, இது தான் நாகரிகமா?



இன்னும் 5 வருடங்கள் சென்றால் ஆண் பெண் இரு பாலருக்கும் கற்பு என்பதை உடல் அளவில் இல்லாமல் மனதளவில் தான் எதிர் பார்க்க வேண்டுமா?



இதை போல பல கேள்விகள் என் மனதில் ஓடி கொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாம் கேள்வி கேட்பதால் என்னை கலாச்சார பாதுகாவலன் என்கிற ரீதியில் கருத வேண்டாம். எனக்கு என் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை. என் மனதிற்கு இது தவறாக பட்டாலும், அடுத்தவர்களின் உரிமையில் அல்லது சுதந்திரத்தில் அல்லது எனக்கு சம்பந்தம் இல்லாத விசயத்தில் அல்லது அவர்கள் முற்போக்கு எண்ணத்தில் தலையிடுவதில்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் எனக்கு தோன்றிய அல்லது இருந்து கொண்டு இருக்கும் சந்தேகங்களே, கலாச்சார பாதுகாவலனாக கேட்கும் கேள்விகள் இல்லை.

107 COMMENTS:

கீ - வென் on 12:46 PM, June 19, 2008 said...

படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போட பின்னால வாரேன்.. மத்தவங்க என்ன சொல்லுறாங்கன்னு பாப்போம் முதல்ல

கயல்விழி முத்துலெட்சுமி on 1:00 PM, June 19, 2008 said...

இப்ப அந்த விளம்பர பக்கம் திறக்கவில்லை.. பிரச்சனை அந்த எண்ணுவான் தான் போல இருக்கு..
அந்த நிரலியை எடுத்ததற்கு நன்றி.

சினிமா நிருபர் on 1:20 PM, June 19, 2008 said...

நானும் சென்னையில் நிருபராக 9 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டிய அனுபவத்தில், ஒரு நிருபராக சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல் பார்களுக்கும் சென்ற அனுபவத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் கிரி...!

கேள்வி : இப்படி வரும் பெண்கள், குடித்து விட்டு செல்வதை வீட்டில் எப்படி பெற்றோர் அனுமதிக்கிறார்கள்? அல்லது இவர்கள் ஹாஸ்டலில் இருக்கிறார்களா?//
பதில்: இப்படி வரும் இளம்பெண்கள் பெரும்பாலும் ஐடி பணியாளர்களாக இருப்பார்கள் அல்லது ‌பெரும் பணக்கார வீட்டு பெண்களாக இருப்பார்கள். இந்த இரு பிரிவு பெண்களுக்குத்தான் கட்டப்பா‌டே கிடையாது. கேட்டால் JUST For FUN என்பார்கள். (சில ஐடி பெண்கள், பணக்கார பெண்கள் இதற்கு விதிவிலக்கு)

கேள்வி : இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? இவர்கள் செய்வது தவறா? அல்லது கால மாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று கண்டுக்க கூடாதா?
பதில் : இவர்களின் இந்த நிலைக்கு பணமும், பகட்டும்தான் காரணம். ஓரளவு கையில் பணம் இருந்தால் பகட்டு சும்மா இருக்க விடாது. ENJOY என்ற பெயரில் இவர்கள் அரங்கேற்றும் அவலங்கள் இன்னும் எவ்வளவோ (என்‌ கைவசம்) இருக்கின்றன. ‌நேரமிருந்தால் தனி வலைப்பூ ஆரம்பித்து அந்த அவலங்களையெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி : ஆண்களுக்கு இணையாக பெண்களும் இப்போது நம் ஊரில் குடிக்க, புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே, இது தான் சம உரிமையா?
பதில் : மேலை நாட்டை பார்த்து வந்த சம உரிமை இது. நீங்கள் மதுவருந்தி சென்ற நாளில் இதோடு நிறுத்திக் கொண்டார்களே என்று நிம்மதி பெருமூச்சு விடுங்கள் நண்பரே!

கேள்வி : ஒரு முறை நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண், தான் மேக்கப் சமாச்சாரங்களுக்காக மட்டும் மாதம் 5000 செலவு செய்வதாக கூறினார், இவ்வாறு இருப்பது சகஜமா?
பதில் : எனக்கு தெரிந்த சினிமா பிரமுகர் ஒருவர் வாரத்தில் ஒருநாள்தான் மனைவியுடன் தங்குகிறார். கேட்டால் அலுவல் விஷயமாக இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அவரது மனைவியோ... வாரத்தில் ஒருநாள்தான் பியூட்டி பார்லர் போகாமல் இருக்கிறார். கேட்டால், கணவர் சம்பாதிக்கிறார்... நான் செலவழிக்கிறேன், என்கிறார். கேள்வி கேட்காத தந்தையும், கணவனும் இருக்கிறவரை அது இப்படித்தான்.

கேள்வி : அவர்கள் சம்பாதிக்கிறார்கள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் கொடுக்கிறார்கள், இதற்க்கு மற்றவர்கள் ஏன் கோபப்பட வேண்டும் என்று நினைப்பதா?
பதில் : நியாயமான கேள்வி.

கேள்வி : இப்படி குடித்து விட்டு அவர்களுடன் சென்ற அந்த பெண்களை அவர்கள் சும்மாவா விட்டு இருப்பார்கள், இது தான் இனி வரும் கலாச்சாரமா?
பதில் : இதுதான் மாறி வரும் கலாச்சாரம். அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிந்துதானே அந்த பெண்கள் அவர்களுடன் சென்றார்கள்? கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டான்ஸர் ஸ்டெபானி கொலை கொலை வழக்கு பற்றிய செய்திகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள் கிரி.

கேள்வி : இப்படி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்களே, இது தான் நாகரிகமா?
பதில் : இதுவாவது பரவாயில்லை. சென்னை நகரில் மெரினா கடற்கரையில் தொடங்கி தியாகிகள் மண்டபம் வரை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலிலும், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு சில்மிஷம் செய்கிறார்களே... அதை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

கேள்வி : இன்னும் 5 வருடங்கள் சென்றால் ஆண் பெண் இரு பாலருக்கும் கற்பு என்பதை உடல் அளவில் இல்லாமல் மனதளவில் தான் எதிர் பார்க்க வேண்டுமா?

பதில் : இன்றல்ல... நேற்றல்ல... இன்னும் ஐந்து என்ன ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவருடன் எந்தவொரு ஆணும் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

VIKNESHWARAN on 1:21 PM, June 19, 2008 said...

படிச்சிட்டேன்.. :-)

RAM SRIDHAR on 1:22 PM, June 19, 2008 said...

பெண்கள் குடிப்பது என்பது இப்போது சென்னையில் சர்வ சகஜம். எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதால் வரும் விளைவு. ஆண்கள் குடிக்கும்போது பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

மற்ற எல்லா விஷயங்களிலும் ஆணுக்கு பெண் சமம் என்றால் இதில் ஏன் பாகுபாடு? சிங்கப்பூரில் குடிக்காத பெண்களா? கலாச்சாரம் எல்லாம் இப்போது கவிஞர்களின் கவிதைகளில் மட்டும் காணமுடியும் சமாசாரம்.

இதற்கே நீங்கள் ஆடிப்போனால் எப்படி? ஒரு நடை கிண்டியில் இருக்கும் Le Meridien எனும் 5* ஹோட்டலில் இருக்கும் Flame எனும் பாருக்கு போய் பாருங்கள்....

VIKNESHWARAN on 1:23 PM, June 19, 2008 said...

இதெல்லாம் பார்த்து பார்த்து சலிச்சு போச்சு.... நோ கமேண்ட்ஸ்...

துளசி கோபால் on 1:24 PM, June 19, 2008 said...

நானும் சில இடங்களிலிந்தமாதிரி நடந்ததைப்பார்த்துப் பேயரைஞ்சு நின்னுருக்கேன். ஆனால்..... அப்போ என்கூட இருந்த மகள் என்னைப் பார்த்த பார்வைதான் எனக்கு அவமானமாப் போச்சு.

இங்கே எதுக்கெடுத்தாலும் back home இப்படியெல்லாம் செய்யமாட்டோம், அது இதுன்னு எங்க காலத்தையே மனசுலே வச்சுக்கிட்டு அவளிடம் அளந்துக்கிட்டு இருப்பேன். ( எல்லாம் அவளை நல்லவழிப்படுத்தறேன் பேர்வழின்னு)

கீ - வென் on 2:03 PM, June 19, 2008 said...

கிரி.. நீங்க வாய் மொழி மூலமா இந்த மேட்டர் ஐ கேள்வி பட்டிருக்கலாம்.. ஆனா நேரில பாத்தபின்னர் தான் பதிவா உங்க ஆதங்கத்த போட்டிருக்கீங்க..

சினிமா நிருபர் சொன்னது 100% சரியே.. வெளிநாட்டு மோகம் ங்கற பேர்ல நடக்குற கூத்து தான் இது.. பெண்கள் மாதிரி "சரக்கு" சாப்பிட ஆண்களால் கூட முடியாது.. (நான் குறிப்பிடுவது எல்லா பெண்களும் அல்ல.. இந்தமாதிரி ஆயி அப்பன் கண்ட்ரோல் இல்லாம திரியுற நாதாரிகளை தான் சொல்லுறேன்)

சென்னை IIT ல் ஒவ்வொரு வருடமும் "மார்டி கிராஸ் " என்று ஒரு யூத் பெஸ்டிவல் நடக்கும்.. அங்கு நான் பார்க்காத அட்டூழியங்கள் இல்லை.. :)) drugs, தண்ணி, சரக்கு எல்லாம் ப்ரீ flow தான் அங்கே !!! பார்த்து , ஆடி, அடங்கிட்டோம் ல ... :))

கடைசீ வார்த்தை..

"புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.."

யாரு புலி, யாரு பூனை ங்கறது.. உங்களுக்கே வெளிச்சம்.

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது..

கிரி on 2:27 PM, June 19, 2008 said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
இப்ப அந்த விளம்பர பக்கம் திறக்கவில்லை.. பிரச்சனை அந்த எண்ணுவான் தான் போல இருக்கு..
அந்த நிரலியை எடுத்ததற்கு நன்றி.//

சுட்டி காட்டியமைக்கு நன்றி கயல்விழி முத்துலட்சுமி.

இனிமேல் என் பதிவுக்கு வர உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன் :-)

rapp on 2:43 PM, June 19, 2008 said...

யாருங்க அங்க. ஜ்யோவ்ராம் சுந்தரக் கூப்பிடுங்க. அவரெதுக்கு கஷ்டப்பட்டு எழுதணும். இங்க நம்ம கிரிய பார்த்தீங்களா? தனியா சமூக அக்கரைங்கரப் பேர்ல தனி பிட்ட ஒட்டிக்கிட்டிருக்காரு. ஹி ஹி ஹி கோச்சுக்காதீங்க, சீரியசாவும் எடுத்துக்காதீங்க.

கிரி on 2:47 PM, June 19, 2008 said...

//சினிமா நிருபர் said...
நானும் சென்னையில் நிருபராக 9 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டிய அனுபவத்தில், ஒரு நிருபராக சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல் பார்களுக்கும் சென்ற அனுபவத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் கிரி...!//

கண்டிப்பாக உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும் என்பதை நான் மறுக்க வாய்ப்பே இல்லை :-)

//ஓரளவு கையில் பணம் இருந்தால் பகட்டு சும்மா இருக்க விடாது//

உண்மையாக தான், இது அனைவருக்கும் பொருந்தும். வாழ்வில் அடிபட்டு மேல் வந்தவர்களே உலகை புரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

//ENJOY என்ற பெயரில் இவர்கள் அரங்கேற்றும் அவலங்கள் இன்னும் எவ்வளவோ (என்‌ கைவசம்) இருக்கின்றன. ‌நேரமிருந்தால் தனி வலைப்பூ ஆரம்பித்து அந்த அவலங்களையெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்//

கண்டிப்பாக நீங்கள் சினிமா அல்லாத வலைபூ தொடங்க வேண்டும் என்பது என் ஆசை. எனென்றால் உங்கள் எழுத்துக்களில் இருந்தே தெரிகிறது, எதை கூறினாலும் நாகரீகமாக கூறுவீர்கள் என்று. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, உங்கள் திரை துறை அல்லாத உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரு வலை பதிவு அவசியம் தான்.

//நீங்கள் மதுவருந்தி சென்ற நாளில் இதோடு நிறுத்திக் கொண்டார்களே என்று நிம்மதி பெருமூச்சு விடுங்கள் நண்பரே!//

:-))))

//அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிந்துதானே அந்த பெண்கள் அவர்களுடன் சென்றார்கள்? //

இவை எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை.

//கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டான்ஸர் ஸ்டெபானி கொலை கொலை வழக்கு பற்றிய செய்திகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள் கிரி.//

அதை அறிவேன் நிருபரே, எனென்றால் நான் ராதாகிருஷ்ணன் சாலை அருகில் தான் தங்கி இருந்தேன், அங்கே தான் விபத்து நடந்தது.

//சென்னை நகரில் மெரினா கடற்கரையில் தொடங்கி தியாகிகள் மண்டபம் வரை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலிலும், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு சில்மிஷம் செய்கிறார்களே//

இவ்வாறு செய்வது அவர்கள் தனிப்பட்ட உரிமை என்றாலும், அதை அவர்கள் இடத்தில் வைத்து கொள்ளாமல் இப்படி கடற்கரை போன்ற பொது இடத்தில் வைத்து கொள்வது தான் தர்ம சங்கடமாகி விடுகிறது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தை "அம்மா அந்த மாமாவும் அத்தையும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?" என்று கேட்கும் பொது பதில் கூற முடியாமல், கூசி போகிறார்கள்.

//இன்னும் ஐந்து என்ன ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவருடன் எந்தவொரு ஆணும் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.//

நீங்கள் கூறுவது சரி தான் நிருபரே, ஆனால் திருமணத்திற்கு முன்பு இதை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத ஆணும் பெண்ணும் தனக்கும் வரும் துணை அவ்வாறு இருக்க வேண்டும் என்று தானே எதிர்பார்பார்கள். அப்போது மனது சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறி சமாதான படுத்த முடியுமா? அப்ப இத்தனை நாள் ஒழுக்கமாக இருந்த பெண்ணோ அல்லது ஆணோ முட்டாளா?

நிருபரே திரை செய்திகள் மட்டும் இல்லை, அனைத்து பகுதிகளிலும் வீடு கட்டி அடிப்பேன் என்று சிறப்பாக கூறி இருக்கிறீர்கள், உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.

கிரி on 2:50 PM, June 19, 2008 said...

//VIKNESHWARAN said...
இதெல்லாம் பார்த்து பார்த்து சலிச்சு போச்சு.... நோ கமேண்ட்ஸ்//

வாங்க விக்னேஸ்வரன். நீங்க கூறவில்லையே தவிர கூறாமையே விரிவான பதிலை கொடுத்து இருக்கீங்க :-))

rapp on 2:50 PM, June 19, 2008 said...

//பெண்கள் மாதிரி "சரக்கு" சாப்பிட ஆண்களால் கூட முடியாது//
ஏனுங்க இதென்ன புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பா? இதுல என்னங்க பெருமை வேண்டிக்கிடக்குது. எக்கச்சக்கமா குடிக்கறது ஒட்டுமொத்தமா கேடுகெட்டவங்களுக்குரியப் பழக்கம். இதுல என்னங்க உரிமை பிரச்சினை, ஆண்களை விட ஜாஸ்தியா குடிக்கிறா அது இதுன்னு. ஹைய்யோ ஹைய்யோ!

கிரி on 2:59 PM, June 19, 2008 said...

//துளசி கோபால் said...
நானும் சில இடங்களிலிந்தமாதிரி நடந்ததைப்பார்த்துப் பேயரைஞ்சு நின்னுருக்கேன்//

அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன். நாகரீகம் அல்லது முற்போக்கு சிந்தனை என்று இவர்கள் சிந்திக்கும் அளவுக்கு என் எண்ணங்கள் உயரவில்லை. எனக்கு இப்படி இருக்கவே பிடித்து இருக்கு.

//இங்கே எதுக்கெடுத்தாலும் back home இப்படியெல்லாம் செய்யமாட்டோம், அது இதுன்னு எங்க காலத்தையே மனசுலே வச்சுக்கிட்டு அவளிடம் அளந்துக்கிட்டு இருப்பேன். ( எல்லாம் அவளை நல்லவழிப்படுத்தறேன் பேர்வழின்னு)//

பெற்றோர்கள் நல்வழி படுத்துவது ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே முடியும், அந்த வயதிற்குள் அவர்கள் என்ன தன் குழந்தைக்கு கூறி வளர்க்கிறார்களோ அதுவே பின்னாளில் கட்டுக்கோப்பாக வைக்கிறது. அதன் பிறகு தன் நிலையை தானே உணர்ந்து, தான் செய்வது எது சரி எது தவறு என்று உணர உதவியாக இருக்கிறது. அதன் பிறகு சமூகம் எப்படி இருக்கிறதோ அதன் படியே ஒருவர் தன் எண்ணங்களை மாற்றி கொள்கிறார். அது அவரின் கையிலே இருக்கிறது எந்த வழிக்கு செல்வது என்று.

கிரி on 3:02 PM, June 19, 2008 said...

//கீ - வென் said...
கிரி.. நீங்க வாய் மொழி மூலமா இந்த மேட்டர் ஐ கேள்வி பட்டிருக்கலாம்.. ஆனா நேரில பாத்தபின்னர் தான் பதிவா உங்க ஆதங்கத்த போட்டிருக்கீங்க//

உண்மை தான் வெங்கி. என் நண்பர்களுடன் இது பற்றி விவாதிப்பேன், தற்போது வலைப்பதிவில் இருப்பதால் என் எண்ணங்களை இன்னும் பலரோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

//சென்னை IIT ல் ஒவ்வொரு வருடமும் "மார்டி கிராஸ் " என்று ஒரு யூத் பெஸ்டிவல் நடக்கும்.. அங்கு நான் பார்க்காத அட்டூழியங்கள் இல்லை.//

நானும் கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் பார்த்தது இல்லை.

//நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது..//

:-))

மங்களூர் சிவா on 3:10 PM, June 19, 2008 said...

நான் சொல்லவந்ததை சினிமா நிருபர் ரொம்ப மிக விரிவா விளக்கமா சொல்லிட்டார்.

/
இதுவாவது பரவாயில்லை. சென்னை நகரில் மெரினா கடற்கரையில் தொடங்கி தியாகிகள் மண்டபம் வரை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலிலும், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு சில்மிஷம் செய்கிறார்களே... அதை எந்த லிஸ்டில் சேர்ப்பது?
/

:)))

10 வருடங்களுக்கு முன்பே நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வள்ளுவர் கோட்டத்தையே காம கோட்டமாக்கி கொண்டிருந்தனர் இந்த மாதிரி ஆண்களும் பெண்களும் காதல் கண்றாவி என்ற பெயரில்.

கிரி on 3:10 PM, June 19, 2008 said...

//rapp said...
யாருங்க அங்க. ஜ்யோவ்ராம் சுந்தரக் கூப்பிடுங்க. அவரெதுக்கு கஷ்டப்பட்டு எழுதணும். இங்க நம்ம கிரிய பார்த்தீங்களா? தனியா சமூக அக்கரைங்கரப் பேர்ல தனி பிட்ட ஒட்டிக்கிட்டிருக்காரு//

சமூக அக்கறை எல்லாம் எதுவும் கிடையாதுங்க...என் மனதில் பட்டதை என் பாணியில் கூறினேன் அவ்வளவே. இப்ப பதிவுலகில் எல்லோரும் நுண்ணரசியல் என்று எதோ பெரிய பேச்செல்லாம் பேசுறாங்க, நமக்கு தெரிந்த அரசியல் எல்லாம் ராமதாஸ் கலைஞர் பிரிஞ்சுட்டாங்கலாமே? கேப்டன் க்கு இந்த முறை வோட் போட்டு பார்க்கலாமா? என்கிற அளவுல தான் இருக்கு.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் எனக்கு கூற தெரிந்த அளவில். எதாகினும் உங்க பாராட்டுக்கு நன்றி.

சினிமா நிருபர் on 3:17 PM, June 19, 2008 said...

உங்கள் நன்றிக்கு நன்றி...!

// கண்டிப்பாக உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும் என்பதை நான் மறுக்க வாய்ப்பே இல்லை :-)//

இதுல உள்குத்து ஏதும் இல்லியே...!

//கண்டிப்பாக நீங்கள் சினிமா அல்லாத வலைபூ தொடங்க வேண்டும் என்பது என் ஆசை.//

கண்டிப்பாக...! தங்களைப் போன்ற வேறு சில நண்பர்களும் இதே கூற்றை தெரிவித்திருக்கிறார்கள். பத்திரிகை துறையில் செய்திக்காக நிருபர்கள் படும் பாட்டையும், சுக - துக்க - சோக அனுபங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே...!

சொல்ல மறந்துட்டேன்...! நீங்கள் போட்டிருக்கம் படம்... சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகில் உள்ள தி பார்க் ஓட்டலில் எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கி்றேன். சரியா...? இந்த படம் நான் சொன்ன படமாக இருந்தால்... அதற்கும் என்னடம் ஒரு அனுபவ கதை இருக்கிறது.

கீ - வென் on 3:18 PM, June 19, 2008 said...

//rapp said...

//பெண்கள் மாதிரி "சரக்கு" சாப்பிட ஆண்களால் கூட முடியாது//
ஏனுங்க இதென்ன புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பா? இதுல என்னங்க பெருமை வேண்டிக்கிடக்குது. எக்கச்சக்கமா குடிக்கறது ஒட்டுமொத்தமா கேடுகெட்டவங்களுக்குரியப் பழக்கம். இதுல என்னங்க உரிமை பிரச்சினை, ஆண்களை விட ஜாஸ்தியா குடிக்கிறா அது இதுன்னு. ஹைய்யோ ஹைய்யோ!//.

ராப்ப்..

முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும்.. :)) இங்கே ஆஸ்திரேலியா வில "சரக்கு" (நம்ம இந்திய பெண்களும் தான்) பாருங்க.. ஆத்தாடி.... நாம எல்லாம்.. ஒண்ணுமே இல்லை..சாமீ !!!

சிங்கையில் மட்டும் என்ன வாழுதாம் ?? ஒரு வாட்டி தமிழ் இரவு விடுதிகளுக்கு நம்ம கிரி யை போயி பாக்க சொல்லுங்க.. (அசோகா, மின்னலே இன்னமும் பல...)

கிரி on 3:25 PM, June 19, 2008 said...

//மங்களூர் சிவா said...
நான் சொல்லவந்ததை சினிமா நிருபர் ரொம்ப மிக விரிவா விளக்கமா சொல்லிட்டார்.
10 வருடங்களுக்கு முன்பே நான் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வள்ளுவர் கோட்டத்தையே காம கோட்டமாக்கி கொண்டிருந்தனர் இந்த மாதிரி ஆண்களும் பெண்களும் காதல் கண்றாவி என்ற பெயரில்.//

வாங்க சிவா. குடும்பத்துடன் செல்பவர்களுக்கு இது மிக தர்ம சங்கடமாகி விடுகிறது. இவர்களின் செயல்கள் எல்லை மீறி போவது தான் நமக்கு பீதியை தருகிறது.

கிரி on 3:34 PM, June 19, 2008 said...

//சினிமா நிருபர் said...
உங்கள் நன்றிக்கு நன்றி...!
// கண்டிப்பாக உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும் என்பதை நான் மறுக்க வாய்ப்பே இல்லை :-)//
இதுல உள்குத்து ஏதும் இல்லியே...!//

ஹீ ஹீ ஹீ ஓரளவுக்கு உள்குத்து உண்டு :-))))

//பத்திரிகை துறையில் செய்திக்காக நிருபர்கள் படும் பாட்டையும், சுக - துக்க - சோக அனுபங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே//

நீங்கள் பட்டய கிளப்ப என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

//நீங்கள் போட்டிருக்கம் படம்... சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகில் உள்ள தி பார்க் ஓட்டலில் எடுக்கப்பட்ட படம் என்று நினைக்கி்றேன். சரியா...? இந்த படம் நான் சொன்ன படமாக இருந்தால்... அதற்கும் என்னடம் ஒரு அனுபவ கதை இருக்கிறது.//

நீங்கள் உண்மையான நிருபர் எனபதை திரும்ப திரும்ப நிரூபித்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது சரி தான். இது தி பார்க் ஓட்டலில் எடுக்கப்பட்ட படம் தான். நடு இரவு எல்லோரும் அறை குறை ஆடையுடன், ஒரு சிலர் மேலாடையே இல்லாமல் ஆடி கொண்டு இருந்த போது அங்கே இருந்த நிருபர்களால் எடுக்கப்பட்டு அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்து, அரசு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கொஞ்ச நாள் அந்த ஹோட்டலை மூடி பிறகு திறந்து விட்டார்கள். சரி இந்த பதிவுக்கு அந்த படம் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் போட்டேன். உங்க அனுபவத்தை கூறுங்கள் நேரமிருந்தால்.

rapp on 3:37 PM, June 19, 2008 said...

தப்பா எடுத்துக்காதீங்க கிரி. ச்சும்மா ஜாலியாத்தான் சொன்னேன்.

கிரி on 3:44 PM, June 19, 2008 said...

கீ - வென் said...
//rapp said...
ராப்ப்..

//ஆத்தாடி.... "நாம" எல்லாம்.. ஒண்ணுமே இல்லை..சாமீ !!!//

இதுல rapp ஐ சேர்த்துக்கலையே... ஹீ ஹீ ஹீ ஏன்னா அவங்க ஒரு திருமதி ஒரு வெகுமதி :-))))

//சிங்கையில் மட்டும் என்ன வாழுதாம் ?? ஒரு வாட்டி தமிழ் இரவு விடுதிகளுக்கு நம்ம கிரி யை போயி பாக்க சொல்லுங்க.. (அசோகா, மின்னலே இன்னமும் பல...)//

நான் இன்னும் பார்க்கலை என்று சொல்வதை விட, அதை போல் சந்தர்பம் கிடைக்கவில்லை. பார்த்தால் சொல்கிறேன் :-)))

சினிமா நிருபர் on 3:50 PM, June 19, 2008 said...

//ஒரு சிலர் மேலாடையே இல்லாமல் ஆடி கொண்டு இருந்த போது அங்கே இருந்த நிருபர்களால் எடுக்கப்பட்டு அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்து, அரசு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கொஞ்ச நாள் அந்த ஹோட்டலை மூடி பிறகு திறந்து விட்டார்கள். //


அங்கே இருந்த நிருபர்களில் நானும் ஒருவன்...!

கிரி on 3:53 PM, June 19, 2008 said...

//rapp said...
தப்பா எடுத்துக்காதீங்க கிரி. ச்சும்மா ஜாலியாத்தான் சொன்னேன்.//

ஹா ஹா ஹா rapp நீங்க எதுக்கு இப்படி பீல் பண்ணுறீங்க. நான் கூறியது கோபமாக கூறியது போலவா இருக்கு. என்னங்க நீங்க! நான் தான் அன்னைக்கே சொன்னேனே நான் கோப படக்கூடிய ஆள் இல்லைங்க, எதையும் சகஜமா எடுத்துக்கிற ஆள். அதுவும் இல்லாம நீங்க என்ன சொன்னீங்க நான் கோப பட.

அப்புறம் இன்னொரு விஷயம் அப்படியே கோப பட்டாலும், சத்யமா உங்க கிட்ட கோபப்பட மாட்டேன்..ஏன்னா! என் கருத்து உங்க கருத்தோடு பலது ஒத்து போகுது, அதுவும் இல்லாம நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்வங்களா இருக்கீங்க..இனி கோவில்ல சூடம் அடித்து தான் சத்யம் பண்ணனும்..இப்பவும் நீங்க நம்பலைனா "நாய் சேகர்" மாதிரி டெர்ரர் ஆகிடுவேன் :-)))

ஸ்ஸு யாராவது சோடா குடுங்க ..எனக்கு கண்ணை கட்டுற மாதிரி இருக்கு

கிரி on 3:57 PM, June 19, 2008 said...

//சினிமா நிருபர் said...
//ஒரு சிலர் மேலாடையே இல்லாமல் ஆடி கொண்டு இருந்த போது அங்கே இருந்த நிருபர்களால் எடுக்கப்பட்டு அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்து, அரசு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கொஞ்ச நாள் அந்த ஹோட்டலை மூடி பிறகு திறந்து விட்டார்கள். //

அங்கே இருந்த நிருபர்களில் நானும் ஒருவன்...!//

என்னது :-((((((((((((((((((

இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்...நான் கொலை வெறி ஆகிடுவேன்.

ஹீ ஹீ ஹீ அடுத்த முறை அப்படி எதுவும் போனீங்கன்னா..முடிந்தா என்னையும் கூட்டிட்டு போங்க :-)))))))))))

Vijay on 4:18 PM, June 19, 2008 said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

VIKNESHWARAN on 6:07 PM, June 19, 2008 said...

சார் உங்க தளத்தில் ஏதோ பிரச்சனை இருக்கு. பதிவை திறக்கும் சமயங்களில் இணையம் தடைபடுகிறது. சரி பார்க்கவும்...

கிரி on 6:18 PM, June 19, 2008 said...

// RAM SRIDHAR said...
//ஆண்கள் குடிக்கும்போது பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது? //

ஆண்கள் தான் உடலை கெடுத்து கொள்கிறார்கள் என்றால் பெண்களுமா?

//மற்ற எல்லா விஷயங்களிலும் ஆணுக்கு பெண் சமம் என்றால் இதில் ஏன் பாகுபாடு? சிங்கப்பூரில் குடிக்காத பெண்களா? கலாச்சாரம் எல்லாம் இப்போது கவிஞர்களின் கவிதைகளில் மட்டும் காணமுடியும் சமாசாரம். //

நான் சென்னையை பற்றி தான் கூறினேன்.

//இதற்கே நீங்கள் ஆடிப்போனால் எப்படி? ஒரு நடை கிண்டியில் இருக்கும் Le Meridien எனும் 5* ஹோட்டலில் இருக்கும் Flame எனும் பாருக்கு போய் பாருங்கள்....//

அங்கு செல்ல இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையும் பார்த்துடுவோம். அங்கு பார்ட்டி கொடுக்க எவனையாவது பிடிப்போம் ஹி ஹி ஹி ஹி

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராம் ஸ்ரீதர்.

வடகரை வேலன் on 7:17 PM, June 19, 2008 said...

கிரி,

நெருப்புநரி - எழுத்துரு பிரச்சினை உள்ளது. படிக்க முடியவில்லை. ஆனால், பின்னூட்டம் தெளிவாக இருக்கிறது.

விவேக் பாஷையில் பிச்சுப்போட்ட ஜாங்'கிரி' மாதிரி இருக்கு.

சரி செய்யவும்.

rapp on 7:20 PM, June 19, 2008 said...

நெம்ப நன்றி கிரி. பேர் சொல்லும் பிள்ளை படத்துல ராதிகா ஒரு பாட்ட பாடி நன்னி சொல்வாங்களே, அதுப்போல நானும் உங்களுக்கு சொல்லிக்கிறேன். ச்சும்மா கேடித்தனமா அப்பப்ப பேசிட்டு எதுக்கு வம்புன்னு நான் அடிக்கடி இப்டி செய்வேன். கண்டுக்காதீங்க!

கிரி on 7:31 PM, June 19, 2008 said...

//VIKNESHWARAN said...
சார் உங்க தளத்தில் ஏதோ பிரச்சனை இருக்கு. பதிவை திறக்கும் சமயங்களில் இணையம் தடைபடுகிறது. சரி பார்க்கவும்...//

அப்படியா! எனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே..இது பற்றி வேறு யாரும் கூறவில்லை. எதாகினும் சரி பார்க்கிறேன். சுட்டியமைக்கு நன்றி விக்னேஸ்வரன்.

கிரி on 7:34 PM, June 19, 2008 said...

// வடகரை வேலன் said...
நெருப்புநரி - எழுத்துரு பிரச்சினை உள்ளது. படிக்க முடியவில்லை. ஆனால், பின்னூட்டம் தெளிவாக இருக்கிறது.//

நீங்கள் நெருப்புநரி 3 நிறுவினால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. நேற்று வெளியிடப்பட்ட புதிய பதிப்பில் இது சரி செய்யப்பட்டு விட்டது.

//விவேக் பாஷையில் பிச்சுப்போட்ட ஜாங்'கிரி' மாதிரி இருக்கு.//

:-)))

IE லயாவது படித்து விட்டு உங்க கருத்தை கூறுங்க.

தமிழ்சினிமா on 7:36 PM, June 19, 2008 said...

இந்த பதிவை பயமறியா பாவையர் சங்கம் நடத்தும் தமிழ்மாங்கனி போன்றோர்கள் படித்து தன் சகாக்களுக்கு புத்திமதி சொல்லட்டும்.

கிரி on 7:36 PM, June 19, 2008 said...

// rapp said...
நெம்ப நன்றி கிரி. பேர் சொல்லும் பிள்ளை படத்துல ராதிகா ஒரு பாட்ட பாடி நன்னி சொல்வாங்களே, அதுப்போல நானும் உங்களுக்கு சொல்லிக்கிறேன். ச்சும்மா கேடித்தனமா அப்பப்ப பேசிட்டு எதுக்கு வம்புன்னு நான் அடிக்கடி இப்டி செய்வேன். கண்டுக்காதீங்க!//

அது சரி.. என்கிட்டே அந்த பிரச்சனையே இல்ல..அதனால் நீங்க தைரியமா சொல்லலாம், அதுக்காக அசிங்கமா எதுவும் திட்டிடாதீங்க :-)

Logan on 9:49 PM, June 19, 2008 said...

பொதுவா இப்படி வருகிற பெண்கள் ஒன்று விடுதியில் தங்கி படிக்கிற / வேலை பார்க்கிற பெண்களாக இருக்கிறார்கள் அல்லது கால் சென்டர்களில் வேலை பார்க்கிற பெண்களாக இருக்கிறார்கள். பணம் படுத்தும் பாடு, பட்ட படிப்பு முடித்தவுடன் 15K முதல் 20K வரை சம்பளம், என்ன செய்வார்கள்? இதை தான் செய்வார்கள்... ஒரு கேள்வி இந்த பெண்களை திருமணம் செய்யும் அல்லது செய்யப்போகும் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கிரி on 11:15 PM, June 19, 2008 said...

// தமிழ்சினிமா said...

இந்த பதிவு எனக்கு தோன்றிய என் சந்தேகங்களே, யாருக்கும் அறிவுரை சொல்வதாக இல்லை,அதற்க்கு எனக்கு தகுதியும் இல்லை.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள் பதிவுகள் பிடித்து இருந்தால் :-)

KALAIYARASAN on 12:53 AM, June 20, 2008 said...

கெட்டுப்போவதில் ஆண் என்ன? பெண் என்ன? ஒழுங்காக இருப்பவர்கள், எங்கேயும் இருப்பார்கள். பாரம்பரியம், கலாச்சாரம், சம்பிரதாயம் பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? பணவசதி படைத்த மேல்தட்டு வர்க்கம், அன்று ஐரோப்பிய, இன்று அமெரிக்க நாகரீகத்தை பின்பற்றுவது புதிதல்ல. எமது மக்களுக்கு ஆங்கில மொழியும், டாலர்களும் வேண்டுமென்றால், அவை கொண்டு வரும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Kalaiyagam
http://kalaiy.blogspot.com

புதுகை.எம்.எம்.அப்துல்லா on 1:33 AM, June 20, 2008 said...

சமூக பிரச்சனைக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டருக்கு பதில் சொல்றேன்.

//நாங்கள் எப்போதும் சவேரா ஹோட்டலில் உள்ள பாருக்கே செல்வோம், எனென்றால் அங்கே தான் மிக அமைதியாக இருக்கும் பேசுவதற்கும் நல்ல இடம், ஆனால் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் அங்கே பிரச்சனை ஆகி விட்டதால் அதை மூடி விட்டார்கள். எங்களுக்கு பேரிழப்பு //

ipl ஆரமிக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி பிரச்சனை முடிந்து ரீ-ஓபன் பண்ணிட்டாங்க. ipl final முடிந்த மறுநாளில் இருந்து ரினோவேஷன்காக மூடி இருக்கு.

அடுத்த தபா சிங்கப்பூர்ல இருந்து வருவதற்கு முன்னாடி எது திறந்து இருக்கு? எதெல்லாம் மூடிடாங்கன்னு என்கிட்ட கேட்டுட்டு அப்பால வரவும்.

Sri on 1:35 AM, June 20, 2008 said...

Hi
First of all, sorry to type in english - i dont have tamil font as of now. Pls feel free to give your response in tamil.

I have a question : Do you think your father or grandfather would have ever went out with friends to the bar to sip beer, leave alone hot drinks? Even so, do you think they would confess that in public like you have done in a blog?

My point is - even with respect to men, culture has changed. Aangalai porutha varai kooda kooda kalaacharam maari thaan poi vittadhu (major sundarrajan style ;-)). In the old movies, heroes did not drink or smoke. Compare that to today's movies - heroes ubiquitously smoke/drink. While you are accepting the fact that men drink and smoke, what is the problem in accepting the same about women? Why should all the culture antennae spring up when women do such things?

Now, please dont think that I am in favor of the cocktail culture. My only point is, kudikaravanukku kudikiravalai paathu aen tension varanum?

Please believe me - I am not trying to degrade you by saying this. I am only irriated by the fact that the society is trying to associate moral values only to womenfolk.

கிரி on 1:59 AM, June 20, 2008 said...

// Logan said...
ஒரு கேள்வி இந்த பெண்களை திருமணம் செய்யும் அல்லது செய்யப்போகும் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்?//

உங்களுக்கு ஒரு கேள்வி இந்த ஆண்களை திருமணம் செய்யும் அல்லது செய்யபோகும் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும்? :-)

கிரி on 2:08 AM, June 20, 2008 said...

// KALAIYARASAN said...
கெட்டுப்போவதில் ஆண் என்ன? பெண் என்ன? ஒழுங்காக இருப்பவர்கள், எங்கேயும் இருப்பார்கள்//

100% உண்மை.

//எமது மக்களுக்கு ஆங்கில மொழியும், டாலர்களும் வேண்டுமென்றால், அவை கொண்டு வரும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்//

ஒரு விசயத்தில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே, கெட்டதை எடுத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. நம்மவர்கள் மேலை நாட்டினரிடம் உள்ள எத்தனையோ நல்ல பழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு கெட்டதை பொறுக்கி எடுத்து அதில் தான் விழுவேன் என்று கூறினால், என்னிடம் அதற்கு பதில் இல்லை.

முதல் முறையாக என் வலை பதிவிற்கு வந்துள்ளீர்கள், நன்றி கலையரசன்.

கிரி on 2:10 AM, June 20, 2008 said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
சமூக பிரச்சனைக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டருக்கு பதில் சொல்றேன்.
ipl ஆரமிக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி பிரச்சனை முடிந்து ரீ-ஓபன் பண்ணிட்டாங்க. ipl final முடிந்த மறுநாளில் இருந்து ரினோவேஷன்காக மூடி இருக்கு.//

இப்படி ஒரு செய்திய கூறி என் வயிற்றில் பீரை வார்த்தீங்க போங்க :-))

//அடுத்த தபா சிங்கப்பூர்ல இருந்து வருவதற்கு முன்னாடி எது திறந்து இருக்கு? எதெல்லாம் மூடிடாங்கன்னு என்கிட்ட கேட்டுட்டு அப்பால வரவும்//

சொல்லிட்டீங்கல்ல...:-))))

கிரி on 2:43 AM, June 20, 2008 said...

// Sri said...
I have a question : Do you think your father or grandfather would have ever went out with friends to the bar to sip beer leave alone hot drinks?.//

எனக்கு தெரியாதுங்க.

//do you think they would confess that in public like you have done in a blog?//

நீங்க என்னோட அப்பாவை பற்றி மட்டும் கேட்டீர்கள் என்றால் ஆமாம்.

//My point is - even with respect to men, culture has changed//

ஒத்துக்கொள்கிறேன் சந்தேகமே வேண்டாம்.

//While you are accepting the fact that men drink and smoke, what is the problem in accepting the same about women? //

சரியான கேள்வி தாங்க. இதை போல குடிக்கும் மேல்தட்டு பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடுத்தர மக்களுக்கு அப்படி கிடையாது, இதை சரி என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நம் சமூகம் வளரவில்லை, காரணம் நம் கலாச்சாரம் (இந்த கலாச்சார விசயத்துக்குள்ள வர கூடாது என்பதால் தான் என் பதிவிலேயே குறிப்பிட்டேன் :D) மெதுவாக தான் இதை எல்லாம் ஒப்புக்கொள்ளும். முன்பு பெண்கள் ஜீன்ஸ் போடுவதை ஒப்புக்கொள்ளாத சமூகம் இன்று அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறது. திருமணத்திற்கு முன்பு நிச்சியக்கப்பட்ட ஆண் பெண் வெளியே செல்ல முன்பு அனுமதி மறுத்த சமூகம் இன்று அனுமதிக்கிறது, பள்ளி மாணவனிடம் எல்லாம் கை தொலைபேசி சகஜமாகி விட்டது அதனால் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, கால மாற்றத்திற்கேற்ப. அதே போல நீங்கள் கேட்பது போல் பெண்கள் குடிப்பதை இன்று தவறாக பார்க்கும் சமூகம் நாளை ஒப்புகொள்ளும் நிலை வரும் அல்லது இதை ஒரு பெரிய விசயமாக கருதாத நிலை வரும். ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பது போல் உடனே நடை பெறாது. காலங்காலமாக ஒரு வழிமுறையை பின்பற்றியவர்களை உடனே வேறு பாதைக்கு மாற கூறினால் எப்படி மாறுவார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் நிலை கண்டிப்பாக வரும், கவலையே படாதீர்கள், ஆனால் அதற்க்கு காலம் எடுக்கும்.

//Why should all the culture antennae spring up when women do such things?//

நீங்கள் இந்த காலத்து நபர், பலருடன் பழக வாய்ப்பு கிடைத்து இருக்கும். உங்களை போலவே அனைவரும் யோசிக்க முடியுமா? கிராமத்தில் இருப்பவர்களுக்கும் வெளி உலக அனுபவம் இல்லாதவர்களுக்கும் இவை கண்டிப்பாக தவறாக தான் தோன்றும், எனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே அவ்வாறு கூறி வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அவர்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ள காலம் எடுக்கும், அதற்காக அவர்களை குறை கூற முடியாது.

//kudikaravanukku kudikiravalai paathu aen tension varanum?//

இதற்க்கு மேலே விரிவாக கூறி விட்டேன்.

//Please believe me - I am not trying to degrade you by saying this.//

நான் அவ்வாறு நினைக்கவில்லை, அப்படி நினைத்து இருந்தால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்க மாட்டேன். ஆரோக்யமான விவாதத்தை எப்போது வரவேற்கிறேன். வறட்டு சண்டை அல்லது ஒரே பார்வை, தான் சொல்வதே சரி என்று பேசுபவர்களிடம் நான் அதிகம் பேசுவதில்லை, ஒதுங்கியே இருக்கிறேன், அதற்காக அவர்கள் எண்ணத்தில் கருத்தில் நான் தலையீடு செய்வதில்லை. எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. அதே போல ஒருவர் தான் நினைப்பது தான் சரி என்று கூற கூடாதே.

முதல் முறையாக வந்து இருக்கிறீர்கள் என் பதிவிற்கு, மிக நன்றி ஸ்ரீ.

Thirunavukkarasu on 8:42 AM, June 20, 2008 said...

திரு.கிரிராஜ் அவர்களே ..இதை படித்தவுடன் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது..
அந்த நேரத்தில் நான் அந்த பாரில் இல்லையென்று.ஹி..ஹி.... சரி அது எந்த பார்ன்னு சொல்லவே இல்லை.

இவன் on 9:14 AM, June 20, 2008 said...

அண்ணா அது என்ன "பார்"ங்கண்ணா.... சொன்னீங்கன்னா நாங்களும் போவமில்ல....
எனக்கு என்னவோ இது மேலைக்லாசாரத்துக்கு நாங்கள் அடிமைப்பட்டுக்கொண்டே வருவதுபோல் இருக்கிறது இது வருத்தத்துக்குரிய விடயமே.... மற்றும் படி நான் மேலே கூறியது சும்மா ஒரு டமாசுக்கு

கிரி on 10:14 AM, June 20, 2008 said...

// இவன் said...
அண்ணா அது என்ன "பார்"ங்கண்ணா.... சொன்னீங்கன்னா நாங்களும் போவமில்ல//

:-))) ஊர்ல இருக்கிற அனைத்து நட்சத்திர பார்கலுமே இப்படி தான் இருப்பதாக கூறுகிறார்கள்.

//எனக்கு என்னவோ இது மேலைக்லாசாரத்துக்கு நாங்கள் அடிமைப்பட்டுக்கொண்டே வருவதுபோல் இருக்கிறது இது வருத்தத்துக்குரிய விடயமே//

காலமாற்றத்தில் இதை போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது தான்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி இவண்.

கிரி on 10:21 AM, June 20, 2008 said...

// Thirunavukkarasu said...

//திரு.கிரிராஜ் அவர்களே ..இதை படித்தவுடன் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது..
அந்த நேரத்தில் நான் அந்த பாரில் இல்லையென்று.ஹி..ஹி.... //

யோவ்! T திரு தெரியும்யா நீங்க சொல்லவே வேண்டியது இல்லை.. உங்களுக்கெல்லாம் எல்லாம் கெட்டு போன பீரை கொடுத்து நாலு நாள் படுக்க வைக்க வேண்டும்யா.

//சரி அது எந்த பார்ன்னு சொல்லவே இல்லை.//

ஆமா! என்னமோ இந்த ஒரு இடத்துல தான் அந்த மாதிரி நடக்கிற மாதிரி ..அட போங்கையா நீங்களும் உங்க மொக்கை பின்னூட்டமும்.

NONO on 12:33 PM, June 20, 2008 said...

கலாச்சாரம் என்பது காலத்துக்கு காலம் மாறுவதுதான்!
எனது மனத்தில் உறுத்தியது என்னவென்றால் நீங்கள் பிரசுரித்த புகைப்படம்தான். ஒருவருடைய புகைப்படத்தை அவர்களுடைய அனுமதியின்றி யார் என்று அடையாளம் தெரியும் படி பிரசுரிப்பது நாகரிகம் அல்ல/மனித உருமைமீறல்.
சில நாடுகளிள் இப்படி பிரசுரிப்பது சட்டப்படி தடைவேறு செய்யப்பட்டுள்ளது! உங்களுடைய சிங்கப்பூர் சட்டதிட்டங்கள் எனக்கு தெரியாது... எதுக்கும் படத்தை எடுத்திருங்க! பாதிக்கபட்டவர்கள் சட்டரீதியயாக அனுக வாய்புள்ளது!

கிரி on 1:05 PM, June 20, 2008 said...

ஹா ஹா ஹா இது சிங்கப்பூர் இல்லைங்க..(இந்த படம் சிங்கப்பூர் ல் எடுத்தது என்று நீங்கள் நினைத்து இருந்தால்) .நீங்க இன்னும் என் பதிவின் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வில்லை என்று நினைக்கிறேன்.

இது செய்தித்தாளில் வந்த புகைப்படம், நான் எடுத்த புகைப்படம் அல்ல :-)

சென்னையில் தி பார்க் ஹோட்டலில் நடந்த விவகாரம் இது, என் பின்னூட்டங்களை படித்தால் உங்களுக்கு புரியும்.

எதுவாகினும் என் மீது உங்களுக்கு இருந்த அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி NONO தொடர்ந்து வாருங்கள்.

முகுந்தன் on 1:24 PM, June 20, 2008 said...

கலி முற்றி விட்டது........

கிரி on 2:05 PM, June 20, 2008 said...

//முகுந்தன் said...
கலி முற்றி விட்டது........//

களி சாப்பிடும் காலம் போய், பிஸ்ஸா சாப்பிடும் காலம் வந்ததால் இருக்குமோ :-))))

உங்க வருகைக்கு நன்றி முகுந்தன்

NONO on 2:59 PM, June 20, 2008 said...

//ஹா ஹா ஹா இது சிங்கப்பூர் இல்லைங்க..(இந்த படம் சிங்கப்பூர் ல் எடுத்தது என்று நீங்கள் நினைத்து இருந்தால்) .நீங்க இன்னும் என் பதிவின் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வில்லை என்று நினைக்கிறேன்.//

நான் சொல்லவந்ததை நீங்ககள் தவறாக புரிந்து கொண்டீர்கள், இது எனது தவறுதான்! எல்லா பிண்ணுட்டங்களும் படித்தபின்புதான் எனது பின்னுட்டம் இட்டுள்ளேன்!
எனது ஞாபகத்துக்கு உள்பட இப் புகைப்படம் "திணமனி" பத்திரிகையில் சுமார் ஒரு வருடங்களுக்கு முன் வந்ததாக ஞாபகம்! சில வேளைகளில் இந்திய சட்டத்தில் இப்படிபட்ட பிரசுரிப்புக்கு இடம் இருக்கலாம், அதே சட்டம் சிங்கபூருக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க முடியாது அல்லாவா? நீங்கள் எந்த நாட்டு பிரயாயுரிமை வைத்திருப்பினும், இப்பதிவு நீங்கள் சிங்கபுரில் இருந்து பதிந்து இருப்பிர்களாயின் நான் அறிந்த வரையிய் சிங்கப்புர் சட்டமே செல்லு படியாகும்.

கிரி on 5:20 PM, June 20, 2008 said...

NONO உங்கள் தொடர் வருகைக்கு நன்றி மற்றும் உங்கள் அறிவுறத்தலுக்கு நன்றி. இதை எடுத்தால் தான் தவை இல்லாத ஆராய்ச்சி நடக்கும். அதனால் இப்படியே விட்டு விடுகிறேன். நீங்களும் தவறாக நினைக்காமல் தொடர்ந்து வாருங்கள்.

சரி அதென்னங்க உங்கள் பெயர் NONO. வித்யாசமாக வைத்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவை பார்த்தேன், தொடர்ந்து பதியுங்கள்.

Prabakar Samiyappan on 5:36 PM, June 20, 2008 said...

Its true . Last month I was there in India and I along with my friends went for an beach resorts in ECR , before 2 years also i had went there but at that time it was not like that but this time I had seen many family sitting together and drinking socially ,

appa, amma, magan , magal …mattrum uttrar urivenargaludan amaarnthu kudikkum palakum indru Chennaiil sagagam ..

enna kodumai sir ithu

கிரி on 8:55 PM, June 20, 2008 said...

// Prabakar Samiyappan said...
appa, amma, magan , magal …mattrum uttrar urivenargaludan amaarnthu kudikkum palakum indru Chennaiil sagagam ..//

மாற்றம் தவிர்க்க முடியாது தான். இன்னும் சில வருடங்கள் சென்றால் இதை ஒரு ஆச்சர்யமான விசயமாக கருதாத நிலை வரும்.

எனென்றால் முன்பு குடும்பத்தில் தந்தை மட்டுமே மது அருந்துவார், பின்பு இதில் மகன் இணைந்தார்,தற்போது மகள், மனைவி..இப்போது எல்லோரும் தனித்தனியே செய்கிறார்கள். எனவே அனைவரும் குடிப்பதால் குடும்பமாக குடிப்பது தவறு இல்லை என்ற நிலை வரும்.

என் மனதில் தோன்றுவது, குடிக்கிறதுன்னு ஆகி போச்சு... எல்லோரும் தனி தனியே குடித்தால் என்ன சேர்ந்து குடித்தால் என்ன?

ஆனால் இதை ஒப்புக்கொள்ளும் காலமும் வரும், நமக்கு இன்று ஆச்சர்யமாக தெரிவது நாளை சாதரணமாக இருக்க போகிறது என்பது என் கருத்து.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி பிரபாகர் சாமியப்பன் தொடர்ந்து வாருங்கள்.

Raveendran Chinnasamy on 11:05 PM, June 20, 2008 said...

I never have a shock after this blog /pics associated with this .
This is nothing new to Chennai . I have seen same in 1990s in Discos . Because of recent raise Middle class affortability it is visible now .

Dont bring culture in the bracket ( still i have never heard of tamil culture as there is none we always have Chera /Chola /Panidya culture not unified Tamil culture )

ஜி on 12:59 AM, June 21, 2008 said...

"Arasiyalla ithellaam saatharanamappa..." nu vituttu pogaama namma ellaikkula irukuravangalukaavathu itha paththuna oru awarenessa create pannanum... athu mattumthaan nammalaala mudiyum :))

KALAIYARASAN on 3:56 AM, June 21, 2008 said...

"ஒரு விசயத்தில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே, கெட்டதை எடுத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. நம்மவர்கள் மேலை நாட்டினரிடம் உள்ள எத்தனையோ நல்ல பழக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு கெட்டதை பொறுக்கி எடுத்து அதில் தான் விழுவேன் என்று கூறினால், என்னிடம் அதற்கு பதில் இல்லை."..........

நன்றி கிரி, நீங்கள் கூறியதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. பின்னூட்டம் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் நிறைய எழுதவில்லை. நான் கடந்த 17 வருடங்களாக ஐரோப்பாவில் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு கூறுகிறேன். ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை கொண்டிருக்கவில்லை. 19 ம நூற்றாண்டு ஐரோப்பாவில் பெண்கள் "Pub" அல்லது "Bar" க்கு போய் குடிப்பதில்லை. காலங்காலமாக அது ஆண்கள் மட்டுமே கூடிக்குடித்து கும்மாளமிடும் இடமாக இருந்தது. 20 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான பாவனையாளர் கலாச்சாரம்(consumerism ) தான், தற்போதுள்ள கலாச்சார மாற்றங்களை கொண்டுவந்தது. அந்த காலத்தில் குடிக்காத, புகைக்காத மனித இனத்தின் சரிபாதி(பெண்கள்) பற்றி முதலாளிகள் கவலைப்பட்டார்களாம்.

நாகரீக மோகம் கொண்டு அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றும் எமது மக்கள், எப்போதும் கூடாத விஷயங்களை தான் பற்றிக்கொள்வார்கள். இது ஒருவகையில் மனித இயல்பு தான். அதாவது கேட்ட விஷயங்களை பற்றி அறிவதில் உள்ள ஆர்வம், நல்ல விஷயங்களில் இருப்பதில்லை. அமெரிக்காவில் இருந்து வருவன எல்லாவற்றையும் நாகரீகம் என்று பின்பற்றும், இந்திய மத்தியதர வர்க்க இளைஞர்கள், பல நல்ல விஷயங்களையும் கூடவே கற்றுக்கொள்வதில்லை. இதற்கு அமெரிக்க கொள்கைகளும் ஒரு காரணம். அங்கிருந்து ஏற்றுமதியாகும் திரைப்படங்களும் கலாச்சார சீரழிவுகளை மட்டுமே காட்டுகின்றன. அந்த படங்களை பார்த்து விட்டு அமெரிக்கா அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள். சாதாரண அமெரிக்க, ஐரோப்பிய மக்களும் எம்மைப்போல தமது வேலை, குடும்பம் என்று வாழ்பவர்கள் தான். உலகில் உள்ள எல்லா இன மக்களையும் போல கலாச்சார தனித்துவம் இருந்த போதும், அடிப்படை வாழ்க்கை பிரச்சினைகள் எங்கேயும் ஒன்று தான்.

கிரி on 4:14 AM, June 21, 2008 said...

//Raveendran Chinnasamy said...
I never have a shock after this blog /pics associated with this .
This is nothing new to Chennai . I have seen same in 1990s in Discos . //

ரொம்ம்ம்ம்ம்ம்ப அனுபவ பட்டு இருக்கீங்க போல :-))

//Because of recent raise Middle class affortability it is visible now .//

நீங்கள் சொல்வது உண்மை தான்.

//Dont bring culture in the bracket //

அதெப்படிங்க கொண்டு வராம இருக்க முடியும். அவை மாற ரொம்ப காலம் ஆகும், அதுவரை இதை போல பிரச்சனைகள் இருக்க தான் செய்யும் என்பது என் கருத்து.

உங்கள் வருகைக்கு நன்றி ரவீந்திரன் சின்னசாமி

கிரி on 4:20 AM, June 21, 2008 said...

// ஜி said...
"Arasiyalla ithellaam saatharanamappa..." nu vituttu pogaama namma ellaikkula irukuravangalukaavathu itha paththuna oru awarenessa create pannanum... //

நீங்கள் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

//athu mattumthaan nammalaala mudiyum :))//

சரியா சொன்னீங்க, இதுவே முடியுமா என்பதே சந்தேகம் தான்...

உங்கள் வருகைக்கு நன்றி ஜீ

பனிமலர் on 6:51 AM, June 21, 2008 said...

குடிப்பது தவறு என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும், அது என்ன அந்து குள்ள பெண், நெட்டை பெண். நீங்கள் குடிப்பதை மட்டும் உங்கள் வீட்டில் ஆரத்தி எடுத்த வரவேற்பார்கள் கிரி.......

கிரி on 8:26 AM, June 21, 2008 said...

//KALAIYARASAN said...
பின்னூட்டம் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் நிறைய எழுதவில்லை. //

அப்படி எல்லாம் பார்க்காதீங்க மனதில் தோன்றுவதை எழுதுங்க.

// ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை கொண்டிருக்கவில்லை//

உண்மை தான்.

//அந்த காலத்தில் குடிக்காத, புகைக்காத மனித இனத்தின் சரிபாதி(பெண்கள்) பற்றி முதலாளிகள் கவலைப்பட்டார்களாம். //

ரொம்ப முக்கியமான கவலை அவர்களுக்கு :-)

//கேட்ட விஷயங்களை பற்றி அறிவதில் உள்ள ஆர்வம், நல்ல விஷயங்களில் இருப்பதில்லை. //

அதில் நானும் அடக்கம்.

//அமெரிக்காவில் இருந்து வருவன எல்லாவற்றையும் நாகரீகம் என்று பின்பற்றும், இந்திய மத்தியதர வர்க்க இளைஞர்கள், பல நல்ல விஷயங்களையும் கூடவே கற்றுக்கொள்வதில்லை. இதற்கு அமெரிக்க கொள்கைகளும் ஒரு காரணம்//

ஏங்க இதற்க்கு எப்படிங்க அவர்கள் கொள்கைகளை குறை கூற முடியும்? எதை தேர்வு செய்வது என்பது நம் கையில் இருக்க. இங்கே கூடத்தான் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை பார்த்து கெட்டு போகிறார்கள். அதை தேர்வு செய்வது நாம் தானே! வேண்டும் என்றால் நீங்கள் கூறுவது போல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அனுமதிப்பது (அதாவது ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது) வேண்டும் என்றால் அவர்களின் குற்றம் என்று சொல்லலாம். எனென்றால் ஒருவன் கண்ணில் ஒன்று தொடர்ந்து பட்டு கொண்டே இருந்தால், அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றுவது மனித இயல்பு. வாய்ப்புகள் குறையும் பொது தவறுகளின் அளவு குறையலாம் அவ்வளவே தவறுகள் குறையாது.

//அங்கிருந்து ஏற்றுமதியாகும் திரைப்படங்களும் கலாச்சார சீரழிவுகளை மட்டுமே காட்டுகின்றன. அந்த படங்களை பார்த்து விட்டு அமெரிக்கா அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்//

இது பற்றி எனக்கு தெரியாது என்பதால், இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

//சாதாரண அமெரிக்க, ஐரோப்பிய மக்களும் எம்மைப்போல தமது வேலை, குடும்பம் என்று வாழ்பவர்கள் தான். உலகில் உள்ள எல்லா இன மக்களையும் போல கலாச்சார தனித்துவம் இருந்த போதும், அடிப்படை வாழ்க்கை பிரச்சினைகள் எங்கேயும் ஒன்று தான்.//

உண்மை தாங்க. நான் அங்கு சென்று பார்க்கவில்லை என்றாலும் யாரும் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் கெட்டு போக கூடாது என்று தான் விரும்புவார்கள். அது எந்த நாடாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு கொள்ளை கும்பலாக இருந்தாலும் சரி. அவ்வாறு மாற்றி நினைப்பவர்கள் பற்றி நாம் பேசவே தேவையில்லை. எனென்றால் நாம் மனிதர்களை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறோம் :-)

உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கலையரசன்

கிரி on 8:31 AM, June 21, 2008 said...

// பனிமலர் said...
குடிப்பது தவறு என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும், அது என்ன அந்து குள்ள பெண், நெட்டை பெண். நீங்கள் குடிப்பதை மட்டும் உங்கள் வீட்டில் ஆரத்தி எடுத்த வரவேற்பார்கள் கிரி.......//

வாங்க பனிமலர். நீங்க என் பதிவை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த பெண் குள்ளமாக இருப்பதால் அவ்வாறு கூறவில்லை :-)

நீங்களே உங்க அன்றாட வாழ்க்கையில நிறைய பேரை சந்தித்து இருப்பீங்க. அதுல ஒருத்தரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குதுன்னு வைங்க..அதற்க்கு காரணம் எல்லாம் தெரியாது பிடிக்குது அவ்வளோ தான். ஆனா அவங்க உங்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்யுறாங்க அல்லது உங்கள் மனதுக்கு ஒத்து வராத காரியத்தை செய்கிறார்கள் என்று வைங்க. சாதரணமாக உங்கள் மனதில் என்ன தோன்றும்..இவள்(ன்) ஏன் இப்படி செய்கிறாள்(ன்)? என்று தோன்றும் அல்லவா? அந்த சாதாராண அன்பின் அல்லது தேவை இல்லாத கவலையின் ஒரு ஆதங்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

மற்றபடி நீங்கள் கூறுவது போல தவறு செய்வது யாராக இருந்தாலும் தவறு தான், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. நானும் அதற்க்கு விதி விலக்கில்லை.

நான் கூறியது உங்களை தெளிவு படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்றால் மறுபடியும் கோதாவுல இறங்குங்க :-))))

அது சரி! நீங்க குள்ளமா நெட்டையா :-))))))))))))))

உங்கள் வருகைக்கு என் நன்றி. பதிவுகள் பிடித்து இருந்தால் தொடர்ந்து வாங்க.

ஜெகதீசன் on 8:33 AM, June 21, 2008 said...

:((

கிரி on 8:43 AM, June 21, 2008 said...

// ஜெகதீசன் said...
:((//

ஜெகதீசன் உங்க ஸ்மைலி அட்டகாசம் தாங்க முடியல. இதை வைத்து நான் என்ன முடிவுக்கு வருவது.

ஒருவேளை எப்போதும் சந்தோசமாக இருக்கிறேன் என்பதை தான் இப்படி சொல்கிறீர்களோ ஹி ஹி ஹி ஹி

ஜெகதீசன் on 9:29 AM, June 21, 2008 said...

//
கிரி said...
// ஜெகதீசன் said...
:((//

ஜெகதீசன் உங்க ஸ்மைலி அட்டகாசம் தாங்க முடியல. இதை வைத்து நான் என்ன முடிவுக்கு வருவது.

ஒருவேளை எப்போதும் சந்தோசமாக இருக்கிறேன் என்பதை தான் இப்படி சொல்கிறீர்களோ ஹி ஹி ஹி ஹி

//
இது சிரிப்பான் இல்லிங்க.. அழுவான்..
நம்மால இதுக்கு ஒன்னும் செய்யமுடியாதுன்னு அர்த்தம் இதற்கு...
:P

கிரி on 9:37 AM, June 21, 2008 said...

// ஜெகதீசன் said...
:((//

இது சிரிப்பான் இல்லிங்க.. அழுவான்..//

ஹா ஹா ஹா பாருங்க அப்ப நான் எந்த அளவுக்கு உங்களால் பாதிக்கப்பட்டு இருக்கேன்னு (மற்றவகள் பதிவுகளில் உள்ள சிரிப்பான்களையும் சேர்த்து) நீங்க எந்த ஸ்மைலி போட்டாலும் எனக்கு இப்படி தான் தெரியுது :-))))

//நம்மால இதுக்கு ஒன்னும் செய்யமுடியாதுன்னு அர்த்தம் இதற்கு...//

இதுக்குள்ள இவ்வ்வ்வ்ளோ பெரிய அர்த்தம் ஒளிந்து இருக்கா? :-)))))))))))

பனிமலர் on 12:29 PM, June 21, 2008 said...

சென்னையில் நிலமை இப்படி என்று ஒரு பதிவு போட்டுவிட்டி இப்போ இப்படி எட்டுகட்டி எழுதினால் எப்படி கிரி. ஆண்களின் உலகத்தில் ஒரு பெண் அதுவும் கொஞ்சம் பார்க்க அழகாக இருந்தால் போதும், உடனே மனதில் ஒரு கனவு. அந்த கனவில் இடர் வந்ததும் பெண்கள் இப்படி செய்யலாமா என்று புலம்பல். சின்னபுள்ள தனமா இல்ல இருக்கு கிரி......

கிரி on 1:58 PM, June 21, 2008 said...

பனிமலர் எதுக்கு இப்படி எரிமலை ஆகுறீங்க :-))

////ஆண்களின் உலகத்தில் ஒரு பெண் அதுவும் கொஞ்சம் பார்க்க அழகாக இருந்தால் போதும், உடனே மனதில் ஒரு கனவு. அந்த கனவில் இடர் வந்ததும் பெண்கள் இப்படி செய்யலாமா என்று புலம்பல். //

இது உங்களுக்கே அதிகமாக தெரியவில்லையா? அப்படி என்னங்க நான் தப்பு பண்ணிட்டேன், அந்த பொண்ணு பார்க்க அழகா அப்பாவியா இருந்தது, அந்த பொண்ணு அப்படி செய்தது என் பார்வையில் எனக்கு மனசு கஷ்டமாக இருந்தது அவ்வளவே.

நீங்கள் அதற்க்கு என் மனதில் கனவு, அதற்க்கு இடர், புலம்பல்னு எங்கேயோ போய்ட்டீங்க, நீங்க தான் அப்படி நினைக்கறீங்க, நீங்க சொன்ன பிறகே நான் அதை எல்லாம் யோசித்து பார்க்கிறேன்.

இதற்க்கு நான் விரிவான பதிலை கூறினாலும், அதை ஏற்கும் மன நிலையில் நீங்கள் இல்லை என்பது உங்களது இந்த பின்னூட்டத்திலேயே தெரிகிறது. எனவே இதை நான் தொடர விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை பார்வைகள் இதில் யார் கூறுவது சரி தவறு என்று வரையறை செய்ய யாரும் முடியாது.

என் மனதில் நீங்கள் கூறுவது போல் எதுவும் இல்லை, நீங்கள் இவ்வாறு நினைத்துக்கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பும் அல்ல.

//சின்னபுள்ள தனமா இல்ல இருக்கு கிரி......//

ஒரு வேளை எனக்கு இருக்கும் உங்களை விட குறைவான அனுபவத்தால் இப்படி இருக்கின்றதோ என்னவோ. இன்னும் பல அனுபவங்களை பெற்ற பிறகு ஒருவேளை எனக்கு புரியுமோ !!!

தொடர்ந்து வாருங்கள், உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

தமிழ்சினிமா on 3:06 PM, June 21, 2008 said...

இதை ஏன் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல கருத்துக்கள் எங்கிருந்து... யார் மூலம் வந்தாலும் அது அட்வைஸ் என்று அர்த்தமில்லை. எழுதப்பட்டவைகள் அறிவுரை என்று எடுத்துக்கொண்டால் புத்தர்காலம் தொடங்கி புனிதர்கள் வரையில் யார் யாரோ சொன்னவைகளும் அறிவுரையாகத்தான் கருதப்படவேண்டும். இந்த வகையில் நீங்கள் சொன்ன கருத்தை மனதின் ஓர் ஓரத்தில் போட்டுக்கொள்வதும் தூசி போல தட்டிவிட்டு செல்வதும் அவரவர் விருப்பம். நன்றி.

புதுகை.எம்.எம்.அப்துல்லா on 5:14 PM, June 21, 2008 said...

அமெரிக்காவில் இருந்து வருவன எல்லாவற்றையும் நாகரீகம் என்று பின்பற்றும், இந்திய மத்தியதர வர்க்க இளைஞர்கள்//

அமெரிக்காவில் இருந்து வந்த என்னுடைய வகுப்பு தோழி "சென்னை ஏர்போர்ட்டில் சில பென்களின் உடைகளை கவனித்தேன், அவர்கள் அணிந்து இருந்த உடை அமெரிக்க பெண்கள் அணிவதை விட ஆபாசமாக இருந்தது" என்று சொன்னாள்.

கலாச்சாரத்தைப் பொறுத்தவரை எனக்கு ஒரு பார்வை உண்டு." தான் செய்கின்ற அல்லது செய்யவே முடியாத ஒரு தவறை, பொறுக்கித்தனத்தை, மொள்ளமாரி தனத்தை வேறு யாருமே செய்யக் கூடாது என்றால் அதற்கு பெயர்தான் கலாச்சாரம்".

கிரி on 5:44 PM, June 21, 2008 said...

//தமிழ்சினிமா said...
இதை ஏன் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல கருத்துக்கள் எங்கிருந்து... யார் மூலம் வந்தாலும் அது அட்வைஸ் என்று அர்த்தமில்லை. எழுதப்பட்டவைகள் அறிவுரை என்று எடுத்துக்கொண்டால் ...//

உண்மை தான் தமிழ் சினிமா அவர்களே. முதலில் யாரும் யாருக்கும் அறிவுரை கூற முடியாது, இப்போதெல்லாம் அறிவுரை சொல்கிறேன் என்றால் நம்மை பார்த்து தான் சிரிப்பார்கள், அனைவருக்கும் தான் செய்வது தான் சரி என்ற மனப்பான்மை இருக்கும். நம் எண்ணங்களையும், கருத்துக்களையும் கூறலாமே தவிர, அறிவுரையாக கூறினால் கேட்க ஆள் இருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இது என் அனுபவ பகிர்வே தவிர அறிவுரை அல்ல, இதை அறிவுரையாக கூற எனக்கு எந்த தகுதியும் இருப்பதாக நான் கருதுவமில்லை.


//நீங்கள் சொன்ன கருத்தை மனதின் ஓர் ஓரத்தில் போட்டுக்கொள்வதும் தூசி போல தட்டிவிட்டு செல்வதும் அவரவர் விருப்பம். நன்றி//

சாரியாக சொன்னீர்கள். நமக்கு ஒருவர் கூறும் ஒரு கருத்தில் உடன்பாடு இல்லை என்றால், மொத்தமாக ஒதுக்கி விடாமல் மற்ற கருத்துகளில் உடன்பாடு உண்டு என்றால் நாம் ஈகோ பார்க்காமல் திரும்பவும் கலந்துரையாடுவது மட்டுமே நம் அனுபவத்தையும் நம் எண்ணங்களையும் உயர்த்தும் என்பது என் அனுபவத்தில் நான் கண்டது.

உங்கள் வருகைக்கு நன்றி.

கிரி on 5:54 PM, June 21, 2008 said...

//கலாச்சாரத்தைப் பொறுத்தவரை எனக்கு ஒரு பார்வை உண்டு." தான் செய்கின்ற அல்லது செய்யவே முடியாத ஒரு தவறை, பொறுக்கித்தனத்தை, மொள்ளமாரி தனத்தை வேறு யாருமே செய்யக் கூடாது என்றால் அதற்கு பெயர்தான் கலாச்சாரம்".//

ஹா ஹா ஹா நல்ல பார்வை தான். இதுல எதுவும் உள்குத்து இல்லையே :-))))

உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி அப்துல்லா.

தமிழ்சினிமா on 6:01 PM, June 21, 2008 said...

கிரி தங்களின் கருத்துக்கு நன்றி. நல்ல கருத்துக்கு எந்த விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை. தங்களின் இது போன்ற கருத்துக்கள் பதிவுகளில் தொடர்ந்து எதிரொலிக்க வாழ்த்துக்கள். நன்றி.

தமிழ்சினிமா on 6:22 PM, June 21, 2008 said...

பின்னோட்டம் செஞ்சுரி அடிக்கப்போகுது கிரி கன்கிராட்ஸ்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா on 6:23 PM, June 21, 2008 said...

நமக்கு ஒருவர் கூறும் ஒரு கருத்தில் உடன்பாடு இல்லை என்றால், மொத்தமாக ஒதுக்கி விடாமல் மற்ற கருத்துகளில் உடன்பாடு உண்டு என்றால் நாம் ஈகோ பார்க்காமல் திரும்பவும் கலந்துரையாடுவது மட்டுமே நம் அனுபவத்தையும் நம் எண்ணங்களையும் உயர்த்தும் //

சரியாச் சொன்னீங்க கிரி!அறிவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த அதுதான் ஓரே வழி.

//ஹா ஹா ஹா நல்ல பார்வை தான். இதுல எதுவும் உள்குத்து இல்லையே :-))))//

உங்க வாழ்க்கையும்,என் வாழ்க்கையும் திறந்த புத்தகம் மாதிரி...இங்க உள்குத்தெல்லாம் கிடையாது..ஒன்லி ஒப்பன் குத்துதான்
:))

கிரி on 7:05 PM, June 21, 2008 said...

தமிழ்சினிமா said...

//தங்களின் இது போன்ற கருத்துக்கள் பதிவுகளில் தொடர்ந்து எதிரொலிக்க வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி தமிழ் சினிமா என்னையும் மதித்து பின்னூட்டம் இட்டதற்கு.

நண்பர்களிடம் கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொண்டாலும், இதை போன்ற பதிவுலகில் நம் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதிலும் மற்றவர்களின் கருத்துக்களையும் தெரிந்து கொள்வதிலும் அதிக வாய்ப்பு கிடக்கிறது.

நாம் செய்யும் தவறுகள் பலரால் சுட்டிக்காட்டப்படும் போது, நம்மை மேம்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

என் மனதுக்கு சரி என்று படுவதை, மற்றவர்கள் மனம் வருத்தம் அடையாமல் என்னுடைய பாணியில் கூறி வருகிறேன். கண்டிப்பாக தொடர்ந்து கூறுவேன், அதில் தவறு இருக்குமாயின் சுட்டி காட்டப்படும் போது திருத்திக்கொள்கிறேன். எனவே தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் ஆவல், அது உங்களை போல் ஒரு சிலர் பாராட்டும் போது என் எழுதும் உற்ச்சாகத்தை அதிகப்படுத்துகிறது.

//பின்னோட்டம் செஞ்சுரி அடிக்கப்போகுது கிரி கன்கிராட்ஸ்//

ஒரு பின்னூட்டமாவது வராதா என்று ஏங்கிய நாட்கள் உண்டு, இதை போல பின்னூட்டங்கள் வருவது நம்மை மேலும் உற்சாகபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனாலேயே நான் படிக்கும் பதிவு எது பிடித்து இருந்தாலும் என்னை போல மற்றவர்களுக்கு ஆக கூடாது என்று சோம்பேறி தனம் பார்க்காமல் பின்னூட்டம் இட்டுவிடுவேன். அப்புறம் செஞ்சுரி எல்லாம் ரொம்ப அதிகம் உங்க அன்புக்கு நன்றி.
------------------------------------------------------------------------------------------------
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
உங்க வாழ்க்கையும்,என் வாழ்க்கையும் திறந்த புத்தகம் மாதிரி...இங்க உள்குத்தெல்லாம் கிடையாது..ஒன்லி ஒப்பன் குத்துதான்
:))//

இது செம குத்தா இருக்கே :-))

சினிமா நிருபர் on 8:48 PM, June 21, 2008 said...

//நான் படிக்கும் பதிவு எது பிடித்து இருந்தாலும் என்னை போல மற்றவர்களுக்கு ஆக கூடாது என்று சோம்பேறி தனம் பார்க்காமல் பின்னூட்டம் இட்டுவிடுவேன்//


உங்களிடம் என்னைக் கவர்ந்த விஷயமே இதுதான் கிரி....! உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

வெயிலான் on 9:03 PM, June 21, 2008 said...

கிரி,

உங்க பதிவு படிச்ச நேரத்தை விட, பின்னூட்டங்களை படிக்கிறதுக்கு தான் அதிக நேரம் செலவிட்டேன்.

இவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் நடந்திருக்கு.

வாழ்த்துக்கள்!

கிரி on 9:30 PM, June 21, 2008 said...

//சினிமா நிருபர் said...
//உங்களிடம் என்னைக் கவர்ந்த விஷயமே இதுதான் கிரி....! உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.//

அப்பா என்னோட பதிவுகள் எதுவும் பிடிக்கவில்லையா :-) சும்மா டமாசுக்கு சொன்னேன், உங்களை நான் அறிவேன் நிருபர்.

----------------------------------------------------------------------

//வெயிலான் said...
உங்க பதிவு படிச்ச நேரத்தை விட, பின்னூட்டங்களை படிக்கிறதுக்கு தான் அதிக நேரம் செலவிட்டேன்.
இவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் நடந்திருக்கு.
வாழ்த்துக்கள்!//

ஆமாங்க கருத்து பரிமாற்றங்கள் நடப்பது நல்லது தானே. ஆரோக்யமான விவாதங்கள் கருத்து பரிமாற்றங்கள் எப்போதும் யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. உங்கள் வருகைக்கு நன்றி வெயிலான். உங்கள் பெயர் மிக அருமை ஒவ்வொரு முறை உங்கள் பெயரை பார்க்கும் போதும் ஏதோ வித்யாசமாக உணருவேன் (நல்லவிதமாத்தாங்க :-D)

லதானந்த் on 3:07 PM, June 22, 2008 said...

பேரே நல்லாருக்கு.
நான் பிளாக்குல போன மாசம்தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
www.lathananthpakkam.blogspot.com
பாருங்க.எதுனா சொல்லுங்க

பரிசல்காரன் on 5:20 PM, June 22, 2008 said...

உங்கள் உண்மையாலன கவலை எனக்குப் புரிகிறது. போனமா.. பீர் அடிச்சமா, சைட் அடிச்சமா-ன்னு இல்லாம இவ்ளோ கவலையா ஒரு பதிவு போடறதை தவிர உங்களாலயும்.. அதைப் படிச்சுட்டு இப்படி ஒரு மொக்கை கமெண்ட் போடறதையும் தவிர என்னாலயும் ஒண்ணியுமே பண்ண முடியலியே?

கிரி on 8:27 PM, June 22, 2008 said...

லதானந்த் said...
பேரே நல்லாருக்கு.
நான் பிளாக்குல போன மாசம்தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.//

வாங்க லதானந்த் முதல் முறையா வந்து இருக்கீங்க.

//www.lathananthpakkam.blogspot.com
பாருங்க.எதுனா சொல்லுங்க//

உங்க பதிவுக்கு நான் ஏற்கனவே வந்து இருக்கேன் மற்றும் பின்னூட்டமும் போட்டு இருக்கிறேன். ஒருவேளை அதிகம் அறிய படாத பதிவர் என்பதால் உங்களுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். தொடர்ந்து வாருங்கள். உங்க கேள்வி பகுதி நல்லா சுவாராசியமா இருக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் நானும் உங்க ஊர்காரன்தாங்க ..ஐ மீன் கோயம்புத்தூர் குசும்பன் ;-)))

கிரி on 8:38 PM, June 22, 2008 said...

// பரிசல்காரன் said...
போனமா.. பீர் அடிச்சமா, சைட் அடிச்சமா-ன்னு இல்லாம இவ்ளோ கவலையா ஒரு பதிவு போடறதை தவிர உங்களாலயும்.. அதைப் படிச்சுட்டு இப்படி ஒரு மொக்கை கமெண்ட் போடறதையும் தவிர என்னாலயும் ஒண்ணியுமே பண்ண முடியலியே?//

உண்மை தான் பரிசல்காரன்.

யாராலையும் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். இந்த என்னுடைய பதிவு என்னுடைய அனுபவங்களே தவிர யாருக்கும் அறிவுரைகூற கிடையாது. அம்மா அப்பா கூறும் அறிவுரைகளையே கேட்காதவர்கள் நாம் கூறுவதையே கேட்க போகிறார்கள் (இதில் நாம் கூறுவது சரி என்று நினைத்து பேசி கொண்டு இருக்கிறோம், இது தவறாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது அல்லவா?). இப்படி எல்லாம் நினைத்து கொண்டு யாரும் பதிவெழுதினால் அவர்களை விட முட்டாள் யாரும் இல்லை. எந்த மாற்றமும் மாறுதலும் மாறுபவர்களின் மனதிலேயே உள்ளது.

பலவித எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நம் தவறுகளை திருத்திக்கொள்ளவுமே நாம் எழுதும் பதிவுகள் துணை புரிகிறது.

உங்கள் வருகைக்கு நன்றி பரிசல்காரன்.

ashok's on 12:59 PM, June 24, 2008 said...

i totally agree with cinema nirubar..i think still chennai is gud..only a fraction of gals are bad when u compare with placs like bangalore, whre only a fraction is good :(

or is it in our point of view???are we looking at only the bad things???

கிரி on 8:05 PM, June 24, 2008 said...

வாங்க அசோக். மாற்றங்கள் அனைத்து இடங்களிலும் வந்து விட்டது.

பசங்க பொண்ணுக என்றெல்லாம் இல்லை. என்னை போல பார்ப்பவர்களுக்கு இது புதிதாக இருக்கிறது, என்னையே இன்னும் கொஞ்ச நாள் கழித்து கேட்டால், எனக்கு இது சாதரணமாகி இருக்கும், பசங்களை பார்ப்பது போலவே.

J J Reegan on 4:38 PM, June 26, 2008 said...

கொஞ்சம் நஞ்சம் அல்ல...
நிறையவே யோசிக்க வேண்டிய பதிவு இது...
இன்னும் ஒரு இருபது வருஷம் கழிச்சு பதிவுல எதப்பத்தி பேசுவோம்னே தெரியல....

Thala on 8:45 PM, June 26, 2008 said...

நமது சினிமா நிருபருக்கு இன்னும் அதிகமாக தெரிந்து இருக்க வாய்ப்புகள் இருக்கு
அதுதான் உண்மையும்.நானும் அதே சென்னைல தான் இருக்கேன்.

கிரி on 9:04 AM, June 27, 2008 said...

//J J Reegan said...
கொஞ்சம் நஞ்சம் அல்ல...
நிறையவே யோசிக்க வேண்டிய பதிவு இது...
இன்னும் ஒரு இருபது வருஷம் கழிச்சு பதிவுல எதப்பத்தி பேசுவோம்னே தெரியல//

அப்பெல்லாம்....... ன்னு ஆரம்பித்து மொக்கை தான் போட முடியும்..

அப்புறம் நீங்க 20 மனு சொல்றது எனக்கு அதிகமா படுது :-)))))

உங்க முதல் வருகைக்கு நன்றி ரீகன்.

கிரி on 9:06 AM, June 27, 2008 said...

// Thala said...
நமது சினிமா நிருபருக்கு இன்னும் அதிகமாக தெரிந்து இருக்க வாய்ப்புகள் இருக்கு//

உண்மை தான் செந்தில். அவர் இருக்கும் பீல்ட் அந்த மாதிரி..நிறைய செய்திகள் கிடைக்க வாய்ப்புண்டு

J J Reegan on 11:27 AM, June 27, 2008 said...

நம்ம சென்னைலயே இப்பிடி... கொஞ்சம் பெங்களூர் பக்கம் வந்து பாருங்க... தலை சுத்துது எனக்கு....

கிரி on 12:36 PM, June 27, 2008 said...

//J J Reegan said...
நம்ம சென்னைலயே இப்பிடி... கொஞ்சம் பெங்களூர் பக்கம் வந்து பாருங்க... தலை சுத்துது எனக்கு....//

கொஞ்ச நாள்ல சென்னையும் அப்படி தான் ஆகும். கால மாற்றத்தில் இவையாவும் தவிர்க்க முடியாத ஒன்று, கசப்பான ஒன்று தான், சகித்து தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை. இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணத்தில் தான் இருக்கிறது.

இனி யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள் கூட இன்னும் கொஞ்ச நாள் தான் கண்டிக்க முடியும், பிறகு இப்படி செய்யாதே என்று வேண்ட கூட முடியாது.

J J Reegan on 1:41 PM, June 27, 2008 said...

// இனி யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள் கூட இன்னும் கொஞ்ச நாள் தான் கண்டிக்க முடியும், பிறகு இப்படி செய்யாதே என்று வேண்ட கூட முடியாது. //

என்னோட நண்பர்கள் கூட அப்பிடி இருக்காங்க அவங்கள கேட்டா அது பார்வோர்ட் திங்கிங் மேசுரிட்டி - னு சொல்றாங்க... அவங்க சொல்ற ஒருசில காரணமும் கொஞ்சம் யோசிக்க வைக்குது....

இன்னம் கொஞ்ச நாள்ல மேலை நாடுகளைப் போல் தனிநபர் வாழ்க்கை-யை உங்க பக்கத்தில வெளிப்படையா பார்க்கலாம்....

கிரி on 8:35 PM, June 27, 2008 said...

ரீகன் நீங்க ரொம்ப ஆர்வமா இது பற்றி உங்க கருத்தை கூறியதால் எனக்கு தோன்றுவதை கொஞ்சம் விரிவாக கூறுகிறேன்.

நான் சமீபத்தில் ஒரு பழைய ஹாலிவுட் படம் பார்த்தேன் (பெயர் நினைவில்லை), அதில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் ரொம்ப நாகரிகமாக (இதற்க்கு நான் என்ன வார்த்தையை பயன்படுத்துவது என்று தெரியவில்லை) நாம் இப்போதும் படங்களில் செய்ய கூச்சப்படும் அல்லது அதை அசிங்கமாக கருதும் படி காட்சிகள் இருந்தது. எனக்கு படம் பார்க்கும் போது தோன்றிய எண்ணம் நாம் இப்ப கூட ஒத்துகொள்ளாத செயலை அவர்களுடைய கருப்பு வெள்ளை படங்களிலேயே செய்து இருக்கிறார்கள். அது போல அவர்கள் முன்பு இருந்தே அப்படி இருந்து இப்போது அவர்கள் சீரான வளர்ச்சியில் !!! வந்து இப்போது அவர்களுடைய எல்லைக்கு மிக அருகில் வந்து விட்டார்கள். எனவே அவர்கள் செய்வது அவர்களுக்கு தவறாக இல்லை.

நம்மிடம் என்ன பிரச்சனை என்னவென்றால், நாம் சீராக வரவில்லை, கட்டுப்பாடோடு வந்து குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை அடைய நினைக்கிறோம் அல்லது சமூகம் நம்மை அவ்வாறு கொண்டு செல்கிறது. இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக நான் கருதுவது.

மற்றபடி இனி வரும் காலங்களில் (ஒரு 10 - 15 வருடங்களுக்கு பிறகு) பெண்கள் ஏன் அவ்வாறு உடை அணிகிறார்கள், அவர்கள் தண்ணி அடிக்கலாமா, டேடிங் போலாமா என்று கேள்வி கேட்டால், அல்லது இப்போது நான் போட்ட பதிவு மாதிரி யாராவது போட்டால் கேட்டவர்கள் அதிசய பிறவி ஆகி விடுவார்கள் (இப்பவே பல பேர் நினைத்து இருக்கலாம்:D)

மாற்றங்கள் தவிர்க்க முடியாதது அதில் நன்மைகளும் அடங்கும் தீமைகளும் அடங்கும். எனவே ஆண்கள் தண்ணி அடிப்பது எப்படி முன்பு குற்றமாக கருதிய காலம் இருந்து அது பெரிய விசயமாக தற்போது கருதாமல் போய் இருக்கிறதோ அதுபோல இப்போது அது பெண்கள் பக்கம் திரும்பி இருப்பது தவிர்க்க முடியாத மாற்றமே. இதை போலவே அனைத்து செயல்களும்.

இதை உணர்ந்தவர்கள் அல்லது புரிந்து கொண்டவர்கள், இனி வரும் காலங்களில் நிம்மதியாக இருக்கலாம் !!! புரிந்து கொள்ளாதவர்கள் அந்த காலத்துலன்னு... பழைய கதைய பேசி புலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.

ரீகன் தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

King... on 2:15 AM, June 30, 2008 said...

பிரச்சனைகளை தொட்டுச்செல்கிறிர்கள், தொடரட்டும் உங்கள் தனித்துவம்...

நன்றி...

Anbu on 8:40 AM, June 30, 2008 said...

I just happened to visit your post, obviously the name you got is wrong. If you write something about which is changed, you should you know the situation when its not changed. Looking at your profile, you did not grown up in Madras and I dont think you have the right knowledge to write a post like this !!

Anbu

கிரி on 9:06 AM, June 30, 2008 said...

//King... said...
பிரச்சனைகளை தொட்டுச்செல்கிறிர்கள், தொடரட்டும் உங்கள் தனித்துவம்...//

எனக்கு தோன்றியதை எழுதுகிறேன் ஓரளவுக்கு நாகரீகமாக. நன்றி கிங்.

கிரி on 9:15 AM, June 30, 2008 said...

//Anbu said...
I just happened to visit your post, obviously the name you got is wrong. //

சரிங்க.

//Looking at your profile, you did not grown up in Madras and I dont think you have the right knowledge to write a post like this !!//

நீங்க ப்ரோபைல் மட்டுமே பார்த்தது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நான் சென்னையில் 13 வருடம் இருந்து இருக்கிறேன் 2007 வரை, சோற்றுக்கு காசு இல்லாமல் சாப்பிடாமலும் இருந்து இருக்கிறேன், நண்பர்களோடு அனைத்து பெரிய இடங்களுக்கும் சென்று இருக்கிறேன்.

நான் என்னுடைய எண்ணங்களை கூறினேனே தவிர, நான் கூறியது தான் சரி என்று எங்கும் கூறவில்லை. பார்வைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். நீங்கள் இவ்வாறு கூறியதில் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பு.

J J Reegan on 10:27 AM, June 30, 2008 said...

இந்த பதிவு 100-வது post போடுறதுக்கு நான் கொஞ்சம் சந்தோசப்பட்டுக்கிறேன்.

பிரச்சனைய காட்டுவது ரொம்ப சுலபம் அதே நேரத்தில் அதை தீர்க்கறதுக்கு உங்களால ஒரு போஸ்ட் போட கேட்டுக்கிறேன்....

கிரி on 11:47 AM, June 30, 2008 said...

//J J Reegan said...
இந்த பதிவு 100-வது post போடுறதுக்கு நான் கொஞ்சம் சந்தோசப்பட்டுக்கிறேன்//

பின்னூட்டத்தை சொல்றீங்களா..நன்றி ரீகன்.

//பிரச்சனைய காட்டுவது ரொம்ப சுலபம் அதே நேரத்தில் அதை தீர்க்கறதுக்கு உங்களால ஒரு போஸ்ட் போட கேட்டுக்கிறேன்//

உண்மைதாங்க, குறை சொல்ல நான் பதிவை எழுதவில்லை என் அனுபவத்தையே எழுதினேன். அதை தீர்க்க எல்லாம் சொல்ல எனக்கு அனுபவம் இல்லைங்க,அதற்க்கு தகுதியானவனும் கிடையாது.

உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தமிழ்சினிமா on 12:03 PM, June 30, 2008 said...

பின்னோட்டத்தில் செஞ்சுரி அடித்த கிரிக்கு தமிழ்சினிமாவின் வாழ்த்துக்கள்.
நன்றி.

கிரி on 8:25 PM, June 30, 2008 said...

உங்கள் அன்புக்கு நன்றி தமிழ்சினிமா

Joe on 9:22 PM, October 24, 2008 said...

நீங்க ஒரு பார்-ல குடிக்கும்போது அந்த பொண்ணுங்க குடிக்கிறதுல என்ன தப்பு?!? உங்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயமா?

உங்களுக்கு அந்த பொண்ணு மாதிரி யாரும் கட்டிபுடிச்சு முத்தம் கொடுக்கலைனு தான் கவலை. கலாச்சாரம், அபச்சாரம், விபச்சாரம், இதெல்லாம் சும்மா வெட்டி பேச்சு!

கிரி on 9:48 PM, October 24, 2008 said...

//நீங்க ஒரு பார்-ல குடிக்கும்போது அந்த பொண்ணுங்க குடிக்கிறதுல என்ன தப்பு?!? உங்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயமா?//

நான் எங்கங்க தப்புன்னு சொன்னேன்.

"ஏற்கனவே இதை போல் பார்த்து இருக்கிறேன் என்பதாலும் பெண்கள் இப்போது பார்களில் அடிக்கடி தென்படுவது சகஜம் என்பதால் சிறிய ஆச்சர்யத்துடன் நாங்கள் பேச்சை தொடர்ந்தோம்."

இதை தானே கூறினேன்

//உங்களுக்கு அந்த பொண்ணு மாதிரி யாரும் கட்டிபுடிச்சு முத்தம் கொடுக்கலைனு தான் கவலை.//

ஹா ஹா ஹா ஹா அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க.

//கலாச்சாரம், அபச்சாரம், விபச்சாரம், இதெல்லாம் சும்மா வெட்டி பேச்சு! //

ஏங்க! ஜோ நான் தான் தெளிவா கூறி இருக்கேனே அப்புறம் என்னங்க

"எனக்கு என் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை. என் மனதிற்கு இது தவறாக பட்டாலும், அடுத்தவர்களின் உரிமையில் அல்லது சுதந்திரத்தில் அல்லது எனக்கு சம்பந்தம் இல்லாத விசயத்தில் அல்லது அவர்கள் முற்போக்கு எண்ணத்தில் தலையிடுவதில்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் எனக்கு தோன்றிய அல்லது இருந்து கொண்டு இருக்கும் சந்தேகங்களே, கலாச்சார பாதுகாவலனாக கேட்கும் கேள்விகள் இல்லை."

உங்கள் வருகைக்கு நன்றி ஜோ

rasigai on 10:44 AM, November 09, 2008 said...

unnga blogger muthal muthalaga parkiraen,
i live in ireland.pubs, bars nirantha naadu, before 5yrs,irish people use to tell me indians are nondrinkers( mostly),they beleive women never drink, but now few indian women(mostly bangalore, kerala girls)goes to pub regularly.i won't blame them, its a change ,we can expect all over world,(middle east kooda maarm).
karanam onnu thaan
money-- has its own advantages& disadvantages,
these girls first never drink,gets lots of money,with lots of time to spend(less work/nowork)..
first they try to spend onbasic thngs- beauty cosmatics-then dresses-then gym,etc
if they have moremoney after spending all these, they try to find more friends( boys&girls),
to give company and for fun they get in to these habits,
i never seen women start to drink easily(other then if they r brought up in drinking women culture).
young age, moremoney,lots of time,noguidence,medias like cinema and news( i know decan in hyderabad have a extra weekend colum about weekly party,cocktailpreparation,discophotos etc). they started to know about these things,start doing it when they don't know how to spend money and time.
if these girls and boys knows how to spend the money and time properly,things may reversrback.
but it never happens,once people started to have more money,their eyes, ears,mouth,all closed easily and mostly.they never going to worry what others think, thats the dirty power of money.
i try to change few known girls, but they never listen,'my money, iam enjoying episode'.now a days ,, i just cut their friendship.i stopped advice them( naai vaala nimirtha mudiyaathu)
i am not surprised about chennai, more growing place in money and nonguidence@young age.
in this problem , there is no need for discussing about women liberty, because drinking is more hazardious to women than men, because she is the survival link of humanrace.for that sake,women has to take responsible of our humanrace in this world.

pathila tamilla ppoda ninachen, sorry, i don't know how to do it in comments section, new to blogs,
thahks for nice article.

கிரி on 8:56 AM, November 10, 2008 said...

நீங்கள் சொல்வது போல பணம் முக்கிய பங்கு வகித்தாலும் அது மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. ஒருவரின் சூழ்நிலை மற்றும் உடன் இருப்பவர்களே ஒருவரின் பழக்க வழக்கங்களை பெரும்பாலும் தீர்மானிக்கும் காரணிகளாக எனக்கு தோன்றுகிறார்கள்.

//pathila tamilla ppoda ninachen, sorry, i don't know how to do it in comments section, new to blogs,
thahks for nice article.//

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் முதல் வருகைக்கும் நன்றி ரசிகை.