Jun 17, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1


கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக இருப்பதாகவும் கூறினார்கள். கல்வி கட்டணம் என்றதும் நீங்க எதோ கல்லூரி கட்டணம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது என் அக்கா பொண்ணு Pre KG கட்டணம் பற்றியதாகும். ஒரு சில பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க (கொஞ்சம் உயர் தர பள்ளிகளில்) வருடம் 80000 முதல் 100000 வரை கேட்பதாக கூறி என்னை அதிர வைத்தார்கள். என்னால் நம்பவும் முடியவில்லை, அதே சமயம் என் அக்கா கூறுவதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் சென்னை நண்பர் தன் குழந்தையை KK நகரில் உள்ள பள்ளியில் LKG சேர்க்க இதுவரை 60000 கட்டியிருப்பதாகவும் இன்னும் 15000 கட்ட வேண்டும் என்று கூறி என்னை பீதிக்குள்ளாக்கினார். இவ்வளவு பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் தங்களை நீண்ட நேரம் காக்க வைத்து அவமானபடுத்துவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை எல்லாம் சகித்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்றும் கூறி வருத்தப்பட்டார்.


இதை போன்ற பள்ளிகள் குழந்தைகள் வரும் போதே நேர்முக தேர்வு வைக்கிறார்கள், அதில் தேர்வு ஆகும் குழந்தைகளையே சேர்த்துக்கொள்கிறார்கள், பெற்றோருக்கும் நேர்முக தேர்வு உண்டு. அவர்களும் இதில் தேற வேண்டும். எனக்கு ஒன்று புரியவில்லை, குழந்தைகளை கல்வி சொல்லி கொடுக்க தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம், ஆனால் இவர்கள் முன்னரே இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம். பிறகு இவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? புத்திசாலி குழந்தைகள் மட்டுமே சேர்த்துக்கொள்ள படுமானால், சுமாரான, படிப்பு திறமை குறைந்த அல்லது உடனே புரிந்து கொள்ள சிரமப்படுகிற குழந்தைகளின் கதி என்ன? இவர்கள் கூற்று படி படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்க முடியாது..இது எப்படி நியாயம் ஆகும். குழந்தைகள் தானே படித்து கொள்வதற்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே சொல்லி கொடுப்பதற்கும் இருந்தால் பள்ளிகள் எதற்கு?


தற்போது ஒரு சில அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் சொல்லி தருவதை விட சிறப்பாக சொல்லி தந்தாலும், பெரும்பாலான நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க யோசிக்கிறார்கள். தங்களின் குழந்தைகள் நலனே முக்கியம் என்று கருதுவதால், இதில் இவர்களை நாம் குறை கூற முடியாது.


நான் கேட்க விரும்புவது தங்கள் பள்ளியின் பெயரை உயர்த்த புத்திசாலி குழந்தைகளை மட்டுமே சேர்த்தால் மற்ற குழந்தைகளின் நிலை என்ன? ஒரு LKG குழந்தையின் படிப்பு செலவு வருடம் 50000 முதல் 80000 - 100000 என்றால் இனி வருங்காலத்தில் குழந்தைகளின் படிப்பு செலவு எவ்வாறு இருக்கும்? கல்வி வியாபாரம் என்பது LKG யில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறதா? படிப்பை (முழுவதும் அல்ல என்றாலும்)பெற்றோர்களே சொல்லி தருவது என்றால் அதை சொல்லி தர கடமை பட்டு இருக்கும் பள்ளியின் நிலை என்ன? நேர்முக தேர்வு நடத்தி Pre KG அல்லது LKG வகுப்புக்கு ஒரு குழந்தையை தேர்வு செய்வது என்பது ஒரு நியாயமான செயலா?


இந்த செய்தியே அதிகமாகி விட்டதால் மீதி அனுபவங்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

55 COMMENTS:

முகவை மைந்தன் on 9:36 PM, June 17, 2008 said...

//இதுவரை 600000 கட்டியிருப்பதாகவும் இன்னும் 15000 கட்ட வேண்டும்//

அறுபதாயிரமா, ஆறுநூறாயிரமா?

இப்படி இருந்தா சாமானியனுக்கு எப்படி வாழ்க்கை நடத்த முடியும். தடாலடியா திட்டம் போட்டு இப்படிப்பட்ட பள்ளிகள்ல குழந்தைகளை சேக்குறவுங்க 20% அரசுக்கு வரி கட்டணும்னு சொன்னா இரண்டு பயன்கள்.

1. கல்வி கட்டணம் குறையும்.
2. அப்படியே வீம்புக்கு சேத்தாலும், வரியை வச்சு அரசு பள்ளிகளஇன் தரத்தை உயர்த்தலாம்.

இப்போதைக்கு பெருமூச்சு மட்டுந்தான்.

PPattian : புபட்டியன் on 9:37 PM, June 17, 2008 said...

எல்.கே.ஜிக்கு ஆறு லட்சமா? அவசரத்தில ஒரு Zero சேர்த்திட்டீங்களோ.. அறுபதாயிரமே டூ மச்..

இப்பல்லாம் சில பள்ளிகளில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு சொல்லி ஆவரேஜ் மாணவர்களையெல்லாம் TC கொடுத்து அனுப்புறாங்கன்னு கேள்வி.. தட்டி கேட்க யாரும் இல்லை.

ஆனாலும் அப்படிப்பட்ட பள்ளிகளிலதானே நம்ம மக்கள் போய் குவியறாங்க.. அதான் எல்லா பள்ளிகளும் அந்த ஸ்டைலை பின்பற்றி குழந்தைகள் நேர்முகம், பெற்றோர் நேர்முகம்னு அவங்க தரத்தை உயர்த்தி காட்டறாங்க..

கிரி on 9:46 PM, June 17, 2008 said...

// முகவை மைந்தன் said...
//இதுவரை 600000 கட்டியிருப்பதாகவும் இன்னும் 15000 கட்ட வேண்டும்//

அறுபதாயிரமா, ஆறுநூறாயிரமா?//

60000 தான்..திருத்தி விட்டேன். நன்றி

//இப்படி இருந்தா சாமானியனுக்கு எப்படி வாழ்க்கை நடத்த முடியும்//

சாமானியன் அளவுக்கு நீங்க போக வேண்டாம். உயர் நடுத்தர மக்களுக்கே மிக சிரமம்.

//இப்படிப்பட்ட பள்ளிகள்ல குழந்தைகளை சேக்குறவுங்க 20% அரசுக்கு வரி கட்டணும்னு சொன்னா//

கூடுதலாக இன்னும் வாங்குவார்கள், அந்த இழப்பை சரி கட்ட.

உங்கள் வருகைக்கு நன்றி முகவை மைந்தன்.

எம்.ரிஷான் ஷெரீப் on 9:47 PM, June 17, 2008 said...

அரசு பள்ளியிலும் கூட இப்படியா?
இலவசம் தானே அங்கு?

கிரி on 9:52 PM, June 17, 2008 said...

// PPattian : புபட்டியன் said...
எல்.கே.ஜிக்கு ஆறு லட்சமா? அவசரத்தில ஒரு Zero சேர்த்திட்டீங்களோ.. அறுபதாயிரமே டூ மச்..//

திருத்தி விட்டேன்.

//இப்பல்லாம் சில பள்ளிகளில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு சொல்லி ஆவரேஜ் மாணவர்களையெல்லாம் TC கொடுத்து அனுப்புறாங்கன்னு கேள்வி.. தட்டி கேட்க யாரும் இல்லை. //

உண்மை தான்.. இவர்கள் பள்ளி 100% சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக செய்யும் கொடுமையில் இதுவும் ஒன்று.

//ஆனாலும் அப்படிப்பட்ட பள்ளிகளிலதானே நம்ம மக்கள் போய் குவியறாங்க//

அதை தவிர்க்க முடியாது, நாமே அவ்வாறு தான் செய்கிறோம்.

//எல்லா பள்ளிகளும் அந்த ஸ்டைலை பின்பற்றி குழந்தைகள் நேர்முகம், பெற்றோர் நேர்முகம்னு அவங்க தரத்தை உயர்த்தி காட்டறாங்க//

சரி தான்.. ஆனாலும் LKG நேர்முக தேர்வு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. 1 ம் வகுப்பு என்றால் கூட ஒரு நியாயம் இருக்கிறது.

கிரி on 9:56 PM, June 17, 2008 said...

அரசு பள்ளியில் இலவசம் தான் ஆனால் அங்கும் சிறு கட்டணங்கள் உண்டு என்று நினைக்கிறேன் (தனியார் பள்ளிகளுடன் உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்)

எம்.ரிஷான் ஷெரீப் on 10:06 PM, June 17, 2008 said...

//அரசு பள்ளியில் இலவசம் தான் ஆனால் அங்கும் சிறு கட்டணங்கள் உண்டு என்று நினைக்கிறேன் (தனியார் பள்ளிகளுடன் உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்//

அரசு பள்ளிகளை எல்லோரும் நாடினால் தனியார் பள்ளிகளை இழுத்து மூடவைக்கலாம் அல்லவா?

இலங்கையில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கற்றுத்தருகிறார்கள்.மிக வறிய பிரதேசங்களில் மதிய உணவும்,எல்லாப் பிரதேசங்களிலும் சீருடையும் கூட இலவசமாக வழங்கப்படுகிறது.அங்கு உலகளாவிய ரீதியில் 98% கல்விகற்றவராக இருக்கிறார்கள்.

கிரி on 10:18 PM, June 17, 2008 said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
அரசு பள்ளிகளை எல்லோரும் நாடினால் தனியார் பள்ளிகளை இழுத்து மூடவைக்கலாம் அல்லவா?//

அதற்க்கு அதன் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமே ரிஷான். தற்போது தான் ஒரு சில அரசு பள்ளிகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. அதில் பயிலும் மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சவால் விடும் வகையிலும், தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்தும் வருகிறார்கள்.

இருந்தாலும் மக்களின் மனநிலை அரசு பள்ளிகள் சார்பாக இல்லை, அதற்க்கு அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அது இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அவ்வளவு விரைவாக நடக்கும் என்றோ அல்லது மாற்ற முடியும் என்றோ கூறுவது மிக கடினம்.

//இலங்கையில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கற்றுத்தருகிறார்கள்.மிக வறிய பிரதேசங்களில் மதிய உணவும்,எல்லாப் பிரதேசங்களிலும் சீருடையும் கூட இலவசமாக வழங்கப்படுகிறது.அங்கு உலகளாவிய ரீதியில் 98% கல்விகற்றவராக இருக்கிறார்கள்//

அதற்க்கு குறைவான மக்கள் தொகையும், கட்டுப்பாடான மற்றும் உழுக்கம் நிறைந்த அதிகாரிகள் காரணமாக இருக்கலாம்.

இங்கு அரசு துறை என்றாலே சோம்பேறிகள் மற்றும் பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணம் மக்களிடையே ஆழ பதிந்து விட்டது. இதை மாற்றுவது மிக கடினம், அதற்க்கு அரசு ஊழியர்களே உதவே வேண்டும், ஆனால் அது நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

jackiesekar on 10:45 PM, June 17, 2008 said...

இன்று கூட ஒரு பெண்மணி தன் குழந்தையை பள்ளியில் சேர்க்க நண்கொடை தர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார் இன்றைய தினத்தந்தியில் செய்தி,என்ன செய்வது

கிரி on 10:52 PM, June 17, 2008 said...

இது அவர் செய்த முட்டாள் தனமான செயல். அவர் என்ன நிலைக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு சரியாக தெரியாததால், அது பற்றி நான் விமர்சனம் செய்வது என்பது சரியாக இருக்காது.

எதுவாகினும் அவருடைய இந்த நிலைக்கு வருந்துகிறேன்.

King... on 11:08 PM, June 17, 2008 said...

இது இந்தியாவின் சாபக்கேடு....

King... on 11:11 PM, June 17, 2008 said...

கலைஞர் என்ன சொல்கிறார்...
இதற்கு தீர்வில்லையா எத்தனையோ வழிகள் இருக்கிறது....?

கிரி on 11:19 PM, June 17, 2008 said...

// King... said...
இது இந்தியாவின் சாபக்கேடு....
கலைஞர் என்ன சொல்கிறார்...
இதற்கு தீர்வில்லையா எத்தனையோ வழிகள் இருக்கிறது....?//

வாங்க கிங். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கிறீர்கள்.

வழிகள் உண்டு பாதைகள் தான் சரி இல்லை. அரசே இலஞ்ச ஊழலில் இருக்கும் போது மற்றும் கொள்ளை அடித்து கொண்டு இருக்கும் போது இதை திருத்த எப்படி தோன்றும். பெரிய அரசு பதவியில் இருப்பவர்களே பலர், பள்ளிகள் கல்லூரிகள் வைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்க்கு இப்போதைக்கு தீர்வு இல்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து.

கீ - வென் on 7:34 AM, June 18, 2008 said...

இது என்ன கிரி.. சமீபத்தில் என் மகனை சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு CBSE பள்ளி (பதமா சேஷாத்ரி பால பவன்) யில் சேர்க்க என் மனைவியும் அவரது தகப்பனாரும் சென்றனர்.. அங்கே பள்ளி மேலாளர் (ஓய.ஜி.பி குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்) 9 ம் வகுப்பில் சேர்க்க 1.5 லட்சம் நன்கொடையும் 5 புதிய டெல் கம்ப்யூட்டர் களும் வாங்கி தருமாறு நா கூசாமல் கேட்டனர்.. நான் சொன்னது.. இந்த காசுக்கு இன்ஜினியரிங் seat வாங்கிடலாம் போலிருக்கே.. அப்படி ஒரு படிப்பு என் பிள்ளைக்கு வேண்டாம்.. நான் அரசு பள்ளியில் படித்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று கூற.. கடைசியில் சென்னை அண்ணா நகரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் தலைமை ஆசிரியை யை சந்தித்து எங்கள் நிலைமையை கூற அவர் பரிசீலித்து உடனே சேர்க்க ஆவன செய்தார்..(என் மகன் 8 ம் வகுப்பில் 95% வாங்கியிருந்தது தான் காரணம்..) காசு அங்கே வேலை செய்யவில்லை.. வருட பீஸ், புத்தகங்கள், சீருடை எல்லாம் சேர்த்து 12 ஆயிரம் செலவு தான்.. நல்லவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.. என் நண்பர் இன்னொருவர் (கணவன், மனைவி இருவரும் 10 வகுப்பு தான் படித்து இருக்கிறார்கள்) மகனுக்கு 8 ம் வகுப்பு அனுமதியும் வாங்கி தந்தோம்..அதே பள்ளியில்..
பதமா சேஷாத்ரி பள்ளி செய்யும் அட்டகாசம் மிகப் பிரசித்தம் .. சென்னையில் வசிக்கும் அனைவரும் இதை அறிவார்கள்..

சினிமா நிருபர் on 9:27 AM, June 18, 2008 said...

பள்ளிக்கூட பீஸ் ஒருபுறம் இருக்கட்டும் கிரி... சென்னையில டியூசன் பீஸ் பற்றி சகோதரியிடம் விசாரித்து ஒரு பதிவு போடுங்கள். அது இன்னம் கண்களை விரித்து படிக்கச் செய்யும்.

இன்னொரு விஷயம். கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளில் கூட நன்றாக படிக்கும் குழந்தைகள் இருக்கின்றன. படிப்பு என்பது பள்ளிக்கூடத்தால் வருவது இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கிரி on 11:15 AM, June 18, 2008 said...

// கீ - வென் said...
9 ம் வகுப்பில் சேர்க்க 1.5 லட்சம் நன்கொடையும் 5 புதிய டெல் கம்ப்யூட்டர் களும் வாங்கி தருமாறு நா கூசாமல் கேட்டனர்//

அப்படியே கூடவே நம்மை ஒரு துண்டையும் வாங்கிக்க கூறினால் நல்லது, அந்த பணத்தை கொடுத்து விட்டு வாங்கியா துண்டை தலையில் போட்டு விட்டு பள்ளி வாசலில் உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான்.

//நல்லவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.. என் நண்பர் இன்னொருவர் (கணவன், மனைவி இருவரும் 10 வகுப்பு தான் படித்து இருக்கிறார்கள்) மகனுக்கு 8 ம் வகுப்பு அனுமதியும் வாங்கி தந்தோம்..அதே பள்ளியில்..//

நல்லவர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள், ஆனால் மிக குறைவாக இருக்கிறார்கள்.

வெங்கி உங்கள் பையனின் மதிப்பெண்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கிரி on 11:21 AM, June 18, 2008 said...

// சினிமா நிருபர் said...
பள்ளிக்கூட பீஸ் ஒருபுறம் இருக்கட்டும் கிரி... சென்னையில டியூசன் பீஸ் பற்றி சகோதரியிடம் விசாரித்து ஒரு பதிவு போடுங்கள். அது இன்னம் கண்களை விரித்து படிக்கச் செய்யும்.//

உண்மை தான் நிருபரே. கல்வி பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டது என்பது மனதை வருத்தும் நிகழ்வு தான்.

//கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளில் கூட நன்றாக படிக்கும் குழந்தைகள் இருக்கின்றன. படிப்பு என்பது பள்ளிக்கூடத்தால் வருவது இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.//

அதே போல அரசு பள்ளிகளின் தரமும் உயர வேண்டும். படிப்பு எங்கே சிறப்பாக சொல்லி கொடுக்கப்பட்டாலும் அங்கே தன் குழந்தைகளை சேர்ப்பது தான் நல்ல பள்ளிகள் தொடர்ந்து வளர ஊக்கமாகும். போலி ஆடம்பரங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கிரி on 11:21 AM, June 18, 2008 said...

// சினிமா நிருபர் said...
பள்ளிக்கூட பீஸ் ஒருபுறம் இருக்கட்டும் கிரி... சென்னையில டியூசன் பீஸ் பற்றி சகோதரியிடம் விசாரித்து ஒரு பதிவு போடுங்கள். அது இன்னம் கண்களை விரித்து படிக்கச் செய்யும்.//

உண்மை தான் நிருபரே. கல்வி பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டது என்பது மனதை வருத்தும் நிகழ்வு தான்.

//கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளில் கூட நன்றாக படிக்கும் குழந்தைகள் இருக்கின்றன. படிப்பு என்பது பள்ளிக்கூடத்தால் வருவது இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.//

அதே போல அரசு பள்ளிகளின் தரமும் உயர வேண்டும். படிப்பு எங்கே சிறப்பாக சொல்லி கொடுக்கப்பட்டாலும் அங்கே தன் குழந்தைகளை சேர்ப்பது தான் நல்ல பள்ளிகள் தொடர்ந்து வளர ஊக்கமாகும். போலி ஆடம்பரங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கிரி on 11:28 AM, June 18, 2008 said...

என்னை பாராட்டி ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டத்தை நான் வெளியிட்டும் அது பின்னூட்டம் பகுதியில் வரவில்லை (ஹி ஹி ஹி ஒரு வேளை என்னை பாராட்டியதாலோ என்னவோ) எனவே அதை வெளியிடவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.

அதே போல பான்ட் பிரச்சனை இருந்த இன்னொரு பின்னூட்டமும் வெளியாகவில்லை. அவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இந்த இரு பின்னூட்டங்களும் நான் அனுமதித்தும் வரவில்லை. காரணம் எனக்கு தெரியவில்லை.

அன்புடன்
கிரி

எம்.ரிஷான் ஷெரீப் on 11:37 AM, June 18, 2008 said...

அன்பின் நண்பர் கிரி,

ஆங்கிலத்தில் பெயர் தெரியாதவர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களையோ,வேற்று மொழியில் வருவதையோ ஏற்றுக் கொள்ளவேண்டாம் நண்பரே.அவை வைரஸாக இருக்கலாம்.
மேலதிக விளக்கத்துக்கு இங்கே பாருங்கள்.

கீ - வென் on 12:09 PM, June 18, 2008 said...

// சினிமா நிருபர் said...
பள்ளிக்கூட பீஸ் ஒருபுறம் இருக்கட்டும் கிரி... சென்னையில டியூசன் பீஸ் பற்றி சகோதரியிடம் விசாரித்து ஒரு பதிவு போடுங்கள். அது இன்னம் கண்களை விரித்து படிக்கச் செய்யும்.//

நிருபரே ! கிரி என்ன எழுதுறது.. நானே என் பையனுக்காக நெறையா பட்டிருக்கேன்..நான் உங்களுக்கு சொல்லுறேன்,.

ஒரு சாம்பிள் பாத்துக்குங்க..

** பத்மா சேஷாத்ரி பாலபவன் மற்றும் அவர்கள் நிர்வாக பள்ளிகளில் pre-KG (அதென்ன பேரு.. கால் கிலோ அரை கிலோ மாதிரி ??) சேர்க்க 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரி செலவு.. (முக்கியமா வி.ஐ.பி பிள்ளைகளுக்கு , பணக்கார பிள்ளைகளுக்கு முதலிடம்..)

** அண்ணா நகரில் உள்ள பள்ளிகள் (S B O A மற்றும் இதர முன்னணி பள்ளிகள் ) 25 ஆயிரம் குறைந்து வாங்குவதில்லை..

** சென்னையில் புதிய தனியார் பள்ளிகளில் கூட 10 ஆயிரம் குறைந்து நன்கொடை பெற்றுக்கொள்ளப்படுவதில்லை..

** மத்திய மாவட்டங்களாகிய சேலம், ஈரோடு, கோவை முதலிய மாவட்டங்களில்..கூட இந்த பகல் கொள்ளை.. என் தம்பி ஈரோட்ட்டில் அவன் மகனை pre-KG சேர்க்க 35 ஆயிரம் கொடுத்ததாக கூறினான்..

---

அப்படியே என் பக்கத்திற்கும் வந்துட்டு போங்க..நிருபரே !!

http://keysven.blogspot.com

கீ - வென் on 12:19 PM, June 18, 2008 said...

//இன்னொரு விஷயம். கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளில் கூட நன்றாக படிக்கும் குழந்தைகள் இருக்கின்றன. படிப்பு என்பது பள்ளிக்கூடத்தால் வருவது இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.//

சினிமா நிருபர் சொன்னது 100 % சரி.. நானே அதற்க்கு உதாரணம்.. படித்தது மேட்டூர் அரசினர் மேல் நிலை பள்ளியில்.. 10 ம் வகுப்பில் 426/௫00 மற்றும் 12 ம் வகுப்பில் 1075/1200

இள நிலை பொறியியல் 1984-1988 - அண்ணாமலை பல்கலை கழகம்..
மேல் நிலை பொறியியல் சிங்கை நான்யாங் தொழில் நுட்ப பல்கலை கழகம்..
மேலும் என் P.hD யும் அங்கேயே !!
வேலை பார்ப்பது ஆஸ்திரேலியா வில்..எண்ணெய் நிறுவனத்தில்..

இப்போ சொல்லுங்க !! நான் சோடை போகலியா !! நான் ஒண்ணும் சூப்பர் ஸ்கூல் ல்ல படிக்கலியே ?? சாதாரண அரசு பள்ளி தானே ??

கிரி on 12:54 PM, June 18, 2008 said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆங்கிலத்தில் பெயர் தெரியாதவர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களையோ,வேற்று மொழியில் வருவதையோ ஏற்றுக் கொள்ளவேண்டாம் நண்பரே.அவை வைரஸாக இருக்கலாம்.
மேலதிக விளக்கத்துக்கு இங்கே பாருங்கள்.//

நீங்கள் கூறுவது சரிதான் ரிஷான். இதை நான் அறிவேன், ஆனால் வந்து இருந்த பின்னூட்டம் அவ்வாறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எதாகினும் என் மீது உங்களுக்கு உள்ள அக்கரைக்கு மிக்க நன்றி.

நீங்கள் கொடுத்த தொடுப்பு வேலை செய்யவில்லை, அதை சொடுக்கினால் அது என்னுடைய பின்னூட்ட பகுதிக்கே வருகிறது.

ஜெகதீசன் on 1:15 PM, June 18, 2008 said...

:)
இதற்கும் சிலர் மென்பொருள் துறையினரைக் காரணம் காட்டினாலும் காட்டுவர்...
:P

தொடருங்கள்... :)

எம்.ரிஷான் ஷெரீப் on 1:19 PM, June 18, 2008 said...

அன்பின் கிரி,

//ஆனால் வந்து இருந்த பின்னூட்டம் அவ்வாறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.//

பின்னூட்டம் அனுப்பியது யாரெனப் பார்க்க அவர் பெயரில் கிளிக்குவீர்கள் இல்லையா? அதுதான் அனுப்புபவரின் நோக்கம்.அதன் மூலமாக வைரஸ் உங்களை அறியாமலேயே உங்கள் கணிணியில் வந்து உட்கார்ந்துகொண்டு பின்னர் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.

இதுதான் நீங்கள் பார்க்கவேண்டிய சுட்டி நண்பரே :)
http://rishanshareef.blogspot.com/

கிரி on 1:36 PM, June 18, 2008 said...

// கீ - வென் said...
// சினிமா நிருபர் said...
பள்ளிக்கூட பீஸ் ஒருபுறம் இருக்கட்டும் கிரி... சென்னையில டியூசன் பீஸ் பற்றி சகோதரியிடம் விசாரித்து ஒரு பதிவு போடுங்கள். அது இன்னம் கண்களை விரித்து படிக்கச் செய்யும்.//

நிருபரே ! கிரி என்ன எழுதுறது.. நானே என் பையனுக்காக நெறையா பட்டிருக்கேன்..நான் உங்களுக்கு சொல்லுறேன்,.//

வெங்கி, நிருபர் கூறியது டியூஷன் கட்டணம் பற்றி..

//இப்போ சொல்லுங்க !! நான் சோடை போகலியா //

நீங்க தான் ஆஸ்திரேலியா போய்ட்டீங்களே :-))))

//நான் ஒண்ணும் சூப்பர் ஸ்கூல் ல்ல படிக்கலியே ?? சாதாரண அரசு பள்ளி தானே ??//

உண்மை தான். பலர் உங்களை போல உதாரணமாக இருக்கிறார்கள்.

கிரி on 1:38 PM, June 18, 2008 said...

// ஜெகதீசன் said...
:)
இதற்கும் சிலர் மென்பொருள் துறையினரைக் காரணம் காட்டினாலும் காட்டுவர்...
:P//

:-) (கிரி எனக்கே ஸ்மைலியானு கேட்கறீங்களா :-))))))) )

கிரி on 1:42 PM, June 18, 2008 said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
பின்னூட்டம் அனுப்பியது யாரெனப் பார்க்க அவர் பெயரில் கிளிக்குவீர்கள் இல்லையா? அதுதான் அனுப்புபவரின் நோக்கம்.அதன் மூலமாக வைரஸ் உங்களை அறியாமலேயே உங்கள் கணிணியில் வந்து உட்கார்ந்துகொண்டு பின்னர் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்//

அய்யயோ கிளிக்கி விட்டேனே :-(((((

நான் வைரஸ் கண்டுபிடிப்பானை நிறுவி இருக்கிறேன், அதனால் பயம் இல்லை என்று நினைக்கிறேன்... மனதை சமாதான படுத்த விடுங்கப்பா :-))

நிர்ஷன் உங்களின் எச்சரிக்கைக்கு நன்றி. இனி எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் on 1:53 PM, June 18, 2008 said...

//நிர்ஷன் உங்களின் எச்சரிக்கைக்கு நன்றி. இனி எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கிறேன்.//

நிச்சயமாக நண்பரே :)
அப்படியே பெயர் மாறாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் பெயர் ரிஷான்.
நிர்ஷன் வேறு பதிவர் :)

கிரி on 1:56 PM, June 18, 2008 said...

ஹா ஹா ஹா அடிக்கடி குழம்பி விடுகிறேன். மன்னியுங்கள்.

கீ - வென் on 2:41 PM, June 18, 2008 said...

//வெங்கி, நிருபர் கூறியது டியூஷன் கட்டணம் பற்றி..//

கிரி..
நிருபர் கெட்ட விஷயம்.. அடுத்த பாம்..அணுகுண்டை விட மோசமானது.. 3 மாசம் ஒரு டெர்ம் என்று சொல்வார்கள்.. குறைந்தது 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை பிடுங்குவார்கள்..
மொதல்ல சேர்க்கிறதே பெரும்பாடு..அப்பால தான பீஸ் ஐ பத்தி யோசிக்கணும்..

அந்த காலத்தில் "கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார்" என்று சொல்வார்கள்..அது கூட நடந்துடும் போல..

இப்போ , "பிள்ளை பெற்றுப்பார் .. ஸ்கூல் ல் சேர்த்துப்பார்" என்றாகிவிட்டது..

ஆக, மொத்தமா சாப்பிடறது அரசியல் வாதிங்க, கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் (பால் பவுடர் கொடுத்து பாண்டியனை பால் பாண்டியன் ஆக்கியவர்கள்), பார்பான்ஸ் பீத்தல் குரூப்..(பத்மா சேஷாத்ரி..மாதிரி)

siva on 2:47 PM, June 18, 2008 said...

வணக்கம் கிரி
அரசு பள்ளிகளில் கல்வி அனைவருக்கும் இலவசம்
அரசு உதவி பெரும் கல்வி நிறுவனம் கட்டணம் குறைவு

தனியார் பள்ளி மோகம் குறைய எளிய வழி
1.அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்பு மற்றும் உயர்கல்வியில் முன் உரிமை.
2.அரசு உழியர்கள் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசு பள்ளியில் பயில கட்டாய அரசு ஆனை.
3.தமிழ் மொழி மூலம் பட்ட படிப்பு படித்தால்தான் தேர்தலில் போட்டி இட வாய்பு.
4.அனைத்து மேல் படிப்பும் மருத்துவம். தமிழ் கற்று தர வேண்டும்.
மேற்கூறியவை பின்பற்றினால் யார்? தனியார் பள்ளிக்கு செல்வார்கள்.

புதுவை சிவா.

VIKNESHWARAN on 3:11 PM, June 18, 2008 said...

எல்லா பள்ளிகளையும் அரசு மயமாக்கினால் தானே நல்லது... இங்கு உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் படிப்பதற்கு இடம் கிடைக்க சிரமம்... அங்கு நிலை தலைகிழாக இருக்கிறது...

தமிழ்நெஞ்சம் on 4:11 PM, June 18, 2008 said...

You missed about VAN facility fees.
School van fees is costlier than local auto charge. 8,400 /- year

School Uniform 2 set of same color + 1 set of white (without shoes) + Book materials (2 sets [ 1 for home + 1 for school ]) = 6700 /- year.

9,000 + 9,000 = 18K for 2nd standard school going child in BANGALORE.

AASAI kku PILLAI galai PADIKKA vaikkirom.

AANAAL pillaigal PADIKKIRAARGALAA? OLUNGAAGA?

idhu ORU kelviKKURIDHAAN?

கிரி on 5:54 PM, June 18, 2008 said...

// கீ - வென் said...
அந்த காலத்தில் "கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார்" என்று சொல்வார்கள்..அது கூட நடந்துடும் போல..

இப்போ , "பிள்ளை பெற்றுப்பார் .. ஸ்கூல் ல் சேர்த்துப்பார்" என்றாகிவிட்டது..//

உண்மை தான் வெங்கி. அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று அடிக்கடி பெற்றோர்களின் இதய துடிப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கிரி on 6:06 PM, June 18, 2008 said...

siva said...
தனியார் பள்ளி மோகம் குறைய எளிய வழி
//1.அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்பு மற்றும் உயர்கல்வியில் முன் உரிமை.//

இது சரியான யோசனையாக படுகிறது, கூடவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது,எனென்றால் தரம் இல்லாமல் இவ்வாறு சலுகை கொடுப்பது, திறமை அற்றவர்களும் பயனை அனுபவிக்க காரணமாகி விடும்.

//2.அரசு உழியர்கள் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசு பள்ளியில் பயில கட்டாய அரசு ஆனை.//

கொள்ளை அடிக்கிறவங்க பாதி பேர் இந்த துறையில் தான் இருக்காங்க, அவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை பெரிய பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள். எனவே இது நடக்கும் என்று தோன்றவில்லை. இதற்க்கு அடிப்படை அமைப்பு மாற வேண்டும். இதெல்லாம் எளிதாக நடக்க கூறிய காரியம் அல்ல.எனவே இது கண்டிப்பாக நடக்க முடியாது.

//3.தமிழ் மொழி மூலம் பட்ட படிப்பு படித்தால்தான் தேர்தலில் போட்டி இட வாய்பு.//

தமிழ் மொழி மூலமாகவே என்பதை விட, தமிழ் மொழியும் கண்டிப்பாக ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது.

//4.அனைத்து மேல் படிப்பும் மருத்துவம். தமிழ் கற்று தர வேண்டும்.//

இது பற்றிய முழு விவரம் எனக்கு தெரியாது என்பதால், இது பற்றி எதுவும் கூறவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி சிவா. நீண்ட நாட்களாக ஆளையே காணோம் !!

கிரி on 6:11 PM, June 18, 2008 said...

// VIKNESHWARAN said...
எல்லா பள்ளிகளையும் அரசு மயமாக்கினால் தானே நல்லது... இங்கு உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் படிப்பதற்கு இடம் கிடைக்க சிரமம்.//

அனைத்து பள்ளிகளையும் அரசு மயமாக்கினால், கொள்ளை அடிப்பது வேண்டும் என்றால் குறையும் ஆனால் திறமையான மாணவர்கள் உருவாக மாட்டார்கள். அனைத்து அரசு பள்ளிகளும் இன்னும் தரமான பள்ளிகள் ஆகவில்லை. மூலைக்கு ஒன்று தான் உள்ளது. எனவே அரசு பள்ளிகளின் தரம் முதலில் அதற்க்கு உயர்ந்து இருக்க வேண்டும், பொது மக்களுக்கு அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வர வேண்டும்.

கிரி on 6:15 PM, June 18, 2008 said...

// தமிழ்நெஞ்சம் said...
You missed about VAN facility fees.
School van fees is costlier than local auto charge. 8,400 /- இயர்//

நான் அதை மறக்கவில்லை தமிழ் நெஞ்சம். நான் பள்ளிகளில் சேர்வதற்கான கட்டணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன்.

//AASAI kku PILLAI galai PADIKKA vaikkirom.

AANAAL pillaigal PADIKKIRAARGALAA? OLUNGAAGA?//

பெற்றோர்கள் சரியா இருந்து, தங்கள் பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளுக்கு தங்கள் குடும்ப நிலையை எடுத்து கூறி படிக்க வைத்தால், கண்டிப்பாக நன்றாக படிப்பார்கள். அதிக செல்லம் கொடுத்து அல்லது சுதந்திரம் கொடுத்து நல்லது கேட்டது எடுத்து கூறாமல் வளரும் குழந்தைகளே நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறார்கள்.

வடுவூர் குமார் on 6:46 PM, June 18, 2008 said...

9 ம் வகுப்பில் சேர்க்க 1.5 லட்சம் நன்கொடையும் 5 புதிய டெல் கம்ப்யூட்டர் களும் வாங்கி தருமாறு நா கூசாமல் கேட்டனர்.

செம,நூதன & பணக்கார பிச்சை.

உண்மையென்றால்... காரித்துப்பனும் போல் இருக்கு.

ராமலக்ஷ்மி on 7:08 PM, June 18, 2008 said...

சொன்னபடி பதிவிட்டு விட்டீர்கள் கிரி.
//கல்வி வியாபாரம் என்பது LKG யில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறதா? //

என் 'கல்விச் சந்தை'யில் கல்லூரி அட்மிஷன் பற்றி எழுதியிருந்தேன். தாங்கள் நர்ஸரியிலேயே வியாபாரம் தொடங்குவதைக் காட்டி விட்டீர்கள்.

//படிப்பை (முழுவதும் அல்ல என்றாலும்)பெற்றோர்களே சொல்லி தருவது என்றால் அதை சொல்லி தர கடமை பட்டு இருக்கும் பள்ளியின் நிலை என்ன? //

நியாயமான நல்ல கேள்வி! பீஸையும் வாங்கிக் கொண்டு...மாணவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பையும் முழுதாக ஏற்காமல், அதிலும் 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை பெரிய பெயர் பெற்ற பள்ளியில் படித்தாலும் கோச்சிங் செல்வது காலத்தின் கட்டாயமாகி விட்டது கிரி.

வடகரை வேலன் on 8:42 PM, June 18, 2008 said...

Yet another trigger from you.

At Coimbatore people wait from midnight to collect the application form from the so called prestigious institutions.

But this year results are not good for those institutes. Incidentally corporation schools had fared well.

Another point to be discussed is the arrogant manner in which average scoring 9th students are forced to leave the institution,, otherwise they will not be promoted to 12th.

Not want to loose a year, parents collect TC and enroll their child in another school by paying the capitation demanded exorbitantly.

கயல்விழி முத்துலெட்சுமி on 8:48 PM, June 18, 2008 said...

உங்கள் பதிவை திறந்தால் எப்போது ம் விளம்பரப்பக்கம் ஒன்று திறக்கிறது.. அதுமட்டுமில்லாமல்.. விண்டோஸ் இன்ஸ்டாலர் ஒன்றும் வந்துவிடுகிறது கேன்ஸல் இருமுறை செய்யவேண்டி வருகிறது எனக்கு இதுக்கு பயந்தே உங்கள் பதிவை அடிக்கடி திறப்பதில்லை.. என்ன வென்று பார்க்க முடியுமா..

கிரி on 9:09 PM, June 18, 2008 said...

// வடுவூர் குமார் said...
செம,நூதன & பணக்கார பிச்சை.
உண்மையென்றால்... காரித்துப்பனும் போல் இருக்கு.//

உண்மை தான் வடுவூர் குமார். இதை விட மோசமாக கண்டிப்பாக நடந்து கொண்டு இருக்கும் என்பது என் கருத்து. நமக்கு தெரியவில்லை.

கிரி on 9:14 PM, June 18, 2008 said...

// ராமலக்ஷ்மி said...
நியாயமான நல்ல கேள்வி! பீஸையும் வாங்கிக் கொண்டு...மாணவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பையும் முழுதாக ஏற்காமல், அதிலும் 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை பெரிய பெயர் பெற்ற பள்ளியில் படித்தாலும் கோச்சிங் செல்வது காலத்தின் கட்டாயமாகி விட்டது கிரி.//

பணத்தை கொடுத்து கஷ்டம் வாங்குவது என்பது இது தானோ!!

கல்வி சொல்லி கொடுக்க தான் அத்தனை பணம் வாங்குகிறார்கள், அதையும் கொடுத்து கோச்சிங் க்கும் தனியாக பணம் அழ வேண்டும் என்றால் வயித்தெரிச்சல் படுவதை தவிர வேறு என்ன செய்வது. பகல் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அரசு தான் தலையிட்டு பொது மக்களிடம் சுரண்டும் இவர்களை போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

கிரி on 9:20 PM, June 18, 2008 said...

// வடகரை வேலன் said...
Yet another trigger from you.//

:-)

//At Coimbatore people wait from midnight to collect the application form from the so called prestigious institutions//

இதை என் நம்பரும் கூறி இருந்தார், நான் அதை குறிப்பிட மறந்து விட்டேன்.

//But this year results are not good for those institutes. Incidentally corporation schools had fared well//


பகட்டில் மயங்கும் காலம் மறைய வேண்டும், உண்மையான பள்ளிகளை அடையாளம் கண்டு தங்கள் பிள்ளைங்களை சேர்க்க வேண்டும், என்பதையே உணர்த்துகிறது.

//Another point to be discussed is the arrogant manner in which average scoring 9th students are forced to leave the institution,, otherwise they will not be promoted to 12th.//

ஆமாங்க. இது ரொம்ப கொடுமை. இவர்கள் 100% தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சுமாராக படிப்பவர்களை அவர்கள் தேர்ச்சி அடைய உதவி புரியாமல், பள்ளியை விட்டு துரத்துவதில் எந்த விதத்தில் நியாயம்? இப்படி இருந்தால் 100% என்ன 200% தேர்ச்சி கூட பெற முடியும்.

//paying the capitation demanded exorbitantly.//

என்னமோ போங்க :-(

கிரி on 9:28 PM, June 18, 2008 said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
உங்கள் பதிவை திறந்தால் எப்போது ம் விளம்பரப்பக்கம் ஒன்று திறக்கிறது.. அதுமட்டுமில்லாமல்.. விண்டோஸ் இன்ஸ்டாலர் ஒன்றும் வந்துவிடுகிறது கேன்ஸல் இருமுறை செய்யவேண்டி வருகிறது எனக்கு இதுக்கு பயந்தே உங்கள் பதிவை அடிக்கடி திறப்பதில்லை.. என்ன வென்று பார்க்க முடியுமா..//

அய்யயோ! என்னங்க சொல்றீங்க..என் வீட்டில் என் கணினியில் அதை போல எதுவும் வருவது இல்லையே !!! என் சந்தேகம் ஆன்லைன் எண்ணிக்கை காட்டும் நிரழி தான் காரணமாக இருக்க முடியும், எனவே அதை நீக்கி விட்டேன். இப்போது பார்த்து சொல்லுங்கள்..சரியாக இருக்கிறதா என்று? ஹி ஹி ஹி திரும்ப நீங்கள் வந்து பார்த்தீர்கள் என்றால் :-))))

Logan on 9:43 PM, June 18, 2008 said...

செவி வழி செய்தி : YGP பேத்தி மதுவந்தி மைலபூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த பள்ளிதான் இப்போது சென்னையில் உள்ள PSPB பள்ளிகளிலே மிகவும் அதிகமாக பணம் வசூலிக்கும் பள்ளியாம்...
PSPB KKNAGAR < PSBP MILLIENIUM GUINDY < மயிலாப்பூர் மதுவந்தி பள்ளி..
அறிந்தவர் தெரிந்தவர் விளக்கவும்?
குறிப்பு : என் மகனுக்கு 15 மாதம் பூர்த்தி ஆகிறது. இப்போதிலிரந்தே திட்டம் போடனமா? இல்ல ஏற்கனவே தாமதமா?

கிரி on 11:52 PM, June 18, 2008 said...

வாங்க லோகன். ரொம்ப நாளா ஆளையே காணோம்.

//என் மகனுக்கு 15 மாதம் பூர்த்தி ஆகிறது. இப்போதிலிரந்தே திட்டம் போடனமா? இல்ல ஏற்கனவே தாமதமா?//

ஹி ஹி ஹி ஹி எனக்கு இன்னும் அனுபவம் இல்ல..ஆனா வங்கில நீங்க பணம் எதுக்கும் கொஞ்சம் (!!!!!) தயாரா வைத்து இருப்பது..உங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்.

கீ - வென் on 7:14 AM, June 19, 2008 said...

//Logan said: செவி வழி செய்தி : YGP பேத்தி மதுவந்தி மைலபூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த பள்ளிதான் இப்போது சென்னையில் உள்ள PSPB பள்ளிகளிலே மிகவும் அதிகமாக பணம் வசூலிக்கும் பள்ளியாம்...//

லோகன் ! உண்மை தான்.. என் மனைவி அங்கும் சென்று நேரில் விசாரித்து வந்தார் ... நூதனமாக பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.. பிள்ளையை பள்ளியில் சேர்த்த பின் கிட்டத்தட்ட உங்கள் சொத்தையே பிடுங்கும் அளவுக்கு திட்டம் வைத்து இருக்கிறார்கள்.. யாரோ சொன்னார்கள் தி.மு.க தலைவரின் மனைவிக்கு அந்த கும்பல் பள்ளிகளில் ஒரு பங்கும் உண்டு என்று.. அதான் அவர்களின் அட்டகாசத்தை அரசு கண்டு கொள்வதில்லை என்று..

இத விடுங்க.. YGP கும்பல் பள்ளிகளில் இன்னமும் நூதனமான முறையில் பணம் பறிப்பதும் உள்ளது..

யாராவது அவர்களின் சொந்தக்கார பிள்ளைகள் (கர்நாடக சங்கீதம்) பாடி CD வெளியாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அதை மார்க்கெட்டிங் செய்வது அவர்களின் பள்ளிகளில் தான் .. அதாவது, ஒவ்வொரு குழந்தையும் 1 CD வாங்கியே ஆகவேண்டும் (150 ரூ) உங்கள் வீட்டில் இருந்து ௩ பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. 3 CD நீங்க வாங்கியே ஆகவேண்டும்.. எப்படி இந்த ஆப்பு..??

இது போல..அவர்களுக்கு வேண்டப்பட்ட சாரிட்டி களுக்கு அப்ப அப்போ (யாருக்கு தெரியும் இருக்கா இல்லையான்னு ) நிதி ன்னு ஒரு வசூலிப்பு வேற..

கடைசியில் கோமணத்தை கூட உருவி விட்டு நம்மளை டம்மணக்காவா நிக்க விட்டுடுவாங்க !!!

திரு. ரஜினிகாந்த் அவர்களின் மனைவியும் அந்த கும்பலில் இருந்து வந்தவரே !!

எல்லாம் ஒரே பாலிசி.. ஆட்டையோ..ஆட்டை...செம ஆட்டை..

பரிசல்காரன் on 8:58 AM, June 19, 2008 said...

எனக்கு பழைய ஒரு சொல்லாடல் நினைவுக்கு வருகிறது..

‘கல்வியை விலை கொடுத்து
வாங்கவா முடியும்?’ என்கிற நிலை மாறி
‘கல்வியை விலை கொடுத்து
வாங்க... வா! முடியும்!!’
என்கிற நிலை வந்துவிட்டது!

ஜீவன் on 12:37 PM, June 19, 2008 said...

தனியார் பள்ளிகளில் படித்தால் தான், அதிக மதிப்பெண் வாங்கி , "அரசு" கல்லூரிகளில் சேர முடியுமாம்..
என்ன ஒரு முரண்பாடு..

துளசி கோபால் on 1:15 PM, June 19, 2008 said...

கல்வி இப்போ பெரிய பிஸினெஸ் ஆச்சுங்களே.

நோ காசு நோ கல்வி.


இது நம்ம வெங்கிக்கு.

வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும் வெங்கி. உங்க மகனுக்கும் சேர்த்துத்தான்.

ஆமாம். மகனை இங்கே பெர்த்லே படிக்கவைக்கலையா?

நியூஸியில் அந்தமட்டுக்கும் படிப்பு ஒரு சுமையே கிடையாது. பெற்றோருக்கும் , பிள்ளைகளுக்குமே:-)

கிரி on 2:24 PM, June 19, 2008 said...

// பரிசல்காரன் said...
எனக்கு பழைய ஒரு சொல்லாடல் நினைவுக்கு வருகிறது..
‘கல்வியை விலை கொடுத்து
வாங்கவா முடியும்?’ என்கிற நிலை மாறி
‘கல்வியை விலை கொடுத்து
வாங்க... வா! முடியும்!!’
என்கிற நிலை வந்துவிட்டது//

அருமையான கவிதை. உங்க வருகைக்கு நன்றி பரிசல்காரன்

ஜீவன் said...
தனியார் பள்ளிகளில் படித்தால் தான், அதிக மதிப்பெண் வாங்கி , "அரசு" கல்லூரிகளில் சேர முடியுமாம்..
என்ன ஒரு முரண்பாடு//

வாங்க ஜீவன் :-)

கிரி on 2:25 PM, June 19, 2008 said...

// துளசி கோபால் said...
கல்வி இப்போ பெரிய பிஸினெஸ் ஆச்சுங்களே.
நோ காசு நோ கல்வி.//

கசப்பான உண்மை :-(

கீ - வென் on 12:48 PM, June 20, 2008 said...

//இது நம்ம வெங்கிக்கு.

வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும் வெங்கி. உங்க மகனுக்கும் சேர்த்துத்தான்.//

THANKS A MILLION !!

//ஆமாம். மகனை இங்கே பெர்த்லே படிக்கவைக்கலையா? //

9TH மற்றும் 10th இந்தியா வில் முடித்துவிட்டு +2 விற்கும் உயர் கல்விக்கும் இங்கே அழைத்து வருவதாய் பிளான்.. ஏன்னா இப்போ அவன் அடிக்கிறது CBSE முறையில்.. மாற்றவேண்டாம் என்ற எண்ணம் தான் !!