சிங்கப்பூர் பயணமும் நண்பர்கள் பிரிவும்

by கிரி on May 13, 2008

நான் இருந்த நிறுவனம் எனக்கு நல்ல சம்பளம் மற்றும் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தது. நான் வேலை மாற நினைத்ததற்கு காரணம், செய்யப்படும் கடுமையான வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை மற்றும் 6 1/2 வருடம் இருந்து விட்டேன், ஒரு மாற்றம் தேவை பட்டது. பொதுவாக கணிப்பொறி துறையில் ஒரு நிறுவனத்தில் 3 வருடம் வேலை செய்தாலே பெரிய விசயமாக கூறுவார்கள். சிங்கப்பூர் அல்லது துபாய் யில் அதன் மீது இருந்த கவர்ச்சியின் காரணமாக அங்கே வேலைக்கு சேர வேண்டும் என்பது என் ஆவலாக இருந்தது. பிறகு எனக்கு சிங்கப்பூர் சுவிஸ் வங்கியில் வேலை கிடைத்தது.

இங்கு ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னுடைய முதல் வேலையில் இருந்து தற்போதைய வேலை வரை என் நண்பர்களின் பங்கு இல்லை என்றால் என்னால் இந்த நிலையை அடைந்து இருக்கவே முடியாது. வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் உதவி இருந்தால் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது எல்லாம் உடன் இருந்து ஆலோசனை கூறுவதிலும், உதவுவதிலும் அவர்கள் காட்டிய அக்கறையை எந்த காலத்திலும் மறக்க முடியாது. மறந்தால் நான் நன்றி மறந்தவன் ஆகி விடுவேன். நமக்கு கிடைத்த உதவி சிறிதாக இருந்தாலும், அந்த உதவி நமக்கு எந்த சமயத்தில் கிடைக்கிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தாலே நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. என் வீட்டில் பணம் வாங்க விருப்பபடாமல் ஒரு சில வேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு இருந்ததால், பணத்தின் அருமையையும் நண்பர்களின் உதவியையும் வாழ்க்கையில் நன்றாகவே உணர்ந்து இருந்தேன்.

நான் 7 வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் படித்தேன் என்பதாலும் சென்னையில் 12 வருடம் படிப்பு மற்றும் வேலைக்காக இருந்ததாலும், வீட்டை விட்டு இருப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை ஆனால் சென்னை நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது தான் எனக்கு மிக சிரமமாக இருந்தது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது தேவி, சத்யம், சங்கம், ஆல்பட் அல்லது வுட்லண்ட்ஸ் திரை அரங்கில் எதாவது ஒரு படம் பார்த்து விடுவோம், அது மொக்கை படமாக இருந்தாலும் போய் உட்காந்து விடுவோம். தமிழ் திரை உலகை வாழ வைத்ததில் எங்களுடைய பங்கு அதிகம். ஒரே நாளில் 4 படங்கள் எல்லாம் திரை அரங்கில் பார்த்து சாதனை புரிந்து இருக்கிறோம்.

மயிலாப்பூர் லஸ் ல் வீடு எடுத்து தங்கி இருந்ததால் சங்கீதா, சுக நிவாஸ் தான் எங்கள் சாப்பாட்டு இடம். அன் லிமிடெட் சாப்பாடு போடும் YMIA சாப்பாட்டை மறக்கவே முடியாது, வீட்டு சாப்பாடு போலவே இருக்கும், தற்போது தரம் குறைந்து விட்டது. அங்கே ஒருத்தர் சாப்பிடும் சாப்பாட்டின் அளவை பார்த்து நொந்து போன மெஸ் மேனேஜர், அய்யா நீங்க தயவு செய்து இனிமேல் வராதீங்க, இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டீங்கன்னா எங்க மெஸ் ஐ மூட வேண்டியது தான், என்று அழுகாத குறையாக கேட்டது நினைத்து எனக்கு இன்னும் சிரிப்பு வரும். நானே அவர் சாப்பிடுவதை பார்த்து பயந்து இருக்கிறேன். சாம்பார் மட்டும் 8 கரண்டி வாங்குவார்னா நீங்களே அவர் எப்படி சாப்பாடு சாப்பிட்டு இருப்பார்னு கணக்கு போட்டுக்குங்க. நான் மிகை படுத்தி கூறவில்லை.

புத்தாண்டு தினத்தன்று மெரினாவில் காவலர்கள் வருவது தெரியாமல் ஆடி கொண்டு இருந்தபோது பின்னால் வந்த காவலர்கள் லத்தியில் எல்லோரையும் சாத்து சாத்துன்னு சாத்திய போது அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடி பின்னர் சேர்ந்து நடந்ததை பேசி சிரித்தது என்றுமே மறக்க முடியாது. இதில் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கு மட்டும் செரியான அடி. இரண்டு நாள் நான் சரியாக கூட உட்கார முடியலை icon biggrin சிங்கப்பூர் பயணமும் நண்பர்கள் பிரிவும்

இவ்வாறு என்னுடைய அனைத்து செயல்களிலும் கலந்து இருந்த அவர்களை பிரிவது தான் எனக்கு சிரமமாக இருந்தது, மாற்றம் ஒன்று தானே எப்போதும் மாறாதது எனவே சிங்கப்பூர் செல்ல தயார் ஆனேன். எனக்கு வெளிநாட்டு பயணம் என்பது இதுவே முதல் முறை, உள்நாட்டு விமானத்தில் போய் எனக்கு ஏற்கனவே பலமான அனுபவம் இருந்ததால் இந்த முறை அதிக பயத்துடனே சென்றேன். என்னுடைய சிங்கப்பூர் விமான பயணத்தையும் முதல் நாள் நான் அங்கே பட்ட அவஸ்தையையும் என்னுடைய அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

No related posts.

{ 12 comments… read them below or add one }

ILA(@)இளா May 14, 2008 at 3:30 AM

All the best!

ILA

Reply

துளசி கோபால் May 14, 2008 at 3:43 AM

இயல்பா, நல்லா வந்துருக்கு இந்தப் பதிவு.

ஆமாம். நீங்கதான் மாளவிகான்னு சொல்லவே இல்லை!!!!

Reply

அறிவன்#11802717200764379909 May 14, 2008 at 8:43 AM

என்ன ஆச்சு,சிங்கப்பூர் வந்து இறங்கின உடனே ஷூட்டிங் கூட்டிகிட்டு போயிட்டாங்களா?

Reply

கிரி May 14, 2008 at 8:45 AM

இளா உங்கள் வாழ்த்துக்கு நன்றி

நான் சிங்கப்பூர் வந்து 8 மாதங்கள் ஆகி விட்டது. வலைப்பதிவு துவங்கி 3 மாதமே ஆவதால் இப்போது இது பற்றி எழுதுகிறேன் ;)

Reply

கோவி.கண்ணன் May 14, 2008 at 8:49 AM

//என்னுடைய முதல் வேலையில் இருந்து தற்போதைய வேலை வரை என் நண்பர்களின் பங்கு இல்லை என்றால் என்னால் இந்த நிலையை அடைந்து இருக்கவே முடியாது. வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் உதவி இருந்தால் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. //

கிரி,

சத்தியமான உண்மை. எனக்கும் நண்பர்களின் பிரிவே வாட்டும்.

நன்றாக எழுதி இருக்கிறீர்கள், சென்னையில் இருந்த நான் கிளம்பிய நினைவுகளைத் தந்திருக்கிறது.

Reply

கிரி May 14, 2008 at 8:51 AM

//இயல்பா, நல்லா வந்துருக்கு இந்தப் பதிவு//

ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு.

//ஆமாம். நீங்கதான் மாளவிகான்னு சொல்லவே இல்லை!!!!//

ஹா ஹா ஹா நான் உங்களை “மேடி” ன்னு நினைத்த மாதிரி என்னை நீங்க மாளவிகான்னு :D நினைத்துட்டீங்க ;) அவ்வளோ தான். சரி இந்த ரகசியத்தை !!! நம்ம இரண்டு பேருக்குள்ள வைத்துப்போம் :) ))

Reply

கிரி May 14, 2008 at 8:57 AM

அறிவன் என்னங்க எல்லாம் ஒரு முடிவோட இருக்கீங்களா? :) ))

அங்கே முதல் நாள் நான் பட்ட அவஸ்தையை அடுத்த இடுகையில கூறுகிறேன், அப்போ நீங்க உங்க கிண்டல் முடிவ :) )) மாற்றி கொள்வீங்க.

Reply

கிரி May 14, 2008 at 9:07 AM

ரொம்ப நன்றிங்க கோவி கண்ணன்.

என் அப்பா என்னை +2 முடிந்த பிறகு சென்னையில் என் மீது இருந்த நம்பிக்கையில் படிப்பதற்காக விட்டதோடு சரி, அதன் பிறகு முழுவதும் என் நண்பர்களின் உதவியோடு தான் வேலை, தங்கும் இடம் எல்லாவற்றையும் சமாளித்தேன்.

அவ்வளவு ஏங்க! இப்ப கூட சிங்கப்பூர் ல் இருந்தாலும் இன்னும் அங்கே என் சம்பந்தப்பட்ட சொந்த வேலைகளை அவர்கள் தான் செய்து தருகிறார்கள்.

Reply

♠புதுவை சிவா♠ May 14, 2008 at 2:22 PM

பயணிகள் கவனத்திற்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட
உள்ளதால் உங்களுக்கு பிடித்த தெய்வத்தை பிரத்தனை செய்து கொள்ளுங்கள்…………..விமானத்தின் வலது பக்க
வீல் பெண்டாக இருப்பதால் உங்கள் கால்களை தூக்கியவாறு
சீட்டில் அமரவும்.
ஸ்டாட் மிசிக்……………………..

Reply

கிரி May 14, 2008 at 3:23 PM

சிவா வாங்க என்னோட பாதிப்பு உங்களுக்கும் வந்த விட்டதா? ஹா ஹா ஹா உங்க வருகைக்கு ரொம்ப நன்றி.

Reply

Thala June 7, 2008 at 2:51 PM

உங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் நானும் ஒரு சிறு பங்காக இருந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு

Reply

கிரி June 7, 2008 at 2:53 PM

சக்தி இதெல்லாம் ரொம்ப ஓவர் :-)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed