"கரகாட்டக்காரன்" திரைப்படம் ஒரு தாமத விமர்சனம் !!

by கிரி on May 2, 2008

ka1 "கரகாட்டக்காரன்" திரைப்படம் ஒரு தாமத விமர்சனம் !!

இன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் சன் தொலைக்காட்சியில் “கரகாட்டக்காரன்” படம் போட்டு இருந்தாங்க, சிங்கையில் எப்போதும் ஒரு வாரம் கழித்து தான் வரும் என்பதால் இன்று தான் போட்டு இருந்தார்கள்.

படம் வந்து பல வருஷம் ஆச்சே இப்போ என்னையா விமர்சனம் பண்ண போறேன்னு கேட்கறிங்களா? அப்போ வாய்ப்பு கிடைக்கல இப்ப வலை தளம் இருக்கு அது தான் icon wink "கரகாட்டக்காரன்" திரைப்படம் ஒரு தாமத விமர்சனம் !! . நான் கதையை விமர்சனம் செய்யப்போவது இல்லை. அதில் நான் மிக ரசித்த காட்சிகளை மட்டும் குறிப்பாக நம்ம கவுண்டர் செந்தில் நகைச்சுவை.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் பார்த்ததால் ரொம்ப நேரம் மனம் விட்டு சிரித்து கொண்டு இருந்தேன், நான் கவுண்டரின் தீவிர ரசிகன் வேறு (உள்ளத்தை அள்ளித்தா படம் வரை மட்டுமே) என்பதால் சிரித்து வயிறே வலி ஆகி விட்டது.

ராமராஜன் கூட்டணியினர் கரகாட்டம் ஆடிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தர் செந்திலையும் கோவை சரளாவையும் பார்த்து அடடா! இவங்களை பார்த்தால் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி மாதிரியே இருக்கு என்று கூற கவுண்டர் கோபமாகி டேய்! நீ எதை வைத்து இந்த மூஞ்சியை பார்த்து அப்படி சொன்னே என்று அடிக்க கை ஓங்கவும், அவர் அய்யா இவர் தான் 10 ருபாய் கொடுத்து அப்படி சொல்ல சொன்னாரு என்று கூற.. டேய் ஏன்டா இப்படி? என்று கேட்டவுடன் செந்தில் “ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இழுக்க ஏன்டா அந்த சினிமா காரங்க தான் இப்படி அவங்களே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்கிற மாதிரி ஏன்டா பண்ணுறேன்னு சொன்னதும் செந்தில் பாவமாக முகத்தை வைத்து கொள்வார், உடனே கவுண்டர் பாரு திருவிழாவில காணாம போனவன் மாதிரி முழிக்கிறதன்னு கலாய்க்க செம காமெடி.

இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவதை பார்த்து கனகாவின் அப்பா “ரொம்ப நல்ல ஆடுனிங்க தம்பி” னு அடி மனதில் இருந்து கூறுவார். அது மனதார கூறுவது போல சிறப்பாக இருக்கும். என் மனதில் அவருடைய நடிப்பு பதிந்து விட்டது.

இவர்கள் அனைவரும் காலைக்கடனை முடிக்க ஊர்பக்கம் ஒதுங்க செந்தில் எங்கேன்ன போறோம் என்றதும் ம்ம்ம் கம்ப்யூட்டர் கத்துக்கன்னு கலாய்ப்பதும், தோட்டக்காரர் டேய்! யாருடா அது அங்கே அசிங்கம் பண்ணுறதுன்னு திட்டியதும் கவுண்டர் விவசாயம் பண்ணினால் போதுமா? யாரு உரம் போடுவது என்று நக்கலடிக்க, செந்தில் அய்யா! ஆனது ஆச்சு இன்னும் கொஞ்சம் என்று இழுக்க அவர் அடிக்க ஓடி வர சிரித்து கண் கலங்கி விட்டது.

கனகாவின் அப்பா ராமராஜனை பாராட்டி மாலை போட்டு விட்டு செல்ல கவுண்டர் உடன் வைத்து இருப்பவர் வைத்து இருக்கும் மாலை தனக்கு என்று எண்ணி அவரிடம் அய்யா! அந்த மாலை என்று இழுக்க, அவர் இது சாமிக்குங்க என்று கூற மூக்குடைப்பட்ட கவுண்டர் சரி சரி சாமிக்கே போடுங்க என்று சமாளிப்பார் icon smile "கரகாட்டக்காரன்" திரைப்படம் ஒரு தாமத விமர்சனம் !! ))

கவுண்டர் மிகவும் ரசித்து வாசித்து கொண்டு இருக்கும் போது அருகில் செந்தில் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருப்பார், கவுண்டர் கோபமாகி டேய்! இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு வாசிக்கிறேன் நீ தூங்கிட்டு இருக்கியான்னு திட்டுவார், செந்தில் அண்ணே! எனக்கு எது பிடிக்கலையோ நான் உடனே தூங்கிவிடுவேன் என்று கூற கவுண்டர் கோபமாகி கண்ட படி திட்டுவார், செந்தில் அதை கண்டு கொள்ளாமல் அண்ணே! தூக்கம் வருது வாசிங்கன்னே என்று இன்னும் வெறுப்பேத்த, கவுண்டர் கோபத்தின் உச்சிக்கே செல்வது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது.

ராமராஜன் கவுண்டர் செந்தில் ஆகியோர் கனகாவின் வீட்டுக்கு செல்ல அங்கே கனகா ராமராஜனுக்கு மோர் கொடுக்க, கனகா கோபத்தில் இருப்பதை பார்த்து ராமராஜன் என்ன மோர் சூடா இருக்கு? என்று இரட்டை அர்த்தத்தில் கூற அதுக்கு பதிலடியாக கனகா ஆங்! நேத்து முழுவதும் மாடு வெய்யில் நின்னுட்டு இருந்தது என்று கிராமத்து நக்கலாக கூறுவது ரசிக்கும் படி இருக்கும்.

ராமராஜன் குழுவினர் அனைவரும் ஊருக்கு அவங்க டப்பா காரில் கிளம்ப கனகாவின் அப்பா, தம்பி! பார்த்து மெதுவா போங்க என்று கூற, செந்தில் நீங்க சொல்லலைனாலும் கார் மெதுவாக தான் போகும் ஏன்னா….. என்று ஆரம்பிக்க கவுண்டர் அவரை அடித்து அடக்க, என் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வாழைப்பழம் அனுபவத்தால் கவுண்டர் எதையும் செந்திலிடம் கூறாமல் இருக்க, செந்தில் அவரிடம் வெத்தலை பாக்கு வாங்க கேட்க, யப்பா! ஒருமுறை பட்டதே போதும் இனி வேண்டாம்டா சாமி என்று ஒதுங்க, செந்தில் கவுண்டரிடம் அண்ணே! நான் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க கூடாதா என்று அப்பாவியாய்!!! கேட்கும் இடம் ரசிக்கும் படி இருக்கும்.

இவர்களின் காரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்று அருகில் வர, கோபமான கவுண்டர் இனி இந்த பக்கம் வந்தே தொலைந்தாய் என்று மிரட்ட, அதுக்கு அவர் அண்ணே நான் வியாபாரின்னே என்று கூற ஆமாம்! இவர் பெரிய கப்பல் வியாபாரி என்று கலாயக்க, செந்தில் அண்ணே! அண்ணே! பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னே என்று சப்பு கொட்ட கோபத்தின் உச்சிக்கே செல்வது நம்மை சிரிப்பின் உச்சிக்கே அழைத்து சென்று விடுகிறது. அண்ணே! நீங்க போங்கண்ணே நான் காரை பார்த்துக்குறேன் என்று காரை தடவி கொண்டே செந்தில் கூற எதுக்கு இவனுக்கு போட்டு பேரிச்சம் பழம் வாங்கவா என்று கூறுவது காமெடி யின் உச்சம்.

இந்த படத்தின் வெற்றிக்கு இளையராஜா வின் இசை முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மான் பாடலும் குடகு மலை பாடலும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. மாங்குயிலே பாடல் அனைவரையும் கட்டி போட்டு விடுகிறது. ராமராஜன் தன் பங்குக்கு அட்டகாசமாக கரகாட்டம் ஆடி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார். கனகாவின் நடிப்பும் சிறப்பான நடிப்பு (கனகாவை எங்க ஊர் கோபிசெட்டிபாளையத்தில் கோவில் காளை படத்திற்காக வந்த போது ஒப்பனை இல்லாமல் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்த தருணங்கள் உண்டு)

ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு ஆடம்பரம் மற்றும் பிரம்மாண்டமும் இல்லாமல் எளிமையான எழுத்து நடையில் சிறப்பான நகைச்சுவையின் மூலம் வெளிவந்த ஒரு சிறப்பான படம் இது. எந்த காலத்திலும் இதை ரசிக்கும் படி உள்ளதே இதன் பெருமைக்கு சான்று.

No related posts.

{ 7 comments… read them below or add one }

Thamizhmaangani May 7, 2008 at 8:35 AM

நானும் அன்னிக்கு தான் சன் தொலைக்காட்சியில் அந்த படத்த பார்த்தேன். உங்களை போலவே மிகவும் ரசித்தேன் நான்! பாடல்கள் தான் சூப்ப்ப்ர்ர்ர்!

நம்ம கவுண்டமணிய அடிச்சிக்க ஆள் இருக்கா என்ன?? :) ))

Reply

கிரி May 7, 2008 at 9:02 PM

வாங்க தமிழ்மாங்கனி. நீங்க சொல்றது ரொம்ப சரி :) ))

கவுண்டர் பாணில சொல்றதுன்னா ..டேய் புண்ணாக்கு மண்டயா! படம் வந்து 15 வருஷம் ஆச்சு, இப்ப போய் விமர்சனம் பண்ணுரானாம்…ந்கொக்க மக்கா ..ஜனங்களே இந்த மாதிரி பல பேரு இப்படி தான் திரியறானுக.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. ஹா ஹா ஹா ஹா ..

ஒரு வேளை கவுண்டர் என்னை திட்டினா இப்படி தான் திட்டி இருப்பாரு…:))))) ..இது கவுண்டருக்கு தாங்க நீங்க எதுவும் இப்படி என்னை திட்டிடாதீங்க :) ))

Reply

துளசி கோபால் May 8, 2008 at 5:25 AM

நல்ல ரசனைதாங்க.

மாட்டுக்காரன் ஆட்டுக்காரன்னு கிராமா வேசம் ராமராஜனுக்குப் பொருந்திதான் வருது.

என்னமோ போங்க அவர் நேரம் சரியில்லை……

இப்ப முன்னணி ஹீரோன்னு சொல்லிக்கீறவங்க நடிப்பு………

என்னமோ போங்க.

சரி. அடுத்த பட விமரிசனம் எப்போ?

Reply

கிரி May 8, 2008 at 8:27 AM

ராமராஜன் சாதாரணமாக நடித்து கொண்டு இருந்த வரை அவருடன் வெற்றி இருந்தது. எப்போது அவர் வெற்றியால் பாதிக்கபட்டாரோ மற்றும் கட்சியில் இணைந்தாரோ அப்போது இருந்து அவருக்கு அடி தான்.

இப்ப நடிக்கிறவங்க பல பேர் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டாலே, அவர்கள் நிலத்தில் நடப்பது இல்லை, அப்புறம் என்னத்தைங்க சொல்றது. அடக்கம் தான் தன்னை உயர்த்தும் என்பதை அறியாத விட்டில் பூச்சிகள் அவர்கள். (ஒரு சிலருக்கு நேரம் சரியாக இருப்பதால் அவ்வாறு இருந்தும் உயரத்தில் இருக்கிறார்கள், ஆனால் எவ்வளோ நாள் என்று தெரியவில்லை.

என்னோட விமர்சனத்தையும் மதிச்சு அடுத்த விமர்சனம் எப்போ என்று கேட்டு விட்டீர்கள்!!! (ஒரு வேளை மொக்கையா இருந்தது அடுத்தது எப்போ என்று கேட்டீர்களா? :D ), அதுக்கு உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி. நான் அடுத்து என்னை பயமுறுத்திய ஒரு “ஹாரர்” படத்தை பற்றி எழுத போறேன். ஆனா அது உங்களுக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன்? இருந்தாலும் தொடர்ந்து மற்ற தமிழ் படங்களின் விமர்சனமும் எழுத போறேன் (பாவம் எல்லோரும்:D) தொடர்ந்து படிங்க, உங்க கருத்த சொல்லுங்க.

உங்க வருகைக்கு நன்றிங்க

Reply

செ. நாகராஜ் - C. Nagaraj May 14, 2008 at 5:28 PM

இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை.
அதிலும் மாங்குயிலே பூங்குயிலே பாட்டில் (ராமராஜன் கரகத்துடன் பாடுவது)எத்தனை shots, எத்தனை closeup கனகாவுக்கு. பார்க்க பார்க்க பரவசம் தான்.
குறிப்பாக ராமராஜன் கனகா வீட்டிற்கு வந்து விடை பெற்று செல்லும் காட்சியில் கண்ணாலேயே போய் வருகிறேன் என்று ஜாடை காட்டுவது இன்னும் பிரமாதம்.
கங்கை அமரன் எடுத்ததிலேயே சிறந்தது இது தான்.
படத்தில் கொஞ்சம் கூட சோகம் இல்லாமல் இருப்பதினால் ரொம்பவும் பிடிக்கும்

Reply

கிரி May 14, 2008 at 5:37 PM

//இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை//

சத்யமான உண்மை.

//அதிலும் மாங்குயிலே பூங்குயிலே பாட்டில் (ராமராஜன் கரகத்துடன் பாடுவது)எத்தனை shots, எத்தனை closeup கனகாவுக்கு. பார்க்க பார்க்க பரவசம் தான்//

உண்மையிலேயே அதில் இருவரும் அருமையாக கரகம் ஆடி இருப்பார்கள். ராமராஜன் கலக்கி இருப்பார்.

//குறிப்பாக ராமராஜன் கனகா வீட்டிற்கு வந்து விடை பெற்று செல்லும் காட்சியில் கண்ணாலேயே போய் வருகிறேன் என்று ஜாடை காட்டுவது இன்னும் பிரமாதம்//

ரொம்ப எளிமையா போலித்தனம் இல்லாம அருமையா இருக்கும்.

உங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி செல்வராஜ்.

Reply

r.v.saravanan kudandhai March 16, 2010 at 6:16 PM

கிரி நீங்கள் கரகாட்டக்காரன் படத்தை தாமதமாக விமர்சனம்
செய்தது போலவே நானும் தாமதமாக பின்னூட்டம் செய்கிறேன்

இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
காரணம் பாடல்கள் ,நகைச்சுவை , எங்கும் போரடிக்காமல் செல்லும் படம் எப்பொழுது போட்டாலும் கண்டிப்பாக வீட்டில் பார்ப்போம்

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed