May 25, 2008

"புதிய கட்சி தொடங்குகிறேன்" பீதியை கிளப்பும் நடிகர் கார்த்திக்

என்ன கொடுமை சார் இது? இந்த வசனத்தை இப்போது கூறினால் சரியாக இருக்கும். நம்ம நடிகர் கார்த்திக் முன்னாள் பார்வர்ட் பிளாக் (அவரை பதவியில் !!! இருந்து நீக்கிடாங்கப்பா நீக்கிட்டாங்க) தமிழக தலைவர் பதவியில் இருந்து தன்னை இருந்து நீக்கியதால் வெகுண்டெழுந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு பலரை பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது.


பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது ஆதரவாளர்களுடன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ஆலோசனை நடத்தினார். மக்கள் எதிர்பார்ப்பு போலவே எனது கட்சியின் பெயர் அமையும். பெரிய மாநாடு !!!!! (முடியல என்னால முடியல) நடத்தி எனது கட்சி அறிவிப்பு பற்றி வெளியிடுவேன். எந்த அமைப்பை தொடங்கினாலும் அது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக (அடங்கொக்கமக்கா) இருக்கும். இது கோபத்திலும், உணர்ச்சிவசப்பட்டும் எடுத்த முடிவு இல்ல (இதுல இது வேறயா) இவ்வாறு கூறி இருக்கிறார்.


எனக்கு இது வரை கூட பெரிதாக தோன்றவில்லைங்க கடைசியா ஒரு வசனம் அடித்தாரு பாருங்க மவனே நம்ம புரட்சி நடிகர் வருங்கால சூப்பர் ஸ்டார் ரத்தீஷ் தோத்தாரு போங்க... அது என்னன்னா !!! வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இதை கேட்டவுடன் என் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சுங்க (பக்கத்துல ஆடு தான் வரலை புல்ல சாப்பிடறதுக்கு :-)))) )


இந்த அதிர்ச்சி செய்திய கேட்டவங்க பலர் ரூம் போட்டு அழுவதாக நம்ப தகுந்த தவல்கள் கூறுகின்றன :-)))))


கார்த்திக்க பார்வர்ட் பிளாக் ல எப்படி தலைவர் பதவியில அமர்த்துனாங்கன்னு அதுவே இன்னும் புரியல, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கட்சி ஆரம்பிக்கறேன்னு இன்னொரு குண்டை போட்டு அதிர வைக்கிறாரு. கட்சியில பல பேர் அவர் எதுக்கு வராரு போறாருன்னு தெரியாம மண்டைய பிச்சுட்டு இருக்கிறாங்கலாம், போராட்டம் ன்னு வராரு, தேவர் சிலை அவமதிச்சவங்களை சும்மா விட மாட்டேன்னு வந்தாரு, உண்ணாவிரதம் இருக்க போறேன், போராட்டத்த தொடங்க போறேன்னு அதிரடியா சொன்னாரு, ஹோட்டல் ல ரூம் போடறாரு அதற்கு பிறகு வெளியவே வர மாட்டேங்குறாரு, பலருக்கு அவர் இருக்கிறாரா இல்லையான்னே தெரியலே அப்புறம் திடீர்னு கிளம்பிடறாருன்னு புலம்பி தள்ளராங்கலாம்.


இப்ப என்னவோ கட்சி ஆரம்பிக்கிறது ஜட்டி போடறது மாதிரி ஆகிடுச்சு. ஆளாளுக்கு நான் கட்சி ஆரம்பிக்கிறேன் மாநாடு நடத்துறேன்னு கிளம்பிடுறாங்க. நம்ம சரத் குமார்ல இருந்து எல்லோரும் 2011 ஆட்சி அமைக்கபோறோம்னு சொல்லி நம்மள கிச்சு கிச்சு மூட்டிட்டு இருக்காங்க. 2011 ல எத்தனை முதலமைச்சர்னே தெரியலையே, நம்ம ஊரு உருப்படறதுக்கானா வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு தான்.


மக்களை வச்சு இவங்கெல்லாம் காமெடி கீமெடி பண்ணலையே??? சரி சரி இதுக்கெல்லாம் அழப்படாது ...என்ன புரிஞ்சுதா :-)

21 COMMENTS:

Sen22 on 9:38 AM, May 26, 2008 said...

ஆஹா...

:)))))))))))

D R Sharath on 12:58 PM, May 26, 2008 said...

Vendaaam ... aluthuruven.

துளசி கோபால் on 2:27 PM, May 26, 2008 said...

//புரட்சி நடிகர் வருங்கால சூப்பர் ஸ்டார் ரத்தீஷ்...//

இது யாருங்க? புதுசா இருக்கு!!!!

கிரி on 3:01 PM, May 26, 2008 said...

வாங்க செந்தில் மற்றும் ஷரத்.

//Vendaaam ... அழுதுருவேன்//

நோ நோ அழப்படாது. வந்தாலும் அது ஆனந்த கண்ணீராக இருக்கணும் :-)))

கிரி on 3:19 PM, May 26, 2008 said...

//இது யாருங்க? புதுசா இருக்கு!!!!//

இவ்வாறு கேட்ட துளசி கோபால் அவர்களை, அவருடைய படத்தை தினமும் 3 :-))) முறை 1 வார காலத்திற்கு பார்க்கும் படி ஆணை இடுகிறேன் :-)))

சரி இந்த லிங்க் போய் பாருங்க... இதுல எங்க வருங்கால சூப்பர் ஸ்டார் ரிதீஷ் எங்க இருக்காருன்னு கேட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல :-)))

http://www.kollywoodtoday.com/news/nayagan-audio-released-in-grandeur/

துளசி கோபால் on 3:31 PM, May 26, 2008 said...

அடக்கடவுளே......

எந்தப் படத்தில் வந்தாராம்?

இப்படி இன்னும் பீதியைக் கிளப்புனா எப்படி?

கிரி on 3:42 PM, May 26, 2008 said...

படம் என்னமோ ஒரு படம் தான் நடித்து இருக்காரு!! ஹீ ஹீ அந்த ஒரு பட பேரும் மறந்துட்டேன். இவர் எதோ அமைச்சரோட உறவினர், அதனால இவர் பண்ணிய கலாட்டவுல இயக்குனர் சங்க தேர்தலே நின்னு போச்சுன்னா பார்த்துக்குங்க...

இவரோட கட் அவுட் க்கு பாலபிஷேகம் பீரபிஷேகம் மோர் அபிஷேகம் ஜூஸ் அபிஷேகம் (ஹீ ஹீ இதுல இரண்டு நம்ம பில்ட் அப்பு) செய்து இவரோட ரசிகர்கள் !!!! கலக்கிட்டீங்கலாம்.

இவரோட அடுத்த படம் பேரு தளபதி ன்னு பேசிக்குறாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துளசி மேடம் ரசிகர் மன்ற தலை (வி) வர் பதவி காலியாக இருக்குதாம் நாம வேணா முயற்சி செய்து பார்ப்போமா :-))))) நீங்க வேணா நியூஸிலாந்து ல கிளை ஆரம்பிச்சுக்குங்க :-))))))))

துளசி கோபால் on 3:50 PM, May 26, 2008 said...

//நாம வேணா முயற்சி செய்து.....//

மால் எவ்வளவு வெட்டுவாருன்னு கேட்டுப்பாருங்க.:-)))

கிரி on 3:56 PM, May 26, 2008 said...

//மால் எவ்வளவு வெட்டுவாருன்னு கேட்டுப்பாருங்க.:-)))//

அதெல்லாம் பிரச்சனை இருக்காது. ஆனா நீங்க அவருக்கு நியூஸிலாந்து ல கட் அவுட் வச்சு நீங்க தான் மேல ஏறி பீர் அபிஷேகம் பண்ணனும், சரியா டீல் ஓகே வா :-))))

துளசி கோபால் on 4:22 PM, May 26, 2008 said...

பீர் பிரச்சனை இல்லை. ஃபேக்டரி இருக்கு இங்கேயே.

கட் அவுட் தான்.....
சிட்டிக் கவுன்சிலில் பர்மிட் வாங்கணும்.

எத்னிக் கல்ச்சர்னு மிரட்டி வாங்கிக்கலாம்:-))))

ஸ்கஃபோல்டிங் ஏற்பாடு செஞ்சுக்கலாம். இல்லேன்னா ஃபோர்க் லிஃப்ட் இருக்கவே இருக்கு.:-)

கிரி on 5:23 PM, May 26, 2008 said...

//கட் அவுட் தான்.....
சிட்டிக் கவுன்சிலில் பர்மிட் வாங்கணும்.

எத்னிக் கல்ச்சர்னு மிரட்டி வாங்கிக்கலாம்:-))))//

ஆகா!! நீங்க தானா அது ;)

//ஸ்கஃபோல்டிங் ஏற்பாடு செஞ்சுக்கலாம். இல்லேன்னா ஃபோர்க் லிஃப்ட் இருக்கவே இருக்கு.:-)//

முடிவோட தான் இருக்கீங்க போல :-)))

Thirunavukkarasu on 10:53 AM, May 27, 2008 said...

கிரி நீங்களும் ஒரு ஜட்டி போடுங்க...சாரி ..கட்சி ஆரம்பிங்க...

கிரி on 11:33 AM, May 27, 2008 said...

வாங்கையா T திரு. நான் தான் உங்க கொ ப செ ஆச்சேயா...அப்புறம் எப்படி? :-)))

வற்றாயிருப்பு சுந்தர் on 6:47 PM, June 05, 2008 said...

இந்த மாதிரி காமெடி பண்றதுல வடிவேலு எல்லாம் கார்த்திக் கிட்ட பிச்சை வாங்கணும்.

செய்தி கேட்டதும் / படிச்சதும் 'பக்'குன்னு இருக்குது பாருங்க. இம்மாதிரி நம் எல்லாத்தையும் கொடுமை பண்ற அவருக்கும் மத்தவங்களுக்கும் மன்னிப்பே கிடையாது.

:-)))

கிரி on 7:33 PM, June 05, 2008 said...

வாங்க சுந்தர். இந்த மாதிரி காமெடி பண்ணுறதுல கார்த்திக் ஐ மிஞ்சும் பலர் இருக்கிறார்கள்.

எனக்கு வடிவேல் சொல்றது தான் நினைவுக்கு வருகிறது....இன்னுமாடா நம்மள நம்பிட்டு இருக்காங்க !!! :-)))))

ஜெகதீசன் on 7:46 PM, June 05, 2008 said...

2011 ல தலைவர் கார்த்திக் தான் முதல்வர்...
-இப்படிக்கு
கார்த்திக் தொடங்கப்போகும் பெயர் தெரியாத கட்சியின் சிங்கப்பூர் பிரிவு தலைவர்..
(ம்க்கும்... எங்க கட்சி சிங்கப்பூர்லயும் அடுத்த எலக்சன்ல போட்டி போடப்போகுதுல்ல....)
:)

கிரி on 8:10 PM, June 05, 2008 said...

//ஜெகதீசன் said...
2011 ல தலைவர் கார்த்திக் தான் முதல்வர்...
-இப்படிக்கு
கார்த்திக் தொடங்கப்போகும் பெயர் தெரியாத கட்சியின் சிங்கப்பூர் பிரிவு தலைவர்..//

ஜெகதீசன் உப தலைவர் பதவி இருந்தா அப்படியே என் பேரை சேர்த்துக்குங்க.

ஆனா இங்க கட்சி வளர்ச்சி !!! நிதி வசூல் பண்ணினா சுளுக்கெடுத்து விடுவாங்களே அது தான் யோசிக்கிறேன் :-)))

ஜெகதீசன் on 8:19 PM, June 05, 2008 said...

//
ஆனா இங்க கட்சி வளர்ச்சி !!! நிதி வசூல் பண்ணினா சுளுக்கெடுத்து விடுவாங்களே அது தான் யோசிக்கிறேன் :-)))
//
இங்க அடுத்த ஆட்சியே நம்மோடதுதான்! ஆட்சிக்கு வந்தப்பிறகு பாத்துக்கிறலாம் வசூலையெல்லாம்.... :)

கிரி on 8:32 PM, June 05, 2008 said...

//ஜெகதீசன் said...
இங்க அடுத்த ஆட்சியே நம்மோடதுதான்! ஆட்சிக்கு வந்தப்பிறகு பாத்துக்கிறலாம் வசூலையெல்லாம்.... :) //

:-)))

தலைவர் கார்த்திக்குக்கும் சந்தோசம், நம்ம ஊர் மாதிரி போராட்டம் நடத்த வந்தா ஹோட்டல் லேயே அடைந்து கிடைக்க வேண்டியதில்லை, கட்சி முன்னேற்ற பணிகளை பார்வையிட வரும் போது சுற்றி பார்க்க வசதி (அட இங்கே மக்கள் படும் கஷ்டங்களை !!! பார்க்க தாங்க) நான் மசாஜ் கிளப், பப் மற்றும் கய்லாங் சொல்ல போறதா யாரும் தப்பா நினைக்க கூடாது.

Thala on 2:13 PM, June 07, 2008 said...

சரத்குமார்,விஜயகாந்த்,கார்த்திக் ; இவங்கெல்லாம் சினிமாவுல அரசியல் பத்தி எத்தனை தடவ கிண்டல் பண்ணி இருபங்கோ.
இப்போ அதே குட்டையல மீன் புடிக்கபோரங்கள

கிரி on 2:18 PM, June 07, 2008 said...

//சரத்குமார்,விஜயகாந்த்,கார்த்திக் ; இவங்கெல்லாம் சினிமாவுல அரசியல் பத்தி எத்தனை தடவ கிண்டல் பண்ணி இருபங்கோ.//

அது போன வருஷம் இது இந்த வருஷம் :-))