எனக்கு நீண்ட நாட்களாக நம்ம தமிழ் பத்திரிக்கைகள் எழுதும் “வித்யாசமான” தமிழ் பற்றி சந்தேகம். எப்போது இருந்து இந்த பழக்கம் இவர்களுக்கு வந்தது. முன்பு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வந்த போட்டியில் ஒவ்வொரு பத்திரிக்கையும் வித்யாசமான அணுகுமுறையை பின்பற்றி வந்தது, அதில் தினத்தந்தி செய்திகளின் தலைப்புகள் பிரபலம். தினத்தந்தி படிப்பதற்காகவே டீ கடைக்கு வரும் மக்கள் அதிகம். அது பழைய செய்தியாக இருந்தாலும் அதை படிப்பதில் ஒரு சுகம் அவர்களுக்கு. விவேக் ஒரு படத்தில் செய்தித்தாள் படித்து கொண்டு இருப்பவர்கள் செய்திகளை பார்ப்பார் அதில் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி பற்றிய (அந்த காலத்தில் வந்த) செய்தி தாளை படித்துக்கொண்டு இருப்பார்கள். அடப்பாவிகளா! அவருக்கு பிறகு சோனியா காந்தி ராஜீவ் காந்தி ஐ கே குஜ்ரால் நரசிம்மராவ் …. னு பல பேர் வந்தாச்சே டா .. னு இன்னும் பழைய செய்தியை படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்பார் அதுக்கு அவர்கள் என்னங்க பண்ணுறது டீ கடைக்கு வந்தா எதாவது படித்தால் தான் திருப்தியாக இருக்கிறது என்று கூறுவார்கள்.
இவர்கள் கூறுவது நகைச்சுவையாக இருந்தாலும் பலர் இதை போலவே இன்னும் இருக்கிறார்கள். அதற்கு நம்முடைய தமிழ் பத்திரிகைகளின் மூளையை மழுங்கடிக்கும் செய்திகளும் அந்த செய்திகளை ஊக்குவிக்கும் நம்முடைய மக்களுமே (நானும் அதில் ஒருவன்) இதற்க்கு காரணம். அதனாலேயே தரமான செய்திகளை பார்க்க முடியாமல் கள்ள தொடர்பு செய்திகளும், அந்த நடிகர் நடிகையுடன் இரவில் “கும்மாளம்” போன்ற செய்திகள் ஆக்கிரமித்துவிட்டன.
தரமான செய்திகளை தரும் பத்திரிக்கைக்கு ஆதரவு தராததால் பல நல்ல பத்திரிகைகளும் நஷ்டத்தை சமாளிக்க இந்த நிலைக்கு மாறி விட்டது அல்லது மாறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதனால் நமக்கு வேறு வழி இல்லாததால் எதாவது ஒரு தமிழ் பத்திரிக்கை வாங்க வேண்டும் என்பதால் அதை படித்து படித்து நம்முடைய செய்தி பார்வையும் மாறி விட்டது. தினத்தந்தி இதற்க்கு முன்னோடி என்பது என் கருத்து. அதே சமயம் மக்களை செய்திகள் !!! படிக்க தூண்டி மக்களிடையே செய்தித்தாள் படிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கியது இந்த பத்திரிக்கை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாதிரி செய்திகளை படித்து எனக்கும் இவர்கள் கூறும் வசனம் அத்துபடியாகி விட்டது. செய்திகளின் தலைப்புகள் எப்படி இருக்கும், செய்திகள் எப்படி இருக்கும் என்று என்னுடைய அனுபவம் இது. இதை பார்த்தாலே புரியும் எப்படி பட்ட செய்திகள் நான் படித்து இருக்கிறேன் என்று.
தான் ஊரில் இல்லாத போது பக்கத்து வீட்டு வாலிபருடன் “உல்லாசமாக” இருந்த மனைவியை விஷயம் தெரிந்து கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
கரும்பு காட்டில் இருந்த தனியாக இருந்த இளம்பெண்ணை வாலிபர் “கதற கதற” (இந்த வசனம் இப்போது குறைந்துள்ளது) கற்பழித்தார்.
பிரபல நடிகை குளியறையில் வழுக்கி விழுந்தார், இதை அறிந்த அவரது தீவிர ரசிகர் மனம் உடைந்து !!! தற்கொலை முயற்சி.
“உற்சாக பானம்” அருந்திய கணிப்பொறி வல்லுநர் போதையில் கலாட்டா செய்ததால் விரைந்து !!! வந்த போலிசார் அவரை கைது செய்தனர்.
நமிதாவை திருமணம்!! செய்வது போல கனவு கண்டேன், பலிக்குமா? (இது எல்லாம் ஒரு கேள்வி என்று எப்படி தான் கேட்கிறார்கள் என்று புரியவில்லை)
வாலிபர்களை மயக்கிய!!! “அழகிகள்” கும்பல் பிடிபட்டது
பிரபல நடிகர் முக்கிய அறிவிப்பு “பரபரப்பு” செய்தி
இது போன்ற செய்திகளே பத்திரிகைகளை ஆக்கிரமித்து உள்ளன. அதுவும் “உல்லாசம்” “அழகி” போன்ற அழகான தமிழ் சொற்களை மிகவும் அசிங்கமான சொற்களாக மாற்றிய பெருமை நம் தமிழ் பத்திரிக்கைகளையே சாரும்.
இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் மக்களா? இல்லை பத்திரிக்கைகளா?
No related posts.
{ 4 comments… read them below or add one }
இதுக்கு காரணம் தினத்தந்தி, தினமலர் மற்றும் தட்ஸ் தமிழ். அதனோடு அதை விடாம படிக்கிற நாமளும்தான்.
கருப்பு பூனை சொல்றத கேளுங்க…
)))
என்ன கிரி ஒரு முடிவோட கிளம்பியிருக்காப்புல…:)
சொல்ல வந்தது புரிகிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்…
உங்கள் வருகைக்கு நன்றி கிங்
//சொல்ல வந்தது புரிகிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்…//
உங்களை போல் ஒரு சிலர் இவ்வாறு கூறும் போது அல்லது சுட்டிக்காட்டும் போது தான் நாம் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதை விட விரிவாக எழுத முயற்சிக்கிறேன் கிங் இனி வரும் பதிவுகளில்.