என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(

by கிரி on May 26, 2008

இந்த வீடியோ காட்சி மனிதர்கள் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இனி வரும் காலங்களை நினைத்து பயமாக இருக்கிறது, இவர்களின் இந்த நிலை பின்னாளில் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது மனிதர்கள் மனிதாபிமானம் என்ற ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று.

No related posts.

{ 30 comments… read them below or add one }

1 எம்.ரிஷான் ஷெரீப் May 26, 2008 at 8:36 PM

கிரி,மனதுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.இப்படிக்கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? அது துடிப்பதைப் பார்த்தீர்களா? சுவாசம் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லை.பாவம் பா. :(
அதையும் குழந்தை,குடும்பத்தோடு சேர்ந்து எப்படிச் சாப்பிடுகிறார்கள் பாருங்கள்.
எப்படியாவது இதனைத் தடுக்கமுடியாதா?

Reply

2 Irai Adimai May 26, 2008 at 8:42 PM

இப்படி கொடுமை பண்ணி அந்த உயிரை தின்பதை விட இவர்கள் பட்டினியாய் இருந்துவிட்டுப் போகலாம்.

Reply

3 கிரி May 26, 2008 at 8:46 PM

//இப்படிக்கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? அது துடிப்பதைப் பார்த்தீர்களா? சுவாசம் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லை.பாவம்//

நான் அசைவம் சாப்பிடுவது தவறு என்று கூறவில்லை. உங்களை போலவே நானும் கூறுகின்றேன், அது இறந்த பிறகு இதை போல் செய்தால் ஒன்றும் தெரியாது. அது துடிக்க துடிக்க பாதி உடலை போட்டு வறுத்து…….கடவுளே மிக கொடுமை.

இதை தடுப்பது என்பது கனவில் கூட நடக்காது. வேண்டும் என்றால் இதை விட மோசமாக நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம். அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.

ரிஷான் உலகில் நமக்கு தெரிந்தவை இது போல சிறிது தான், நீங்கள் ஒரு பதிவு போட்டீர்களே பெங்குவின் பற்றி அதை போல. நமக்கு தெரியாது கோடி. உலகில் சைக்கோக்கள் அதிகமாகி வருகிறார்கள்.

Reply

4 கிரி May 26, 2008 at 8:49 PM

//இப்படி கொடுமை பண்ணி அந்த உயிரை தின்பதை விட இவர்கள் பட்டினியாய் இருந்துவிட்டுப் போகலாம்.//

பட்டினியாக கூட இருக்க வேண்டாம், இது மாதிரி கொடுமை செய்யாமல் இருந்தாலே போதுமானது. இந்த மாதிரி ஆட்களிடம் பட்டினியை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, ரொம்ப பேசினால் நம்மையே வறுத்து சாப்பிட்டாலும் சாப்பிட்டு விடுவார்கள்.

Reply

5 சினிமா நிருபர் May 26, 2008 at 9:08 PM

வலைப்பூ ரசிகர்களின் கண்களை குளமாக்கும் இந்த மனிதாபிமான படைப்பை படைத்த நண்பர் கிரி அவர்களுக்கு பாராட்டுக்கள். என்னதான் இதுபோன்று படம்பிடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றாலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்த கொடூர காட்சிகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக் கொள்வதுதான்.

Reply

6 கிரி May 26, 2008 at 9:20 PM

//என்னதான் இதுபோன்று படம்பிடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றாலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்த கொடூர காட்சிகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன//

உண்மை தான். இதை தடுக்கவே முடியாது. என்ன செய்வது? கண்ணீர் விடுவதை தவிர

//இதற்கு ஒரே தீர்வு ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக் கொள்வதுதான்//

இது எல்லாம் நடக்கும் காரியம் என்று கருதுகிறீர்களா?

உங்கள் வருகைக்கு நன்றி சினிமா நிருபர்.

Reply

7 Arivazhagan May 26, 2008 at 11:07 PM

Terrible. Are we going back towards stone age?. But I think even the cave men were not this cruel.

Reply

8 Arivazhagan May 26, 2008 at 11:08 PM

Terrible. It is very disturbing. Even the cave men in stone age would not have been this cruel.

Reply

9 கிரி May 26, 2008 at 11:31 PM

நாகரீக வளர்ச்சி என்கிற பெயரில் இதை போன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி அறிவழகன்.

Reply

10 prognostic May 27, 2008 at 1:19 AM

அய்யா நாகரிக கோமான்களே,

உங்கள் கண்ணீரையும்/கோபத்தையும்/கண்டனத்தையும் இந்தியாவில் வருசத்துக்கு ஆயிரக்கணக்கில் விவசாயிகளை தற்கொலை செய்து செத்துக் கொள்ள தள்ளும் இந்த உலகமய பொருளாதாரத்தை நோக்கி திருப்புங்கள்….

போலி மனிதாபிமானி…

Reply

11 TBCD May 27, 2008 at 5:50 AM

நேற்று இரவு சந்தையில் ஒரு மாட்டின் தலையயை கொய்து, கறி விற்கும் இடத்தருகே வைத்திருந்தார்கள். என்னக்கு அதைக் கண்டு ஒவ்வாமை ஏற்படவில்லை. ஒரு வேளை மனம் இறுகிவிட்டதோ என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த காணொளி கண்டவுடன், மனதுக்கு ஏனோ மிகவும் சங்கடத்துடன், ஒவ்வாமையில் வாந்தி வருவதுப் போல் உள்ளது.

உயிருடன் வதைத்து உண்பதை மிருங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இன்று அந்த மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறேன்.

பி.கு:-

இதுப் போன்ற காணொளிகளில் ஒரு சின்ன முன்னறிவிப்பு கொடுத்தூவிடுங்கள். சிறுவர்கள்/இளகிய மனம் கொண்டோர் பார்ப்பதைத் தவிர்க்கலாம் என்று.

Reply

12 கிரி May 27, 2008 at 6:40 AM

//உங்கள் கண்ணீரையும்/கோபத்தையும்/கண்டனத்தையும் இந்தியாவில் வருசத்துக்கு ஆயிரக்கணக்கில் விவசாயிகளை தற்கொலை செய்து செத்துக் கொள்ள தள்ளும் இந்த உலகமய பொருளாதாரத்தை நோக்கி திருப்புங்கள்….//

இப்ப தானே திருப்ப வைத்து இருக்கீங்க. எங்க பார்வையை. எங்கள் அறிவு கண்ணை திறந்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். செய்தி எதை பற்றியதோ அதற்கான விமர்சனமாகவே இதை கருதுகிறேன். நீங்க எதோ உலகம் பொருளாதார மயம் னு னு பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க. எங்களுக்கு அதெல்லாம் தெரியாதுங்க, உயிர் எதுவாகினும் அது கஷ்டப்படும் போது உண்மையான வருத்தத்தோடு கஷ்டப்பட தாங்க தெரியும். உங்களை போல பொருளாதார நோக்கில சிந்தித்து எல்லாம் பண்ண தெரியாதுங்க. நாளைக்கு “உங்களையும் யாராவது இப்படி வறுத்தா” கூட உங்களுக்காக உண்மையா வருத்தப்படுவேங்க, அப்ப வந்து விவசாயி மற்றும் பொருளாதாரத்தை பற்றி எல்லாம் சிந்திக்கமாட்டோம்ங்க.

//போலி மனிதாபிமானி…//

உங்களுக்கு தெரியுது… இனிமேல் எப்படி மனிதாபிமானத்தோடு இருப்பது, எந்தெந்த செயலுக்கு மனிதபிமானத்தொட இருப்பதுன்னு உங்களை மாதிரி யாராவது சொன்ன தெரிஞ்சுக்கிறேங்க.

பொருளாதாரா சிந்தனை, மனிதாபிமானத்தின் அளவு கோலை தெரிந்து கொண்டு பேசும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, மீண்டும் வாங்க.

Reply

13 கிரி May 27, 2008 at 6:41 AM

//உயிருடன் வதைத்து உண்பதை மிருங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இன்று அந்த மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறேன்//

வித்யாசம் என்று எதுவும் இல்லை, நம்மவர்கள் அதில் மசாலா போட்டு சாப்பிடுகிறார்கள், மிருகங்கள் அவ்வாறு பண்ணுவதில்லை.

//இதுப் போன்ற காணொளிகளில் ஒரு சின்ன முன்னறிவிப்பு கொடுத்தூவிடுங்கள்//

முன் அறிவிப்பு கொடுத்தால் மட்டும் என்ன ஆகி விட போகிறது TBCD. இன்னும் அதன் மீது ஆர்வம் அதிகமாகி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க திறப்பார்கள். அவ்வாறு போடுவேதெல்லாம் சும்மா ஒரு ஆர்வத்தை அதிகரிக்க தான் துணை செய்யுமே தவிர தடுக்காது என்பது என் கருத்து.

ஒரு சிலர் இதுக்கெல்லாம் இப்படி முன்னறிவிப்பா, நான் கூட என்னவோ எதோன்னு நினைத்து விட்டேன்னு சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதனால்….எப்படி கூறினாலும் குறை கூறும் உலகமடா இது…..

இருந்தாலும் அடுத்த முறை பதிவுக்கு முன்பு கூறிவிட முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி

Reply

14 இறக்குவானை நிர்ஷன் May 27, 2008 at 1:48 PM

கிரி,
நெகிழ்வுமிக்க பதிவு.
மனிதனுக்குப் பகுத்தறிவு உண்டா என எண்ணத்தோன்றுகிறது.

அந்த மீன் கடைசிவரை குற்றுயிராய்த்தவிப்பது எத்தனை வேதனை?
கொடூரமான மனித படுகொலைகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எம்மைப் போன்ற இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சகஜம். ஒருமுறை இலங்கையின் கடுவளை பகுதியில் மூன்று சிறுவர்கள்,அம்மா அப்பா மற்றும் ஒரு வயதானவர் ஆகியோரை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்திருந்தார்கள்.
இறந்துபோன பெண்ணின் கண்ணத்தை கொலைகாரன் தன் பற்களால் கடித்து சதைத்துண்டை எடுத்திருந்தான். இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது மனித இனம் எதிர்காலத்தில் மீண்டும் மிருக இனத்துக்கு மாறுமோ என்ற சந்தேகம் எழும்.

தேவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

Reply

15 கிரி May 27, 2008 at 2:15 PM

நிர்ஷன் இந்த வீடியோ வை பார்த்தே மனது சரி இல்லை, சாப்பிடும் போதெல்லாம் இது நினைவுக்கு வருகிறது.

நீங்கள் கூறுவதை பார்க்கவோ கேட்கவோ என் மனது அந்த அளவுக்கு பக்குவ படவில்லை. என்னால் முடிந்தது இதை போல எங்கும் நடக்க கூடாது என்று கடவுளை வேண்டுவது. அதை எல்லாம் கேட்டால் ஒரு வாரத்துக்கு தூங்கவே முடியாது. என்ன செய்வது! ஒரு சிலரின் மனங்களில் ஈரமே இல்லை. இதை தடுக்க முடியாது என்பது தான் கசப்பான உண்மை :-(

உங்கள் பாராட்டுக்கு நன்றி நிர்ஷன்.

Reply

16 ♠புதுவை சிவா♠ May 27, 2008 at 4:09 PM

கிரி வணக்கம்
மனது கஷ்டமாக கீது;(((
நீங்கள் தலைப்பை இப்படி கொடுத்து இருக்கலம். ‘இந்த வீடியோ காட்சியை குழந்தைகள்,பெண்கள், இளகிய மனம் படைத்தோர்,முழுகாம இருக்கும் பெண்கள் பார்பதை தவிர்கவும்.`
குறிப்பு கிரி,
நெருப்பு நரியில் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.
புதுவை சிவா.

Reply

17 கிரி May 27, 2008 at 4:24 PM

அடுத்த முறை குறிப்பிடுகிறேன் சிவா.

http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html இதை நீங்கள் நிறுவினால் எந்த பதிவிலும் சரியாக தெரியும். என் பதிவில் சரி செய்ய முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.

Reply

18 தென்றல்sankar May 28, 2008 at 3:01 PM

எப்படி இப்படியெல்லாம் செய்வதற்கு மனம் வருகிறதோ? நான் பார்த்துவிட்டு ஒரு கனம் அதிர்ந்துவிட்டேன் நன்பா.இந்த நிலைகெட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Reply

19 அகரம் அமுதா May 29, 2008 at 10:59 AM

சிக்குண்டேன் நீள்வலைக்குள் சிக்கிநீ ராடிதன்னில்
முக்குண்டேன் கொண்டசெதில் முற்றிலுமாய் -நீக்கிந
றுக்குண்டேன் எண்ணைப்பி சுக்குண்டேன் மேனிக
ருக்குண்டேன் உண்டார் ருசித்து!-அகரம். அமுதா!

தோழரே! தங்களின் இந்த வீடியோ காட்சியைக் கண்டவுடன் எனக்குள் தோன்றியக் கவிதை. இத்தோடு என்மின் மடலையும் தருகிறேன்.agramamutha08@gmail.com இந்த வீடியோ பகுதி (குறிப்பாக) எந்த பகுதியில் இருந்து எடுத்தீர்கள் எனக்கும் சொன்னால் இக்கவிதையோடு அவ்வீடியோக் காட்சியையும் என் வலைப்பக்கத்தில் இட எளிதாயிருக்கும். நன்றி

Reply

20 ஜெகதீசன் May 30, 2008 at 1:24 PM
21 கிரி June 2, 2008 at 1:30 PM

வாங்க தென்றல் சங்கர், அகரம் அமுதா மற்றும் ஜெகதீசன்.

அகரம் அமுதா உங்கள் கவிதை நன்றாக இருந்தது. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று விளக்கி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

Reply

22 வெங்க்கி June 4, 2008 at 9:23 AM

கிரி..
எனக்கு நிறைய சீன நண்பர்கள் உண்டு.. அவர்களின் கூற்றுப்படி . எந்த உயிரினங்கள்.. முதுகை வானத்திற்கு காட்டிக்கொண்டு செல்கின்றதோ, அவற்றை உண்ணலாம் என்று.. அதன் படி எல்லா நாலு கால் உயிரினங்களும் இதில் சேர்த்தி.. (மனித கருவையே.. ஹாங்காங் ல் உண்கிறார்கள் என்று பேச்சு) குரங்கின் மண்டையை பிளந்து straw போட்டு ரத்தம் உறிஞ்சுவது..போன்ற கொடூரமான, கேவலமான குணங்கள்..சீன இனத்துக்கு மட்டும் உண்டு… எனினும்.. இந்த வீடியோ நெஞ்சை அறுக்கிறது..
மீன் சாப்பிடும் ஆசையே போய் விட்டது..

http://keysven.blogspot.com/

Reply

23 கிரி June 4, 2008 at 5:41 PM

வாங்க வெங்கி. நீங்க சொன்ன செய்திகளை நானும் படித்து இருக்கிறேன். நாம் வேதனை தான் பட முடிகிறதே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை.

Reply

24 கோவி.கண்ணன் June 4, 2008 at 6:59 PM

ஐயோ…..

இதுபற்றி கேள்விபட்டு இருக்கிறேன்… படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.
:(

Reply

25 கிரி June 5, 2008 at 12:55 AM

//படத்தில் பார்க்கும் போது பதை பதைக்கிறது.//

இது எல்லாம் சும்மா ஜுஜுபி …. இதை பார்த்ததில் இருந்து இன்று வரை என்னால் மீன் சாப்பிட முடியலை.

Reply

26 goma June 12, 2008 at 5:15 AM

படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது .

Reply

27 கிரி June 12, 2008 at 8:53 AM

//படத்தைப் பார்த்ததும், கற்காலமே ,பொற்காலமாக இருந்திருக்குமோ, என்று தோன்றுகிறது//

அருமையாக கூறினீர்கள்.

Reply

28 முகவை மைந்தன் June 12, 2008 at 10:29 AM

முதல் பாதியில் அப்படி ஒன்றும் தெரியவில்லை. தட்டில் வைக்கப்பட்ட மீன் வாயசைத்த போது சிறிது அதிரந்தேன். எனக்கு இதே உணர்வு வேறு பொழுதுகளிலும் நேர்ந்திருக்கிறது. இன்றும் திருச்சி (நான் பார்த்த வரை) பகுதிகளில் வாளிகளில் மீன்கள் உயிருடன் இருக்கும். விற்கும் போது வெட்டித் தருவார்கள். கடைசி வெட்டு வரையில் மீன் துடிக்கும். சமைப்பதற்கு முன் உயிருடன் இருக்கும் நண்டுகளை வெந்நீரில் போடுவார்கள். அங்கே, இங்கே தலையைத் திருப்பும் கோழிகளை அடையாளமிட்டு துண்டுகளாகவும் வாங்கிச் செல்கிறோம். என்னால் முடிந்தது, இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பது தான். உணவைத் தவிர்ப்பது இயலாத ஒன்று, என் மட்டில்.

பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது… வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

Reply

29 கிரி June 12, 2008 at 11:53 AM

//முகவை மைந்தன் said…
பயணத்தில் உண்ணும் பொழுது இல்லாதவர் உணவு கேட்டாலே குற்ற உணர்வில் உடல் குறுகுறுக்கும். இங்கே உண்ணப்படும் உணவே துடிக்கிறது… வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்களும் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்//

அருமையாக கூறினீர்கள் முகவை மைந்தன். உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

30 Bleachingpowder April 8, 2009 at 12:38 PM

நான் இந்த பதிவை பார்திருக்கவே கூடாது கிரி :( ( ரொம்ப Disturbingஆ இருக்கு

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: