எகிறி அடிக்(காத)கும் கேப்டன் – அரசாங்கம் திரை விமர்சனம்

by கிரி on May 23, 2008

captain+arasu எகிறி அடிக்(காத)கும் கேப்டன்   அரசாங்கம் திரை விமர்சனம்

பொதுவாக நான் கேப்டன் படங்களை பார்ப்பேன், ஆனால் சுதேசி போன்ற படங்களை பார்த்து வெறுத்து போய் இருந்ததால் அதன் பிறகு படத்திற்கே போகவில்லை. சரி நண்பர்கள் பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதை அடுத்து போய் வரலாம் என்று முடிவு செய்து நானும் என் நண்பரும் யிஷுன் ல் உள்ள திரை அரங்கு சென்றோம். திரை அரங்கில் சொல்லிக்கொள்ளும் படி கூட்டம் இல்லை, வார இறுதி நாளாக இருந்தும். சிவாஜி க்கே 3 வது வாரம் கூட்டம் குறைவாக (வார நாட்களில்) இருந்தது என்று கூறி இருந்ததால் எனக்கு இது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.

இது கேப்டனின் 150 படம் என்று அறிவிப்போடு திரைப்படம் தொடங்கியது. ரஜினி, கமல், பிரபு, சரத் குமார் போன்ற பெரிய நடிகர்களின் 100 வது படம் தோல்வி அடைந்த நிலையில் அட்டகாச வெற்றியுடன் வெற்றி பெற்றவர் கேப்டன் பிரபாகரன். அவருடைய 150 வது படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும் கண்டிப்பாக தோல்வி இல்லை என்றே கூறவேண்டும்.

இதில் கதை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள மிக பெரிய புள்ளிகள் (அரசியல் சாராதவர்கள்) தொடர்ச்சியாக கொல்லபடுகிறார்கள். இதை கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார்கள், இந்த பணிக்காக இவர் சென்னை வரும் போது விமானத்தில் காணாமல் போய் விடுகிறார். அனைவருக்கும் பெரிய குழப்பம் (எனக்கும்) விமானம் ஏறி அதை அவருடைய தங்கையிடமும் கை தொலைபேசியில் கூறி விட்டு, வரவில்லை என்றவுடன் பலருக்கும் குழப்பம். விமானத்தில் வந்தவர் சென்னை யில் இறங்கவில்லை என்றால்?… இதை கண்டுபிடிக்க வரும் “பெசல்” அதிகாரி தான் நம்ம கேப்டன். இவர் காணாமல் போனவரின் தங்கையை தான் திருமணம் செய்து இருப்பார். பிறகு கேப்டன் இதற்கான விசாரணையை முடுக்கி விடுகிறார். ரியாஸ்கான் உதவியுடன் விசாரணையை தொடங்கி அதில் சம்பந்த பட்டவர்களை பிடிக்கிறார், தொடர்புடையவர்கள் அனைவரும் பணத்திற்கு மிக சிரமபடுவர்கள், தீவிரவாதியின் மூளை சலவையால் இவ்வாறு செய்து இருப்பார்கள். கடைசியில் தீவிரவாதியை பிடித்து விடுகிறார், ஆனால் அவர் எளிதாக!!! தப்பி கனடா சென்று விடுகிறார்.

கேப்டன் அரசின் அனுமதி பெற்று கனடா சென்று அங்கே உள்ள தலைவனை கண்டுபிடித்து (அங்கே உள்ள காவல் துறை உதவியுடன்) இங்கே கூட்டி வந்து “ஆபரேஷன் ப்ளூ தண்டர்” என்று சதியை கண்டு பிடித்து (குண்டை செயல் இழப்பதற்கான கடவு சொல் வில்லனுடைய கண், இது ஒரு ஆங்கில படத்தில் வருகிறது பெயர் நினைவு இல்லை) சென்னையை காப்பாற்றுகிறார். இது தான் கதை.

இதில் நண்பர் எப்படி காணாமல் போகிறார் என்றால், அவர் வரும் விமானத்திலேயே அந்த தீவிரவாதியும் வருகிறான், அதிகாரியும் தீவிரவாதிகளின் தலைவரும் ஒரே மாதிரி இருப்பதால் தவறாக நினைத்து அந்த ஆபரேஷன் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி விடுகிறான். பிறகு தீவிரவாதி உண்மை தெரிந்து அந்த அதிகாரியை விமானத்திலேயே கொலை செய்து, அவரது உடலை பெட்டியில் !!! போட்டு வைத்து வெளியே வரும் போது எடுத்து போய் விடுகிறார்!!!. பரிசோதனை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை!!!. ஆனால் அவர் சாகும் முன்பு அதை பற்றிய விவரங்கள் அடங்கிய சிம் அட்டையை (B)பப்புள் (G)கமில் வைத்து விழுங்கி விடுகிறார் (இது “saw” ஆங்கில படத்தில் வருவது). கடைசியில் கேப்டன் இவருடைய பாடியை கண்டுபிடித்து போஸ்ட்மார்டம் செய்யும் போது கண்டு பிடித்து அனைவரையும் அழிக்கிறார்.

முதலில் கேப்டன் எந்த பஞ்ச் வசனங்களையும், தன்னுடைய கதாபாத்திரம் மீறி எந்த செயலையும் செய்யாமல் இயல்பாக ஒரு படம் கொடுத்தற்காக கண்டிப்பாக அவரை பாராட்டலாம். வழக்கமான கேப்டன் படம் போல் இல்லாமல் வித்யாசமாக உள்ளது. மிகவும் பொறுமையாக நடித்துள்ளார், சில சமயம் நமக்கு அவருடைய பழைய சுறுசுறுப்பை காண முடியவில்லை. வயதாகி விட்டது என்பதை அவருடைய நடை காட்டி கொடுக்கிறது. அவசரமாக வருவதை அடக்கி வைத்து இருக்கும் ஒருவர் இருப்பது போல் மிகவும் அவஸ்தையாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளார், ஏன் என்று தெரியவில்லை.

கேப்டன் க்கு ஒரு டூயட் பாடல் உண்டு (அது இல்லாமையா), படத்திலேயே இது தான் மிக கொடுமை, கையில் ரிமோட் இல்லையே ஓட்டுவதற்கு என்று நமக்கு தோன்றுகிறது. கேப்டன் தயவு செய்து இனிமேல் டூயட் எல்லாம் வேண்டாம் ரமணா போன்ற கதைகளே உங்களுக்கு பொருத்தம். மக்களும் இதை விரும்பவில்லை, குறைந்த பட்சம் உங்க தொப்பையையும் கழுத்தில் தொங்கும் சதையையும் குறைத்து கொண்டாவது டூயட் தொடருங்கள். இதில் கேப்டனுக்கு மஞ்சள் சிகப்பு வண்ண கோட் இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். அவருடைய விக் தான் கொடுமையாக உள்ளது.

எனக்கு இந்த டூயட் பார்த்தவுடன் அய்யயோ கேப்டன் கனடா ல வேற டூயட் வைப்பாரே! உலக தீவிரவாதிகளிடம் இருந்து எல்லாம் நம் நாட்டின் மானத்தை காப்பாற்றும் கேப்டன் கனடா வில் டூயட் பாடி நம்ம மானத்தை வாங்கி விடுவார் போல இருக்கேன்னு பயந்து இருந்த வேளையில் அப்படி எதுவும் செய்யாமல் நம் வயிற்றில் பாலை வார்த்தார். அவருக்கு கனடாவில் உதவுவது ஒரு தமிழக !! கனடா பெண் காவலர். அதனால் தன் பங்குக்கு கொஞ்சம் கவர்ச்சி காட்டி “டமிலை” கொலை செய்கிறார்.

இந்த படத்தில் கேப்டன் ஆங்கிலம்!! அதிகம் பேசி நம்மை கதி கலங்க வைக்கிறார். அவருடைய ஆங்கிலம் சரியான ஆங்கிலத்துடன் சில எடுத்துக்காட்டு.

pesal : special

aappesar :o fficer

ipad : Ipod

sekkurity : security

acsan : action

pulu : blue

sal v meet : shall we meet

tekkunikkal : technical

கேப்டன் தான் ஆங்கிலத்தை கொலை செய்கிறார் என்றால் வில்லன் நடிகர் மலையாளி என்பதால் அவரும் ஆங்கிலத்தை மற்றும் தமிழை படாது பாடு படுத்துகிறார். இவரை ஏன் இந்த படத்துக்கு முக்கிய வில்லனாக போட்டார்கள் என்று தெரியவில்லை. இவரை ஒரு பெரிய வில்லனாக அதுவும் முக்கியமாக கனடாவில் இருக்கும் வில்லனாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.

கேப்டன் மற்றவர்களிடம் பேசும் போதும் சரி நடந்து கொள்ளும் முறையும் சரி மிக அடக்கமாக நடித்துள்ளார். தேவையற்ற நடிப்பு என்று எதுவும் இல்லை அதுவும் குறிப்பாக கனடாவில். சண்டை காட்சியில் முன்பு இருந்த வேகம் இல்லை (வயதாகி விட்டது).

மொத்தத்தில் கேப்டன் படம் ஒருமுறையாவது பார்க்கலாம். டூயட் மற்றும் அனைத்து காட்சிகளிலும் லாஜிக் எதிர்பார்ப்பவர்கள், அது எப்படியா முடியும்.. சும்மா கதை விடுறாங்க..இந்த ஆளு படத்தை எல்லாம் மனுஷன் !!! பார்ப்பானா என்று கேள்வி கேட்பவர்கள் இந்த படத்துக்கு செல்ல வேண்டாம்.

இல்லைங்க கேப்டன் ஒரு சில மொக்கை படம் கொடுத்து இருந்தாலும், பல நல்ல படங்களையும் கொடுத்து இருக்காரு அதனால நாங்களும் ரொம்ப எதிர்பார்க்கலை என்பவர்கள் தாராளமாக செல்லலாம் குறைந்தபட்சம் இவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாக நடிக்க முயற்சித்ததை பாராட்டுவதற்காவது.

No related posts.

{ 20 comments… read them below or add one }

1 முரளிகண்ணன் May 23, 2008 at 1:20 PM

கிரி என் பார்வையுடன் மிகவும் ஒத்துப்போகிறது உங்கள் விமர்சனம்

Reply

2 கிரி May 23, 2008 at 2:46 PM
3 மஞ்சூர் ராசா May 23, 2008 at 3:20 PM

ஒரு முறை பார்க்கலாம் என்னத்தெ கெட்டுப்போச்சி….

Reply

4 கிரி May 23, 2008 at 5:37 PM

பாருங்க! பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க

Reply

5 Ramanna May 23, 2008 at 7:36 PM

Ramanna

Netru intha padam parthaen. Intha Blog il sonnar pol, captain padangalai vida migavum vidyasamai irunthathu.

Reply

6 கிஷோர் May 23, 2008 at 7:49 PM

நெருப்பு நரியில் எழுத்தெல்லாம் ஜிலேபி ஜிலேபியா தெரியுது.
இருங்க நான் அதியனில் மாற்றி படித்துவிட்டு வருகிறேன்.

இது ஒரு துண்டு பின்னோட்டம் (பேருந்தில் இடம் பிடிக்க போடுவது போல்)

Reply

7 ♠புதுவை சிவா♠ May 23, 2008 at 8:23 PM

தோழர் கிரி,
நேற்று அண்ணன் பையனுக்காக டேரா பூச் டி.வி.க்க்ஸ்
ரூ 25\- வாங்கினேன் ஆனா நான் ரூ 30\- கொடுத்தேன்
கடைகாரிடம் ரூ 5\- பாக்கி இல்லை என எனக்கு அரசாங்ங்கத்தை ரூ 5\- க்கு கொடுத்தார்.

விதி யார விட்டது ;-) ))

புதுவை சிவா

Reply

8 கிஷோர் May 23, 2008 at 8:24 PM

அட அட‌ அட படமே பார்த்த மாதிரி நல்ல பெசலா இருக்கு

Reply

9 கிரி May 23, 2008 at 8:26 PM

// Ramanathan said…
Ramanna

Netru intha padam parthaen. Intha Blog il sonnar pol, captain padangalai vida migavum vidyasamai irunthathu.//

உங்கள் வருகைக்கு நன்றி ரமணா

Reply

10 கிரி May 23, 2008 at 8:26 PM

//நெருப்பு நரியில் எழுத்தெல்லாம் ஜிலேபி ஜிலேபியா தெரியுது//

ஹா ஹா ஹா

Reply

11 கிரி May 23, 2008 at 8:28 PM

// கிஷோர் said…
அட அட‌ அட படமே பார்த்த மாதிரி நல்ல பெசலா இருக்கு//

:-) )) நீங்க சொன்னத பார்த்து கேப்டன் sack (shock) ஆகி இருப்பாரு :-) )))

Reply

12 கிரி May 23, 2008 at 8:31 PM

//கடைகாரிடம் ரூ 5\- பாக்கி இல்லை என எனக்கு அரசாங்ங்கத்தை ரூ 5\- க்கு கொடுத்தார்//

ஹா ஹா ஹா சிவா என்ன ஆளையே காணோம். சரி படத்த பார்த்தீங்களா இல்லையா? அதை சொல்லுங்க.. உங்களோட கருத்து என்ன?

Reply

13 SurveySan May 23, 2008 at 10:06 PM

//pesal : special

aappesar :o fficer

ipad : Ipod

sekkurity : security

acsan : action

pulu : blue

sal v meet : shall we meet

tekkunikkal : technical
///

captain ippadi solradhula thappe illa. nalla padichu pattam vanginavangale pala peru ippadi dhaan pesaraanga.

Reply

14 கிரி May 23, 2008 at 10:24 PM

வாங்க சர்வேசன்.

நன்கு படித்தவங்களும் தவறாக பேசுகிறார்கள் என்பது உண்மை தான். அதற்காக கேப்டன் பேசுவது தவறு இல்லை என்று ஆகி விடுமா? ஒரு கட்சியின் தலைவராக வேறு இருக்கிறார்.

நமது தமிழகம் தான் இருப்பதிலேயே பரவாயில்லை!!!!!, மற்ற மாநிலத்தார் ஆங்கிலத்தை கொலை செய்து கொண்டு இருப்பது உண்மை தான்.

Reply

15 Logan May 23, 2008 at 10:28 PM

கேப்ட்டனோட சின்ன கௌண்டர்க்கு அப்புறம் தியேட்டர் போயி பார்க்கிற படமாச்சனு யோசிச்சு வந்தேன், ஆனா கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), நல்லா கலரா ரெண்டு-மூணு வடஇந்தியா கதாநாயகிகள்னு மாதேஷ் படத்த ரொப்பிடாறு. ஆனா ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???.

Reply

16 கிரி May 23, 2008 at 10:44 PM

//கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), //

அத தான் திரை அரங்கில் பார்த்தேனே :-) )) பொது மக்களுக்கு!!! என் கூட வந்த நபர் இவர் தாங்க :-) )) லோகன் நீங்க பண்ணுன கலாட்டாவுல கேப்டன் என்ட்ரி காட்சிய ஒழுங்கா பார்க்க முடியாம போச்சு :(

//ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???//

எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப காலமா இருக்கு. அதே கேப்டன் ஆங்கிலத்தை ஒரே அடியாக ஒதுக்கவில்லை. அதற்க்கு அவருடைய ஆதரவை கொடுத்துக்கொண்டு இருக்கிறார், மருத்துவர் அய்யா போல் இல்லாமல்.

அதனாலே கேப்டனை மன்னித்து விடுங்க :-) ) ஹாலிவுட் நடிகையை !!! எடுக்காமல் நமது இந்திய நடிகையை எடுத்து தேசப்பற்றை காட்டியதற்காக அவருக்கு நன்றி கூறுவோம் :-) ))))

Reply

17 ♠புதுவை சிவா♠ May 25, 2008 at 1:45 AM

Hi Kiri

sorry still I dont see the film

but I read your that film preview

I think I am safely escape :) )

ok I am present to come regular to

vist :) ))

புதுவை சிவா

Reply

18 கிரி May 25, 2008 at 8:25 AM

உங்க வருகைக்கு நன்றி சிவா.

நான் இந்த படத்தை பார்க்கவே முடியாது அப்படிங்கற அளவுக்கு மோசமான படமாக கருதவில்லை. நம்மில் ஒரு சிலர் கேப்டன் படம் என்றாலே படம் பார்க்கும் முன்பே சரி இருக்காது என்ற மன நிலையில் செல்வதால் நன்றாக இருந்தால் கூட அதை ஒப்பு கொள்ள அவர்கள் மனம் இசைவதில்லை.

Reply

19 குசும்பன் May 26, 2008 at 2:15 PM

சித்தப்பு இதுல சூழ்ச்சி ஒன்னும் இல்லையே!!!

ஏன்னா வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது.

Reply

20 கிரி May 26, 2008 at 3:31 PM

//வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது//

:-) ))) அது வேறு இது வேறு :-)

குசும்பண்ணா இதுக்கெல்லாம் அசரப்படாது. அடி வாங்குனது அந்த படம் இது இந்த படம்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: