"குருவி" பட தயாரிப்பாளருக்கு நன்றி கூறும் மற்ற பட தயாரிப்பாளர்கள் !!!

by கிரி on May 16, 2008

kuruvi+cm "குருவி" பட தயாரிப்பாளருக்கு நன்றி கூறும் மற்ற பட தயாரிப்பாளர்கள் !!!

“குருவி” பட தயாரிப்பாளர் உதயநிதிக்கு மற்ற படத்தயாரிப்பாளர்கள் நன்றி கூறி கொண்டு இருக்கிறார்களாம்.

தற்போது வெளியான “குருவி” படம் “A” சென்டர்களில் சரியாக போகவில்லை, வசூல் குறைந்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன, ஆனால் “B” மற்றும் “C” சென்டர்களில் ஓரளவுக்கு நன்றாக போகிறது. ஒரு புதிய படம் வந்தாலே உடனே அதனுடைய திருட்டு DVD யும் உடனே வந்து விடும், ஏற்கனவே வசூல் எதிர்பார்த்த படி இல்லாததால் இதன் வரவு இன்னும் படத்தை பாதித்து விடும் என்று கருதியதால் குருவி பட சம்பந்தப்பட்டவர்கள், தாரிப்பாளரிடம் கூறி இதை தடுக்க உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சி எடுங்கள் என்று கூறி உள்ளனர் . இதன் தயாரிப்பாளர் உதயநிதி கலைஞரின் பேரன் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி 30 லட்சம் மதிப்புள்ள திருட்டு DVD க்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு திருட்டு DVD நடவடிக்கை எடுத்ததால், தற்போது வெளிவந்த அனைத்து படங்களின் DVD யும் சேர்த்து கைபற்ற பட்டது. இதனால் பலன் அடைந்த மற்ற பட தயாரிப்பாளர்கள் சந்தோசத்தில் உள்ளனர். எப்படியோ நல்லது நடந்தா சரி..

கொசுறு

மேலே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து இருக்கும், கலைஞருக்கு “குருவி” படத்தை சிறப்பு காட்சி போட்டு காட்டி இருக்கிறார்கள் என்று (படம் வேறு பேரன் தயாரிப்பு!!), அனேகமாக நம்ம தலைவர் “பாபா” படத்தை சச்சிதானந்த சுவாமிகளுக்கு போட்டு காட்டிய போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் படம் முடிந்து வெளியே வந்து படம் ரொம்ப நல்லா!!! இருக்குன்னு சொன்ன மாதிரி “குருவி” பார்த்து கலைஞர் கதி கலங்கி போய் இருப்பாருன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ

No related posts.

{ 8 comments… read them below or add one }

1 சினிமா நிருபர் May 16, 2008 at 12:44 PM

இந்த செய்தி ஏற்கனவே தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் வந்துள்ளது. நன்றாக எழுதுகீறீர்கள் நண்பரே…! வாழத்துக்கள்..!

Reply

2 TBCD May 16, 2008 at 12:46 PM

கலைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதின் மர்மம் இது தானா..

//கலைஞர் கதி கலங்கி போய் இருப்பாருன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ //

Reply

3 கிரி May 16, 2008 at 12:55 PM

//இந்த செய்தி ஏற்கனவே தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் வந்துள்ளது. நன்றாக எழுதுகீறீர்கள் நண்பரே…! வாழத்துக்கள்..!//

நானும் செய்திகளில் கேள்வி படுவதையே எழுதுகிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க சினிமா நிருபர்

Reply

4 கிரி May 16, 2008 at 12:56 PM

//கலைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதின் மர்மம் இது தானா..//

கருத்துக்கள் இல்லை (No Comments ஹா ஹா)

Reply

5 ♠புதுவை சிவா♠ May 18, 2008 at 3:33 AM

கலைஞர் மருத்துவமனையில் உறகத்தில் சொன்னவை
பேரன் தயாரிப்பு என்று
குருவி என்று குளவியை காட்டி
என்னை கலங்க செய்தனர்
தம்பி விஜய் சட்டை இல்ல உடல்
உடன்பிறப்பே எனக்கு அன்று முதல்உறக்கம் இல்லை..
…. தலமை நர்ஸ்

Reply

6 கிரி May 18, 2008 at 11:39 AM

//பேரன் தயாரிப்பு என்று குருவி என்று குளவியை காட்டி என்னை கலங்க செய்தனர்//

ஹா ஹா ஹா ..நல்ல வேலை எதுவும் மோசமாக நடக்கவில்லை

Reply

7 மங்களூர் சிவா May 22, 2008 at 6:02 PM

/
கலைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதின் மர்மம் இது தானா..
/
/
கலைஞர் மருத்துவமனையில் உறகத்தில் சொன்னவை
பேரன் தயாரிப்பு என்று
குருவி என்று குளவியை காட்டி
என்னை கலங்க செய்தனர்
தம்பி விஜய் சட்டை இல்ல உடல்
உடன்பிறப்பே எனக்கு அன்று முதல்உறக்கம் இல்லை..
…. தலமை நர்ஸ்
/

பதிவு சூப்பர் கமெண்ட்டுகள் அதை விட சூப்பர்.

Reply

8 கிரி May 22, 2008 at 6:05 PM

நன்றி சிவா :-)

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: