சொதப்பிய திராவிட் காண்டான மல்லையா

by கிரி on May 13, 2008

royal+challengers சொதப்பிய திராவிட் காண்டான மல்லையா

IPL போட்டிகளில் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி மேல் தோல்வி கண்டு வருகிறது. தொடர் தோல்வியால் அணி உரிமையாளர் விஜய் மல்லையா, அணித்தலைவர் திராவிட் மேல் கோபம் அடைந்துள்ளார்.

நட்சத்திர வீரர் திராவிடை மிகவும் நம்பி இருந்ததாகவும், வீரர்கள் தேர்வில் இவர் கோட்டை விட்டு விட்டதாகவும் கூறி இருக்கிறார். தான் எதிர்பார்த்த வீரர்களை சேர்க்கவில்லை என்றும், வீரர்கள் தேர்வில் தான் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியதே தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறி உள்ளார். இது வரை விளையாடிய போட்டிகளில் திராவிடும் பெரிதாக ஒன்று சாதிக்கவில்லை.

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஏலத்தில் எடுத்த வீரர்கள் இப்படி சொதப்பினால், யாருக்கு தான் கோபம் வராது. ஒரு சில போட்டிகள் என்றால் பரவாயில்லை பெரும்பாலான போட்டிகளின் நிலைமை இப்படி என்றால் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும். இவங்களை ஏலத்துல எடுத்ததற்கு பேசாம இன்னொரு KF தொழிற்சாலை ஆரம்பித்து இருக்கலாம் என்று நினைத்து இருப்பார் icon smile சொதப்பிய திராவிட் காண்டான மல்லையா

இப்ப ஒன்றும் செய்ய முடியாது, போட்டிகள் அறை இறுதிக்கு வந்து விட்டன. பேசாம மல்லையா ஒரு KF குடிச்சுட்டு கம்முனு உட்கார்ந்துட்டு இருக்க வேண்டியது தான் இப்போதைக்கு icon biggrin சொதப்பிய திராவிட் காண்டான மல்லையா .

No related posts.

{ 8 comments… read them below or add one }

சரவணகுமரன் May 13, 2008 at 2:01 PM

அவரு பண்ற வெட்டி செலவுகள் எவ்வளவோ இருக்கு… இதுக்கு போய் கோபப்படலாமா? :-) இல்ல அடுத்த மேட்சில அவரே இறங்கலாம்…

Reply

கிரி May 13, 2008 at 2:48 PM

//அவரு பண்ற வெட்டி செலவுகள் எவ்வளவோ இருக்கு//

ஹீ ஹீ ஹீ அதுல அவர் திருப்தி ;) அடைகிறார், செலவு ஆனாலும் கிளுகிளுப்பா இருக்காரு, ஆனா இதுல ரெண்டுமே இல்ல.. அது தான் கோபத்துக்கு காரணம்னு நினைக்கிறேன்.

சொல்ல முடியாது கடுப்பாகி நானே விளையாடுறேன்னு இறங்கினாலும் ஆச்சர்ய படுரதுக்கு இல்ல. அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

வருகைக்கு நன்றி சரவண குமரன்

Reply

முரளிகண்ணன் May 13, 2008 at 2:57 PM

டிராவிட் கேப்டன் என்ற உடனேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது. இனி புலம்பி என்ன புண்ணியம்.

Reply

கிரி May 13, 2008 at 4:04 PM

//டிராவிட் கேப்டன் என்ற உடனேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது//

முரளிக்கண்ணன் இப்படி ஒரே போடா போட்டுட்டீங்க!!! :D நீங்க சொல்கிற மாதிரி தற்சமயம் இந்திய தூண் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த விஷயத்துல சச்சின் தாங்க டாப், எப்போது சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் வந்தாலும், அப்படி இல்லைன்னு எப்படியாவது அடித்து நிரூபித்து விடுகிறார். ஆனால் இது எத்தனை நாளைக்குன்னு தெரியல..இப்படியே ரொம்ப நாள் தொடர்ந்தா அப்புறம் நீங்க சொன்ன கருத்து சச்சினுக்கும் பொருந்தி விடும் :) )

Reply

Sridhar V May 13, 2008 at 10:33 PM

விஜய் மல்லையா என்றில்லை IPL போட்டி தொடரின் முதல் பகுதியில் எல்லாருக்கும் 25 கோடிகளாவது நட்டமேற்படும்.

இரண்டாவது தொடரில்தான் எல்லாரும் சமன் செய்து இலாபம் ஈட்டுவார்கள்.

பெங்களூரு என்றில்லை. எந்த ஒரு பந்தயத்திலும் எல்லா அணிகளும் வெற்றி பெற்று கொண்டே இருப்பதில்லையே :-) ) பாவம் டிராவிட் இப்பொழுது ‘கைப்புள்ள’ ரேஞ்சுக்கு ரொம்ப நல்லவனா ஆக்கிட்டாங்க.

Reply

கிரி May 13, 2008 at 10:41 PM

//விஜய் மல்லையா என்றில்லை IPL போட்டி தொடரின் முதல் பகுதியில் எல்லாருக்கும் 25 கோடிகளாவது நட்டமேற்படும்//

எனக்கு அது பற்றி சுத்தமாக தெரியாது.

//பெங்களூரு என்றில்லை. எந்த ஒரு பந்தயத்திலும் எல்லா அணிகளும் வெற்றி பெற்று கொண்டே இருப்பதில்லையே :-) ) //

ஹீ ஹீ ஹீ ஆனா இந்த அணி மட்டும் தானே தோல்வியையே பார்த்துட்டு இருக்கு. எத்தனை வாட்டி தான் தோத்துட்டே இருப்பாங்க… இவங்க ரொம்ப நல்லவங்க போல இருக்கு :) )))

Reply

Xavier May 14, 2008 at 11:41 AM

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களும், அதிரடி மன்னர்களும், சக்கரவர்த்திகளும், இளவரசர்களும் இன்ன பிற..க்களும் எல்லோருமே இப்போது முதலாளிகளின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே விளையாடுவது IPL செய்திருக்கும் மகத்தான சாதனை !!! வாழ்க கிரிக்கெட்.. :P வளர்க நம் கிரிக்கெட் வீரர்களின் தன்மானம்

Reply

கிரி May 16, 2008 at 1:46 PM

அதற்கு காரணமாக நான் கருதுவது கிரிக்கெட் விளையாட்டாக இல்லாமல் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியது தான்.

உங்க வருகைக்கு நன்றி சேவியர்

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed