அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"

by கிரி on May 11, 2008

balaji அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கி உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் தொடரில், விக்கெட்டை குவித்து அனைவரின் கவனத்தையும் திருப்பி புகழின் உச்சிக்கு சென்ற இவர், தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க முடியாததால், அடுத்து வரும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் கதை முடிந்தது என்றே பலரும் நினைத்தார்கள், பலர் இவரை மறந்தே விட்டார்கள்.

தற்போது 20-20 போட்டிகளில் தேர்வாகி இருந்த இவர், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் லெவன் அணிக்கும் இடையே நடை பெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இது IPL போட்டிகளில் எடுக்கப்படும் முதல் ஹாட்ரிக் சாதனை ஆகும்.

இவர் மொத்தம் 5 விக்கெட் எடுத்தார் இதில் நம்ம யுவராஜ் சிங் ம் அடக்கம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹய்டன் மற்றும் ஹுசே இல்லாமல் கொஞ்சம் அடி வாங்கி தான் போனது. தற்போதைய வெற்றி அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மனதைரியத்தை கொடுத்து இருக்கும்.

கொசுறு

போட்டிகளில் ரசிகர்களை !!! உற்சாகப்படுத்த வரும் பெண்களுக்கு இப்பொழுது உடையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார்களாமே? அப்படியா? உண்மைனா ரசிகர்கள் அட! கிரிக்கெட் ரசிகர்கள் தாங்க ;) தவிச்சு போய்டுவாங்களே :) )

No related posts.

{ 4 comments… read them below or add one }

1 Vino May 11, 2008 at 8:40 PM

//நம்ம யுவராஜ் சிங் ம் அடக்கம்//?????

Amarnath sir…:D

Reply

2 கிரி May 11, 2008 at 8:52 PM

வினோ நீங்க கூறியது சரி தான். நான் தான் தவறாக கூறி விட்டேன். திருத்தியதற்கு நன்றி :)

Reply

3 முரளிகண்ணன் May 11, 2008 at 9:33 PM

ICL க்கு நிறைய சென்னை வீரர்கள் சென்று விட்டார்கள். இல்லையென்றால் சென்னை இன்னும் பலமான அணியாக இருந்திருக்கும்

Reply

4 கிரி May 11, 2008 at 9:54 PM

வாங்க முரளிகண்ணன்.

தோனிய பார்த்திங்கல்ல அடி பட்டய கிளப்பி, தான் கேப்டன் பதவிக்கு சரியான ஆள் தான் என்று நிரூபித்து இருக்கிறார்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: