தசாவதாரம் படம் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக கூறி, அவ்வாறு காட்சிகள் இருந்தால் படத்தை வெளியிட விடமாட்டோம் மற்றும் திரை அரங்கு முன்பு ஆர்பாட்டம் செய்வோம் என்று ராமகோபாலன் கூறி இருந்தார்.
தசாவதாரம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் “இப்படம் நாத்திகனை ஆத்திகன் ஆக்கும் படம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால் கடவுளை நம்பி வணங்குவார்கள். பட வெளியீட்டுக்கு பின்பு குங்குமம் வைத்து இருப்பவர்கள் பலரை காண முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், 24 மணி நேரமும் !!! பக்தி உணர்வோடு தான் இருப்பேன். இந்துக்கள் மனதை இப்படம் புண்படுத்தாது, கடவுள் நம்பிக்கையை தூண்டும் படமாக இருக்கும்” என்று கூறி உள்ளார்.
எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்து விட்டது, இவர் “இப்படம் நாத்திகனை ஆத்திகன் ஆக்கும் படம்” என்று கூறி விட்டார். இப்ப “தி க” காரங்க இதை நாங்க அனுமதிக்க முடியாது இது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அவமதிக்கும் படி உள்ளது என்று போராட்டம் எதுவும் ஆரம்பித்து விடுவார்களா?
யப்பா சீக்கிரம் படத்தை வெளியிடுங்க.. இல்லேன்னா உங்களை ஒரு வழி ஆக்கிடுவாங்க…
No related posts.


{ 4 comments… read them below or add one }
>>> இப்ப “தி க” காரங்க இதை நாங்க அனுமதிக்க முடியாது இது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அவமதிக்கும் படி உள்ளது என்று போராட்டம் எதுவும் ஆரம்பித்து விடுவார்களா < <<<
))))))))))))))
எப்படியா படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்குது..
இனிமேல் வரும் படங்களிலும், “சர்ச்சைக்குரிய” காட்சிகளை எதிர்பார்க்கலாம்.
//எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்து விட்டது, இவர் “இப்படம் நாத்திகனை ஆத்திகன் ஆக்கும் படம்” என்று கூறி விட்டார். இப்ப “தி க” காரங்க இதை நாங்க அனுமதிக்க முடியாது இது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அவமதிக்கும் படி உள்ளது என்று போராட்டம் எதுவும் ஆரம்பித்து விடுவார்களா?//
பத்த வச்சிட்டியே பரட்டே….
பத்தவைக்கலைங்க உண்மையை சொன்னேன்
இன்னைக்கு செய்தி பார்த்தீர்களா? வைஷ்ணவர்களின் மனதை புண் படுத்தும் படி காட்சிகள் அமைத்து இருப்பதாக கூறி அவங்க வழக்கு பதிவு செய்து இருக்காங்க. இப்படியே போனால் “பிரச்சனை அவதாரம்” னு இன்னொரு வேடம் சேர்க்க வேண்டி இருக்கும். இவங்களும் சும்மா அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு இப்படி சொல்லிட்டே இருப்பாங்க. இதுக்கெல்லாம் ஒரே வழி பேசாம படத்தை வெளியிடுவது தான். அப்புறம் யாரும் ஒண்ணும் பண்ண முடியாது, இரண்டு நாள் சத்தம் போடுவாங்க, அப்புறம் அடுத்ததா “குசேலன்” வருதுல்ல அதுல பார்த்துக்கலாம்னு விட்டுடுவாங்க
)))