மல்லிகா ஷெராவத் உடை பிரச்சனை + தசவாதாரம் சிலை பிரச்சனை

by கிரி on May 2, 2008

jackie2 மல்லிகா ஷெராவத் உடை பிரச்சனை + தசவாதாரம் சிலை பிரச்சனை
dashavatharam 07 மல்லிகா ஷெராவத் உடை பிரச்சனை + தசவாதாரம் சிலை பிரச்சனை

என்னடா இது! இன்னும் மல்லிகா ஷெராவத் உடையை பிரச்சனை ஆக்காமல் இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அதெல்லாம் விட்டுடுவோமா, அதுக்குள்ளே எங்களை பற்றி வேறு முடிவுக்கு வந்தால் எப்படி என்று இந்து மக்கள் கட்சி யில் இருந்து கனிராஜன் ஒரு வழக்கை பதிவு செய்து விட்டார்.

“நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் !!! சுளித்தனர்.

முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் (அப்படியா!!!) செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது!!!!. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது” இவ்வாறு அவருடைய புகாரில் கூறி இருக்கிறார்.

நாட்டுல எத்தனையோ பிரச்சனை மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் இருக்க இப்ப இது ரொம்ப முக்கியமா? என்ன கொடுமை சார் இது?

நல்ல வேளை ஜாக்கி சான் ஆணாக போய் விட்டார், இல்லை என்றால் அவரும் உடை சரியாக அணியவில்லை என்று வழக்கு பதிவு செய்து இருப்பார்கள்.

கொசுறு தகவல்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

ஸ்ஸூ இப்பவே கண்ணை கட்டுதே! முடியல!!

No related posts.

{ 2 comments… read them below or add one }

யோகன் பாரிஸ்(Johan-Paris) May 3, 2008 at 3:40 AM

தசாவதாரத்தை வெற்றிப் படமாக்குவதாக இவர் முடிவெடுத்து விட்டார்.

Reply

கிரி May 3, 2008 at 9:47 AM

வாங்க யோகன் :)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed