திருவள்ளூரில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் இறந்து விட்டது, இதன் பிறகு சென்னை மற்றும் சில இடங்களில் இதே போல நடந்து குழந்தைகள் பலியாகின. இந்த சோகமே இன்னும் முடியாத நிலையில் காட்டு மன்னார் கோவில் அருகே ஒரு குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசியால் அந்த குழந்தை இறந்தது.
இன்று இறந்து போன குழந்தை யின் தாய் தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றாலும், தற்போது 4 குழந்தைகள் பலி ஆனதால், பயந்து தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போடாமல் இருந்தார், ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் ஒன்றும் பயம் இல்லை, தைரியமாக வந்து ஊசி போடுங்கள் என்று கூறியதால் சென்று தன் குழந்தைக்கு ஊசி போட்டு வந்தார், பகல் முழுவதும் நன்றாக இருந்த குழந்தை இரவு இறந்து விட்டது என்று கூறி அழுதார்.
என்னதான் நடக்குது இங்கே? குழந்தைகள் உயிருடன் இவ்வளவு மட்டமாகவா விளையாடுவது. அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? சுகாதார துறை அமைச்சர் அன்புமணி என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. சம்பந்த பட்டவர்கள் அனைவரும் அடுத்தவரை கை காட்டி கொண்டு இருக்கிறார்கள்.ஒரு குழந்தை கிடைக்க அனைவரும் தவம் செய்து கொண்டு இருக்கையில் இந்த மாதிரி கவனக்குறைவால் தன் குழந்தைகளை இழக்கும் பெற்றோருக்கு என்ன சமாதானம் சொல்வது?
இதற்க்கு யாருடைய கவனக்குறைவு காரணம் என்றாலும், குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இவர்களுக்கு யாராகினும் கடும் தண்டனை கொடுத்தாக வேண்டும். விசாரணை நடத்துறேன்னு சொல்லுறாங்க… என்ன நடத்தி என்னங்க பண்ணறது போன உயிர் திரும்ப வருமா? இவங்க விசாரணையை இவங்க தான் மெச்சிக்கணும்.
No related posts.

{ 4 comments… read them below or add one }
என்னடா நடக்குது இங்கே. உசிரோட விளையாடுறாங்க..
கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல்..
மனுநீதி மன்னா? நீ வாழ்ந்த தமிழகத்தில் இப்படி பச்சைப்பாலகர்களுடன் விளையாடுறாங்க.
எனக்கே ரெத்தம் துடிக்குது.. அந்தப் பச்சைக்குழந்தைகளின் தாயார்களின் சாபத்துக்கு ஆளாகி இருக்கும் ஆட்சியாளர்களை அந்தச் சாபமே தாக்கும்.
எனக்கு அந்த குழந்தையின் நெற்றியில் நாணயத்தை கண்டவுடன் துக்கம் தாளவில்லைங்க. கண் கலங்கி விட்டது.
ஐரோப்பா, அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்திருந்தால்… பெரும் கலவரமும், ஊர்வலமும் என அந்த நாடே அமர்களப்பட்டிருக்கும். ஆட்சி கூட கவிழ்ந்திருக்கும்!!
நம்ம ஊர்ல எல்லோரும் நினைப்பது … எவன் குழந்தையோ சாகுது நமக்கு என்ன? பொறுமையா பார்ப்போம் என்கிற மன நிலை தான் இது மாதிரி தவறுகள் நடப்பதற்கு காரணம். உங்க வருகைக்கு நன்றி கருப்பன்.