மே 30 க்கு பின் மின்வெட்டே இருக்காது !!! – அமைச்சர் ஆற்காடு வீராசாமி

by கிரி on May 12, 2008

fan1 மே 30 க்கு பின் மின்வெட்டே இருக்காது !!!   அமைச்சர் ஆற்காடு வீராசாமி

“காற்றாலை மின் உற்பத்தி மூலம் கடந்த மாதம் 27 ம் தேதியில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15 ம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை (இந்த பொய் ஆண்டவனுக்கே அடுக்காது). சில பகுதிகளில் இருக்கும் சிறு !!!!!!!!!!!!!!!!!!!! அளவிலான மின்வெட்டு வரும் 30 ம் தேதிக்கு பிறகு முற்றிலும் இருக்காது” என்று செய்தியாளர்களிடம் ஆற்காடு வீராசாமி கூறி உள்ளார்.

இல்ல தெரியாம தான் கேட்கிறேன். அது எப்படிங்க இவங்க மட்டும் மின்வெட்டு இல்லை இல்லைன்னு சொல்லிட்டே இருக்காங்க, ஒருவேளை இவங்க வீட்டுல இல்லைங்கறாங்களா? அவனவன் மின்சாரம் இல்லாமல் படுற கஷ்டம் இவங்களுக்கு எங்க தெரிய போகுது, புழுக்கம் தாங்காமல் ஜன்னலை திறந்து வைத்தால் இது தாண்டா நல்ல சமயம்னு திருடர்கள் வந்து எல்லாத்தையும் திருடிட்டு போய்டுறாங்க. குழந்தைகள் எல்லாம் இரவில் தூங்க முடியாமல் அவதி படுகிறார்கள். சமையல் செய்ய இப்பொழுது மின்சாரம் இல்லை என்றால் பாதி வேலை செய்ய முடிவதில்லை. மின்சார பாதிப்பு சென்னையில் அவ்வளவாக அதிகமாக இல்லை, கிராமங்களிலும் புற நகர் பகுதிகளிலும் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.

எனக்கு இன்று வரை புரியாதது, தி மு க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த மின்சார பிரச்சனை (எப்போதும் போல வீராசாமி தான் அமைச்சர்), அதுவும் இந்த முறை அனைத்து இடங்களிலும் வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்தது, அப்படி இருக்கும் பொழுது மின்சாரம் இல்லை இல்லைன்னு இதையே சொல்லிட்டு இருக்காங்க. நான் அ தி மு க சார்பாக கூறவில்லை, உண்மையிலேயே அவர்கள் ஆட்சியில் மின்வெட்டு இதை போல மோசமாக இல்லை.

இந்த கட்சிகாரங்க கூட்டம் போடுறேன்னு சொல்லி இருக்கிற மின்சாரத்தை எல்லாம் வயர் போட்டு இழுத்து தெருக்கு 100 மின்சார விளக்குகளை தேவை இல்லாமல் எரிய விட்டு ஒலி பெருக்கிகளை அலற விடாமல் இருந்தாலே பாதி மின்சாரம் சேமிக்கப்படும். வரும் 30 தேதிக்கு பிறகு மின் வெட்டே !!! தமிழகத்தில் இருக்காதுன்னு ஆற்காடு வீராசாமி கூறி இருக்கிறார் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

No related posts.

{ 2 comments… read them below or add one }

1 Thiru May 12, 2008 at 4:16 PM

Mr Giri ….avarkalee malai athikamaka peivatharkkum min urpaththirkkum enna thodarpu enru koora mudiyuma ??????

Reply

2 கிரி May 12, 2008 at 5:54 PM

யோவ் வந்துட்டீங்களா?

இருக்குயா இருக்கு சம்பந்தம் இருக்கு. முடிந்தா கண்டு பிடிங்க பார்க்கலாம்? ;)

குருவி ல “த்ரிஷா” வ பற்றி சொன்னதுக்கு போய் பார்த்துட்டு கருத்து !!! சொல்லிட்டீங்க…. ஹீ ஹீ அதே பொறுப்போடு இதுக்கும் கண்டு பிடிங்க :) )))

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: