என் 100 வது பதிவு :-) கடந்து வந்த பாதைகள் !!!

May 21, 2008

grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!!

இது என்னுடைய 100 வது பதிவு. பிளாக்கர் கணக்கு 2006 ஆண்டே துவங்கி இருந்தாலும் பதிவு எழுத ஆரம்பித்தது என்னவோ 3 மாதம் முன்பு தான். கணிப்பொறி துறையில் இருந்தாலும் எனக்கு என்னவோ இந்த தமிழ் பிளாக்கர் மற்றும் தமிழ்மணம் பற்றி தெரியாமல் போய் விட்டது. இணையத்தில் சுற்றிக்கொண்டு இருந்த பொழுது எதேச்சையாக இதை பார்த்து அட! இதை நாம் எப்படி தவற விட்டோம் என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு பொதுவாக இணையத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் முதலில் சாதரணமாக மின்னஞ்சல் அனுப்பி கொண்டு இருந்த நான் யாஹூ க்ரூப்ஸ் ல பதிவு செய்து க்ரூப்பில் இருந்து ரொம்ப வருடமாக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன், எனக்கு வரும் நல்ல மின்னஞ்சல்கள், பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் என்று, பிறகு அடுத்த கட்டமாக வேறு எதாவது செய்ய வேண்டும் என்று இருந்த போது யாஹூ 360* கிடைத்தது அதில் சில படங்களை போட்டு என் கருத்துக்களை கூறி வந்தேன். இருந்தும் திருப்தி கிடைக்கவில்லை. நான் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வந்தாலும் அதற்கு நல்லா இருக்கு அல்லது இந்த மின்னஞ்சல் சரி இல்லை என்று எவரும் கூற மாட்டார்கள், (என் க்ரூப்பில் என்னுடைய நண்பர்களை மட்டுமே இணைத்து இருந்தேன்) எப்போவது ஒரு சில பதில்கள் அதிசயமாக வரும். எனக்கு அது உற்சாகம் அளிக்கவில்லை, எந்த ஒரு செயலுக்கும் உற்சாகமூட்டுதல் இல்லை என்றால் நம்மால் பணியை தொடர முடியாது, ஒரு காலகட்டத்தில் நமக்கு வெறுப்பு வந்து விடும். நானும் அந்த நிலையை அடைந்து இருந்தேன்.

அப்போது கிடைத்தது தான் இந்த வலை தளம். எனக்கு இது மிக சந்தோசத்தை கொடுத்தது, நமக்கு தோன்றியதை தமிழில் எழுதலாம் நம் எழுத்து பிடித்து இருந்தால் பலர் வந்து பார்வை இடுவார்கள் என்ற நிலை என்னை மேலும் உற்சாகமூட்டியது. எனக்கு html java போன்ற பகுதிகளில் அவ்வளவாக அறிவு இல்லை என்றாலும் என்னுடைய வலைதளத்தை அழகாக வைத்து கொள்ளவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதற்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் தேடுதல்கள் மிக அதிகம். ஒரு தேடுதலில் இறங்கி விட்டால் அது கிடைக்கும் வரை விட மாட்டேன். நான் தேடியோ அல்லது யாரிடமாவது கேட்டு அதை முடித்து விடுவேன்.

பதிவுகள் பல எழுதி இருந்தாலும் அதில் நல்ல பதிவுகள் ஒரு சில தான் இருக்கும். என்னுடைய பதிவுகளை பார்வையிட்டவர்கள் 3 மாதத்தில் 11000 பேர் மேல் இருந்தாலும், எனக்கு வந்த பின்னூட்டங்கள் மிக மிக குறைவு. ஒரு சிலர் தொடர்ந்து என் பதிவுகளை படிக்கிறார்கள் அதில் பின்னூட்டம் இடுபவர்கள் 50 ல் ஒருவரே :-((. ஒரு சில நேரம் என்னடா இது நாம நல்லா எழுதிய பதிவுக்கும் ஒருத்தரும் எதுவும் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது, ஆனால் என்னுடைய முந்தய மின்னஞ்சல் நிலைமை போல் இல்லாமல் அப்பப்ப ஒரு சில பின்னூட்டங்கள் வந்து என்னை சமாதான படுத்தி grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!! கொண்டு இருந்தன அதே போல வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் திருப்தியாகவே இருந்தேன். யார் பின்னூட்டம் போட்டாலும் போடாவிட்டாலும் அல்லது வரவில்லை என்றாலும் ஆபாசமான தலைப்புகளோ அல்லது செய்திகளோ உள்ள பதிவுகளை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். தற்போது கொஞ்சம் பின்னூட்டம் முன்பை விட பராவாயில்லை என்ற அளவில் வருவது ஒரு பெரிய ஆறுதல் grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!!

நான் முதலில் வலைப்பதிவு வெட்டிப்பயல் என்ற பெயரில் துவங்கவே வந்தேன் grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!! ஆனால் அதில் ஏற்கனவே நம்ம பாலாஜி இருந்தார், சொல்ல போனால் எனக்கு அவருடைய பதிவுகளை படித்த பிறகு தான் நாம் கண்டிப்பாக ஒரு வலைப்பதிவு துவங்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. காசி மற்றும் வசந்தம் ரவி அவர்களின் தொழில்நுட்ப பதிவுகள் எனக்கு மிக உதவியாக இருந்தது. அதற்கு அவர்களுக்கு என் நன்றி. வசந்தம் ரவி சூடான இடுகைகளில் எப்படி இடம் பிடிப்பது என்று ஒரு அருமையான பதிவு எழுதி இருந்தார், நடைமுறையை அப்படியே எழுதி இருந்தார், ஆனால் நான் அதில் அவ்வாறு எழுத மாட்டேன் என்று பின்னூட்டம் இட்டு இருந்தேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன். தலைப்பை மட்டுமே நம்பி நல்ல பதிவுகளை தவற விட்டது ஏராளம் அதே போல தலைப்பை நம்ம்பி வந்து உள்ளே ஒன்றும் இல்லை என்று ஆனதும் அதிகம். எனவே பதிவு மட்டும் நன்றாக இருந்தால் போது அதற்கு தலைப்பு தான் முக்கியம் என்று அறிந்தேன். பல பதிவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

திரைக்கதை சரி இல்லை என்றால் நல்ல படமும் தோல்வி அடைந்து விடுகிறது. நல்ல படங்களையும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் கொடுத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் (எடுத்துக்காட்டாக பருத்தி வீரனை கூறலாம்). அதே போல நம்முடைய பதிவையும் மற்றவர்கள் விருப்பமாக படிக்கும் படி கொடுத்தால் மட்டுமே அனைவரும் வருவார்கள் என்று நான் இந்த 3 மாதத்தில் தெரிந்து கொண்டேன் grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!! அப்புறம் ஒன்றும் இல்லாத ஒரு சில பதிவுகளுக்கு எல்லாம் ஏன் அனைவரும் போகிறார்கள் என்றால்… அதற்கும் ஒரு சில :))))) படங்களை உதாரணம் சொல்ல முடியும் ஆனால் வேண்டாம் grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!! எனவே மற்றவர்களை குறை கூறுவதை விட்டு நம்மில் என்ன குறை என்று தெரிந்து கொண்டாலே போதும் என்பது என் கருத்து.

இது வரை என் வலைப்பதிவுக்கு வந்தவர்களுக்கும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும்,தொடர்ந்து இடுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து வாருங்கள் உங்கள் நிறை குறைகளை கூறுங்கள். என்னுடைய பதிவுகள் பல நகைச்சுவையும் நய்யாண்டியுமே இருக்கும், யாருடைய மனதையாவது இவை புண் படுத்தி இருந்தால் போன போவுதுன்னு என்னை மன்னித்து விடுங்க grey என் 100 வது பதிவு : ) கடந்து வந்த பாதைகள் !!! நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி “பதிவுல இதெல்லாம் சாதாரணமப்பா” ன்னு எடுத்துக்குங்க.

ஸ்டார்ட் மியூசிக் :-)))

{ 32 comments… read them below or add one }

Sen22 May 21, 2008 at 9:11 AM

வாழ்த்துகள் கிரி…
தொடர்ந்து எழுதுங்கள்…

Enrum Natpudan,
Senthil

Reply

ஜெகதீசன் May 21, 2008 at 9:18 AM

வாழ்த்துக்கள் கிரி…. :)

Reply

கிரி May 21, 2008 at 9:23 AM

செந்தில் ஜெகதீசன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி

ஜெகதீசன் நான் இன்னும் சிங்கப்பூர் சிங்கத்தை பார்க்கவில்லை :-)

Reply

துளசி கோபால் May 21, 2008 at 10:06 AM

என்னய்யா இது அதுக்குள்ளே 100 ஆஆஆஆஆஆஆ?

அடிச்சு ஆடறீங்க போல!!!!!

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

Reply

முரளிகண்ணன் May 21, 2008 at 10:36 AM

வாழ்த்துக்கள் கிரி விரைவில் ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள்

Reply

இத்துப்போன ரீல் May 21, 2008 at 11:58 AM

ரொம்பத்தான் ஸ்பீடுங்க!….மனம் கனிந்த வாழ்த்துக்கள்!…

அன்புடன். இத்துப்(போன)போகாத ரீல்!!!

Reply

கிரி May 21, 2008 at 12:15 PM

// துளசி கோபால் said…
என்னய்யா இது அதுக்குள்ளே 100 ஆஆஆஆஆஆஆ?//

எனக்கே தெரியல :)) என்னடா! ஒரு 3 மாசமா எழுதறோம் சரி எவ்வளவு எழுதி இருக்கோம்னு பார்த்தால் 85 னு இருக்கு அடங்கொக்கமக்கா! அதுக்குள்ள இத்தனை எழுதி விட்டோமா!! சரி ரொம்ப ஆர்வமா இருக்கோம் போல இருக்குன்னு நினைத்துட்டேன் :-)

Reply

கிரி May 21, 2008 at 12:16 PM

// முரளிகண்ணன் said…
வாழ்த்துக்கள் கிரி விரைவில் ஆயிரம் அடிக்க வாழ்த்துக்கள்//

:-) நன்றிங்க முரளி கண்ணன்

Reply

கிரி May 21, 2008 at 12:25 PM

//ரொம்பத்தான் ஸ்பீடுங்க!….மனம் கனிந்த வாழ்த்துக்கள்!…//

ரொம்ப நன்றிங்க ரீல்

//அன்புடன். இத்துப்(போன)போகாத ரீல்!!!//

ஹா ஹா ஹா இனிமேல் நான் ரீல் னு தான் சொல்வேன், அன்றே சொல்லிவிட்டேன்.

Reply

இறக்குவானை நிர்ஷன் May 21, 2008 at 12:44 PM

வாழ்த்துக்கள் கிரி.
தொடர்ந்து எழுதுங்கள்

Reply

கிரி May 21, 2008 at 12:58 PM

//வாழ்த்துக்கள் கிரி. தொடர்ந்து எழுதுங்கள்//

நன்றி இறக்குவானை நிர்ஷன். நீங்களும் தொடர்ந்து வாருங்கள், தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள்.

Reply

Vidhya May 21, 2008 at 1:31 PM

வாழ்த்துகள் கிரி. அடிச்சு சாத்துறீங்க போல இருக்கு … கலக்குங்க.

உங்கள் நிஜங்கள் தொடர வாழ்த்துகள் :-)

Reply

Senthilkumar Manavalan May 21, 2008 at 4:56 PM

Congrats giri.
Read some articles. very nice. I know how much time it consumes. Continue…

Reply

கோவி.கண்ணன் May 21, 2008 at 5:05 PM

கிரி,

100க்கு மனமார்ந்த வாழ்த்துகள். ப்ளாக் எழுதும் அனைவரின் கதைகளும் கிட்டதட்ட இதே போன்று சற்று மாறுபட்டதுதான்.
:)

Reply

கோவி.கண்ணன் May 21, 2008 at 5:07 PM

//கிரி said…

ஜெகதீசன் நான் இன்னும் சிங்கப்பூர் சிங்கத்தை பார்க்கவில்லை :-)
//

கிரி,
என்னது ஜெகதீசனை இன்னும் பார்க்கவில்லையா ?

Reply

கிரி May 21, 2008 at 6:27 PM

Senthil Kumar said…
Congrats giri.

நன்றி செந்தில். தொடர்ந்து வரவும், படித்து உன் கருத்தை கூறவும் :-)))

Reply

Aruna May 21, 2008 at 6:31 PM

//யார் பின்னூட்டம் போட்டாலும் போடாவிட்டாலும் அல்லது வரவில்லை என்றாலும் ஆபாசமான தலைப்புகளோ அல்லது செய்திகளோ உள்ள பதிவுகளை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்//

100-வது பதிவு ????வாழ்த்துக்கள்!!!!! நல்ல பாலிசி …..தொடர்ந்து பின்பற்றுங்கள்….
அன்புடன் அருணா

Reply

கிரி May 21, 2008 at 6:32 PM

வாங்க கோவிக்கண்ணன். என்னடா இது நீங்கள் இன்னும் வரவில்லையே என்று இருந்தேன் :-) சரி சென்னையில் வேலை சரியாக இருந்து இருக்கும் என்று நினைத்துகொண்டேன். எப்போது சிங்கை வருகிறீர்கள் ?

//கிரி,
என்னது ஜெகதீசனை இன்னும் பார்க்கவில்லையா //

ஹா ஹா ஹா. ஜெகதீசன் காண்டாகி விட போறாரு :-)))

Reply

கிரி May 21, 2008 at 6:37 PM

வாங்க அருணா! உங்களின் தொடர்ச்சியான உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்திற்கு என் நன்றி. தொடர்ந்து வாங்க.

Reply

Logan May 21, 2008 at 10:34 PM

கில்லி கிரி நூற தொட்டடிங்க வாழ்த்துக்கள் சீக்கரம் சிங்கப்பூர் விமான அனுபவத்தை சொல்லி முடிங்க… ஆர்வமா இருக்கு.

Reply

கிரி May 22, 2008 at 9:33 AM

//கில்லி கிரி நூற தொட்டடிங்க வாழ்த்துக்கள்//

கில்லாடி லோகன்.. எங்க உங்கள கொஞ்ச நாளா ஆளையே காணோம்!!

Reply

keyven May 22, 2008 at 11:31 AM

வாழ்த்துகள் கிரி…
—-
நாங்களும்..ஸ்டார்ட் பண்ணிடோம்ல…

http://keysven.blogspot.com

இங்கயும் கொஞ்சம் வந்துட்டு போங்களேன்…!! நீங்கள் வந்து பின்னூட்டம் போட்ட தான் கொஞ்சமாவது..எனக்கு ஒரு திருப்தி..

Reply

கிரி May 22, 2008 at 12:08 PM

பின்னி பெடலெடுக்க வாழ்த்துக்கள்.

உங்க ப்ளாக் ல பின்னூட்டம் போட்டு விட்டேன் :-) நம்மால முடிஞ்சது.

Reply

மங்களூர் சிவா May 22, 2008 at 4:59 PM

vaazhthukkal giri. today only I come to know ur blog from Pudugai thendral’s link.

Reply

கிரி May 22, 2008 at 5:03 PM

// மங்களூர் சிவா said…
vaazhthukkal giri. today only I come to know ur blog from Pudugai thendral’s link.//

இல்லை சிவா நீங்க ஏற்கனவே வந்து பின்னூட்டம் இட்டு இருக்கீங்க ;) உங்க பெயரை மறந்தாலும் உங்க ஊர் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது :-)

Reply

கிரி May 22, 2008 at 5:30 PM

சிவா இந்த பதிவுல போய் பாருங்க உங்க பின்னூட்டத்தை

http://girirajnet.blogspot.com/2008/03/1.html எப்படி கலக்கிட்டோமா :-)

நீங்க எனக்கு உதவி செய்து இருக்கீங்க அதுல :-) நன்றி மறப்பது நன்றன்று

Reply

மங்களூர் சிவா May 22, 2008 at 5:45 PM

/
கிரி said…
// மங்களூர் சிவா said…
vaazhthukkal giri. today only I come to know ur blog from Pudugai thendral’s link.//

இல்லை சிவா நீங்க ஏற்கனவே வந்து பின்னூட்டம் இட்டு இருக்கீங்க ;) உங்க பெயரை மறந்தாலும் உங்க ஊர் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது :-)
/

அட ஆமாம் நான் ஏற்கனவே வந்திருக்கேன் உங்க ப்ளோக்குக்கு!!

Reply

Thiru May 27, 2008 at 10:56 AM

வாழ்த்துக்கள்…உங்கள் சேவை எங்களுக்கும்… தமிழுக்கும் தேவை …

Reply

கிரி May 27, 2008 at 12:02 PM

யோவ் திரு உங்க மொக்கை தாங்கலையா :-(((((

Reply

அதிஷா May 27, 2008 at 1:25 PM

சதத்துக்கு வாழ்த்துகள் கிரி…

1000 ஆவது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்… ;-)

Reply

கிரி May 27, 2008 at 2:08 PM

நன்றி அதிஷா.

என் வலைப்பதிவுக்கு தொடர்ந்து வாருங்கள், பதிவுகள் பிடித்திருந்தால்.

Reply

பெரிய உருவம் உடைய சின்ன பையன் December 8, 2009 at 4:08 PM

ungal sevai engallukku thevai….nantri

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed