ஏர்டெல் STD மற்றும் ரோமிங் கட்டணங்களை குறைத்தது!

by கிரி on April 29, 2008

aitel ஏர்டெல் STD மற்றும் ரோமிங் கட்டணங்களை குறைத்தது!

STD மற்றும் ரோமிங் கட்டணங்களை குறைத்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திடம் 6.2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ரோமிங் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் பொதுவாக யாரும் வெளி மாநிலங்களுக்கு சென்றால் கைதொலைபேசியை பயன்படுத்துவது இல்லை (கை தொலைபேசியை அணைத்து விடுகின்றனர்), STD கட்டணங்களும் அதிகம் என்பதால் இதை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதத்தில் கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

தற்போது STD கட்டணமாக நிமிடத்திற்கு 2.60 ஆக உள்ளது இது 1.50 ஆக குறைக்கப்படுகிறது. ரோமிங்கில் இருக்கும் போது இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு 1.75 வசூலிக்கப்பட்டு வந்தது, இனி 1 ருபாய் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கட்டண குறைப்பு ஏப்ரல் 30 ம் தேதி முதல் அமுலாகிறது.

அரசு முன்பு ரோமிங் கட்டணங்கள் அனைத்தையுமே நீக்குவதாக கூறி வந்தது அது என்னானது என்று தெரியவில்லை. குறைந்தது தென் மாநிலங்கள் இடையே மட்டுமாவது ரோமிங் கட்டணம் நீக்கப்பட்டால் அனைவருக்கு எளிதாக இருக்கும். இதன் காரணமாக பலருக்கு மாநிலத்துக்கு ஒரு எண் என்ற அளவில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டியது உள்ளது. தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் பெங்களூர் வேலை நிமித்தமாக சென்றால் அல்லது அங்கே வேலையில் சேர்ந்தால் இந்த நடைமுறை பிரச்சனை உள்ளது.

எது எப்படி என்றாலும் ஏர்டெல் கட்டண குறைப்பு பலருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.

பின் குறிப்பு:

ஏர்டெல் வாடிக்கையாளர் சேவையிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டு பின்பு பயன்படுத்தவும்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed