“இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்… உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா… மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்… யார் சொன்னால் கேட்பார்கள்… புரியவில்லை.என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்… நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல்.
அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா…?எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்… அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்த பிரச்னைக்கு இப்போது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டி தீர்வு காண முடியாது.இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள் என்றார் ஆவேசமாக”
பொதுவாக ரஜினி பேசும் எந்த பேச்சுக்கும் குற்றம் கண்டு பிடிக்கும் ஒரு சிலர், இதற்க்கு என்ன சொல்ல போகிறார்கள். இதுவும் உபயோகமற்ற பேச்சா? எப்படி பேசினாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களை மாற்ற முடியாது.
நன்றி : தட்ஸ்தமிழ்
No related posts.


{ 5 comments… read them below or add one }
இதுக்கு பதிவு வேற போட வேண்டியதா போச்சு ..
http://manvettiyan.blogspot.com/2008/04/tbcd.html
வாங்க மண்வெட்டியான் நீங்க யாஹூ ல இருந்து எடுத்து சொல்லி இருக்கீங்க நான் தட்ஸ்தமிழ் ல இருந்து எடுத்து கூறி இருக்கிறேன். அதை என்னுடைய பதிவிலும் கூறி இருக்கிறேன். ரஜினி எந்த தலைவரையோ சொல்லட்டும் ஆனால் அவர் சொல்ல வந்த கருத்து சரியாக இருந்தது அவ்வளவே. எனக்கு தெரிந்து இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் எதியுரப்பா தான் என்று கருதுகிறேன் கூடவே வாட்டாள் நாகராஜ். எஸ் ம் கிருஷ்ணா கலைஞரின் கருத்தை பற்றி மாற்றி கூறினார். எனவே ரஜினி யாரை பற்றி கூறி இருந்தாலும் கவலை இல்லை, ஏனென்றால் அங்கே ஒருவர் கூட யோக்கியம் இல்லை
)
உங்க டெம்ப்லேட் ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கீங்க
வாங்க வெட்டிப்பயல்! உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. எனக்கு இன்னும் html java அறிவு அதிகம் இருந்தால் இன்னும் சிறப்பாக செய்து இருப்பேன். இதற்காக படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்புறம் உங்கள் வலைப்பதிவு பெயர் வைக்க தான் வந்தேன் ஆனால் நீங்கள் ஏற்க்கனவே வைத்து இருந்ததால் என்னோட பெயரிலேயே தொடங்கி விட்டேன். மனதில் பட்டதை எழுதுகிறேன்,முடிந்த வரை யாருடைய மனதையும் காயபடுத்தாமல் எனவே எனக்கு புனை பெயர் தேவை படவில்லை
ஆனால் நான் வலைப்பதிவு ஆரம்பிக்க நீங்களும் ஒரு காரணம். இந்த (வெட்டிப்பயல்) பெயரை தேடி வந்து உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்து மற்றும் உங்கள் எண்ணங்களை பார்த்து சரி நாமுமொரு வலைப்பதிவு இதை போல் ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தேன். வெட்டிப்பயல் பெயரை ஏன் தேடி வந்தேன் என்று உங்களுக்கு ஏற்கனவே ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறேன், முடிந்தால் நினைவு படுத்தி பார்க்கவும்.
அடிக்கடி வாங்க! எதாவது புதிய மாற்றத்துக்கு உதவி செய்யுங்க. நன்றி.
அப்படியே ரஜினியின் லேட்டஸ்ட் பேட்டியையும் (பல்டி) ஒரு பதிவாக இடவும்!!