தீ மிதி விழாவில் தீயில் விழுந்த நால்வர் – படம்

by கிரி on April 25, 2008

fire தீ மிதி விழாவில் தீயில் விழுந்த நால்வர்   படம் தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே குமாரபுரம் ஊர்காத்த மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது இதில் இரண்டு சிறுமிகளையும் ஒரு சிறுவனை தோளிலும் தூக்கிக்கொண்டு ஒருவர் குண்டத்தில் இறங்கினார், அதில் நடந்து செல்லும் போது பதட்டத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் உடன் இருந்தவர்களும் விழுந்தார்கள், தீயின் வெப்பம் தாங்காமல் கதறுகிறார்கள்.

ஏங்க இவங்க இந்த மாதிரி பண்ணுறாங்க, இரண்டு பேரா போவதே தவறு (ஒரு சிலர் தங்களுடைய குழந்தையையும் எடுத்துக்கொண்டு செல்வார்கள்)இதில் நான்கு பேர் போனால் எப்படி? (ஒரு சிலர் இவ்வாறு இறங்குவதையே தவறு என்கிறார்கள்) நானும் சிறிய வயதில் எங்க ஊரில் வேடிக்கை பார்க்க சென்று குண்டம் இறங்கி இருக்கேன், வெய்யிலில் நடப்பது போல இருந்தது. ஒரு சிலர் எதுவுமே தெரியவில்லை என்றார்கள், ஒரு சிலருக்கு கால்கள் வெந்து விட்டன. தி க காரங்க மற்றும் பல பகுத்தறிவாளர்கள் நடந்து இதில் ஒன்றும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தீயினால் கொப்பளங்கள் ஏற்படுகிறது ஒரு சிலருக்கு எதுவுமே ஆவதில்லை ஆனால் அனைவரும் நடப்பது ஒரே இடத்தில் தான். இதற்கும் மன உறுதிக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

பகுத்தறிவாளர்கள் என்ன கூறினாலும், கடவுளை நம்புவர்கள் இதை போல செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள், சற்றும் குறையவில்லை. “நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் கடவுளை வணங்குவான்னு” நம்ம பதிவர் அனுராதா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

No related posts.

{ 4 comments… read them below or add one }

Thamizhan April 25, 2008 at 10:48 PM

உலகெங்கும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..
பூனை, நாய் ,மருத்துவத்திற்குப் பயன் படுத்தும் விலங்கினம் இவற்றிற்கு இழைக்கும் இன்னல்கள் பற்றி தடுக்கும் முயற்சிகள்…

மூடத்தனத்தின் முழு உருவமாக இந்தியாவில் நடக்கும் இந்த மடத்தனமான கடவுள் வேண்டுகோள்கள் இந்திய அரசால் தடுக்கப் பட வேண்டும்.இந்த நிகழ்ச்சிகள் நட்த்துவோர் சிறையில் அடைக்கப் பட வேண்டும்.

Reply

துளசி கோபால் April 26, 2008 at 1:23 AM

கடவுள் அன்பானவர். அதான் அன்பே கடவுள்னு சொல்றது.

மனுசனாப் பார்த்து, இப்படித் தன்னை வருத்திக்கிட்டாத்தான் கடவுள் நல்லா வச்சுருப்பாருன்னு நினைக்கிறதை எங்கே போய் சொல்லி முட்டிக்கிறது?

தீமிதி, நாக்குலே, உடம்புலே அலகு குத்திக்கிறது, ஆடு கோழி, மாடுன்னு பலியிடறது எல்லாம் மூடநம்பிக்கையின் அடையாளம்.

எல்லா ‘வதை’களையும் நிறுத்தணும்.

Reply

கிரி April 26, 2008 at 4:08 AM

வாங்க தமிழன் மற்றும் துளசி கோபால் நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா இதெல்லாம் மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. வெளிநாடுகளில் இதை விட அதிகமாக நடக்கும் போது, அங்கே நின்று இங்க நிற்பதற்குள் நம்ம கொள்ளு பேரன் பேத்தி கூட அதை பார்க்க முடியாதுன்னு தோணுது.

Reply

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 26, 2008 at 5:29 AM

முதல் நமது மக்களுக்கு உயிரின் பெறுமதியைப் புரிய வையுங்கள்.
இந்த வெந்த பிள்ளைகள் காலம் பூராகப் படப்போகும் வேதனையைப் தெரியவையுங்கள்.
இறைவன் இப்படியான கூத்தில் இல்லை. அடுத்தவர் மேல் காட்டும் அன்பில் தான் உள்ளார் என்பதை அறிய வையுங்கள்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed