தி ஹிந்து + டைம்ஸ் ஆப் இந்தியா + ஜாக்கி சான் = ஒரு விமர்சனம்

by கிரி on April 30, 2008

hindux தி ஹிந்து + டைம்ஸ் ஆப் இந்தியா + ஜாக்கி சான் = ஒரு விமர்சனம்
times தி ஹிந்து + டைம்ஸ் ஆப் இந்தியா + ஜாக்கி சான் = ஒரு விமர்சனம்

ஜாக்கி சான் தசாவதாரம் பாடல் வெளியீட்டிற்காக சென்னை வந்த போது “அவர் அங்கே இருந்து தண்ணீர் மற்றும் சமையல் கலைஞர்கள் உட்பட அனைத்தையும் கொண்டு வந்தார், இந்திய உணவை அவர் சாப்பிட வில்லை. இந்திய திரைப்பட கலைஞர்கள் யாரையும் அவர் சந்திக்க விரும்ப வில்லை” என்று டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் முதல் நம்ம ஊர் தினகரன் பத்திரிக்கை உட்பட அனைவரும் எழுதி இருந்தார்கள். இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஜாக்கி சான் தன்னுடைய இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார். நான் அவ்வாறு செய்யவில்லை வேண்டும் என்றே ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அவ்வாறு செய்து இருந்தால் அதை அவர்கள் நிரூபிக்க முடியுமா என்று கேள்வி கேட்டு நொந்து போய் ஒரு பெரிய அறிக்கை விட்டிருந்தார். சரி! அது தான் எல்லோருக்கும் தெரியுமே அதுக்கென்ன இப்போன்னு கேட்கறிங்களா?

செய்தி ஜாக்கி சான் பற்றி இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டு இருப்பது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் ஒன்று. நானும் இந்த செய்தியை பார்த்து சரி இந்தியாவின் பெரிய மற்றும் பழைமையான நாளிதழ், இதன் செய்தி சரியாகத்தான் இருக்கும், உறுதிப்படுத்தாமல் போட மாட்டார்கள் என்று நம்பினேன், ஆனால் இப்போது நாங்களும் இப்படி தான் செய்தி போடுவோம் என்று நமக்கு அறிவுறுத்தி உள்ளது போல் உள்ளது.

சென்னையில் இந்த நாளிதழ் ஏப்ரல் 14 ம் தேதியில் இருந்து தன்னுடைய பதிப்பை துவங்கி உள்ளது, எனவே அது மக்களிடையே நன் மதிப்பை பெறும்படியான செய்தியை வெளியிடவேண்டாமா? இது மாதிரி வெளியிட்டால் அனைவரும் ஏற்று கொள்வார்களா? என்பது தான் என் கேள்வி?

பொதுவாக ஹிந்து நாளிதழ் சிறப்பான சேவையை வழங்கி வருவது அனைவரும் அறிந்தது. இப்போது அதன் தரம் முன்பு போல் இல்லை என்ற குற்ற சாட்டும் உண்டு. இருந்தாலும் அனைவரின் வீடுகளிலும் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. சிலருக்கு காலையில் இந்த நாளிதழை படிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது. ஹிந்து நாளிதழ் எப்போதுமே உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிடாது. எனவே இந்த நாளிதழ் காலதாமதமான செய்திகளை வெளியிடுகிறது என்ற வெளிப்படையான குற்றச்சாட்டும் உண்டு. ஆனாலும் இந்த நாளிதழ் இதை மாற்றிக்கொள்ளவில்லை. மக்களும் ஹிந்து லேயே போட்டுடான்ப்பா! அப்ப பொய்யாக இருக்காது என்ற மன நிலையில் இருக்கின்றனர். மக்கள் உறுதியான செய்திக்கு இந்த நாளிதழை மட்டுமே இன்னும் நம்புகிறார்கள். இப்போது ஜாக்கி சான் நிகழ்ச்சி மூலம் அது இன்னும் உறுதி ஆகி இருக்கிறது என்பது என் கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வாசகர்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது, ஒரு பொறுப்பான நாளிதழ் இவ்வாறான செய்திகளை தருவது அதன் முன்னேற்றத்தை பாதிக்காதா? என்பது என் கேள்வி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னுடைய ஹிந்து நாளிதழ் மீதான மதிப்பு மேலும் கூடி இருக்கிறது.

No related posts.

{ 3 comments… read them below or add one }

1 Bee'morgan April 30, 2008 at 5:54 PM

ம்.. நானும் ஒத்துக்கொள்கிறேன்.. ஆனால், இவ்விரு நாளிதழ்களையும் ஒரே தட்டில் வைத்து எடைபோடுவது அவ்வளவு சரியாக இருக்காது என்பது என் கருத்து.. நான் கல்லூரியில் இருந்த நாள் தொட்டே, படம் பார்க்க Times Of India பத்தி பத்தியாக படிக்க The Hindu.. அதுதான் formula.. இவ்விரு நாளிதழ்களும் முன்னிறுத்தும் வாசக வட்டமும் முற்றிலும் வேறுபட்டது.. Times முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து வெளிவருவது.. Hindu வோ கொஞ்சம் பக்குவப்பட்ட பிரிவினருக்காக வருவது.. என்னவாயினும், Hindu தான் எப்போதும் என் சாய்ஸ்.. :-)

Reply

2 கிரி April 30, 2008 at 6:14 PM

//Times முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து வெளிவருவது.. Hindu வோ கொஞ்சம் பக்குவப்பட்ட பிரிவினருக்காக வருவது..//

நீங்கள் கூறுவது சரி தான். நான் இதை பழைமையான நாளிதழ் என்ற கண்ணோட்டத்தில் வைத்து கூறினேன்.

Reply

3 நாகு May 1, 2008 at 1:40 PM

hindu is the best

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: