தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்

by கிரி on April 27, 2008

 தசாவதாரம் பாடல்கள்   விமர்சனம்

இரண்டு வருட உழைப்பு, நடிப்புகளின் மொத்த உருவம் கமல்ஹாசன், கமர்ஷியல் இயக்குனர், விளம்பரத்தின் மறு பெயர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், உலகிலேயே முதல் முறையாக ஒருவர் 10 வேடங்கள், படத்தயாரிப்பு செலவு 80 கோடி, பாடல் வெளியீட்டிற்கு மட்டும் 10 கோடி செலவு என்று செய்திகள் கூறுகின்றன (கொஞ்சம் குறைவு இருக்கலாம்), ஜாக்கிசான் பாடல் வெளியிடல் என்று பிரம்மாண்டகளுடன் அனைவரின் எதிர்பார்ப்புகளுடன் பாடல் வெளியாகி உள்ளது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல பாடல்கள் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. என்னுடைய முதல் கோபம் கமல் ஏன் இசைக்கு ஹிமேஷை தேர்ந்தெடுத்தார் என்பது? ஹிமேஷ் ஒரு திறமையான இசை அமைப்பாளராக இருக்கலாம், ஆனால் இசையை நம்முடைய இசையை போல இல்லாமல் பாலிவுட் இசையை போல் அவர் அமைத்து இருப்பது இருப்பது தான் என் கோபத்திற்கு காரணம். இதில் ஹிமேஷை குறை கூற முடியாது, என்ன செய்தாலும் அதை தவிர்க்க முடியாது, தெலுங்கு இசை அமைப்பாளரை இங்கு படத்திற்கு இசை அமைக்க கூறினால் எப்படி இசை குத்து பாட்டாக இருக்குமோ அது போல தான்.

கமலின் ஆஸ்த்தான இசை அமைப்பாளர் இளையராஜாவை இந்த படத்துக்கு தேர்ந்து எடுத்து இருக்கலாம் என்பது என் கருத்து. தேவர்மகன் ஹேராம் விருமாண்டி போன்ற படங்களே இதற்கு சாட்சி. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருப்பார். இவர் இல்லை என்றால் A.R ரகுமானையாவது போட்டு இருக்கலாம். ஹிமேஷ் படத்தின் பிரம்மாண்டத்தையே குலைத்து விட்டார் என்று என் மனம் சமாதானம் ஆகவில்லை.

“கல்லை மட்டும் கண்டால்” மட்டுமே கேட்க நன்றாக உள்ளது இசையில் ஒரு அழுத்தம் தெரிகிறது. ஹரிஹரன் குரல் இதற்கு பெரும் துணை புரிந்து இருக்கிறது. தரமான ஒலி பெருக்கிகளில் கேட்டால் அற்புதமாக இருக்கும்.

“கருப்பனுக்கும்” என்ற பாடல் (இந்த வார்த்தையை பாடலில் என்னால் எங்கே வருகிறது என்று கண்டு பிடிக்கமுடியவில்லை) ரொம்ப அநியாயங்க, ஹிமேஷ் எதோ சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் படத்திற்கு இசை அமைத்தது போல ஜில் ஜில்லுனு சப்பையாக போட்டு இருக்கிறார் அப்படியே பாலிவுட் இசை. எந்த ஒரு அதிர்வையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. மிக வேகமான பாடல் இது அதற்கு தகுந்த மாதிரி ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டாமா?

“முகுந்தா முகுந்தா” என்ற பாடலை சாதனா சர்கம் பாடி உள்ளார், கடவுள் பாடலாக உள்ளது, பாடல் நன்றாக உள்ளது ஆனால் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதில் கமலும் கிழவி குரலில் பாடி உள்ளார் (கூறினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்)

“ஒ ஒ சனம் ஒ ஒ” இந்த பாடலும் இன்னொரு பாலிவுட் பாணி இசை பாடல். கமலே பாடி உள்ளார், இந்த பாடல் ஹே ராம் படத்தில் வரும் கமல் பாடிய “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் குரலையும் உல்லாசம் படத்தில் கமல் பாடிய “முத்தே முத்தம்மா” என்ற பாடலையும் நினைவு படுத்துகிறது. கமல் தவிர்த்து வேறு யாரவது பாடி இருக்கலாம்.

“ஒ ஒ சனம் ஒ ஒ” ரீமிக்ஸ் பாடல் பாடியது ஹிமேஷ். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை.

“உலக நாயகன்” என்ற பாடல் ரஜினி படத்தில் வரும் பாடலை போல உள்ளது.”உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு ..உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு” இதை வினித் என்பவர் பாடி உள்ளார், ஐ நா உன்னை அழைக்கும் என்றெல்லாம் வருகிறது. பொதுவாக இது போன்ற பாடல் கமல் படங்களில் இருக்காது. இதுவும் பாலிவுட் இசை போல் உள்ளது :( கமல் ரசிகர்கள் மற்றும் பலருக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் என் எதிர்பார்ப்பை இந்த பாடல்கள் பூர்த்தி செய்யவில்லை. ஏங்க பிரம்மாண்ட படம்னா இசையில் ஒரு பிரம்மாண்டம் வேண்டாமா? அதிர வைக்க வேண்டாமா?

பொதுவாக ஒரு சில பாடல்கள் வெளியாகும் போது அவ்வளவாக பேசப்படாது, ஆனால் படம் வெளியான பிறகு காட்சி அமைப்பின் மூலம் பாடல்கள் பட்டய கிளப்புவதுண்டு. ஒரு வேளை அது போல நடக்குமா?

No related posts.

{ 12 comments… read them below or add one }

1 DAWOOD April 27, 2008 at 6:06 PM

NEENGA PATTA INNORU THAPA KELUNGA…………….,

Reply

2 கிரி April 27, 2008 at 6:16 PM

தாவூத் நீங்க சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன், ஒரு சில பாடல்கள் பலமுறை கேட்ட பிறகே பிடிக்கும். இருந்தாலும் இந்த பாலிவுட் இசை தான் என்னால ஒத்துக்க முடியல, அது எத்தனை முறை கேட்டாலும் கூடவே வருமே! உங்க கருத்துக்கு நன்றி.

Reply

3 DAWOOD April 27, 2008 at 8:21 PM

நீங்கள் சொல்லறது சரிதான்

Reply

4 Photon April 28, 2008 at 2:40 AM

Giri,

Naanum athey thaan feel panren

:(

Periya thappu pannitaanga.. kamal and KSR…

Tamil Naattin KatthuKutti kooda ithai vida nandraga isai amaithirukka mudiyum..

Reply

5 கிரி April 28, 2008 at 9:32 AM

:( இதை படம் ஈடு கட்டும் என்று நம்புவோம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Reply

6 கருப்பன்/Karuppan April 28, 2008 at 9:49 AM

நம்ம ஊர்ல பிரம்மாண்டம்னாலே நாலனா கடலை முட்டாயிக்கு 4000 ரூபா பேக்கிங் வேலைதான்.

படார்னு பேக்கிங்க உரிச்சு பாத்து கடலை முட்டாய கண்டறிய உதவுனதுக்கு நன்றிங்கோ!

சிவாஜி படப்பாடல்களை விட கேவலமாக இருக்காது என நம்புகிறேன்!

Reply

7 கிரி April 28, 2008 at 9:52 AM

வாங்க கருப்பன் எப்படி இருக்கிங்க?

உங்க நம்பிக்கை பொய்த்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

Reply

8 கருப்பன்/Karuppan April 28, 2008 at 10:28 AM

:’-(

நலமாக உள்ளேன் கிரி, கமல் நல்ல நடிகர் அவரது படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதை ஈடுகட்ட முடியாமல் தோல்வியடைவது நன்றாக இருக்காது. பாபா கற்றுக்கொடுத்த பாடத்தை அனைவரும் மனதில் வைத்துக்கொண்டால் சரி. தமிழ் சினிமாவில் பாடல்கள் மிகவும் முக்கியமான விஷயம் “ஓ போடு…” என்ற ஒரு பாடலை வைத்து ஹிட்டான ஜெமினி படம் அதற்கு நல்ல உதாரணம்.

தாங்கள் கூறியதைப்போல இளையராஜா கமல் இணை நன்றாக இருந்தது, தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி, விருமாண்டி மாடவிளக்கு பாடல்கள் இன்னும் கேட்பதற்கு சுகமாக இருப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு இந்த பாடல்களை முதன் முறை கேட்டவுடனேயே மிகவும் பிடித்திருந்தது! கேட்க கேட்க பழகிவிடும் பாடல்கள் ரகம் நிச்சம் கமல் படங்களுக்கு உகந்ததல்ல!

Reply

9 Jaffar April 29, 2008 at 2:28 AM


ஒருவளை நமக்கு “கத்தாழை கண்ணாலே…”, “டண்டனக்க டர்ர்ர்ர்ர்” போன்ற பாட்டுக்களின் (?) பாதிப்பு அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

Reply

10 கிரி April 29, 2008 at 9:32 AM

உங்க கூற்று சரியாக இருந்தாலும், அந்த அளவுக்கு பெறுமானதாக இந்த பாடல்கள் உள்ளதாக தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் “டண்டனக்க டர்ர்ர்ர்ர்” !!!பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Reply

11 பாரதி.சி June 19, 2008 at 5:01 PM

எல்லோரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் படம் எடுப்பது எவளவு பெரிய விடயம்? இந்த பாடல்களை குறை கூற உமக்கு சற்றும் அருகதை இல்லை, விமர்சனம் செய்வதை விட்டுட்டு வேற வேலை இருந்தால் பாரும்!!

Reply

12 கிரி June 19, 2008 at 5:08 PM

//இந்த பாடல்களை குறை கூற உமக்கு சற்றும் அருகதை இல்லை, விமர்சனம் செய்வதை விட்டுட்டு வேற வேலை இருந்தால் பாரும்!! //

:-) சரிங்க. உங்க அறிவுரைக்கு நன்றி.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: