அரசுக்கு சொந்தமான 320 கிரவுண்ட் இடம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமெரிக்க தூதரகம் எதிரே இருக்கிறது. அதை தோட்டகலை சங்கத்துக்கு அரசு குத்தகைக்கு விட்டு இருந்தது, அதை தோட்டகலை சங்கம் வுட்லண்ட்ஸ் உணவகத்துக்கு உள் வாடைக்கு விட்டு இருந்தது. சென்னை உயர்நீதி மன்ற மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அந்த இடத்தை திரும்ப எடுத்துக்கொண்டது.
இப்போது அந்த இடத்தில் நவீன உணவகம், உயர்தர பூங்கா, விளையாடும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னையின் முதல் டிரைவ் இன் உணவகமாக இருந்த இந்த வுட்லண்ட்ஸ் நீக்கபட்டதில் பலர் சோகம் அடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக இது கருதப்பட்டு வந்தது. இது பலரின் திரை (புதர்) மறைவு வேலைகளுக்கும் பயன் படுத்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு இது பெரிய சோகம் தான்
எப்படியோ இந்த டிரைவ் இன் உணவகம் போனதில் எனக்கும் வருத்தம் தான் (மேலே குறிப்பிட்டுள்ள சோகத்திற்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
), இருந்தாலும் அனைத்து தரப்பினரும் வந்து போகும் படி இடம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.
No related posts.


