தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் மட்டும் நியாயமா? – படங்கள்

by கிரி on April 3, 2008

கர்நாடாகாவில் உள்ளவர்கள் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், நம்முடைய தமிழகத்திலும் அவ்வாறு நடப்பது (அவங்க அளவுக்கு மோசம் இல்லை என்றாலும்) மனதுக்கு கஷ்டமாக உள்ளது. அவங்க தான் புரிந்து கொள்ளாமல் அப்பாவி மக்களையும் கடையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் தாக்குகிறார்கள் என்றால், தமிழகத்திலும் அதை போல் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. இதை தடுக்க முடியாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போய் விடுகிறது.

kanndabus தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் மட்டும் நியாயமா?   படங்கள்

மதுரையில் கர்நாடக பேருந்து அலுவலகத்தை விட்டு வெளியே வர மறுத்த அலுவலருடன் சேர்த்து அலுவலகத்தை பூட்டி விட்டார்கள், பின்னர் கன்னட எழுத்தை அழித்து பேருந்தை செல்ல விடாமல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.

tamilbus தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் மட்டும் நியாயமா?   படங்கள் கன்னடத்தை சேர்ந்தவர் சங்கீதா உணவக முதலாளி என்று கூறி அந்த உணவகத்தை வக்கீல்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள். அதற்கு அவர் நான் கேரளாவை சேர்ந்தவன் இவர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு என் உணவகத்தை சேதப்படுத்தி விட்டார்கள் என்று புலம்பி உள்ளார்.

sangehotel தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் மட்டும் நியாயமா?   படங்கள்இத்தனை பிரச்சனைக்கும் காரணமான வாட்டாள் நாகராஜ் (தொப்பி அணிந்து இருப்பவர்) கலைஞரின் உருவ பொம்மையை எரித்துக்கொண்டு இருக்கிறார். நல்லா பாலுமகேந்திரா கணக்கா தான் இருக்கிறார்!. படம் எடுப்பதற்கு பதிலா, படம் மற்றும் கடையை எரிப்பதை தொழிலாக கொண்டு உள்ளார்.

vaattaal தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் மட்டும் நியாயமா?   படங்கள்
கடையை எரிப்பவர்களையும், பேருந்தை தாக்குபவர்களையும் மற்றும் வாகனங்களை கொளுத்துபவர்களையும் ஒன்று கேட்கிறேன். இதே உங்கள் கடை, உங்கள வாகனம் மற்றும் உங்கள் வீட்டினர் தாக்கப்படும் பேருந்தில் இருந்தால் செய்வார்களா? எவனோ ஒருத்தன், எவனோ வாகனம், எவன் கடையோ என்ற நினைப்பில் தானே இவ்வாறு செய்கிறார்கள். இது தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பொருந்தும்.

முன்பு கர்நாடகாவில் மட்டுமே இதை போல நடந்தது இப்போது தமிழத்திலும் நடப்பதற்கு காரணம், மக்கள் பொறுமை இழந்தது தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே இந்த முறை இவ்வளோ எதிர்ப்புகள். ஊடகங்களும் ஒரு காரணம், நேற்று தினத்தந்தி அலுவலகம் பெங்களூர் ல் அடித்து நொறுக்கப்பட்டதாக சில ஊடங்களில் வந்தது, ஆனால் இன்றைய தினத்தந்தியில் தமிழ் பெயர் மட்டும் தார் பூசி அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது. நம்முடைய எதிர்ப்பை காட்ட எத்தனையோ வழி இருக்கிறது, பொது மக்களின் சொத்தை சேதப்படுத்தி தான் காட்ட வேண்டியது இல்லை. அங்கே இருக்கும் தமிழ் மக்களை போன்றவர்களே இங்கே இருக்கும் கன்னட மக்களும். எனவே நண்பர்களே அடுத்தவர்களின் சொத்தை சேதப்படுத்தி உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டாம், அங்கே அவர்கள் பேருந்தை தாக்கும் போது எப்படி பொது மக்கள் சிரமப்படுகிறார்களோ அதே போல் தான் தமிழகத்திலும். வலி அனைவருக்கும் பொது தான்.

No related posts.

{ 3 comments… read them below or add one }

1 துளசி கோபால் April 3, 2008 at 9:56 AM

நல்லாச் சொல்லுங்க.

கூட்டமுன்னாவே வன்முறைன்னு ஆகி இருக்கு(-:

ஒ(பு)கைய ஆரம்பிச்சது பின்னே எரியாம இருக்குமா? (-:

Reply

2 Thala June 7, 2008 at 2:21 PM

இந்த வன்முறைக்கு ஒரே தீர்வு : நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னது போல “நதிகள் தேசியமயமாக்க வேண்டும்”

Reply

3 கிரி June 7, 2008 at 2:26 PM

வருகைக்கு நன்றி துளசி மேடம் மற்றும் சக்தி

//”நதிகள் தேசியமயமாக்க வேண்டும்”//

அதை பார்க்க நாம உயிரோட இருக்க மாட்டோம்னு நினைக்கிறேன்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: