முன்பே பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு சலுகை கட்டணம் திரும்ப தரப்படுகிறது

by கிரி on April 1, 2008

railway முன்பே பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு சலுகை கட்டணம் திரும்ப தரப்படுகிறது 2008-2009 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கான கட்டண குறைப்பு இன்று (1-4-08) முதல் அமுலுக்கு வருகிறது. இன்று முதல் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பவர்களுக்கு குறைக்கப்பட்ட அளவே கட்டணமாக வசூலிக்கப்படும்.

இன்று மற்றும் நாளை முதல் செல்ல கடந்த மாதம் அல்லது அதற்கு முன்பே முன் பதிவு செய்தவர்களுக்கு கட்டண குறைப்புக்கான சலுகை தொகை திருப்பி தரப்படும். ரயில் பயணத்தின் போது அவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்படும், அதில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய நிலையங்களில் அளித்து சலுகை தொகையை பெற்று கொள்ளலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல குறைக்கப்பட்ட கட்டண விபரம்:-

கன்னியாகுமரி – ரூ 256

நாகர்கோவில் – ரூ 251

நெல்லை – ரூ 234

தூத்துக்குடி – ரூ 234

மதுரை – ரூ 185

திருச்சி – ரூ 139

இத்துடன் முன்பதிவு தொகை ரூ 20 சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கு கூடுதலாக ரூ 20 வசூலிக்கப்படும்.

கோடை கால விடுமுறைக்கு அனைவரும் கண்டிப்பாக முன் பதிவு செய்து இருப்பார்கள், அவர்கள் அனைவரும் மறக்காமல் மீதி தொகையை பெற்று கொள்ளுங்கள்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed