விண்ணில் பாய்ந்தது பி எஸ் எல் வி – சி 9 ராக்கெட் – இஸ்ரோ உலகசாதனை

by கிரி on April 28, 2008

bslv1 விண்ணில் பாய்ந்தது பி எஸ் எல் வி   சி 9 ராக்கெட்   இஸ்ரோ உலகசாதனை

bslv விண்ணில் பாய்ந்தது பி எஸ் எல் வி   சி 9 ராக்கெட்   இஸ்ரோ உலகசாதனை 10 செயற்கை கோள்களுடன் பி எஸ் எல் வி – சி 9 ராக்கெட் இன்று இந்திய நேரப்படி காலை 9.23 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து நம்முடைய 2 செயற்கை கோள்களையும் மற்ற நாடுகளுடைய 8 செயற்கை கோள்களையும் சுமந்து சென்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இந்தியாவின் ‘கர்டோசாட்-2ஏ’ மட்டுமே, 690 கிலோ எடை கொண்ட பெரிய செயற்கை கோள். இது சுமார் 10 கி.மீ., சுற்றளவிலான பரப்புகளை கருப்பு-வெள்ளையில் படம் பிடித்து அனுப்பும்.

உலகில் இதுவரை எந்த ஒரு நாடும், ஒரே நேரத்தில் 10 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது இல்லை. இது ஒரு உலக சாதனையாகும். கஸ்தூரி ரங்கன் மற்றும் அவர் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வல்லரசு நாடுகளுக்கு நாம் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்தியா நிரூபித்துக்கொண்டே உள்ளது.

மேலும் இது தொடர்பான என் இடுகைக்கு இங்கே சொடுக்கவும்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed