விண்ணை கிழித்து பட்டய கிளப்ப பி எஸ் எல் வி, சி 9 ராக்கெட் தயார் – இஸ்ரோவின் அடுத்த சாதனை

by கிரி on April 24, 2008

Isro logo விண்ணை கிழித்து பட்டய கிளப்ப பி எஸ் எல் வி, சி 9 ராக்கெட் தயார்   இஸ்ரோவின் அடுத்த சாதனை

இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. மற்றவர்களின் தொழில்நுட்பத்துக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று பலமுறை நிருபீத்தும் விட்டது. தற்போது இஸ்ரோ வியாபார ரீதியில் மற்ற நாட்டினரின் செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது அனைவரும் அறிந்தது.

கடந்த முறை மற்ற நாட்டினரின் செயற்கை கோள்களுடன் சேர்த்து மொத்தம் நான்கை வெற்றிகரமாக அனுப்பியது. தற்போது வரும் 28 ம் தேதி கனடா நெதர்லாந்து டென்மார்க் ஜெர்மனி போன்ற நாடுகளுடைய செயற்கை கோள்களுடன் சேர்த்து மொத்தம் 10 செயற்கை கோள்களை இந்த முறை இஸ்ரோ பி எஸ் எல் வி, சி 9 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிஹோட்டாவில் இருந்து அனுப்புகிறது. 10 செயற்கை கோள்களை ஒரு ராக்கெட்டில் அனுப்புவது இஸ்ரோவுக்கு இது தான் முதல் முறை. இதில் நம்முடைய கார்ட்டோசாட் -2 ஏ (690 கிலோ எடை) செயற்கைகோளும் உள்ளது.

இஸ்ரோ இன்னும் இது போல பல சாதனைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

No related posts.

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: