தோனி கொடுத்த பேட்டியில் மூத்த வீரர்கள் அனைவரையும் வாருவாருன்னு வாரி இருக்கிறார். ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிறகு அனைவரும் புகழ்ந்து பேசியதில் உச்சி குளிர்ந்து வெற்றி முழுவதும் தன்னால் வந்தது, தான் எடுத்த முடிவுகளினால் வந்தது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார், இந்திய வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்தாலும் பேச்சில் தன்னடக்கம் இல்லையென்றால் வீழ்ச்சி உடன் வரும் என்பதை அறியாமல் இருக்கிறார்.
மூத்த வீரர்களை நீக்கியதே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறி இருக்கிறார், இவர் கூறியதில் உண்மைகள் இருந்தாலும் ஊடகங்கள் முன்பு இவ்வாறு கூறுவது தவறு. இதே நிலை தொடர்ந்து இருக்காது என்பது இவருக்கு தெரியவில்லை, இதே இளைஞர் அணி இன்னொரு போட்டியில் மரண அடி வாங்கலாம், அப்போது இதே ஊடகங்கள் தோனி செய்தது தவறு மூத்த வீரர்களை நீக்கியது தவறு, அனுபவ வீரர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பக்கம் பக்கமாக விமர்சிப்பார்கள். அது தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அது மட்டும் அல்லாது எப்போதுமே ஒரு அணி இளைஞர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது, ஒரு சில அனுபவ வீரர்களும் தேவை. சச்சினின் பங்கு ஆஸ்திரேலியா வெற்றியில் என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அனுபவ வீரர்கள் என்பதற்காக சிறப்பாக திறமையை நிரூபிக்காதவர்களை வைத்துக்கொண்டு இருக்க முடியாது, பழைய பெருமையை சொல்லி அணியில் நீடிக்க முடியாது என்பதை அவர்களும் உணர்ந்து இருப்பார்கள். எனவே யாராக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் உண்டு என்பதை உணர்ந்து உள்ளார்கள். இரண்டு தொடர்களில் பங்கு பெறவில்லை என்பதாலேயே கங்குலி திராவிட் விளம்பரங்கள் குறைந்து விட்டன, எனவே அணியில் இருக்கும் வரை மட்டுமே நமக்கு மரியாதை என்பதை இப்போது அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருப்பார்கள்.
முன்பு தான் எப்படி விளையாடினாலும் விளையாடா விட்டாலும் அணியில் இருப்பார்கள் பழைய சாதனைகளை கருத்தில் கொண்டு, இப்போது அதை எல்லாம் நினைத்து பார்க்கவே முடியாது. சச்சினையே ஒரு தொடரில் உட்கார வைத்த பிறகு மற்றவர்கள் ஏமாத்திரம்.
தோனி, வீரர்களுக்கு கொடுக்கும் ஆலோசனையையும் பேட்டியில் குறிப்பிடுகிறார், இதனால் வீரர்கள் என்னடா இது! நமக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி இல்ல இவர் பேசிட்டு இருக்காருன்னு நினைக்க தோன்றும். முதலில் இவ்வாறு பேட்டியில் கூற இவருக்கு அனுபவமும் இல்லை, வயதும் இல்லை. நாளைடைவில் இவருக்கு அணியில் எதிர்ப்பு வலுக்க இதுவே காரணமாகலாம். தோனி திறமையான நபர், அதில் சந்தேகம் இல்லை..அதுவே அவருக்கு தலைக்கணத்தை கொடுத்தால், அதுவே அவருடைய வீழ்ச்சிக்கு ஆரம்பமாகும். சுக்கிர திசை எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது என்பதை தோனி உணர்ந்தால் சரி.
No related posts.
{ 2 comments… read them below or add one }
சச்சின் இல்லையென்றால் இந்த தொடரில் என்ன நடந்திருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.
இளைய வீரர்களில் பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினார்கள். ஆனால் மட்டையர்களில் கங்குலியை நீக்கி அதற்கு பதில் சேர்ந்தவர்கள் கங்குலி அளவிற்கு விளையாட வில்லை என்பது உண்மை
நான் ஏற்கனவே கூறியது தான்
எப்பவும் சச்சின் ஒரு சிரியஸில் 2 நூறு, 1 ஐம்பது அடிப்பார். வழக்கமாக அது முதலில் நடந்து விடும். இப்ப ஆஸ்திரேலியாவிற்கு போதாத காலம். சச்சினின் இரு சிறப்பான ஆட்டங்களுமே இறுதி ஆட்டத்தில் நடந்து விட்டது.
இதற்கு முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பல ஆட்டங்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லை ”ஒரு ஆட்ட மந்திரம்” (one day magic) மட்டுமே. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் களால் தொடர்ந்து (consistency) ஆட்டங்களை வெல்ல முடிந்ததில்லை. எப்போழுதுமே நாம் நமது மட்டையர்களையே நம்பி இருந்தோம் (அல்லது கும்ப்ளே)
இந்திய அணி பந்து வீச்சின் மூலம் போட்டிகளை வெல்வது, அதுவும் வேகப்பந்து வீச்சின் மூலம் ஒரு கோப்பையை வெல்வது என்பது ஒரு பெரிய மாறுதல். டெஸ்ட் போட்டிகளிலிருந்தே கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அணியின் பந்து வீச்சு சிறப்பாகவே உள்ளது.
ஆனால் பேட்டிங்கில் இன்னமும் சச்சினை நம்பியே இருப்பது கவலை அளிக்கிறது. சச்சின் 30 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தால் நாம் சுமார் 150 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்போம். அதன் பின் வழக்கம் போல் சச்சின் இந்திய அணியை வெற்றி பெற வைப்பதில்லை என்ற அதே பல்லவி
சச்சின் ஆட்டமிழந்தவுடன் என்ன நடந்தது (கடைசி பதினொரு ஒவர்களில் வெறும் 53 ஓட்டங்களுக்கு 5 பேர் வீடு திரும்பியது) என்பதை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. சச்சின் ஒய்வு பெறும் நாள் இன்னமும் வரவில்லை. ரோஹித் சர்மா தான் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார். உத்தப்பா, காம்பிர் பரவாயில்லை. ஆனால் வரும் காலங்களில் உலகின் சிறந்த பந்துவீச்சு அணி என்று புகழ் பெறுவதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. 80களில் மேற்கிந்திய அணிபோல் (வால்ஷ், பிஷப், மார்ஷல், அம்ப்ரோஸ்) அதன் பின்னர் பாகிஸ்தான் (இம்ரான், அக்ரம், வக்கார், அகியுப் ஜாவது, முஷ்டாக், சக்லேன், 90களின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா (டோனால்ட், போலக், க்ளுஸ்னர், காலிஸ்) என்று பந்து வீச்சால் மிரட்டிய அணிகளைப் போல் அடுத்த ஆண்டுகளில் இந்திய அணியில் பந்து வீச்சு மற்ற அணிகளை மிரட்ட வாய்ப்புகள் பிராகசாம தெரிகிறது
கோடி ரூபாய் கேள்வி – யுவராஜ் சிங் இருக்கும் அணியில் கங்குலிக்கோ, முகமது கைப்பிற்கோ, தினேஷ் கார்த்திக்கிற்கோ ஏன் இடமில்லை
பின் குறிப்பு : சேவாக் (இறுதி ஆட்டத்தில் விளையாடவிட்டாலும்) அணியில் இருப்பதாக கருதுவோம்
//இந்திய வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்தாலும் பேச்சில் தன்னடக்கம் இல்லையென்றால் வீழ்ச்சி உடன் வரும் என்பதை அறியாமல் இருக்கிறார். //
சரியாக கூறியுள்ளீர்கள்
உங்க பகிர்தலுக்கு நன்றி புருனோ
//இந்திய அணி பந்து வீச்சின் மூலம் போட்டிகளை வெல்வது, அதுவும் வேகப்பந்து வீச்சின் மூலம் ஒரு கோப்பையை வெல்வது என்பது ஒரு பெரிய மாறுதல். டெஸ்ட் போட்டிகளிலிருந்தே கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அணியின் பந்து வீச்சு சிறப்பாகவே உள்ளது.//
நாம் பந்து வீச்சின் மூலம் வெற்றி பெற்றோம் என்பது மறுக்க முடியாத மற்றும் ஆச்சர்யமான உண்மை. அதுவும் தொடர்ந்து இரண்டு வெற்றி என்பது நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.