ஆக்ரோஷ ஸ்ரீசாந்த்தா! அநாகரிக ஸ்ரீசாந்த்தா!!

by கிரி on March 28, 2008

sreesanth ஆக்ரோஷ ஸ்ரீசாந்த்தா! அநாகரிக ஸ்ரீசாந்த்தா!!

சமீப காலமாக போட்டிகளில் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமாக !! செயல்படுவது அனைவரும் அறிந்தது, இதற்க்கு பெயர் ஆக்ரோஷமா! அல்லது அநாகரிகமா !! என்பதை அவர் தான் கூற வேண்டும். போட்டிகளில் ஒரு வெறி இருந்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும், இதை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நம்மிடம் விளையாடும் போது காண முடியும். ஆனால் ஸ்ரீசாந்த் மற்றவர்களை திட்டுவதையும் முறைப்பதையும் இடிப்பதையும் தான் ஆக்ரோஷம் என்று கருதி வருகிறார் போல் உள்ளது.

நேற்று நடந்த தென் ஆப்ரிக்கா போட்டியில் பந்து வீச்சுக்கு சற்றும் உதவாத ஆட்ட களத்தில் நம் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பொளந்து கட்டி கொண்டு இருந்தார்கள், விக்கெட் எடுப்பது மிக சிரமமாக இருந்தது, இந்நிலையில் டி வில்லியர்ஸ் ஸ்ரீசாந்த் பந்தை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார், அதனால் கடுப்பான ஸ்ரீசாந்த் அவரை முறைத்தும் திட்டிக்கொண்டும் இருந்தார். அவரும் கடுப்பாகி 4 அடித்துக்கொண்டு இருந்தார், இந்நிலையில் 4 அடித்து விட்டு அடுத்த பந்தில் அவுட் ஆனார். உடனே ஸ்ரீசாந்த் பயங்கரமாக கத்தி குதித்து டி வில்லியர்சை பார்த்து முறைத்தார், பின்னர் மற்ற வீரர்கள் வந்து சமாதான படுத்த வேண்டி இருந்தது. நடுவர் வந்து தலையிட்ட பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.

ஸ்ரீசாந்த் தான் செய்வது அவரை மட்டும் பாதிக்க வில்லை, ஒட்டு மொத்த இந்தியாவை அது பாதிக்கிறது என்பதை உணராமல் உள்ளார். இவ்வாறு களங்களில் அநாகரிகமாக நடப்பது மற்ற வீரர்களையும் பாதிக்கிறது, அவர்களின் நடத்தையும் அதே போல நினைக்க தோன்ற வைக்கும். ஆஸ்திரேலியா வீரர்கள் இதனாலேயே உலக மக்களின் நன் மதிப்பை பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஸ்ரீசாந்த் தனது வெறியை எதிரணி வீரர்களுடன் சண்டை போடுவதில் காட்டாமல் மற்றும் தேவை இல்லாமல் அவுட் கேட்காமல் பந்து வீசுவதில் காட்டினால் அவருக்கும் பெயர் கிடைக்கும். நமது கிரிக்கெட் நிர்வாகம் இதை மேலும் தொடர அனுமதிக்கக்கூடாது.

No related posts.

{ 3 comments… read them below or add one }

வல்லிசிம்ஹன் March 28, 2008 at 7:04 PM

அப்பாடி யாராவது சொல்ல மாட்டாங்களானு இருந்தது. இதில இவங்க விளம்பரங்களை வேற பார்த்டுத் தொலைய வேண்டி இருக்கு.

Reply

தமிழ் குழந்தை March 28, 2008 at 7:56 PM

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

Reply

கிரி March 28, 2008 at 10:17 PM

ரொம்ப நன்றிங்க தமிழ் குழந்தை

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed