தமிழக பேருந்துகளை கர்நாடகாவில் உள்ளே நுழைய விட மாட்டோம் ! – ரக்சன வேதிகே அமைப்பு

by கிரி on March 31, 2008

“ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வருகிற 9ம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திலிருந்து ஒரு பஸ்சையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் சானல்களை ஒளிபரப்ப விட மாட்டோம். தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது”

இந்த காவேரி தண்ணீரை வைத்து கொண்டு இவங்க பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலைப்பா! எது பண்ணினாலும் உடனே தமிழ் நாட்டு பேருந்த கொளுத்துவேன், தமிழ் நாடு பதிவு எண்களை கொண்ட வாகனங்களை கொளுத்துவேன், தமிழ் சேனல் ஒளிபரப்ப விடமாட்டேன் மற்றும் தமிழ் திரைப்படங்களை வெளியிடும் திரை அரங்குகளை அடித்து நொறுக்குவேன்னு இவங்க பண்ணுற அக்கிரமம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. இப்ப தான் கொஞ்ச நாளா பிரச்சனை எதுவும் இல்லாம இருந்தது.

இது குறித்து கலைஞரின் முதிர்ச்சியான பேச்சின் சில முக்கிய அம்சங்கள்

துரைமுருகனை விட்டு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் நானே பதில் சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மட்டுமல்ல, 6 கோடி மக்களின் சார்பாக மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகியிருக்கிறதே, இப்படி ஆகலாமா என்று கேட்போரின் சார்பாக நான் இந்தக் கேள்வியை, கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களை அல்ல, இந்தியாவை வழி நடத்துகிற மத்திய அரசுக்கு கேட்க விரும்புகிறேன்
கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எதை தமிழகம் உரிமையோடு செய்ய நீங்கள் வழி விட்டீர்கள். காவிரியில் இடைஞ்சல். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசும் சம்மதம் கொடுத்து நிறைவேற்றப்படுகின்ற திட்டம்தான் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

எங்களுக்குக் குடகில் இருந்து வருகிற நீர்தான் இல்லை என்றால், குடிநீருக்காகப் பயன்படும் ஓகனேக்கல் தண்ணீரும் கிடையாது என்று சொன்னால் என்னாவது?

கர்நாடகத்தில் உள்ள அவசரக்காரர்களே, என்னைப் பொறுத்தவரை பலமுறை இப்படிப்பட்ட பல பிரச்சினைகள், நம்முடைய மாநிலத்திற்கும், பக்கத்து மாநிலத்திற்கும் வந்தபோதெல்லாம் பொறுமை காத்திருக்கிறேன்.யாரோ சில சமூக விரோதிகள் இதை பெரியதாக ஆக்கி, தீப்பற்றச் செய்து விடுவார்கள் என்பதால்தான் பொறுமையாக இருந்து வருகின்றேன். ஆனால் எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மத்திய அரசு உணரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இன்றைக்கு அங்கு சிறு துளியாக இருக்கின்ற பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி, பெருந்தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதை விட சிறப்பாக இந்த பிரச்சனைக்கு பதில் கூற முடியாது என்பது என் கருத்து.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed