கிரிக்கெட் – சாதனைகளும் ஏமாற்றங்களும்

by கிரி on March 29, 2008

sehvaugh கிரிக்கெட்   சாதனைகளும் ஏமாற்றங்களும்

இந்தியா – தென் ஆப்ரிக்கா போட்டியில் சேவாக் தென் ஆப்ரிக்காவை பின்னி பெடலேடுத்து விட்டார், அவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள். இவர் எடுத்த ஓட்டங்களை கணக்கில் எடுத்து பார்த்தால் இந்தியா மிக பெரிய எண்ணிக்கையை எடுக்கும் என்று அனைவராலும் நம்ப பட்டது, ஆனால் அவர் பின் வந்தவர்கள் அனைவருமே சொதப்பியதால் வாய்ப்பிருந்தும் அனைத்தையும் கோட்டை விட்டார்கள். இதில் சில சாதனைகளையும் சில ஏமாற்றங்களையும் காண்போம்.

சாதனைகள்

சேவாக் எடுத்த 319 ஓட்டங்களே இது வரை இந்தியா சார்பில் எடுத்த அதிகமான ஓட்டமாகும்.

இரண்டு முறை 300 எடுத்தவர்கள் பட்டியலில் சேவாக், பிராட்மேன் மற்றும் லாரா வுடன் இணைந்தார்.

அதிவேகமாக 300 (278 பந்தில்) எடுத்ததில் முதலிடம்.

சேப்பாக்கம் அரங்கில் கவாஸ்கர் எடுத்த அதிக பட்ச ஓட்டங்களை (236) தாண்டினார் சேவாக்.

சேவாக் தில்லாக 6 அடித்து 194 ல் இருந்து 200 வந்தார், அதே போல 291 ல் இருந்து 6 அடித்து 300 ஐ நெருங்கினார்.

திராவிட் 10000 ஓட்டங்களை கடந்தார் (இந்தியாவில் 3 வது வீரர் உலக அளவில் 6 வது வீரராவார்)

ஏமாற்றங்கள்

சேவாக் 400 ஓட்டங்கள் எடுத்து லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 319 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

சச்சின் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

மிக பெரிய எண்ணிக்கையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் அனைவரும் அவுட் ஆகினர்.

இன்று இந்தியா பட்டய கிளப்பும் என்று ஆவலோடு வந்த சென்னை ரசிகர்கள், ஊசிபட்டாசாக ஆனதில் வெறுத்து போனார்கள்.

கொசுறு


18 வருடங்களுக்கு பிறகு ரவி சாஸ்திரி க்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. பீச் கேண்டி மருத்தவமனையில் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed