பெங்களூர் ல் தமிழ் திரை அரங்குகள் தாக்கப்பட்டது

by கிரி on March 31, 2008

blre பெங்களூர் ல் தமிழ் திரை அரங்குகள் தாக்கப்பட்டது

கலைஞர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பற்றிய பிரச்சனை குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூர் ல் வன்முறை ஏற்பட்டது. தமிழ் திரைப்படங்கள் ஓடிய நடராஜ் மற்றும் விநாயக் திரை அரங்குகள் சூறையாடப்பட்டது. அருகில் இருந்த தமிழர் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது.

என்ன பிரச்சனை என்றாலும் தமிழ் படங்கள் ஓடும் திரை அரங்குகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. தமிழ் மற்றும் ஹிந்தி படங்களே அங்கே ஓடுகின்றன. இவர்கள் எடுக்கும் படத்தை இவர்களே பார்ப்பது இல்லை, இதனால் இது போன்ற சமயங்களில் தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

இந்த காவேரி தண்ணீரை வைத்துட்டு இவங்க பண்ணுற ஆட்டம் ….என்னமோ போங்க வயிறு எரியுது.. பாவம் அங்கே இருக்கிற தமிழர்கள் எல்லாம் உயிரை கையில பிடித்துட்டு இருப்பாங்க, இனி என்ன நடக்குமோன்னு. தமிழ் நாடு பதிவு எண்ணை கொண்ட வாகனத்தை எடுக்கவே இனி பயமா இருக்கும். எந்த சந்துல இருந்து எவன் வந்து அடிக்க போறானோன்னு பயந்துட்டே போகணும். கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் உண்மையிலேயே ரொம்ப பாவம் குறிப்பாக பெங்களூர்.

கலைஞர் எனக்கு தெரிந்து ரொம்ப நாகரிகமா தான் கூறி இருந்தார், அதற்கே இவங்க இந்த அட்டகாசம் பண்ணிட்டு இருக்காங்க. எது பண்ணினாலும் அதற்கு பிரச்சனை பண்ணுவேன்னு கூறினா..எப்படிங்க…. இதை இப்படியே தொடர விடக்கூடாது, எதாவது முடிவு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

No related posts.

{ 3 comments… read them below or add one }

1 தஞ்சாவூரான் March 31, 2008 at 7:29 PM

ஹ்ம்ம்ம்… என்னத்தைச் சொல்றது? இது ஒரு தொடர்கதையாவே போய்கிட்டுருக்கு. குறுகிய கண்ணோட்ட அரசியல்வாதிகள்/மொழி வெறியாளர்கள் இருக்கும் வரை, இது இன்னும் தொடர்கதைதான் :(

Reply

2 கிரி March 31, 2008 at 7:34 PM

சரியா சொன்னீங்க. மனசு தான் கேட்க மாட்டேங்குது, பாவம் நம்ம ஊர்ல இருக்கிற அவங்க குடும்பித்தினர் நிலைய நினைத்து பாருங்க! வயித்துல எப்போதும் நெருப்படி கட்டிட்டு இருக்கணும். நீங்க சொன்ன மாதிரி குறுகிய எண்ணங்களை கொண்டவங்க இருக்கும் வரை இதற்க்கு முடிவு இல்லை என்பது கசப்பான உண்மை

Reply

3 பிரேம்ஜி March 31, 2008 at 7:46 PM

வணக்கம் கிரி ராஜ். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினை வரும் போதும் இது மாதிரி நடக்கும். இனி ஒகேனக்கல். காவிரி பிரச்சினை வந்த போது ஒரு முறை ஹோசூர் இல் இருந்து பெங்களூர் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது திமுக மற்றும் அதிமுக தலைவர்,தலைவியரின் போஸ்டர்கள் பேருந்தில் ஒட்டப்பட்ட காரணத்தால் ஒரு கும்பல் வந்து பேருந்தை சின்ன பின்னமாகியது. பிறகு அங்கிருந்து நடந்து, உதவி கேட்டு பெங்களூர் வந்தோம்.அவர்கள் அரசியலுக்கு மக்கள் பலியாகிறார்கள்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: