தற்கொலைக்கு முயன்ற விவசாயி :( அதை படமெடுத்த நிருபர்கள்

by கிரி on March 23, 2008

nel தற்கொலைக்கு முயன்ற விவசாயி :( அதை படமெடுத்த நிருபர்கள் தமிழகம் முழுவதும் பருவம் மாறி மழை பெய்து வருகிறது, தொடர்ந்து மழை பெய்ததால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவிட்டன. அறுவடை சமயத்தில் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் பல விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதில் ஒரு வயதான விவசாயி இதற்க்கு முன் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பிறகு கடனை வாங்கி பயிரிடப்பட்ட பயிர்கள் மழையால் நாசமடைந்ததால் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார், அவர் துடித்துகொண்டு இருப்பதை தொலைக்காட்சி நிருபர்களும், செய்தித்தாள் நிருபர்களும் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இதை நான் பார்த்த போது மனது கனத்து விட்டது.

செய்தியாளர்களின் வேலை செய்தி சேகரிப்பது தான் அதை நான் மறுக்கவில்லை, ஆனால் எந்த செய்தி சேகரிப்பிலும் மனிதாபிமானம் என்ற ஒன்றை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed