தமிழக பட்ஜெட்டும் இலவச தொலைக்காட்சியும்!

by கிரி on March 21, 2008

தமிழக அரசின் 2008-2009 பட்ஜெட் அறிவிப்பில் இலவச தொலைக்காட்சி க்கு 750 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொலைகாட்சி கொடுப்பதால் பொது மக்களுக்கு என்ன பயன்? பொது மக்களுக்கு தொலைக்காட்சி கொடுப்பதன் மூலம் அவர்களுடைய அன்றாட வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியாது, அது அவர்களை மேலும் சோம்பேறிகள் தான் ஆக்கும். தற்போதைய கருத்து கணிப்பு ஒன்று சொல்கிறது “தொலைக்காட்சிகளே ஒருவருடைய தூங்கும் நேரத்தை நிர்ணயிக்கின்றன, தமக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தங்கள் தூங்கும் நேரத்தை கூட மாற்றுவதாக”.

இந்த 750 கோடியை பயன்படுத்த எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது, மக்களின் வரிப்பணத்தை இதற்க்கு செலவு செய்யும் போது ஆதங்க படாமல் இருக்க முடியவில்லை. கொடுக்கப்படும் தொலைக்காட்சிகளாவது சரியான நபரை சென்றடைகிறதா என்றால் அதுவும் இல்லை!, கட்ச்சிக்காரங்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் அதை தவறான முறையில் எடுத்துக்கொண்டு, உண்மையிலேயே சேரவேண்டிய நபருக்கு அந்த பயனை அடையாமல் தவிர்த்து விடுகிறார்கள். இதை வாங்கி பாதி விலைக்கு விற்கும் செயலும் நடக்கிறது.

மாணவர்களும் எப்போது வீட்டில் இருந்தாலும் கார்ட்டூன் நெட்வொர்க், ஜெட்டிக்ஸ் மற்றும் போகோ நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. அரசு இப்படி செய்வது அவர்களை வலியவந்து கெடுப்பது போல உள்ளது.

எதோ தேர்தலுக்காக இலவச தொலைக்காட்சி அறிவித்தார்கள், இப்பொழுது பட்ஜெட் லேயே அறிவித்து அதை தொடர் கதையாக்கி விட்டார்கள். ஏற்கனவே போட்ட சாலை நன்றாக இருக்கும் போது அதை தோண்டி மறுபடியும் போடுவார்கள், புதிதாக சாலை போட்ட அடுத்த நாளே புது சாலையில் குழி தோண்டுவார்கள் இவ்வாறு மக்கள் வரிப்பணத்தை வீண் செய்து கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது பட்ஜெட் ல் வீண் செய்வதற்காக பணத்தை ஒதுக்கி செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எப்போது இலவசத்தை வேண்டாம் என்று சொல்கிறார்களோ அப்போது தான் முடிவு கிடைக்கும். இது நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

No related posts.

{ 3 comments… read them below or add one }

1 தமிழன் March 21, 2008 at 8:42 PM

தொலைக்காட்சி இல்லாத பல வீடுகள் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைக்காட்சி கொடுப்பது ஒன்றும் பாவகாரியம் கிடையாது.

Reply

2 கிரி March 21, 2008 at 8:51 PM

திலீபன் நான் பாவ காரியம் என்று கூறவில்லை. தொலைபேசி எப்படி அத்தியாவச தேவையோ தொலைக்காட்சியும் அது போல தான். நான் கூறுவது அதை விட முக்கிய பணிகள் இருக்கையில் இது முக்கியமா என்பது தான்? 750 கோடி என்பது சாதாரணமான தொகையாக தெரியவில்லை.

Reply

3 devuda July 21, 2010 at 5:36 AM

உலக மகா வேஸ்ட். இலவசம் சோம்பேறியாக்கும். உழைப்பை முடக்கும். முன்னேற்றத்தை தடுக்கும் . இது நல்லதற்கல்ல

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: