ஐ சி சி நேற்று மினி உலக கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டது. 2008 செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் தொடங்குகிறது. இந்த முறை போட்டி பாகிஸ்தானில் நடை பெற உள்ளது. “ஏ” பிரிவில் பாகிஸ்தான்,இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. “பி” பிரிவில் தென் ஆப்ரிக்கா,நியூசுலாந்து,இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் போட்டியை சந்திக்கின்றன. இப்பிரிவுகள் தற்போதைய ஒரு நாள் தர வரிசையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ளன.
“ஏ” பிரிவில் அனைத்து அணிகளுமே சிறப்பான அணி என்பதால் தற்போதைய நிலைமையில், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். பாகிஸ்தானுக்கு இது சொந்த நாட்டில் நடக்கும் போட்டி வேறு எனவே உள்ளூர் ஆதரவு அதிகமாக இருக்கும் மற்றும் இது வரை மினி உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது இல்லை. மினி உலக கோப்பையில் இது வரை எந்த அணியும் ஒரு முறைக்கு மேல் கைப்பற்றியது இல்லை. தற்போதைய நிலைமையில் இந்தியா அணி மிகுந்த பலம் உள்ள அணியாக திகழ்கிறது மனரீதியாகவும். ஆனால் செப்டம்பருக்குள் இந்த நிலைகள் மாறலாம் எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது வரை மினி உலக கோப்பையை கைப்பற்றிய நாடுகள்
ஆண்டு – அணி
1998 – தென் ஆப்ரிக்கா
2000 – நியூசிலாந்து
2002 – இந்தியா – இலங்கை
2004 – வெஸ்ட் இண்டீஸ்
2006 – ஆஸ்திரேலியா
No related posts.

