மிஷ்கினின் "நந்தலாலா"

by கிரி on March 12, 2008

மிஷ்கின் சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே! ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் அஞ்சாதேக்கு முன்பு நந்தலாலா என்ற படத்தை தான் இயக்க திட்டமிட்டு இருந்தார், ஆனால் தயாரிப்பாளர் கடைசியில் சரி வராததால் அந்த படத்தை கை விட்டார், இந்த படத்திற்காக ஷ்நிக்தா என்றா பெண்ணை கூட்டி வந்து அதற்கு கஷ்டப்பட்டு நடிப்பு பயிற்சியும் கொடுத்து தயார் செய்து இருந்தார், படம் கை விடப்பட்டதால் அந்த பெண்ணை அஞ்சாதே படத்தில் “கத்தாழ கணனாலே” பாட்டில் ஆட வைத்து விட்டார். இப்பொழுது மறுபடியும் நந்தலாலா படத்தை சூர்யாவை வைத்து இயக்கலாம் என்று செய்திகளில் கூறுகிறார்கள். அஞ்சாதே படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. திருட்டு டி வீ டி யில் பார்க்க விருப்பம் இல்லாததாலும் மற்றும் திரை அரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதாலும் இன்னும் பார்க்காமலே இருக்கிறேன். சித்திரம் பேசுதடி படம் வெற்றி பெற்ற போது பலரும் இந்த படம் வெற்றி பெற்றது “வாளை மீன்” பாடலால் என்று கூற, ஒரு பாட்டுக்காக என் திறமையை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு அஞ்சாதே படத்தின் மூலம் பதில் கூறுவேன் என்று கூறி அதை நிரூபித்தும் விட்டார். மிஷ்க்கின் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க்கில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தால் இத்துறைக்கு வந்தார். நல்ல திரைப்படங்களை கமர்ஷியல் கலந்து தர முயற்சித்துக்கொண்டு இருக்கும் மிஷ்கினுக்கு வாழ்த்துக்கள் பல.

No related posts.

{ 1 comment… read it below or add one }

1 vignesh January 27, 2010 at 3:45 PM

Giri,
naan indha padathai romba edhirpakaren.. rendu karanam onnu Ilayaraja music , rendu Myskin.. ana padam varadhu pola..

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: