டி ராஜேந்தர் ப(யமுறுத்த)டம் எடுக்க தயார் ஆகி விட்டார்! வீராச்சாமிக்கு அடுத்து "கருப்பசாமி"

by கிரி on March 11, 2008

veerasami டி ராஜேந்தர் ப(யமுறுத்த)டம் எடுக்க தயார் ஆகி விட்டார்! வீராச்சாமிக்கு அடுத்து "கருப்பசாமி"

விஜய டி ராஜேந்தர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறி உள்ளார் “நான் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரிக்கிறேன் இதில் குறளரசன் நடிக்கவில்லை (நல்லவேளை தப்பிச்சோம் icon smile டி ராஜேந்தர் ப(யமுறுத்த)டம் எடுக்க தயார் ஆகி விட்டார்! வீராச்சாமிக்கு அடுத்து "கருப்பசாமி" ) ), என்னோட 25 வருட திரை வாழ்க்கையில் செட் போடாமல் எடுக்க போகிறேன். இது கிராமத்து படக் கதையாக இருக்கும் இதில் கருப்பசாமி என்ற வேடத்தில் நடிக்கிறேன். அமீரின் பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு இனிமேல் எடுத்தால் இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்களை தான் எடுப்பது (அப்ப அவரே ஒத்துகிட்டாரா இதுவரை நல்ல படம் எடுக்கலைன்னு !) என்று முடிவு செய்து விட்டேன், அந்த படத்தின் பாதிப்பிலிருந்து விடுபடவே ரொம்ப நாள் ஆச்சு ” இவ்வாறு கூறி உள்ளார். விஜய டி ராஜேந்தர் சார் உங்களோட வீராச்சாமி படம் பார்த்த பல! பேர் இன்னும் அந்த பாதிப்பிலிருந்தே விடுபடல, நீங்க என்னடான்னா அதுக்குள்ள மறுபடியும் ஒரு அதிர்ச்சி கொடுக்க தயார் ஆகிட்டிங்க. நீங்க வீராச்சாமில அண்டர்வேருடன் சண்டை போட்டதை பார்த்து எனக்கு இன்னும் அந்த பயமே தெளியல..இப்ப இது வேற கிராமத்து கதைன்னு சொல்றிங்க கோமணம் கீது கட்டிட்டு சண்டை போட்டு ஏ டண்டனக்க டனுக்கு னக்கா னு பீதிய கிளப்பிடாதிங்க…எனக்கு இப்பவே உங்க அடுத்த படத்த பார்க்கும் ஆவல் அதிகம் ஆகிடுச்சு…சத்யமாங்க! நம்பினா நம்புங்க!

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed