காபி வித் அனு சீசன் 2 விழா ஒரு விமர்சனம்

by கிரி on March 24, 2008

vijaytv காபி வித் அனு சீசன் 2 விழா ஒரு விமர்சனம் நான் சமீபத்தில் காபி வித் அனு பார்த்தேன், அதில் சீசன் 1 முடிந்து சீசன் 2 ஆரம்பம் ஆனது, அதற்கு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் பேசிய அனைவருமே (ஒரு சிலரை தவிர்த்து) ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்கள், அனுவை பேட்டி எடுத்த பெண் (பெயர் தெரியவில்லை, கலக்க போவது யாரு வில் சேதுவுடன் வரும் பெண்) ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார், தமிழ் நாட்டு மருமகள் என்று கூறிக்கொண்டு இருக்கும் குஷ்பூவும் பெயருக்கு இரண்டு தமிழ் வார்த்தை பேசி விட்டு முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்.

இதை எல்லாவற்றையும் மிஞ்சும் விதத்தில் விஜய் தொலைக்காட்சி விளம்பரத்துக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கும் முன் இது பற்றிய சிறு காட்சிகளை ஒளிபரப்பியது, ஒளிபரப்பியதில் பிரச்சனை இல்லை, இடையிடையே ஆங்கிலடப்படத்துக்கு இடையிடையே அந்த படம் பற்றிய செய்திகளை கூறுவார்களே, அதே போல ஆங்கிலத்திலேயே அனைத்தையும் கூறி அதிர வைத்தது. நாம் பார்ப்பது தமிழ் தொலைக்காட்ச்சியா இல்லை, AXN தொலைக்காட்ச்சியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தது. கால மாற்றத்தில் அனைத்தையும் தமிழிலேயே எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று, ஆனால் ஒட்டு மொத்தமாக இப்படி தமிழை புறக்கணிப்பதை பார்த்தால் மனது கனக்கிறது.

பேசிய பலரும் (தமிழ் தெரியாதவர்களை தவிர்த்து) தமிழே தெரியாது போலவும், அதை வேற்று மொழி போலவும் கருதி புறக்கணித்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதாது, மற்ற நிகழ்ச்சிகளில் அதை பின்பற்ற கொஞ்சமாவது முயற்சிக்க வேண்டும். அதற்காக மக்கள் தொலைக்காட்சி அளவுக்கு சொல்லவில்லை. நடைமுறையில் ஒத்து வரக்கூடிய அனைத்தையும் பின்பற்றலாம்.

ஏங்க எனக்கு ஒன்று புரியலை? அப்படி என்னங்க பேசுறதுக்கு தமிழ் கேவலமாக போயிற்று??????

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed